Wednesday, October 23, 2019

மழை என்னும் மாமருந்து

மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ஒருவேளை சளிப் பிடித்து, காய்ச்சல் வந்தால், அவர் நலமாக (ஆரோக்கியமாக) இல்லை, எனவே அவை உடலுக்கு நலத்தை ஏற்படுத்துகின்றன என்று பொருள்.

தூய்மையான மழைத் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உயிர்த் தன்மை (பிராணன்) இருக்கிறது.

மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளிப் பிடிக்கிறது... தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது.

இது ஏன் வருகிறது...?

அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான உயிர்த் தன்மை (பிராணன்) இருப்பதால் நமது
உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்தப்
பிராணனை உறியத் தொடங்குகிறது.

உடலில் பல நாட்களாக, பல ஆண்டுகளாகத்
தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல்
வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல்
வழியாகவும் வெளியேற்றுகிறது.

ஒரு மனிதன் உடல்நலமாக (ஆரோக்கியமாக)
வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படிக்
கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிப் பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து அச்சப்படவேண்டிய தேவை இல்லை. மகிழவாக இருங்கள்.

நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம்.

எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலைக் குணப்படுத்த முடியும்.

மழைநீரைக் குடிப்பதன் மூலமாகவும் நமது உடலில் உயிராற்றலை (பிராண சக்தியை) அதிகப்படுத்த முடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரைக் குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும் குப்பைகளும்  ஊர்திகளிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும்
வானத்தில் இருக்கும்.

முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்தத் தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு நிலத்தை நோக்கி வரும்...

எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்குப் பின் வரும் மழைநீரை நேரடியாக ஏனத்தின் மூலமாகவோ, ஒரு கலனைப் பயன்படுத்தியோ அந்த நீரைப் பிடிக்கவேண்டும்.

ஒருவேளை நமது வீட்டின் கூரை தூய்மையாக இருந்தால்... கூரையிலிருந்து வரும்  மழை நீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் தூய்மையான நீர். இதில் (உயிர்த் தன்மை) பிராணன் அதிகமாக இருக்கும்.

இந்தத் தண்ணீரை ஓர் ஏனத்திலோ, ஒரு புட்டியிலோ காற்றுப் புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஆனால் அந்தத் தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும்.

எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது நமது உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்த் தன்மையும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் நலம் அடைகிறது.

எனவே, மழைநீரின் உயிர்த் தன்மையை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்...

மழையில் நனைவது மிகவும் அருமையான, மகிழ்வான மனத்திற்குப் பிடித்தமான,  பெரு நிகழ்ச்சி. மேலும் நலமானதும் கூட.

எனவே இனிமேல் மழை வரும்போது அதில் நனையலாம். நல்லது. மழைநீரைக் குடிக்கலாம் நல்லது.

மழைநீர் ஓர் அருமையான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் மழைநீரைச் சேர்த்துக் கொள்வோம்.

நன்றி!!

Monday, October 21, 2019

நோய் என்ன

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com

17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Saturday, September 28, 2019

வாசி யோகம்

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள் அதிகம்பேர் சமூகத்தில் உள்ளனர்.அதைப்பார்த்து நம்பிக்கை கொண்ட இளையதலைமுறையினர்களும் அவ்வழியிலேயே செல்ல முற்படுகின்றனர்.

ஆன்மீக வழியில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அனைத்தையும் துறந்து மிகவும் கஷ்டப்பட்டு,  பிச்சையெடுத்து வாழ்ந்து முடிவில் நோயால் மரணமடைவதையே காண்கிறோம்.இதை பேரின்ப வாழ்வு என அவர்கள் கூறினாலும் பெரும்பாலானவர்களால் நம்பமுடியவில்லை.

அவர்களை ஞானி என வணங்கமுடிகிறதேயொழிய அவர்களைப்பின்பற்ற  தைரியம் வருவதில்லை.ஏனென்றால் மனைவி, குடும்பம், குழந்தைகளை, வசதிகளை விட்டுவிட்டு கடவுளைக்காண்பதற்க்காக பிச்சையெடுத்து வாழ யாரும் முன்வருவதில்லை.பயம்தான் மிஞ்சுகிறது.

இந்த பயத்தை உடைத்து குடும்பத்திலிருந்துகொண்டே ஆன்மீகத்தில் முன்னேறி ஸித்திகளையும், ஜீவசமாதியையும் அடைய ஒரேவழி கிரியா யோகம் அல்லது வாசியோகம் என்ற விஞ்ஞானப்பூர்வமான பயிற்ச்சியை கற்றுக்கொண்டு எதையும் துறந்து ஓடாமல் அவரவர் வீட்டிலிருந்தபடியே பயிற்ச்சி செய்ய வேண்டும்.

இப்பயிற்ச்சியில் புறச்சடங்குகளில்லை, சாதி, மதம் இல்லை. வெறும்  மனித உடலையும் இயற்க்கையாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி காலையும், மாலையும் அரைமணிநேரம் உங்கள் நலனுக்காக பயிற்சி செய்தாலே போதும்.

