Thursday, January 31, 2013

நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்;

சூரிய பகவான் : 
பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது. 
சந்திர பகவான் :
சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும். 

குரு பகவான் : 
விவாகத்திற்கும், குழந்தை பாக்கியத்திற்கும் குரு பலன் அவசியம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் திருக்கோவில் ஒன்றில் நெய்தீபம் ஏற்றுவதாலும், வியாழன் அன்று பெரியவர்கள், துறவிகள், சாதுக்களை வணங்கி ஆசி பெறுதலும், குரு தோஷ பரிகாரமாகும். 

ராகு பகவான் : 

தவறான காதலில் விழுந்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அதில் ராகுவின் பங்குள்ளதை அறியலாம். இத்தகைய ஜாதகம் அமைந்த பெண்களுக்கு கூடிய வரையில் ராகுவின் ஆதிக்கம் வருவதற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. ஜாதகத்தில் புத்திரதோசம், சயன தோஷம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு பிரீதி செய்து கொள்வது அவசியமாகும். அருகில் உள்ள திருக்கோவில் ஒன்றில் கர்பகிரகத்தில் இடைவிடாது எரிந்து கொண்டுள்ள விளக்கில் முடிந்தபோதெல்லாம் நெய் சேர்த்து வருவது மிக எளிய பரிகாரமாகும்.
புதன் பகவான் : 
வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப்புலமை தருவது புதனே. புதன் தோஷத்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை உபவாசமிருந்து கோவில் ஒன்றில் தீபம் ஏற்றுவது, புதன்கிழமையில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை, புத்தகம், உணவு வழங்குவது எளிய பரிகாரமாகும். 
சுக்கிர பகவான் :
"சுக்கிரன் என்ற கிரகம் இல்லாவிடில் உலகமே காவி உடுக்கும்'' வாழ்க்கை தரும் சுகங்களை அனுபவிப்பதற்கு, ரசிப்பு தன்மை - ரசிக்கும் மனோபாவம், கலையுள்ளம் வேண்டும். இதை அளிப்பவர் சுக்கிர பகவானே. சுக்கிரனின் தோஷத்தில் அகமிழந்து வேதனை அடைவோர் அரங்கனின்(ஸ்ரீரங்கம்)சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை நீராடி, உபவாசம் இருந்து, ஏழை சுமங்கலிப் பெண்ணிற்கு ஆடை, ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வது எளிய பரிகாரமாகும். 

கேது பகவான் :
கேது இல்லையேல் சொர்க்கம் காலியாகும். கேது சுபமாயிருந்தால் ஆன்மீகத்தில் நாட்டமும் உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும் ஏற்படும். பாப விமோசனத்தை அளிப்பவர் கேது. பிறவிப் பிணியறுப்பவர் கேது. கேது தோஷம் ஏற்பட்டால் சர்ம ரோகம், பில்லி சூன்ய துன்பங்கள், ஒழுக்கமற்ற பெண் சேர்க்கை ஏற்படும். காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் கோவிலில் 100 கிராம் நல்லெண்ணை தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வரவும். 

சனி பகவான் :
ஜாதகத்தில் சனிபலம் பெற்றிருந்தால் நீண்ட ஆயுளும், குறைவிலா செல்வமும் பெறுவார்கள். கொடிய விபத்திலும் ஆயுளை பாதுகாக்கும் சக்தி கொண்டவர் சனி. செய்த தவறுக்கு அந்த செயலாலே அழிவு ஏற்படுத்துபவர் சனிபகவான். வீட்டில் சனிக்கிழமை விரதமிருந்து மாலை தீபம் ஏற்றுவது, எள் கலந்த சாதம், ஏழை எளியவர்க்கு உணவு கொடுப்பது எளிய சனி தோஷப் பரிகாரமாகும். 
அங்காரகன் :
உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும். மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும். 

Tuesday, January 29, 2013

அசரீரி வாக்கு சொன்ன ஸ்ரீமஹாலிங்கம்!!!



