Thursday, October 31, 2013

தினம் ஒரு திருமந்திரம் 31-10-2013

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பொருள் : இறைவனது இயல்பும், தேவர் குழாச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும். அதனை உணர வல்லார்க்கு பூவினில் வெளிவரும் கந்தம் போல ஈசன் நாதத்தில் விளங்குகிறான் என்பது புலப்படும்.

அன்பே சிவம்



ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!! அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும். #அன்பே சிவம்

Wednesday, October 30, 2013

தினம் ஒரு திருமந்திரம் 30-10-2013

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே.

பொருள் : சிறந்த குண்டலினியாகிய அங்கியின் கீழே சுழுமுனை நாடியைச் செல்வச் செய்து, வாங்கிச் சூரிய கலையில் இயங்கும் பிராணனைச் சந்திர கலையில் ஓடும்படி செய்து ஏழ் உலகங்களையும் தாங்கிட யோக நெறி நிற்போர்க்குச் சொன்னோம்.

Thursday, October 24, 2013

மஹா பெரியவா

மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை.பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போதுஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டுஇளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வருவரிடமும்“சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாகவெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா?நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒருசிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும்,வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக்கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கைஅங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம்செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா”வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால்நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்குஅவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான்,என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்கஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன்வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகைவாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக,வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன்.

Monday, October 21, 2013

வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்!!!


நோயிலிருந்து காக்கும் ஆண்ட்டி-பயாட்டிக் மருந்துகளே வயிற்று உபாதைகளுக்கு காரணமாக அமையும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மட்டுமல்லாது சாதாரண ஆண்ட்டி-பயாடிக்குகளும் கூட வயிற்றில் உள்ள உணவுச் செரிமான அடிக்குழாயில் உள்ள நுண்ணுயிரிகளின் சமச்சீர் நிலையைக் குலைத்து விடுகின்றன என்றும் அதுவே எதிர்பாராத ஆரோக்கிய கேடுகளுக்கும் இட்டுச் செல்கிறது என்றும் அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இது குறித்து ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

மூக்கு முதல் பாதம் வரை அனைத்து பாக்டீரியாக்களுக்கும் உகந்த அரிய மருந்து என்று கருதப்படும் 'சிப்ரோஃப்ளாக்சசின்' மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஒரு 3 பெண்களுக்கு பய‌ன்தரக்கூடிய பாக்டீரியாக்கள் முழுதுமே காலியாகியுள்ளது என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

3 நபர்களுக்கு சிப்ரோஃபிளாக்சசின் மாத்திரைகளை நாளொன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் கடந்த 10 மாத ஆய்வுகாலத்தில் கொடுத்து சோதனை செய்தனர் இந்த ஆய்வாளர்கள். அதன் பிறகு இவர்களின் மலத்தை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உடல் செரிமான அடிக்குழாயில் மீதமிருக்கும் நுண்ணுயிரிகளின் அளவு என்ன என்று தெரியவந்துள்ளது.

மனித ஜீரண அமைப்பிலேயே நுண்ணுயிரிகள் அருமையாக வேலை செய்கிறது. இதுவே கெட்ட கிருமிகளை அழிக்கிறது. உடல்பருமனாகும் கூறுகள் முதல் ஒவ்வாமை கூறுகள் வரையிலும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் உடன்பாடாக வேலை செய்கின்றன.

தாய்ப்பாலில் காணப்படும் லேக்டோபேசிலஸ், சில வைரஸ் தாக்குதலைத் தடுக்கிறது.

இவ்வாறு மனித உடலும், விலங்கு உடலும் நுண்ணுயிரிகளுடன் ஒரு ஒத்திசைவான உறவுகளை வைத்துள்ளது. ஆண்ட்டி-பயாடிக்குகள் இந்த சமச்சீர் நிலையை மாற்றி அமைக்கின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுவதோடு, ஆண்ட்டி-பயாட்டிக்குகளுக்கே பெப்பே காட்டும் நோய்க்கிருமிகளையும் உருவாக்கி விடுகிறது என்கிறது இந்த ஆய்வு.

