Tuesday, April 27, 2021

கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?


* அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும். 


* விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 


* அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். நடைபயிற்சி மேற்க்கொள்வது  அவசியம். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும். 


* மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.


* அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும். 


* கீரைகள், பச்சை காய்கறிகள் சாப்பிடலாம், மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும். 


* ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம். வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக் கொள்ளலாம். 


* கொழுப்பு குறைந்த பால், ஆலிவ் எண்ணெயினை சமையல் பழக்கிக் கொள்ளுங்கள். 


* பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும், கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள். 


* பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். 


மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள்.  கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள். சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள். 


மேலும், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்.

No comments:

Post a Comment