இந்த அரைமணிநேர வாசிப்பயிற்ச்சி ஏராளமான நன்மைகளை வழங்கும்.இவ்வாறு பொறுமையுடன், ஞானமடைந்த குருவின் வழிகாட்டுதலுடன் இப்பயிற்ச்சியை செய்தாலேயே போதும்..

இதை அனுபவப்பூர்வமாக அடைந்து நல்வாழ்வு வாழ்பவர்கள் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமானால் ஆன்மீகம் ஒன்றே சமூகத்தில் நிலைபெற்று இருக்கும்.

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்ந்து நோய்க்கு விருந்தாகி இறப்போரைவிட, பணமும் சம்பாதித்து, நோய்நொடியின்றி வசதியாகவும் வாழ்ந்து வாசிப்பயிற்ச்சியால் ஜீவசமாதி அல்லது ஒளிஐக்கியமும் அடைபவர்கள்தானே உண்மையிலேயே ஞானிகள்?

. ஆன்மீகம் செழிக்க இறைவன் நமக்கு கொடுத்த நம் உடலெனும் கருவியை செம்மையாக பயன்டுத்தினாலே போதும்.

உடலையும், விலையில்லாமல் இலவசமாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி நோயில்லா,  மரணமிலா,துறவில்லா பெருவாழ்வை அடைய வாசியோகமே வழி

பூப்பறிக்க கோடரி எதற்க்கு?
வாழ்வை வெல்ல வாசி இருக்கு!!!


வாழை இலை குளியல்


#வாழை_இலைக்குளியல்_செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் நம் முன்னோர்கள் ...!

இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.🌷🧩🌷

வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல் செய்முறை 🌱 🌱

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!🌷🧩🌷

வாழைகுளியல் பலன்கள் 🌱🍃 🌱

1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!

வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!

அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம். 🌷🧩🌷

மகிழ்வித்து மகிழுங்கள் ..... 🌷🧩🌷

Friday, August 23, 2019

ஞானம்

*ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம்* *சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !*

நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த  கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !

*"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''*

*"இல்லை*' என்று தலையாட்டினார் இயக்குனர்.

நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.

இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.

"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக  சாப்பிடுங்கள்.

 அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.

இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.

பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.

"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?

 சாப்பிடுங்கள்.''

என்றார் நீதிபதி.

"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''

என்றார் இயக்குநர்.

"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.

அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.

 இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?

 மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.

*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.

அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*

 *உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...

 நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*

இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,

 நமக்கும் தான்*

கொலை, கொள்ளை;  லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை.

வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
 நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,

வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு,

 உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் முடிப்பது,

பசி மற்றும் பணகஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது,

இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,

புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.

அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,

சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,

நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ளவரை,

சந்தோஷப்படுத்தி பாருங்கள்.

உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,

 ஆண்டவா.....

எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,

 எங்களுக்கு உதவிபுரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு,

 ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவவேண்டும் என வேண்டுவார்கள்.

பிறகு பாருங்கள்.

ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,

ஏன், ஆண்டவனே,

" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,

 ரசிப்பான்.

 ரட்சிப்பான்.

நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை.

உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.

உங்கள் இல்லம் ஆலயமாகும்.

நீங்களே இறைவனாவீர்கள்.

சதா சர்வகாலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.

ஒரு நாளாவது நம்மிடம்  மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடிசென்று கொடுத்து பாருங்கள்!

 கர்ணனாக ஆவீர்கள்

*அகம் அழகு பெறும்*,
*முகம் பொலிவுபெறும் தர்ம சிந்தனை மேலோங்கும்

Monday, July 15, 2019

உங்களால் முடியாதா

இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு ஏழு  ரூவா.. சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா.. வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா.. வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா.. கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி, சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா.. நினைத்த போதெல்லாம் பறித்து தின்ற சப்போட்டா கிலோ எண்பது ரூவா.. கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா.. ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா.. திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா.. இனி கூடிய விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கிடாரங்காய், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, மாவிலை, நொச்சி, ஆடாதொடா, வில்வம், பவளமல்லி, பப்பாளி இலை, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு.. அதோட வேப்பம்பூ, மாம்பூ, மாதுளை பூ, செம்பருத்திப்பூ, நந்தியாவட்டை பூ, மகிழம்பூ மாதிரி மறந்து போனவை பலவும் இனி வரும்..
இதெல்லாம் என்ன விளைய வைக்க முடியாத அதிசய பொருளா..? இவ்ளோ விலை விக்குதே, இதை உற்பத்தி செஞ்சு வளர்ந்தது விவசாயியா..?
நம்ம வீட்டிலேயே இதையெல்லாம் வளர்த்தா நம்ம பிள்ளைங்களாவது சாப்பிட கிடைக்குமல்லவா...
வரும் தலைமுறைக்கு சொத்து மட்டும் சேர்த்தா போறாது சொந்தங்களே ..!!!