Friday, November 30, 2012

உடல்-II


ஆதாரம் - 6
மூலாதாரம்  - இரண்டு  இடுப்பு  எலும்புகளும் , முதுகு  எழும்பும்  ( முதுகுத்  தண்டுவடம் ) ஆசனப் பகுதியில் சேரும் இடத்தில் நடுவில் இருப்பதாக நம்பப் படுகிறது.
மூலாதாரத்தின் குணங்கள்: விவேகம், குழந்தை உள்ளம்.
சுவாதிஷ்டானம் - மூலாதாரத்திற்கு 2 அங்குலம் மேலே அமைந்திருக்கிறது.
இதன் குணம் : கற்பனை வளம், படைப் பாற்றல்.
மணி பூரகம்: சுவாதிஷ்டானத்திர்க்கு மேலே ஆறு அங்குல தூரத்தில் அமைந்திருப்பதாக நம்பப் படுகிறது.

இதன் குணம்: நிறைவு, திருப்தி, முன்னேற்றம்.
அனாகதம்: இதயம் உள்ள பகுதியில் இருப்பதாக நம்பப் படுகிறது.
இதன் குணம்: அன்பின் பிறப்பிடம், தன்னம்பிக்கை, பயமின்மை.
விசுக்தி: குரல்வளைப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் குணம்:நட்புணர்வு, கூட்டுணர்வு, பற்றற்ற நிலை.
ஆக்ஞா: புருவ நடுப் பகுதி.
இதன் குணம் : மன்னிப்பு.

இவற்றினின்று மேம்பட்ட நிலையே சஹஸ்ராரம் எனப்படும் தெய்வீக உணர்வில் திளைக்கும் யோகா நிலையாகும். ஆதார நிலைகளில் ஆறு நிலைகள் மனித நிலைக்கும் இந்த ஏழாம் நிலை அதனைக் கடந்த யோகி, மெய்ஞான நிலையாலர்களுக்கும் கொள்ளப்பட்டது.


நாடிகள் 10:
சூரிய  கலை  நாடி : சந்திர கலை நாடி; சுழுமுனை நாடி, சிங்குவை நாடி; புருடன் நாடி, காந்தாரி நாடி; அத்தி நாடி; அலம்புடை நாடி; சங்கினி நாடி; குருநாடி.

இந்த நாடிகள் உடலின் உறுப்புகளின் செயல்பாட்டினை தொய்வின்றி
 செயல்படத் தூண்டுகின்றன.

அவஸ்தை - 5
மனித உடலில் உண்டாகும் ஐந்து நிலைகளைக் குறிக்கின்றது.
நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் (துரியம்), உயிர்ப்படக்கம் (துரியாதீதம்)
ஐம்பொறி, ஐம்புலன் , நான்கு கரணங்கள் இனைந்து இன்ப துன்ப நிலைகளை அறிந்து செயல்படுவது நனவாகும். தன்னை மறந்த நிலையில், தன விருப்பத்திற்க்கேற்ப, இருக்கும் நிலை கனவாகும். மனம், அறிவு, நினைவு, முனைப்பு இவையெல்லாம் ஒருங்கிணைந்து தான் கண்டதையும், கேட்டதனையும் பிறருடன் வெளிப்படுத்த இயலாத நிலையே உறக்க நிலையாகும்.இதன் வீரிய நிலை பேருறக்க நிலை.. ஐம்பொறி, ஐம்புலன், நான்கு கரங்கள் ஒடுங்கி, தொடு உணர்வின்றி, செயல்பாடு இன்றி, எதனையும் உணரா நிலையே உயிர்ப்படக்கமாகும்.

தசம வாயுக்கள் : உடலின் இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் பத்து வாயுக்கள் துணை புரிகின்றன. இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வரை இந்த உடலில் மனித வாழ்க்கைக்கு துணை புரிந்து கொண்டிருக்கும்.




1 . பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்று :
மனித உடலில் ஒரு நாளைக்கு இருபத்தோராயிரம் சுவாசம் நடை பெறுகின்றது.
பதினான்காயிரம் சுவாசம்( oxygen ) உள்ளிழுக்கப்பட்டு, உடலைப் பேணி பாதுக்கிறது. ஏழாயிரம் சுவாசம் ( carbon  di oxide ) கழிவுகளை வெளியேற்றுகிறது.


2 . அபானன் எனப்படும் மலக்காற்று:
மல ஜலக் கழிவுகளை கீழ் நோக்கித் தள்ளுவது , ஆசனவாயினை சுருக்கி விரியச் செய்கின்றது. Food Extracts ஐ எங்கெங்கு சேர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கும் செயலை மேற்கொள்கின்றன.

3 . வியானன் எனப்படும் தொழிற்காற்று:
உடலில் எழுபத்திரண்டாயிரம் (72 ,000௦௦௦) நரம்புகள் உடலில் உள்ள உறுப்புக்களை நீட்டவும் மடக்கவும் அவற்றிற்கு தேவைப்படும் சத்துக்களை கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்கின்றன.