பயன் தரும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு கெட்ட பாக்டீரியாக்களின் ஆதிக்கம் உடலில் ஏற்படுவதற்கு ஒரு காரணம் ஆண்ட்டி-பயாடிக்குகள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

நோய்க்கு நோ சான்ஸ் - பசியின்மை


சாப்பிட்டதும் பசி அடங்கிவிடும். ஆனால் சாப்பிடுவதற்கு முன்பே பசி அடங்கிவிட்டால்? அங்கேதான் பிரச்னையே. அப்படிப்பட்டவர்களுக்கு உடலளவிலோ மனதளவிலோ ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அல்லது நோய்க்கான அறிகுறியாகக் கூட அதை எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள், டீ ஏஜ் பிள்ளைகள், ஏன் பெரியவர்கள் கூட அடிக்கடி, "பசிக்கவே இல்லை. சாப்பாடு வேண்டாம்' என்று அடம்பிடிப்பது வாடிக்கை. ஆனால் அது மேலோட்டமான விஷயம் அல்ல. இதில் இரண்டு வகை உண்டு.

முதல் வகை: சிலர் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருப்பார்கள். ஏதாவது ஒரு வேலையில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். தூக்கத்தை இழந்திருப்பார்கதீள். இதுபோன்ற காரணங்களுக்காக சிலருக்கு அந்த சமயம் பசியே எடுக்காது. சாப்பிடத் தோன்றாது. இந்த பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது. உடலும் களைப்பு அடையாது.

இரண்டாவது வகை: சிலர் ஏதோ ஒருவகையில் அதீத பயத்துடனேயே இருப்பார்கள். அளவுக்கு அதிகமாக கவலைப் படுவார்கள். எப்போதும் மனவருத்தத்திலேயே இருப்பார்கள். இவர்களுக்குப் பசியே எடுக்காது. இன்னும் சிலருக்கு மஞ்சள் காமாலை, புற்றுநோய், காய்ச்சல் இருந்தால் பசி எடுக்காது. இந்த பசியின்மை தானாக சரியாகாது. உடலை வருத்தி, சோர்வடையச் செய்து விடும். உடல் மெலியத் தொடங்கிவிடும். இந்த வகை பசியின்மைதான் கவனிக்க வேண்டியதாகும்.

மேலும் சில காரணங்கள்:


1. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் பசிக்காது. செரிமானம் சரியாக நடக்காமல் இருந்தால் கூட பசிக்காது.

2. இளைஞர்களாக இருந்தால் மன அழுத்தம், மனத்தளர்ச்சி, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக பசி எடுக்காது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் பசியே இருக்காது.

3. மது அருந்துபவர்களுக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், அளவுக்கு அதிகமாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பசியின்மை கண்டிப்பாக வரும்.

பசியின்மையின் விளைவுகள்:

1. சாப்பிடக் கூப்பிட்டால் "பசிக்கல... பசிக்கல' என்று சாப்பிட மறுப்பார்கள். பசி இருந்தாலும் சாப்பிட மனம் தோணாது.

2. உணவு உண்ணும் பழக்கத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள். எப்போது எங்கே சாப்பிடுவார்கள் என்றே தெரியது. சாப்பாட்டில் விருப்பமே இருக்காது.

3. திடீர் திடீரென்று உடல் எடை குறைந்தால் பசியின்மையால் அவதிப்படுகிறார் என்று முடிவுக்க வரலாம்.

4. பசியின்மையால் உடல் மெலிந்தால் அதை மறைக்க, தொள தொள ஆடை அணிந்து மறைக்கப் பார்ப்பார்கள்.

5. அடிக்கடி தங்களின் உடல் எடையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள். உடல் மெலிந்தாலும் அதிகரித்தாலும் கவலைப்படுவார்கள்.

6. மாதவிலக்கு சுழற்சி தவறிப்போகும். பெண்கள் இதற்காகவாவது பசியின்மையை போக்க முயல வேண்டும்.

7. பசியின்மையால் அவதிப்படுபவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். "சாப்பிட அழைத்தால் எரிந்து எரிந்து விழுவார்கள்.'

8. சரியாக தூக்கமே வராது. எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

9. சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள். உடல் உழைப்புக்கும் பசியின்மைக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சுற்றுச்சூழல் காரணம்!

பெரும்பாலும் குடும்பச் சூழலும் பணியிடச் சூழலும்தான் பசியின்மைக்கு அதிமுக்கியக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மன இறுக்கம், மன வருத்தம் இவைöய்லாம் குடும்பத்தில், பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சுற்றியே எழுகிறது. அதை சரிசெய்வது முதல் கடமையாகும்.

பசியின்மையைப் போக்கும் வழிகள் எளிது!

1. உடல் உழைப்பு அவசியம். உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு பசி தானாக எடுக்கும்.

2. குடும்பத்தில் சுமுகமான சூழலை உருவாக்க முயல வேண்டும்.

3. வேளாவேளைக்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். அதைவிட, சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும்.

