குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் அற்றதோர் கோவே.
பொருள் :
எனது குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குரு மண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாய் உள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கம் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்