இமயம் முதல் குமரி வரையில் பரந்து விரிந்துள்ள இந்தப் பாரத தேசத்தில் கணக்கற்ற சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. இவை இன்றும் ஸாந்நித்யத்துடன் அருள்பெருகும் ஜீவநதிகளாக இருக்கின்றன. 1,008 சிவாலயங்களில் 274 ஆலயங்கள் பாடல்பெற்ற தலங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பும், அருள்வீச்சும், பழைமையும், இதிகாசத்துடன் கூடிய வரலாற்றுத் தொடர்பும் உடையவை.
சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு – இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி. தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி தரும் தலங்களுள் காசிக்குச் சமமாகக் கருதப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலம் – திருவிடைமருதூர்.
மல்லிகார்ஜுனம் எனப்படும் ஸ்ரீசைலத்துக்கும், புடார்ஜுனம் எனப்படும் திருப்புடைமருதூருக்கும் மத்தியிலுள்ளதால், இது மத்தியார்ஜுனம் என்று வழங்கப்படும் பெருமையுடையது. 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புப் பெற்றது.
கோயிலின் வெளியே நான்கு மூலைகளிலும் நான்கு சிவாலயங்களைக் கொண்டிருப்பதால், இது பஞ்சலிங்க க்ஷேத்திரம் எனப்படுகிறது. வரகுண பாண்டியன் என்ற மன்னனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம். தன்னைத்தான் அர்ச்சித்துக்கொண்ட தலம் எனப் பல வகையிலும் பெருமை பெற்ற தலம் திருவிடைமருதூர்.
அகத்தியர் தொடங்கி பல ரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமையுடைய இத்தலத்துக்கு ஆதிசங்கரர் தனது திக் விஜயத்தின்போது வந்தார். அத்வைத சித்தாந்தத்தைப் பலர் ஏற்க மறுத்தனர். எல்லா பண்டிதர்களையும் மற்ற மதத்தினரையும் அழைத்துவந்து ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் முன் நிறுத்தி, ஈஸ்வரனையே எது ஸத்யம் என்று சொல்லும்படி வேண்டினார். அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க, மூலவர் ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி கைதூக்கி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று மூன்று முறை அசரீரியாகச் சொன்னார். அனைவரும் வியந்து பயந்து ஸ்ரீசங்கரருக்குச் சீடரானார்கள்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது ஆசார்யராக விளங்கி, நடமாடும் தெய்வமென்று பாமரர்களாலும் பண்டிதர்களாலும் கொண்டாடப்பட்ட ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் உகந்து தங்கிய திருத்தலம். திருக்கோயிலுக்கு அருகிலேயே மிகப் பெரிய மடத்தைக் கொண்டுள்ளது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம். ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று கைதூக்கி மும்முறை கூறியதை நினைவுபடுத்தும் வகையில் ஸ்ரீமடத்தின் முகப்பு வாயிலின் முதல் தளத்தில் அழகான சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆசார்யாள் பாதுகை ஸ்ரீமடத்தின் மத்தியிலுள்ள விமான மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மஹா ஸ்வாமிகள், ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுடன் இங்கு முகாமிட்டு தங்கியுள்ளார். சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்துள்ளார். 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஸ்ரீமடத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினார்.ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 75-வது அவதார அம்ருத மஹோத்ஸவ ஆண்டை-யொட்டி,திருவிடைமருதூர் ஸ்ரீமடத்தை பழைமை மாறாமல் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க பல பக்தர்கள் முனைந்துள்ளனர். இங்கு நடைபெற்றுவரும் பாடசாலை, மாண-வர்கள் தங்க வசதியான இடம். யாத்ரீகர்கள் வந்தால், தங்குவதற்கு அறைகள், விசாலமான சமையலறையுடன் கூடிய அன்னக்கூடம் முதலியன கட்டுவதற்குத் திட்டமிடப்பட்-டுள்ளது. இவை தவிர, யாத்ரீகர்களுக்கு சாப்பாடு வசதியும், தினசரி மதியம் அன்னதானமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, January 23, 2013

கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, முதுகு, மூட்டு வலி, சிறு நீரகக் கல்


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும்
பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக
செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID
ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத்
தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,
குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை
வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால்
காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன
கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும்
கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு
விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள்
10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக்
கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02)
அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய
அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்
வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக
உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில்
உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே
வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க
முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க
அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.
அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும்
வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும்
உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம்
இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து
கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை
நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன்
அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு
தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால்
தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப்
பழுவுடன் தள்ளாடுகிறது.


இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக்
அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில்
யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக
மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து
இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால்
இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால்
மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது
அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது.
மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில்
தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thursday, January 3, 2013

தினம் ஒரு திருமந்திரம் 03-01-2013


இறைவனை காண்பவன் யார்? - திருமூலர்

"நாளும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்துமுதல் இரண்டும்

காலங்கண் டானடி காணுல மாமே" 


நாலும், இருமூன்றும் , ஈரைந்தில் கொண்டு சேர்க்கும் . 

அதாவது இருமூன்று - இரு கண்கள் இரு - மூன்றுவட்டம் 

கொண்ட கண். நமது இரு கண்வழி தவம் செய்வதால் 

அதிலிருந்து நாலு கலை பிரிந்து சென்று ஈரைந்து - பத்து. 

அதாவது பத்தாமிடமான 'ய' கார ஸ்தானம் , நம் 

ஆதமஸ்தானத்தில் சேரும். ஈராறுங் - பன்னிரண்டு 

கலையுடைய சூரியன் நமது வலது கண். "கோலிமேல் 

நின்ற குறிகள்" - கோலி போல் சிறுவர்கள் 

விளையாடுவார்களே கோலிகுண்டு, அதுபோல நமது 

கண்மணி உள்ளது. நம் பூமியைப் போல உள்ளது. அதில் 

பதினாறு என்பது இடது கண் சந்திர கலையை குறிக்கும். 

வலதுகலை 12 , இடதுகலை 16 இரண்டும் கோலிபோல் 

உள்ள கண்மணி அமைப்பு. மூலம் கண் என தெளிவாக 

கூறுகிறார் திருமூலர். கண்ணை கண்டு, இரு கண் 

கலையும் உள்ளே முடியும் இடமான அக்னிகலை - 

ஆத்மஸ்தானம் பத்தாகும். 'ய' பத்தாகிய இடத்தை ,

16 கலை 12 கலை சேர மீதி உள்ள நாலுகலை கூட 

நாம் அடையலாம். இடது கண் சந்திரகலை சூரியகலை 

வலது கண்ணை ஊடுருவி உட்புகும்போது எஞ்சிய நாலு

கலை இருகண்ணும் உள்ளே முடியும் இடமான 

பத்தாமிடத்தை சேரும். இதுவே தவ அனுபவம். 

இங்ஙனம் காலங்கடந்த அழிவில்லாத ஜீவ ஆத்மாவை 

கண்டவன் உணர்ந்தவன் இறைவனை காண்பவனாவான்.


கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!


ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், 
உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை 
மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, 
புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். 
புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், 
மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் 
தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி 
நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். 
குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், 
தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு 
அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த 
நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் 
ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் 
முக்கியமானவை இருபத்தெட்டாகும். 
1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு 
அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் 
அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் 
நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு
கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு 
கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் 
அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்
போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு 
அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர 
கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் 
பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் 
அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் 
போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு 
பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு 
விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது 
லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் 
கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது 
அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு 
க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை 
ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் 
செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது 
பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் 
ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை 
விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது 
குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை 
ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். 
இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான 
கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.
அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து 
மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை 
ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை 
வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்
செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் 
உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி 
விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் 
குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் 
பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் 
தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் 
துன்புறுத்துவார்கள்.
மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை
வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் 
செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். 
இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான
 மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி 
மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா 

உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் 
கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் 
இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்
கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் 
துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் 
அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் 
வதைத்த பாவிகள் செல்லும் நரகம்
இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி 
என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்ம
நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் 
அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால்
துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத 
ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது 
கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் 
துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், 
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு 
வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, 
கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு 
பாவிகள் அவதிப்படுவார்கள்.
அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல்,

கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் 
புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய 
மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். 
விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் 
துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, 
தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து 
வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை 
நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள்.
இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் 
மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் 
எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ 
கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் 
வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் 
கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் 
சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். 
பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். 
இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் 
துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், 
உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது 
கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய 
பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் 
எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக 
நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. 
இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். 
கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து 
துன்பப்படுவார்கள்.
பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, 
ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் 
அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள்,
பிராணிகள் கடிக்கும்.
பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் 
அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை 
ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் 
நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி 
கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற
மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் 
நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, 
உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், 
மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் 
செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான 
கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் 
தூக்கிவீசி அழுத்துவார்கள்.
மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற 

தண்டனைகள்:
1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின்

கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய 
பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் 
கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் 
பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் 
மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் 
கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் 
கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் 
கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் 
தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் 
பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் 
மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு 
பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் 
திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத 
தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி 
அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, 
வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான 
தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும்.
எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை
நரகில் நிச்சயம் என்று அறிந்து 
புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய்

ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே!
மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை
தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க 
விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் 
அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது 
தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை 
பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், 
என்றார். அகத்தியர் சிரித்தார். தேரையர் 
சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். 

சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். 
உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். 
ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி 
கிடைத்து விடும், என்றார்.

சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே!
இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் 
போய் சேர்வது தான் முக்தி தத்துவம்.
தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும்
என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார்.

சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் 
அகத்தியர்.
தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை
நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய்.
மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி
வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, 
என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்?
உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி 
அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! 
மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது 
போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் 
நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் 
இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் 
பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற
துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், 
ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் 
தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக
இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற 
உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும்
நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை 
செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார்

ஞானம் அடைய இதோ எளிய வழி!!!


ஞானம் அடைவது என்பதை பற்றி பேச

நான் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.

நான் ஞானம் அடைந்தவன் என நீங்கள் உணர

உங்களுக்கும் ஞானம் இருக்க வேண்டும்.

எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்

ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச 
வேண்டும் ?


ஞானம் எனும் கருத்து மிகவும் மலிந்த விஷயமாகி
விட்டது. ஞானம் அடைந்தால் என்ன ஆகும் என 
கேட்டால், கடன் தொல்லை தீரும், தொழில் மேன்மை 
நடக்கும் என பதில் வருகிறது.தன்னை யோகி என்று 
அழைத்துக்கொள்ளுபவர்களோ தங்களின்
சுயசரிதை புத்தகத்தில் 1980ல் இன்ன மாதம் இன்ன 
தேதியில்ஞானம் அடைந்தேன் என்கிறார்கள். 
எதிர்காலத்தில் விசிடிங்
கார்டிலோ அவர்களின் யோகபயிற்சி பள்ளியிலோ இப்படி
எழுதினாலும் எழுதுவார்கள்.

“ஞானி Since 1980".


ஆன்மீகம் என்பது கடைசரக்கே. அதிலும் ஞானம் என்பது
 வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு அசிங்கமாகி
விட்டது. நமது கலாச்சாரம் பலயோகமுறைகளை 
கொண்டது.யோகம் என்பது பிரம்ம சொரூபத்துடன் 
வேறுபாடு இல்லாமல் கலப்பது. ஹடயோகம், 
கர்ம யோகம், பக்தி யோகம்,ராஜயோகம், ஞான யோகம் 
என பல யோக முறைகள் இருக்கிறது. உடல், மனம், 
முறைகள் ஹட,கர்ம,பக்தி மற்றும் ராஜ யோக முறைகள். 
ஆனால் 
இதை தவிர்த்து எந்த செயலும் இல்லாமல், தனது ஞானம் 
கொண்டே இறைவனுடன் கலப்பது ஞானயோகம்.