4 . உதானன் எனப்படும் ஒலிக்காற்று :
இரைப்பையில் இருந்து, உணவின் சாரத்தை வெளிப்படுத்தும் பணியினை மேற்கொள்கின்றது.
5 . சமானன் எனப்படும் நிரவுக்காற்று:
உடலில் உள்ள அனைத்து வாயுக்களையும் சமப் படுத்தி, (மிகாமல் கட்டுப்படுத்தவும் ), சத்துக்களை உடல் முழுதும் சேரும் பணியினை மேற்கொள்கின்றது.
6 . நாகன் எனப்படும் தும்மல் காற்று:
அனைத்துக் கலைகளையும் கற்கும் அறிவினைத் தருவதும், நல்ல பண்புகளை கற்றுக் கொள்ளும் திறனை அளிப்பதும், கண்களை மூடித் திறக்கவும், உடலில் உள்ள மயிர்க்கால்களை உணர்வு கொண்ட தன்மை ( மயிர்க்கூச்செரிதல் ) இவ்வாயுவின் பணியாகும்.

7 . கூர்மன் எனப்படும் விழிக் காற்று:
கண் இமைத்தல், கொட்டாவி விடுதல், வாயை திறத்தல், மூடுதல், கண்ணீரை வரவழைத்தல் போன்றவை இதன் பணிகள்.

8 . கிருகரன் எனப்படும் கொட்டாவிக்காற்று :
நாவில் சுரப்பையும், மூக்கில் கசிவையும், நல்ல பசியைத் தூண்டுவதும், தும்மல், இருமல் இவை உண்டாக்குவதும் இதன் வேலைகள்.
9 . தேவதத்தன் எனப்படும் இமைக் காற்று:
சோம்பல், அசதி, வீண் சண்டை, கண்களை அலைபாய விடுவது, கோபப்பட வைப்பது, போன்ற உடல் ரீதியான மன ரீதியான வேலைகளை செய்கின்றது.
10 . தனஞ்செயன் எனப்படும் வீங்கக் காற்று:
உடல் முழுவதும் வீங்கச் செய்வது, காதில் கடல் அலை போன்ற இரைச்சல் உண்டாக்குவது இதன் பணிகள்.


       மனிதன் இறந்த பிறகு உடலில் இந்த பத்தாம் வாயுவான தனஞ்செய வாயுவைத் தவிர மற்றவை உடலை விட்டு வெளியேறி விடும். இறந்த மூன்றாம் நாள், தலையின் உச்சிக் குழி வெடித்து தனஞ்செய வாயு வெளியேறிவிடும். 
     மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது, மண்டையின் உஷ்ணம் அதிகரித்து உச்சிக் குழி வெடித்து வெளியேறும்.

தோஷங்கள் : 3 
    உடலை ஆரோக்யமாகவும், நோய் கொண்ட உடலாக ஆக்குவதும் இவைகளே.
1 . வாத தோஷம்: பிராண வாயுவுடன், நெருப்பு , நீர் தன்மை சேர்வதால் வாத தன்மையும்,
2 . பித்த தோஷம்: பிராண வாயுவுடன், நெருப்பின் தன்மை மட்டும் சேர்வதால் உண்டாகுவது பித்த தோஷமும்,
3. கப தோஷம் : காற்று , நீர், நெருப்பு இவற்றின் முறையற்ற சேர்க்கைத் தன்மைகள் உடலில் கலப்பதால், கப தோஷமும் ஏற்படுகின்றன.
     ஆரோக்கியமான உடல், உணவு முறை, முறையற்ற பழக்க வழக்கங்களின் காரணமாக தோஷத் தன்மை அதிகரித்து உடலானது
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து, நோயின் தன்மை அதிகரிக்கின்றது.

இவற்றிற்கு,
 ௧ அட்ரினல் சுரப்பி ( மூலாதாரமும் ) 
௨. சினைப்பை, கருப்பை, விதைப்பை, மற்றும் நாளமில்லா சுரப்பிகள் ( சுவாதிஷ்டானம்),
 ௩ . கணையச் சுரப்பியும் ( மணிப் பூரகமும்),
௪ . தைமசு சுரப்பி ( அனாகதம் ), 
௫. தைராய்டு ( விசுக்தி ) சுரப்பியும்,
௬. பிட்யுட்டரி ( ஆக்ஞா) சுரப்பியும் காரணிகளாக அமைகின்றன. 

இவற்றின் கூடுதல், குறைதலுக்கேற்ப என்னென்ன நோய்கள் உடலினை அணுகும் என்பதனையும், இந்த ஆறு ஆதாரங்களை யோகப் பிரச்சியினை பகுத்து அறிந்து செய்வதன் மூலமும், பிராணாயாமப் பயிற்ச்சியும், விரதங்களும் , அருசுவைகளை 
சரியான விகிதத்தில் கலந்து இருக்க வேண்டும். 
எந்த ஒரு சுவை கூடினாலும் குறைந்தாலும் நோயினை உருவாக்கும் காரணி என்பதனை உணர வேண்டும். 

சித்தர்கள் உணர்த்திய 96 தத்துவங்களும் மனிதன் நன்றாக ஆரோக்யமாய் வாழ எளிமைப் படுத்தி, மனமும், உடலும் இனைந்து வாழும் கலையினை உணர்த்தி உள்ளனர்.

திரு வள்ளுவரும், நோயின் தன்மையினை உணர்ந்து வைத்தியம் காரணமறிந்து செய்யப்பட வேண்டும் எனவும், நோய் வராமல் தவிர்க்க நேரமறிந்து உணவு உண்ணுதலையும் தனது குறட்பாக்களில் 
பத்துக் குறட்பாக்களில் பாடி இருக்கின்றார். 

நன்றி
www.atchaya.net



No comments:

Post a Comment