5. சாப்பிடும்போது இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். விக்கல் எடுத்தால், அதிக காரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் வயிறுமுட்ட தண்ணீர் சாப்பிடக்கூடாது. அளவாக சாப்பிடுவது நல்லது.

6. சாப்பிடும் முன் காபி, டீ, பால், பழம், ரொட்டி, பிஸ்கட் என்று எதையும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், அரை மணி நேரம் கழித்தே உணவு உண்ண வேண்டும்.

7. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா மேற்கொள்பவர்களுக்கு பசி தானாக வரும். சிக்கல் இருக்காது.

நன்றி

தினம் ஒரு திருமந்திரம் 21-10-2013


மதிதனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொருள் : சந்திர நாடியாகிய இடைகலையில் பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் பிராணனில் பிங்கலை வழியாக வெளிப்படுதல் நாலங்குல அளவு போக எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியான அட்டமா சித்திகளை அடையலாம். (ஈராறு-இரண்டும் ஆறும்; எட்டு - உம்மைத் தொகை)

Tuesday, October 15, 2013

தினம் ஒரு திருமந்திரம் 15-10-2013


உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.


பொருள் : ஆறு ஆதாரங்களில் தோன்றுகின்ற ஐவகை அக்கினியும் வணங்குகின்ற பிரகாசத்தோடு கூடிய நீல ஒளியை அகன்று, இயக்குகின்ற பஞ்ச தன்மாத்திரைகளில் ஒன்றாகிய சததம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவனது திருவடியை அடையலாம், ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.

Saturday, October 12, 2013

தினம் ஒரு திருமந்திரம் 12-10-2013

சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொருள் : இயமம் முதலியவைகளைக் கடைப்பிடித்து சமாதிவரை செல்லும் முறைமையைச் சொல்லக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன்னுள்ள அங்கங்கள் கடைப்பிடிக்கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும். இவ்எட்டு உறுப்புக்களையும் நியமமாகச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் இறுதி உறுப்பான சமாதி கைகூடும்.

ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை


சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.
ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி

என்றும் இளமையோடு வாழ

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்... "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

மன ஒருமைப்பாடு


மனதை ஒரு முகப்படுத்த கற்றவன் ‘மகான்’ ஆவான். இதனை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.
கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்களை படிக்கமாட்டேன். முதலில் மனத்தை ஒரு முகப்படுத்தும் ஆற்றலையம், நல்ல பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை சேகரித்துக் கொள்வேன்.

மனஒருமைப்பாடு பற்றி உலக வரலாறு கூறுவது:

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி இவ்வாறு கூறுகிறார் – 
ஒரு நாள் நள்ளிரவு நேரம். அழகிய மனைவி. இளம் வயதினாள். அவள் தூங்கவில்லை. கவிஞனும் தூங்கவில்லை. எழுதுகோல் அவன் கையில் இருக்கிறது. அவன் பார்வை எங்கோ எட்டாத தொலைவில் எதையோ துழாவிக் கொண்டிருக்கிறது. படுத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் கண்களோ கணவன் எப்போது எழுந்து வருவார் என்று ஏங்குகின்றன.

அவன் எழுதுகிறான். இவளோ ஏங்குகிறாள். எழுந்து அவனை நெருங்கிச் செல்வதற்கு அடியெடுத்து வைத்தாள். மெதுவாக, மிக மெதுவாகத்தான் அவள் வந்தாள். ஆனாலும் கவிஞன் சொன்னான்…‘பெண்ணே? மெதுவாக நட – என் கனவுகளைக் கலைக்காதே என்று…’. ஆம், நுண்ணிய மென் பொருளைத் தேடி பயணம் போகும் கவிஞனின் இதயம் மனைவியின் பூப்பாதம் எழுப்பும் மெத்தென்ற ஒலியையும் சகிக்க மறுக்கிறது.
வில் வித்தையில் வித்தகர் அர்ச்சுனனின் மன ஒருமைப்பாடு. 
மரத்தின் உச்சியிலிருக்கும் பறவையை ஒரே அம்பில் வீழ்த்த வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. வில் வளைந்து நாணேற்றிக் குறி பார்த்த அர்ச்சுனனுக்குப் பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்தது. விட்டார் அம்மை, விழுந்தது பறவை. வில்வித்தையில் வெற்றி வீரனானான். கழுத்து மட்டுமே எப்படித் தெரிந்தது? மற்ற சிந்தனைகள் எதுவும் அவன் உள்ளத்தில் புகவில்லை – புகுமாறு விடவில்லை. எனவே அவன் கண்கள் பார்க்க வேண்டியதை மட்டுமே பார்த்தன. ஆனால், அர்ச்சுனனைத் தவிர மற்றவர்களது கண்களோ மரத்தின் கிளைகளையும் இலைகளையும் அவற்றோடு பறவையையும் பார்த்தன.
நெப்போலியன் மன ஒருமைப்பாடு – 
நெப்போலியன் தனது உள்ளத்தைப் பல அறைகள் கொண்ட ஒரு கூண்டிற்கு ஒப்பிடுகிறார். ஓர் அறையினைத் திறந்து வைத்திருக்கும் போது, அதாவது ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது மற்ற எல்ல அறைகளையும் அடைத்து வைத்து விடுவாராம்.