எந்த செயலும் தேவை இல்லை என சொல்லிவிட்டு, ஞானம்
 ”அடைவது” , “கலப்பது” என பல செயல்பற்றி 
சொல்லுகிறேன், உண்மையில் இவை செயல்கள் அல்ல. 
ஞானம் என பிரத்யோகமாக அடைய எதுவம் இல்லை. 
அனைவரும் ஞான நிலையிலேயே இருக்கிறார்கள். 
அதை உணர்வதில்லை.கஸ்தூரிமான் தனது 
வால்பகுதியில் கஸ்தூரி இருப்பது 
தெரியாமல் அந்த வாசனை காட்டில் எங்கே இருக்கிறது 
என தேடி அலையுமாம். கடைசியில் சோர்வுற்று அமரும்
பொழுது அதன் கஸ்தூரி இருக்கும் இடம் அதற்கு தெரிய
வரும். அது போல ஞான நிலையிலேயே இருக்கிறோம் 
என அறியாமல் செயல் செய்ய வேண்டி இருக்கிறது.
ஞான யோகிகள் தாங்கள் பிரம்ம சொரூபம் என்றும்,
உலகம்பொய்யானது, தனது இருப்பே மெய்யானது என 
எண்ணுகிறார்கள். ஞான யோகிகளின் நிலையை 
உணரவும். ஞான யோகத்தை பின்பற்றி ஞானத்தை
உணரவும்தோன்றிய நூல் “யோகவாஸிஷ்டம்”.ராமாயண 
காலத்தில் ( த்ரிதாயுகம்) நடப்பதாக வர்ணிக்கபட்டுள்ளது.
பகவத் கீதை போன்ற நூல் 
அல்ல இது. ஸ்ரீ ராமனின் குருவான வஸிஷ்டர் தனது 
மாணக்கனுக்கு ஞானம் அடைய வேண்டி உபதேசிக்கிறார். 
உபதேசித்தவுடன் தான் பிரம்மம் என ஸ்ரீராமன் 
உணருகிறான்.என்ன வேடிக்கை பார்த்தீர்களா? 
கடவுளாக இருந்தாலும் இங்கே வந்தால் தான் யார் 
என்பதை மறந்துவிடுகிறார்கள். 
நம்மை பற்றி யோசியுங்கள். 32000 சுலோகம் கொண்டது 
இந்த நூல் பல ஞானிகளால் எளியவடிவில் விளக்கம் 
அளிக்கப்பட்டுள்ளது.
காலம் மற்றும் தேசம் எனும் இரு கொள்கைகள் எவ்வளவு 
தவறானது என சுட்டிகாட்டி விளக்குகிறார் வஸிஷ்டர். 
நீங்கள் இரவில் தூங்குகிறீர்கள் அப்பொழுது கனவில் வரும் 
செயல்கள் அனைத்தும் உண்மை போலவே இருக்கிறது. 
உங்களை வேறு உலகில் எடுத்து செல்லுகிறது. கண் 
விழித்தவுடன் அந்த உலகம் மறைந்து வேறு உலகம் 
கண்களில் தெரிகிறது. எது உண்மை?
கண் விழித்தது என்பது கனவாக இருந்து நினைவு என்பது
பொய்யாக இருந்தால்?

நமது உணர்வு நிலையை தூக்கத்திலிருந்து நாம் 
எட்டியவுடன் நமக்கு முதலில் மூளையில் வரும் 
செய்தி இரண்டு. இன்ன நேரத்தில் நான் விழித்திருக்கிறேன், 
இன்ன இடத்தில் இருக்கிறேன். இதில் ஏதேனும் ஒன்று 
சரியாக செயல்படவில்லை என்றால் உங்களால் 
இயல்பாக இருக்க முடியாது.காலம் என்பது உங்களுக்குள் 
புகுத்தப்பட்ட மாயை. இடம் என்பதும் அது போன்றதே.

