Tuesday, April 30, 2013

பக்தி கதை



கோயிலுக்குப் போனால், அங்கே என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களைப் படித்தோ, பெரியவர்களைப் பார்த்து பழகியோ வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், இதோ! இவனுக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும். கோயிலுக்கே போகாத ஒருவன், அன்று ஏதோ கஷ்டம் வந்ததால் சாமியிடம் போய் சொல்வோமே என கோயிலுக்குப் போனான். அர்ச்சகர், பூஜை காட்டி கற்பூர தட்டை எல்லார் முன்னாலும் நீட்டினார். எல்லாரும், அதை தொட்டு வணங்குவதைப் பார்த்து இவனும் கண்ணில் ஒற்றிக்கொண்டான். அடுத்து தீர்த்தம் வழங்கப்பட்டது. இவன் முந்தி வந்து நின்றான். தீர்த்தம் அவன் கையில் தரப்பட்டதும், அதை கை கழுவ தந்திருப்பார்களோ என நினைத்து, கழுவ முற்பட்ட வேளையில், எல்லாரும் அதைக் குடிப்பதை பார்த்து இவனும் உறிஞ்சிக்கொண்டான்.

அப்போது வாயில் ஏதோ தட்டுப்பட்டது. அது துளசி இலை. அது எப்படியோ வாய்க்குள் போய்விட்டதாக நினைத்து துப்பினான். அர்ச்சகருக்கு கோபம். அடேய்! நீ துப்புவதற்கா கோயில், என கடிந்து கொண்டார். தீர்த்தத்தில் மிதந்த துளசியை சாப்பிடலாம் என்ற அறிவு கூட அவனிடம் இல்லை. அர்ச்சகர் திட்டியதால், கீழே கிடந்த துளசியை எடுத்து, பக்கத்தில் இருந்த சுவாமி சிலையின் தலையில் வைத்தான். அர்ச்சகர் அவனை அடிக்காத குறையாக, அடேய்! நீ துப்பியதை சுவாமி தலையிலா வைக்கிறாய்! என்று கடுமையாக கடிந்து கொண்டார். அவன் அவசரமாக அதை எடுத்துக் கொண்டு வெளியேறினான். மற்ற பக்தர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. கோயில் குறித்த சம்பிரதாயங்கள் தெரியாதவர்கள், இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

பக்தி கதை



ஒரு துறவி, சீடனைத் தினமும் காட்டிற்குச் சென்று, அங்குள்ளவற்றை அறிந்து வரும்படி அறிவுறுத்தினார். அவன் தினமும் காட்டிற்குச் சென்று வந்தான். முதலில் பயமாக இருந்தது. ஒரு வாரத்தில் காடு அவனுக்கு இயல்பாகிப் போனது. பயம் தெளிந்ததும், அடர்ந்த காட்டுக்குள்ளும் நுழைய ஆர்வம் பிறந்தது. விலங்குகளை பார்த்தான். தனது அனுபவத்தை குருவிடம் அன்றாடம் சொல்வான். காடு பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ந்து செல் என்று அவர் உத்தரவிட்டார். ஒருநாள் சீடன் மரநிழலில் அமர்ந்தான். காட்டு நீரோடை சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. பறவைகள் பாடிக் கொண்டு இருந்தன. சுற்றி நிகழ்வதை ஆழ்ந்து கவனித்தான்.

விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதில் விழுந்தன. இன்னும் கவனித்தான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. பார்த்ததை குருவிடம் தெரிவித்தான். மகிழ்ச்சியுடன், நல்லது! இன்னும் கவனித்து வா! என்று தட்டிக் கொடுத்தார். காட்டில் ஒருநாள் இனிய அனுபவம் காத்திருந்தது. என்னுடைய காது தானா? என்று சந்தேகம் வந்தது. பூக்கள் பூக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டு தன்னை மறந்தான். குருவைத் தேடி மகிழ்ச்சி யுடன் ஓடி வந்தான். என்ன! இதுவரை ஏற்படாத புதிய அனுபவம் கிடைத்ததோ!, என்றார். மூச்சிறைத்த படி,ஆம் குருவே! என்று நடந்ததைச் சொன்னான். உனக்கு ஆழ்ந்த கவனம் கைவந்தது. நாளை முதல் வேறொரு பாடம், என்றார் குரு. ஆழ்ந்த கவனம் என்பது மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

தினம் ஒரு திருமந்திரம் 30-04-2013



வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்நிற வாவிடின் கோழையும் ஆமே.

