Friday, February 24, 2012

அஷ்டாங்க யோகம்


எட்டுவிதமான யோகத்தில் அப்படி என்ன சிறப்பு?

என்றனர் எதுவும் தெரியாதவர்கள்.

யாம நியம ஆசன பிராணாயமமே முதல் நான்கு படி.
பிரதியாகார தாரணை தியானமுஞ் சமாதியே பின்நான்கு படி.
அதை நீ நன்கு படி.

விளக்க சொன்னால் விளங்க சொல்லுவேன்.

பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.
பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.
இது 
யாமம்

மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,
கலவாதிரு, களவாதிரு.
இது நியமம்.

இவ்விரண்டு படிகளை கடந்தாலே நீ ஆவாய் யோகி.

ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.
உன்னை வளைக்க உடலை வளை - எலி எனும்
இறைவன் இருக்க உன் உடலே வளை.

மிருகத்தை பார் ஆசனம். மலையை பார் ஆசனம்.
எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.
உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.

உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.
உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.
உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே
ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.

இயற்கையின் இசைக்கருவியான உனது உடலில் இல்லதா இசையே இல்லை.
நாதனை உணர நாதத்தை உணரு.

நான்காம்படியை நன்றாக படித்தால் பிற நான்கும் நன்றாகும்.

அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்கு
பிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதே ப்ரதியாகாரம்.

நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.
நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.

செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,
தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.

ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.
நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.
நீயே சத்தியம் அது தத்வமஸி.
நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.

எட்டா சித்தியாம் அட்டமா சித்தியை அடைய முயலுவது ஏன்?
அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவிடு.
உன் பிண்டத்தை அண்டமாக்கிவிடு.

நன்றி
http://vediceye.blogspot.in

No comments:

Post a Comment