Sunday, February 19, 2012

மானிடப் பிறவி




மானிடப் பிறவியின் நோக்கம் யாது?


உலகத்தில் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள்.


இந்தப் பிறப்பினால் அடையத் தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலம் உள்ள பொழுதே விரைந்து அறிந்து அடையவேண்டும்.


1.2 இந்தப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம லாபம் எது?


ஒப்பற்ற பெரிய வாழ்வு – வாழ்வதே


இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம லாபம் என்று உண்மையாக அறியவேண்டும்.


2. மானிட தேகம்:


2.1 மானிட தேகத்தில் உள்ள சித்துக்கள் யாவை?


மானிட தேகத்தில் உள்ள சித்துக்கள்


1. ஜீவனாக இருக்கின்ற ஆன்மா

2. அறிவுக்கு அறிவாக இருக்கின்ற கடவுள் விளக்கம்


2.2. மானிட தேகத்தில் உள்ள தத்துவ சடங்கள் யாவை?


மானிட தேகத்தில் உள்ள தத்துவ சடங்கள்:


1. இந்திரியங்கள்

2. கரணங்கள் முதலியன.


2.3 இம் மானிட தேகத்தில் சுக துக்கங்களை அனுபவிப்பது எது?


இம்மானிட தேகத்தில் சுக துக்கங்களை அனுபவிப்பது ஆன்மாவேயாகும்.


2.4 தேகங்களுக்கு அடிக்கடி ஏற்படும் அபாயங்கள் என்னென்ன?


பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை,பயம்,கொலை முதலியவை தேகங்களுக்கு அடிக்கடி ஏற்படும் அபாயங்களாகும்.


2.5 மனித தேகத்தின் சிறப்புகள் என்னென்ன?


1. மனித தேகம் மற்ற ஜீவதேகங்களைப் போல் இலேசிலே எடுக்க முடியாது.


2. மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் மிகவும் விளங்குகிறது.


3. இந்த மனித தேகம் போனால் மீளவும் இந்த தேகம் வரும் என்கிற நிச்சயம் இல்லை.


4. இந்த மனித தேகம் முத்தி இன்பம் பெறுதற்கே எடுத்த தேமாகும்.


5. இந்த மனித தேக மாத்திரமே, முதற் சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவுடைய தேகமாகும்.


2.6 மனித தேகத்தில் உள்ள அசுத்த பூத அணுக்கள் யாவை?


தோல், நரம்பு, எலும்பு, தசை, இரத்தம், சுக்கிலம், முதலியவை மனித தேகத்தில் உள்ள அசுத்த பூத அணுக்கள் ஆகும்.


2.7 சாதாரண மானிட தேகத்திற்கு உண்டாகும் குற்றங்கள் யாவை?


1. சாயை

2. வியர்வை

3. அழுக்கு

4. நரை

5. திரை

6. மூப்பு

7. இறப்பு

முதலியன சாதாரண மானிட தேகத்திற்கு உண்டகும் குற்றங்கள் ஆகும்.

1 comment:

  1. வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
    நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
    http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

    ReplyDelete