நன்றி 

Anxiety Disorder (கவலைக் கோளாறுகளைப் புரிந்து கொள்ளுங்கள்)

கவலையும் கவலைக் கோளாறுகளும்

உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. வேலையை இழுத்தல், போக்கு வரத்து நெரிச்சலில் சிக்கிக் கொள்ளுதல், தேர்வுகள் சமீபத்தல் முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது நாம் கவலை அடைகிறோம்.

ஒரு மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தல், குறைத்த வாறு மேலே பாயவரும். நாயைக் காணுதல் போன்ற திடீர் என்று எதிர்பாராத அச்சுளுத்தல்கள் ஏற்படும்போது அச்சம் உண்டாகிறது. சிறிதளவு கவலை கொள்ளுவது நன்மையுடைத்ததே, ஏனெனில் அது நமது செயல்களை மேம்படுத்தவும், எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைவதற்கும் உதவும்.

கவலை தீவிரமடையும்போதும், நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்யும் திறமையில் குறுக்கிடும் அளவுக்கு நீடிக்கும்போதும் கவலைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எல்லாவித மனக்கோளாறுகளும் அடிப்படையானது கவலைக் கோளாறாகும். பெரும்பாலானோர் இதைக் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. ஒருவத்தனது மனத்திண்மையைப் பயன்படுத்தினால் அந்தக் கவலைக் கோளாற்று அறிகுறிகளை அவரால் அடக்கிவிட அந்தக் கவலைக் கோளாற்று அறிகுறிகளை அவரால் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறார்கள். மருத்துவம் செய்யவேண்டுமே தவிர, அறிகுறிகள் போக வேண்டும் என்று விரும்புவது சரியானதல்ல.
சாதாரண கவலைக் கோளாறுகள் எவை ?

சாதாரண கவலைக் கோளாறுகள் பலவகைகள் உள்ளன. எனினும் இங்குப் பொதுவாக வரும் பொதுவகை திகில் கோளாறுகள் அச்சக் கோளாறுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன.1. பொதுவகை திகல் கோளாறுகள்

ஜெனரலைஜ்ட் ஆங்க்ஜைடி டிஸார்டர் (GAD) என்பது தூண்டுதலற்ற, நாட்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட கவலை, மன உளைச்சலாகும். GAD உள்ள நோயாளிகள், பெரும் அழிவேதோ வரப்போவதாக எதிர்பார்ப்பார்கள். தங்கள் உடல் நலன் குறுத்தும், பணம், குடும்பம், பணி முதலியவற்றைக் குறித்தும் அளவுக்கதிகமாக கவலையுளுவார்கள். கவலை என்பது பகுத்தறிவுக்கு முரணானது எந்பதை உணர்ந்தாலும் கவலைத் துறக்க முடியாமலும் அமைதியோடு ஓய்வெடுக்க முடியாமலும் தவிப்பார்கள். இவர்களுடைய கவலை, நடுக்கம், வலிப்புநோய், சதை இறுகல், தலைவலி, முன்கோபம், முறைத்துப்பார்த்தல் முதலான உடல் அறிகுறிகளுடன் இணைந்து வரும்.

அவர்கள் தலைச்சுற்றல், மூச்சுத்திறைல், குமட்டல் முதலியவற்றை உணர்ந்து அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வார்கள். பொதுவாக, GAD யுடன் கூடிய ஊறுகள் குறைவானதே. இக்கோளாறுகளுடைய மக்கள் சமூக கட்டமைப்பில் செய்யும் பணியில் கட்டுப்பாடு எதையும் உணரமாட்டார்கள் எனிறும் தீவிரமடைந்தால், GAD தளர்ச்சியை உண்டாக்கி சாதாரண அன்றாட பணிகளைக் கூட செய்ய இயலாதவாறு செய்துவிடும்.2. அச்சக் கோளாறுகள்