நமது வாழ்க்கையிலும் ஏதோ சில நிமிடம் நம்மை 
அறியாமல் ஞானத்தை சுவைத்ததுண்டு.
சில தருணங்களை சுட்டி காட்டுகிறேன்.
மதிய நேரத்தில் தூங்கி மாலை நேரத்தில் எழுத்தவுடன் 
மனதில் காலை நேரமாக இருக்குமோ என நினைத்து பல் 
தேய்க்க முயற்சி செய்ததுண்டா? பிறகு மாலை நேரம் என 
தெரிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
இரவு நேர நீண்ட பயணங்களில் திடீரென முழிப்பு வந்ததும் 
எந்த ஊரில் பயணிக்கிறோம் அறிய என முயற்சி 
செய்யாமல் இருந்ததுண்டா? ஜன்னல் வழியே பார்த்தால் 
உங்களுக்குள் என்ன உணர்வீர்கள் ?இது போல 
வஸிஷ்டர் ஸ்ரீராமனுக்கு சில கதைகளை சொல்லி 
அவரின் அறியாமையை தவிடு
பொடியாக்குகிறார். ஸ்ரீராமன் உணர்வு நிலையில் இருந்து 
ஞானவெளியில் தூக்கிவீசப்படுகிறார்.
காலம் என்பது கற்பனையே. அந்த கற்பனைதான் ஞானம் 
அடைய தடையாக இருக்கிறது.
உங்களுக்கு முப்பது வயதாகிறது என சொல்லிகிறோம்.
அல்லவா? இது எப்படி வந்தது? பிறந்து முப்பது வருடம் 
ஆகியது, 365.25 நாட்கள் சேர்ந்து 24 மணி நேரம்.24மணி 
நேரம் ஒரு நாள் என்பது ஏன் நாம் அமைத்துக்கொண்டோம்?
ஒரு பகல் ஒரு இரவு இருப்பது ஒரு நாள் என அனைவரும் 
எடுத்த ஒருமித்த முடிவு. இதையே 12 மணி நேரம் ஒரு நாள் 
என முடிவு செய்தால் உங்களுக்கு 60 வயதாகிவிட்டது. 
இதே ஒரு நாள் 48 மணி நேரம் என கொண்டால் 
உங்களுக்கு பதினைந்து வயது தான்.காலகணிதம் எனும் 
அடிப்படியில் நான் 60வயதில் இறந்து மறுபிறவி 
எடுக்கிறேன் என கொண்டால், மேற்கண்ட விளக்கத்தில் 
ஒரு நாள் 12 மணி நேரம் எனறால் இந்த நேரம் நான் 
அடுத்த பிறவியில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 
60 மணி நேரம் எனக்கொண்டால் 
இந்த நேரம் நான் எனது முற்பிறவியில் இருப்பேன்.
ஒருவரின் அடுத்த பிறவி மற்றும் முந்தைய பிறவி என 
அனைவரும் நம்புவது காலத்தை வைத்துதான். 
உண்மையில்நாம் இறந்துவிடவில்லை என 
நினைப்பதும், அடுத்த பிறவி 
என்பது காலத்தை பொருத்தது.
இந்த கருத்தை வஸிஷ்டர் விளக்க கூறும் கதை 
அபாரமானது.கடைசியில் ஸ்ரீராமர் புரிந்துகொண்டதும்
வஸிஷ்டர் கூறுகிறார், “ஸ்ரீ ராமா அங்கே பார், ஸ்ரீகிருஷ்ணர் 
பகவத் கீதையை உபதேசிக்கிறார், இங்கே பார் மச்சவதாரம் 
நிகழ்கிறது. அனைத்தும் ஒருங்கே நிகழ்கிறது. நீ அதை
அறியவில்லை”
அதனால் தான் சொல்லுகிறேன் ஞானம் அடைவது 
எளிது. காலம் எனும் கட்டை உடைத்து வெளியேறுங்கள். 
அனைத்தும் காணும் “அதனுடன்”ஒன்றாகிவிடுவீர்கள்.

நன்றி
http://vediceye.blogspot.in/2009/04/blog-post_03.html