திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.
குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் -
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
என்கிறார்.
அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரெண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடோடு பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.
மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிக்கும் x, y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அப்படி இருக்க திருமூலரின் பாடலிலும் உண்மை உண்டென்றால் நமது தொன்மையான இலக்கியங்களுள் இருக்கின்ற நல வாழ்வு தத்துவங்களை நாம் ஏன் அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடாது? இன்னும் திருமந்திரத்தில் குழந்தை ஊனமாகப் பிறப்பது குறித்தும், குழந்தையின் ஆயுள் நிர்ணயிக்கும் நேரம் குறித்தும் பல கருத்துகள் உள்ளது. ஏன் அதை தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் என் கருத்து…. நீங்க எப்படி?
No comments:
Post a Comment