அச்சக் கோளாறுகளுடைய மக்கள், எந்த வித முன்னறிவிப்பு மின்றி திடீரென அடிக்கடி வரும் அச்ச உணர்வுடன் இருப்பார்கள். அந்த உணர்வு எப்போது உண்டாகும் என்பதை முன்மதிப்பிடு செய்ய இயலாதவர்கள். ஒவ்வொரு அச்ச உணர்வுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையே தீவிர கவலை யடைவார்கள். அடுத்த அச்ச உணர்வு, நிகழ்வு ஏற்படுமோ எனஅற கவலையுடனேயே இருப்பார்கள். இந்தத் தாக்கு தல்களுக்கு இடையே, எந்த நிமிடத்திறும் அடுத்த தாக்குதல் ஏற்படக்கூடும் என்ம் தொடர்ந்த வலையுடனேயே இருப்பார்கள்.

அடுத்த அச்சமூட்டும் செயல் ஏற்பட்டதும் அவர்களுடைய இதயம் சுமையாகிவிடும். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டும் மயக்கம், தளர்ச்சி, தலைச்சுற்றல் ஏற்படும். அவர்களுடைய கைகள் துச்செறியும் அல்லது மரத்துப்போகும். வியர்த்துக் கொட்டி சில்லிட்டுப் போகும். மார்பில் உலைச்சல் உணர்வு, திக்குமுக்காடுதல், பொய்மை உணர்வு, எல்லாமே ஊசிலாடுவது போன்ற அச்சம், கட்டுப்பாட்டுத் தன்மை இழுப்பு போன்றவையும் இருக்கும். தனக்கு, இதயத்தடை ஏற்படுவதைப் போலவும், மனக்குன்றல் இருப்பதாகவும், தான் மரணத்தின் விளிம்பில் நிற்பதாகவும் நோயாளி முழுமையாக நம்புவார். பொதுவாக இந்த அச்ச உணர்வுத் தூக்கம் ஏறத்தாழ இறண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும். சில சமயங்களில் பத்து நிமிடங்கள் வரையில் கூட இருக்கலாம். மிகவும் அரிதாக, ஒரு சிலரிடம் ஒரு மணி, அதற்குமேலும் நீடிக்கலாம்.

அச்சக்கோளாறு பெரும்பாலும் மனச்சோர்வு, மதுவுக்கு அடிமை முதலான தன்மைகளையும் உடன் பெற்றிருக்கும். அவை தன்மைகள் பலவகை அச்சக்கோளாற்று உணர்வுகளாக (phobia) மாறும். ஒரு அச்ச உணர்வுத்தாக்கம் ஏற்பட்டால், செய்வதறியாமல் தடுமாற வைக்கும். எந்தச் சூழ்நிலையும் அவர்கள் விலக்கு வார்கள். அத்தகைய அச்சக்கோளாறுகளுடை மக்களில் மூன்றில் ஒரு பங்குனருக்கு வாழ்க்கையே மிகவும் முறையற்றதாக மாறிவிடும். இந்த நிலையை திடல் மருட்சி (agoraphobia) (அதாவது பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்) என்பார்கள்.3. பல்வகை அச்சக் கோளாற்று உணர்வுகள் (Phobia)

இவை பல்வகை வடிவங்களில் ஏற்படும் இவை (Phobia) அளவுக்கதிகமாக அச்ச உணர்வுகள் மட்டுமல்ல, பருத்தளிவுக்கு ஒவ்வாதவை. அச்சத்தூக்குக் காரணமான பொருட்களை விலக்குவது எளிதென்றால், இந்த அச்சக் கோளாற்று உணர்வுகளுடைய மக்கள் மருத்துவம் கோர வேண்டிய தேவையை உணரமாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட அச்சக் கோளாற்று உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, சூழ்நிலையைக் கண்டு அஞ்சுவதாகும். பலர் ஏதோ ஒரு பொருளையோ, சுழ்நிலையையோ கண்டு, குறிப்பிட்ட தீவிரமான, காரணமற்ற அச்ச உணர்வைப் பெறுவார்கள் நாய்கள், சுற்றிலும் அடைப்புள்ள இடங்கள், உயரம், இயங்கும் படிக்கட்டுகள் (esculator), சுரங்கங்கள், நீர், விமானப்பயணம், இரத்த காயங்கள் போன்றவை மிகச் சாதாரணமான சில உதாரணங்களாகும்.