பொருள் : வாய்திறவாமல் மௌனமாக இருப்பவரது மன மண்டலத்தில் பிராணனாகிய செல்வம் ஒன்றுள்ளது. அங்ஙனமின்றி வாய்திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியிட்டு வீணாக்குபவர். பேசாத மௌனியர் மதிமண்டலத்தில் பிராணனைச் செலுத்திச் சோதியை அறிகின்றனர். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறந்து பார்க்க வல்லமையற்றவர்கள் கோழைத்தனம் உள்ளவராவர். (கோய்-நகை வைக்கும் செப்பு)

Monday, April 1, 2013

மௌனம்


மௌனம் என்பது இறையோடு ஒன்றி இருக்கும் நிலை

இந்த நிலைக்கு அடிப்படையான முதல் நிலை சுவாசத்தை கட்டுபடுத்துதல். சுவாசத்தைக் கட்டுப்படுத்துதல் என்றால் அதை ஒளிரச் செய்தல் தான் கட்டுப்படுத்துதல்.

1. சுவாசம்:
முதலில் சுவாசத்தை மௌன நிலைக்கு கொண்டு செல்வது. மூன்று சுவாசங்களை ஒரு சுவாசமாக்குவது. அப்பொழுது எண்ணங்கள் கட்டுப்படும்.

2. எண்ணம்:
எண்ணங்களில் மௌனம் என்றால் தேவையற்ற விஷயங்களை சிந்திக்காமல் இருத்தல், இது எண்ணங்களின் மௌனம்.

3. மனம்:
மனதின் மௌனம் இப்பொழுது மனமானது சுவாசத்தின் வழி செல்லாமல், எண்ணங்களை சிந்திக்காமல், உணர்வு என்று சொல்லப்பட்ட அக்னித்தன்மையை உணர்ந்திருப்பது தான் மனதின் மௌனமாகும்.
நம் உடலில் மூன்று அக்னி உள்ளது. அது மூன்றும் ஒன்றாக இணைந்து ஜோதியாகிறது. இது தான் மனதின் மௌனமாகும்.
இப்பொழுது உடலில் உள்ள புலன்கள்.....

4.கண்:
கண்ணின் மூலம் செய்யப்படும் அப்பியாசங்களால் கண் மௌன நிலை அடைகிறது. எப்படியென்றால் கண் இந்த உலக விஷயங்களை பார்க்கும்போது நல்லது, கெட்டதைப் பிரித்து பார்க்கிறது. பார்த்தவுடனே ஒரு விஷயத்தை நம்பாமல், தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுக்கும். தேவையற்ற விஷயங்களை பார்க்காமல் இருக்கும்.

5. வாய்:
வாய் என்றால் நாக்கினுடைய தன்மையாகும். நாக்குக்கு சில பயிற்சிகள் செய்யும் போது வாய் மௌனநிலை அடைகிறது. அப்போது தேவையற்ற விஷயங்களை பேசாமலும், தேவையற்ற உணவுகளை எடுக்காமலும், நல்ல விஷயங்களை பேசுதல் வாயின் மௌனமாகும்.

6. மூக்கு:
மூக்கு பயிற்சி செய்யும் போது, சுவாசக் கலைகள் ஒளித்தன்மை அடைகிறது. வாசனையான உணவு வகைகளுக்கும் அடிமையாகாமல் கட்டுப்படுத்தும்.

7. காது:
காது சில அப்பியாசங்கள் செய்யும் போது தேவையற்ற விஷயங்களை கேட்பதும், அதனால் மனம் மகிழ்வதும் இருக்காது. புகழ்ச்சி, பிறருடைய தீங்கு, அறிவுரை இவற்றையெல்லாம் கேட்டு மனம் இன்புறாது.

8. மெய்:
புலன்கள் வழியாக செய்யப்படும் அப்பியாசங்களும், ஆதாரங்கள் மூலமாக எட்டு அவஸ்தைகளில் இருந்து நீக்கி இறைத்தன்மையை உணர வைப்பது தான் உடலுக்கு மௌனம ஆகும். உடலில் செய்யப்படும் பயிற்சிகளால் ஜோதி உற்பத்தியாகி உடல் உறுப்புகளில் மௌனம் ஏற்படுகிறது. உடலில் மிருதுவான தன்மை ஏற்படுவதால் கடுமையான வேலைகளிலும், விஷயங்களிலும் ஈடுபடாமல் இருத்தல், பணம், செல்வாக்கு, புகழ்ச்சிக்கான வளர்ச்சிக்கு உடல் ஈடுபடாமல் இருத்தல்.

