Monday, April 1, 2013


குண்டலினி என்றால் என்ன?
தாவரங்கள் வெளிச்சக்தி, ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக வந்து முடிவாகிறது. அது போல் எல்லா ஜீவராசிகளும் அனேகவித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனித உடம்பில் 13, 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்த நாடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கிறது. விந்துவின் உள்ளும், புறமும் இருக்கும் சக்தியே 'குண்டலினி' ஆகும்.

குண்டலினி யோகத்தின் நன்மைகள்

குண்டலினியால் பேரின்பம் பெற்று அனுபோக முறைப்படி கவனித்து வந்தால், ஐந்து அல்லது பத்தாண்டிற்குள் தன்னுடைய வயதைக் கூட்டிக்கொள்ளத் தனக்கு வல்லமை ஏற்பட்டுவிடுகிறது.

ஏழைக்கும் அரசனுக்கும் ராஜ தனவந்த எளியோர்களுக்கும் நிம்மதி நிலை ஊட்டும் சக்தி குண்டலினி.

நம் கன்னத்தைத் தொட்டு முத்தமிட்டுக்கொள்ளும் உணர்ச்சியால் அன்பு, உடன்பாடு ஆகிய ஒற்றுமையும் மோவாய்க்கட்டை, தாடியைத் தொட்டுத் தாங்கும் உணர்ச்சியால் சாந்தமும், அமைதியும், மீசையைத் தொட்டு முறுக்கி விடும் உணர்ச்சியால் மூர்க்கமும், வீரமும், கோபமும் ஏற்படுவது போல், பிடரி, நெற்றி, உச்சி இவைகளினுள் நமது விந்து என்னும் குண்டலினி உணர்ச்சி பட்டவுடன் முறையே ஞாபகம், ஆராய்ச்சி, நிதானம், வீரம், தைரியம், பேரறிவு, பேரின்பம் ஆகியவை நாளுக்கு நாள் மிகுதியாகின்றன.

அறிவின் கூர்மையால் நொடிப்பொழுதில் தன்னிலை உணர்தலாகிய ஞானம் அடையலாம். பேரின்ப சுகத்தைத் தன் குண்டலினியால் அடையலாம்.

குண்டலினியால் பேரின்ப நிலையை அடைவதற்கு பிரம்மச்சரிய விரதம், தனி இடம், ஜெபம், பிராணயாமம் தேவையில்லை. சொல்லுகின்ற, கேட்கின்ற நுண்ணறிவும், நுட்பமாக நோக்கும் திறமையிம் இருந்தால் போதுமானது.

குண்டலினி தீட்சை பெற்றுவிட்டால் அட்டமாசித்து விளையாடலாமென்றும், வேறு சாதரண உலோகங்களை உயர்ந்த தங்கமாகச் செய்யலாமென்றும், கூடு விட்டுக் கூடு பாயலாமென்றும், ஓரிடத்திலுருந்து கொண்டு அதே நேரத்தில் மற்றோரிடத்தில் உலாவலாமென்றும், வெகு தொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலுருந்தே பார்கலாமென்றும், சாகாமல் எப்பொழுதும் இருக்கலாமென்றும், ஆயிரக்கணக்கான மாதர்களுடன் போகம் செய்யலாமென்றும், தனக்கு மாத்திரம் தனியாக மோட்சம் இருக்கிறதென்றும், உணவில்லாது என்றும் வாழலாமென்றும், ரசமணி தானாகவே திரண்டுவிடுமென்றும், எதுவேண்டுமானாலும் செய்யலாமென்றும் எண்ணுவோர் குண்டலினி சக்தியின் பேரின்பத்தை அடைந்ததும் மேற்சொல்லப்பட்டவை எல்லாம் வியப்புறுவதற்காகச் செய்து கொண்ட கற்பனை என்று சிறிது காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.


நன்றி
http://paranjothisky.org/ta/mahaan/kundalini.html

No comments:

Post a Comment