சமுதாய அச்சக்கோளாற்று உணர்வு என்பது சமுதாயச் சூழ்நிலைகளில் தனக்குத் தாழ்வு ஏற்பட்டு விடுமென்று, முக்கியமாக மற்றவர்கள் எதிரில் தனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று ஒருவர் தீவிரமாக அஞ்சுவதாகும். சிறிய தவறுகளை கூட அவற்றின் உண்மை நிலைக்குப் புறம்பாக மிகைப்படுத்திக் காணப்படும். நாணமுற்று முகஞ்சி வழ்பது அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் வருந்துவதைக் காட்டும் இப்படி வருந்துபவர்கள் மற்ற அனைவரின் பார்வையும் தன் மிதே குவிக்கப்பட்டிருப்பதாக நினைப்பார்கள். சொற்பொழிவு தர வேண்டிய நிலை, முதலாளியுடனோ, பிற உயர் அதிகாரிகளுடனோ பேச, சந்திக்க நேரிடும் நிலை ஏற்படும்போது இவர்கள் கொள்ளும் அச்ச உணர்வு வெட்ட வெளிச்சமாகத் தெரியும். சமுதாய அச்சக் கோளாற்று உணர்வு அவர்களுடைய அன்றாட வழக்கமான வாழ்வைப் பெரிதும் பாதிக்கும் அது அவர்கலுடைய தொழிலில், சமூக உற்றகளில் தலையிடும். அச்சக் கோளாறுகளைப் பெரிதும் உடன்பெற்றிருக்கும் திடல் மருட்சி (Agora Phobia) என்பது அச்சத்தாக்குதலை உண்டு பண்ணும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தான் இருப்பதாகவும், அத்தகு சூழ்நிலையிலிருந்து தன்னால் தப்புவது மிகவும் கடினம் அல்லது தப்பவே முடியாது ª ன்று தீவிர அச்ச உணர்வு கொள்வதாகும்.

இத்தகு அச்சக் கோளாற்று உணர்வுடைய மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெகு தூரம் பயணம் செய்ய அஞ்சுவார்கள். அச்சத்தாக்குதல் (Panic attack) ஏற்பட்டு விடும் என்றும் அதிலிருந்து தப்ப இயலாது என்றும் அத்தகு நிலையில் உதவி பெறுவது கடினம் என்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவும், உதாரணமாக புகைவண்டி, இயங்கும் படிக்கட்டு, ஆகாய விமனம் மதலியவற்றில் பயணம் செய்யவும் அஞ்சி நடுங்குவார்கள்.
கவலையின் அறிகுறிகள்

கவலையின் அறிகுறிகள்1. மன நிலை அறிகுறிகள்
மனக்கிளர்ச்சி
கவலையூட்டும் எண்ணங்கள்
அமைதியின்மை
இரைச்சலைக் கேட்க விரும்பாமை
மன உலைவு
சரியாக எதிலும் மனத்தை ஒரு முகப்படுத்த முடியாமை
முன்கோபம்2. உடல் நிலை அறிகுறிகள்
தலைசுற்றல்
இதயத்துடிப்பு அதிகரித்தல்
தலைவலி
குடல் இரைச்சல்
தசை வலி
அஜீரணம், செரிக்காமை
உடல் நடுக்கம், மூச்சுத் தினாறல்
அடிக்கடி சிறுநீர் கழிதல்
உணர்ச்சிகளில் பெருமாற்றங்கள்
வயிற்று இரைப்பை உலைவு
பேதியாதல்
கை, கால்கள் மரத்துபோதல், மார்பு உலைவு3. உறக்கச் சிக்கல்கள்
உறக்கம் வராமை
கொடுங்கனவுகள் வந்து வருத்துவது.

கவலையால் பீடிக்கப் படுபவர்கள் இத்தகைய அடையாளங்களைக் கொண்டு அவை தங்களுக்கு இதயவலி, புற்றுநோய் முதலான தீவிர நோய்கள் இருப்பதற்கு உறுதிகோள்கள் என்று தவறான முடிவுக்கு வந்து விடு கிறார்கள். இவ்வெண்மை கவலையை மேலும் உயர்த்தி விடும். உண்மையான ஆபத்து ஏதும் இல்லாத போதும் அளவுகடந்து மன உலைச்சலை அடையும் போதும், கவலையூட்டு பவற்றைத் தடுக்க, விலக்க உச்ச நிலை வழிமுறைகளை பின் பற்றும்போதும் கவலைக்கும் கவலைக்கோளாறுகளுக்கும் இடையே கோடு வறையறுக்கப் படுகிறது.
கவலைக் கோளாறுகளின் விளைவுகள் என்ன ?