9. இருதயம்:
இருதயத்தின் துடிப்பை பயிற்சியின் மூலமாக, சாதாரண நிலையில் சீராகவும், பயிற்சி நிலையில் குறைந்தும் காணப்படும். ஏனென்றால் அது மௌன நிலை அடைகிறது. பயம், கவலை, சந்தோஷம் போன்ற நேரங்களிலும் அதன் துடிப்பு சீராக இருக்கும். இது மௌனத்தின் நிலையாகும்.

10. கல்லீரல், நுரையீரல் கணையம், மற்றும் பல உறுப்புகள்:
இவை அனைத்தும் கூட பயிற்சியின் மூலம் மௌனம் அடைகிறது. எப்படியென்றால் இந்த உறுப்புகள் ஒளிநிலையை அடைவதால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் மற்றும் மற்ற விஷயங்களை குறைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் இவற்றின் வாழ்நாள் நீடிக்கும். இதுவே உடல் உறுப்புகளுக்கு மௌனமாகும்.
11. வயிறு:

சாதாரண நேரங்களைவிட, பயிற்சியின் போது பசியிருக்காது. இப்படி பழகி வரும்போது பயிற்சியினால் வயிற்றிலிருக்கும் அக்னித்தன்மை ஜோதியாக மாறும். அப்போது பயிற்சி நேரங்களில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் பசி குறைவாக காணப்படும். இதுவே வயிற்றுக்கு மௌனமாகும்.

12. தோல்:
வெப்பம், குளிர்,தொடு உணர்ச்சி போன்ற விஷயங்கள் பயிற்சியின் மூலம் ஜோதியை தோல் பெறுவதன் மூலம் இவை நீங்குகிறது. இதுவே தோலின் மௌனமாகும்.

13. நாடி, நரம்புகள்:
நாடி நரம்புகள் மேன்மை அடைந்தும், சீராக இயங்கியும் காணப்படும். பயிற்சி காலங்களில் நாடி நரம்புகளின் இயக்கம் மௌனத்திற்கு உட்படுகிறது
நாடி நரம்புகளின பயிற்சியின் மூலம் தசநாடிகளும் ஒளிநிலை அடைந்து மௌனம் அடைகிறது. அப்போது இவற்றின் மூலம் இயங்கும் உடல் உறுப்புகள் அனைத்தும் மௌனம் அடைகிறது.

14. குறி, குதம்:
இவற்றின் இயக்கமும் உணவு எடுக்காததால் மௌனத்திற்கு உட்படுகிறது.

15. கை, கால்கள்:
உடல் உறுப்புகள் அனைத்தும் மௌனத்திற்கு உட்படுவதால் கை, கால்கள் தனக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே செய்யும். நடை, பேசும்போது, கையால் காட்டும் சைகை அனைத்திலும் மேன்மையான நிலை ஏற்படும். இவையே அவற்றிற்கு மௌனமாகும்.

16. மூளை;
உறுப்புகள் அனைத்தும் செயல்படச் செய்யும் மூளையும், அப்பியாசத்தின் மூலம் மௌன நிலையை அடைகிறது. உடல் உறுப்புக்கள் மௌனமாக இருப்பதால் மூளையும் மௌனம் அடைகிறது.

17. குணங்கள்:
நமக்கு மூன்று குணங்கள் இருக்கின்றது. அப்பியாசத்தின் மூலம், மூளை மௌனம் அடைந்ததும், இந்த முக்குணங்கள் நிர்குணமாகிறது.
இதுதான் குணத்தின் மௌன நிலையாகும்.

18. சூட்சம தேகம்:
உடல் உறுப்புக்கள் அனைத்தும் மௌனம் அடைவதன் மூலம், நம் வினைகளும் எரித்து சாம்பலாக்கபட்டு மௌனம் அடைகிறது. இதன்மூலம் நம் உடலிலுள்ள சூட்சமதேகம் வளர்ச்சி அடைகிறது . சூட்சம தேகமானது வெளியே செல்லாமல், உடலுக்குள்ளேயே இருந்து பேராற்றலை கிரகிக்கிறது. அப்படி பேராற்றலை கிரகித்து சூட்சம தேகத்தில் உள்ள புலன்களும் மௌனம் அடைகிறது. இதுவே சூட்சம தேகத்தின் மௌனமாகும்.

சூட்சம தேகம் மௌனம் அடைவதின் மூலம் பேராற்றல் நன்கு கிரகிக்கப்பட்டு ஆன்மா பரமாத்மாவை அடைகிறது. இதுவே உண்மையான மௌனமாகிறது.