அழுத்தமான வாழ்வியல் நிகழ்வுகள் கவலைக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் நீங்கியதும் கவலை பெரும்பாலும் தீர்ந்துவிடும். மறைந்து விடும். ஆனால் இலசமயங்களில் மன அழுத்த நிலைகள் மறைந்து போனபோதும் கவலை அறிகுறிகள் பொடு நேரம் இருக்கும்.
உங்கள் பெற்றோர்களுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ இத்தகைய நிலை இருந்தால் உங்களுக்கும் கவலைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே நீங்கள் வேலைக் கோளற்றால் அவதிபடுகிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மரபு அமைப்பு, உங்கள் வாழ்வு பட்டறிவு நிர்ணயிக்கும். சுற்றுச்சூழல் தடர் செயல்களும் இதில் முக்கிய பங்காற்றும். பெரும்பாலான சமயங்களில் கவலைக் கோளாறுகளின் உண்மையான காரணங்களைக் கூறுவது கடினமாகும். தனிப்பட்ட மலைநிலைப்போக்கு, வாழ்வின் மாற்றல்கள், சிறப்புச் சூழ்நிலைகள் போன்ற பற்றின் மன அழுத்தங்கலின் கவலையால்நோயாளி சாதாரணமாக மன உடைந்திருப்பார்.
கவலைக் கோளாறுகளை எவ்வாறு குணப்படுத்தலாம் ?

மனக்கவலை, அச்சம் கொண்டுள்ள மக்களுக்குப் பலவகைகளில் உதவ முடியும்:1.சிக்கலைப்பற்றி பேசுதல்

சில சமயங்களில் நம்பிக்கைக்குரிய நண்பன், நாம் மதிக்கும் எண்ணங்களுடைய உறவினர் இவர்களோடு பேசுவதே நம் கவலையைப் பெரிதும் குறைத்துவிடும். அவர்களுக்கும் இதே போன்ற சிக்கல், இருந்து, தமது பட்டறிவை நம்மோடு பங்கிட்டுக்கொள்ள முடியலாம். குடும்ப மருத்துவர், மனநோய் வல்லுநர், மன நிலை அறிஞர், சமூக சேவகம், மருத்துவதாதி, கருத்துரை வழங்குபவர் போன்றவர்கள் கருத்துறை வழங்கி உதவுவதைத் தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களோடும் சிக்கலைப் பற்றிப் பேசி நலமுறலாம்.2.அமைதியுடன் ஒய்வெடுக்க கற்றுக்கொள்ளல்

மனதை அமைதிபட்டுத்தும் நுட்பத்தைக் கற்று கொள்வது, உங்கள் மனதைத்திசை திருப்பவும். மலை உலைச்சலையும், கவலையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொணரவும் உதவும். பிராணயாமம் போன்ற சுவாசப் பயிற்சி, தியானம், கற்பனை போன்றவை அமைதி படுத்திக் கொள்ளும் நுட்பங்கலில் அடங்கும். இத்தகைய நுட்பங்கலை நீங்களே சுற்றுக்கொள்ள உதவும் பலவகை நூல்களும், ஒலிராடடாகளும் கிடைக்கின்றன.3. மனோநிலை மருத்துவம் (Psychotherapy)

இது, உடனே, வெளிப்படையாகத் தோன்றாத கவலைக்கான காரணங்களை அடையாளங்காணவும், நன்கு புரிந்து கொள்ளவும் நோயாளிகளுக்கு உதவும் ஒரு மிகத் தீவிரமான பேச்சு மருத்துவமாகும். மருந்து களோடு இனைந்தும், தனித்தும் சில குறிப்பிட்ட அறிவாற்றல் நடந்தை (Cognitive behavioural) மருத்துவ முறைகள்.
4. மருத்துவம்

கவலைக் கோளாறுகளின் மருத்துவத்திற்குப் பலவகை மருந்துகள் கிடைக்கின்றன. மேலே குறிப்பிட்ட முறைகளோடு கலந்து, மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன. மன அமைதிபடுத்துவன்(Tranquillers), மன அழுத்தத்தைத் தடுப்பவை (antidepressents) என்பவை சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். இருவகை மருந்துகளாகும்.

மன அமைதிப்படுத்தும் மருந்துகளில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது பெண்ஜோடயா ஜேபியன்களாகும். அவை பகல் நேர கவலை அறிகுறிகளைத் தணிப்பதற்கு மட்டுமேயன்றி இரவில் நன்கு உறக்கம் பெறவும் உதவும். அது பயன்தரக்கூடியதே என்றாலும் நெருநாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நம்மை அதற்கு அடிமைபடுத்திவிடும். விளைவாக அதைப் பயன்படுத்துதலை நிறுத்திவிட்டாலோ, அல்லது மருந்தின் அளவைக் குறைத்து விட்டாலோ கவலைக் கோளாறுகளும், அவற்றின் அறிகுறிகளும் மீண்டும் தோன்றக்கூடும். எனவே பென்ஜோடயா ஜேபியன்களைக் கவலை அறிகுறிகளைப்போக்க குறுகியகாலம் பயன்படுத்த வேண்டுமே தவில, நெடுநாட்கள் கூடாது.

மன அழுத்தத்தைத் தடுக்கும் மருந்துகள், மன அழுத்த அறிகுறிகளையும், கவலைகளையும் நலப்படுத்தப் பயன்படுகின்றன. அவை, பென்ஜோடயா ஜேபியன்களைப் போல அவற்றிற்ரு அடிமைப் படுத்தாது. மன அழுத்தத் தடுப்பு மருந்துகளில் பொதுவாக பயனபடுத்தப்படும் மருந்துகள் ட்ரை சைக்ளிக் ஆண்டி டிப்ரஸண்ட்ஸ் (TCA's), செலக்டிவ் செரோடானின் ரீப்டேக் இன்ஹிபிடர்ஸ் (SSRI's) செரோடானெர்ஜிக் நொராட்ரெனர்ஜிக் ரீ-அப்டேக் இன்ஹிபிடர்ஸ் (SNRI's) மற்றும் மோனோமைன் ஆக்ஸ்டேஸ் இன்ஹிபிடர்ஸ் உள்ளடங்கும். குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தோன்றும் வரை இரண்டு முதல் நான்கு வாரங்கள் தொடர்ந்து சீராக அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
கவலைக் கோளாறுகளால் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமா ?

கவலை கோளாறுகளுக்குப் பல பின் விளைவுகள் உள்ளன. முதல் சிக்கல் பணி செய்யும் ஆற்றல் குறைந்து விடுவதாகும். மிகவும் முதிர்ந்து உச்ச நிலையில் உள்ளவர்கள் விசயத்தில், அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பள்ளிக்கோ பணிக்கோ செல்லவே மாட்டார்கள்.
மனத் தொய்வு என்பது அடிக்கடி வரும் மற்றொரு பின் விளைவாகும். சூழ்நிலை மேன்மேலும் மோசமாகி தற்கொலை செய்து கொள்ளும் அபாயமும் அதிகரிக்கும். பொருள் தவறாகப்பயன்படுத்தப்படல் (substance abuse) என்பதும் அடிக்கடி வரும் ஒரு பின் விளைவாகும் போதைப் பொருளை தானே (ஊசிமூளம்) பயன்படுத்துதல் அல்லது மதுவுக்கு அடிமையாதல் இவற்றில் முக்கியமானவை. அத்தகு செயல்கள் தவிர்ப்பு மருத்துவத்தோடு உடனிணையாக பிற மருத்துவவும் இவர்களுக்குச் செய்யப்பட வேண்டும்.


மருத்துவத்தை நாடுவதின் முதற்படியானது, முன்பு குறிப்பிட்ட அறிகுறிகளைத் தாமே அடையாளங் காண்பதாகும். பலர் தங்களுடைய நோய் அறிகுறிகளைக் கண்டும் காணததுபோல் பொறுத்துக் கொள்வார்கள். 'பைத்தியம்' ª ன்று கருதப்பட்டு விடுவோமோ ª ன்ற அச்சத்தால், அந்த அறிகுறிகளை, சிக்கல்களைக் களைய மருத்துவ தொழில் வல்லுநர்களைச் சந்தித்துப் பேசவும் அஞ்சுவார்கள். உண்மையில் பார்க்கப் போனால் கவலை அல்லது அச்சம் உள்ள பெரும்பாலான, மக்களுக்கு மிக அரிதாகவே மனநோய் வரும். அதுமட்டுமல்ல, மருத்துவத்தால் அவர்கள் சிக்கல்கள் குறையும் அல்லது மறையும்.

நன்றி

Thursday, October 10, 2013

தினம் ஒரு திருமந்திரம் 10-10-2013

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினந்து விளக்கினைச் செல்ல நெருங்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

பொருள் : மனத்தில் விளங்கும் ஒளியை மாட்சியைப் பெறும்படி மேலே செலுத்திச் சினமாகிய அக்கினியைப் போகும்படி செய்து, யாவற்றையும் விளக்கி நிற்கும் சிவ ஒளியைச் சுழுமுனை என்ற திரியைத் தூண்டி நடத்த மனத்துள் விளங்கும் சிவம் என்றும் மங்காத விளக்காகும்.