குண்டலினி என்றால் என்ன?
தாவரங்கள் வெளிச்சக்தி, ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக வந்து முடிவாகிறது. அது போல் எல்லா ஜீவராசிகளும் அனேகவித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனித உடம்பில் 13, 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்த நாடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கிறது. விந்துவின் உள்ளும், புறமும் இருக்கும் சக்தியே 'குண்டலினி' ஆகும்.

குண்டலினி யோகத்தின் நன்மைகள்

குண்டலினியால் பேரின்பம் பெற்று அனுபோக முறைப்படி கவனித்து வந்தால், ஐந்து அல்லது பத்தாண்டிற்குள் தன்னுடைய வயதைக் கூட்டிக்கொள்ளத் தனக்கு வல்லமை ஏற்பட்டுவிடுகிறது.

ஏழைக்கும் அரசனுக்கும் ராஜ தனவந்த எளியோர்களுக்கும் நிம்மதி நிலை ஊட்டும் சக்தி குண்டலினி.

நம் கன்னத்தைத் தொட்டு முத்தமிட்டுக்கொள்ளும் உணர்ச்சியால் அன்பு, உடன்பாடு ஆகிய ஒற்றுமையும் மோவாய்க்கட்டை, தாடியைத் தொட்டுத் தாங்கும் உணர்ச்சியால் சாந்தமும், அமைதியும், மீசையைத் தொட்டு முறுக்கி விடும் உணர்ச்சியால் மூர்க்கமும், வீரமும், கோபமும் ஏற்படுவது போல், பிடரி, நெற்றி, உச்சி இவைகளினுள் நமது விந்து என்னும் குண்டலினி உணர்ச்சி பட்டவுடன் முறையே ஞாபகம், ஆராய்ச்சி, நிதானம், வீரம், தைரியம், பேரறிவு, பேரின்பம் ஆகியவை நாளுக்கு நாள் மிகுதியாகின்றன.

அறிவின் கூர்மையால் நொடிப்பொழுதில் தன்னிலை உணர்தலாகிய ஞானம் அடையலாம். பேரின்ப சுகத்தைத் தன் குண்டலினியால் அடையலாம்.

குண்டலினியால் பேரின்ப நிலையை அடைவதற்கு பிரம்மச்சரிய விரதம், தனி இடம், ஜெபம், பிராணயாமம் தேவையில்லை. சொல்லுகின்ற, கேட்கின்ற நுண்ணறிவும், நுட்பமாக நோக்கும் திறமையிம் இருந்தால் போதுமானது.

குண்டலினி தீட்சை பெற்றுவிட்டால் அட்டமாசித்து விளையாடலாமென்றும், வேறு சாதரண உலோகங்களை உயர்ந்த தங்கமாகச் செய்யலாமென்றும், கூடு விட்டுக் கூடு பாயலாமென்றும், ஓரிடத்திலுருந்து கொண்டு அதே நேரத்தில் மற்றோரிடத்தில் உலாவலாமென்றும், வெகு தொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலுருந்தே பார்கலாமென்றும், சாகாமல் எப்பொழுதும் இருக்கலாமென்றும், ஆயிரக்கணக்கான மாதர்களுடன் போகம் செய்யலாமென்றும், தனக்கு மாத்திரம் தனியாக மோட்சம் இருக்கிறதென்றும், உணவில்லாது என்றும் வாழலாமென்றும், ரசமணி தானாகவே திரண்டுவிடுமென்றும், எதுவேண்டுமானாலும் செய்யலாமென்றும் எண்ணுவோர் குண்டலினி சக்தியின் பேரின்பத்தை அடைந்ததும் மேற்சொல்லப்பட்டவை எல்லாம் வியப்புறுவதற்காகச் செய்து கொண்ட கற்பனை என்று சிறிது காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.


நன்றி
http://paranjothisky.org/ta/mahaan/kundalini.html

தினம் ஒரு திருமந்திரம் 01-04-2013


          முக்குணம் மூடற வாயுவை மூலத்தே
          சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
          தக்க வலம்இடம் நாழிகை சாதிக்க
          வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே

பொருள் : தாமத இராசத சாத்துவிகம் என்ற முக்குணங்களாகிய இருள்நீங்க மூலாதாரத்திலுள்ள அபானனை மேலெழும்படி செய்து, வலப்புற சூரிய கலையை இடப்புறமுள்ள சந்திர கலையோடு பொருந்தும்படி அதிகாரையில் ஒரு நாழிகை பயின்றால் உயிரை உடம்பில் அழியாது சிவன் வைப்பான். (உயிர்நிலை- உடல்)