சாப்பிட்டதும் பசி அடங்கிவிடும். ஆனால் சாப்பிடுவதற்கு முன்பே பசி அடங்கிவிட்டால்? அங்கேதான் பிரச்னையே. அப்படிப்பட்டவர்களுக்கு உடலளவிலோ மனதளவிலோ ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அல்லது நோய்க்கான அறிகுறியாகக் கூட அதை எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகள், டீ ஏஜ் பிள்ளைகள், ஏன் பெரியவர்கள் கூட அடிக்கடி, "பசிக்கவே இல்லை. சாப்பாடு வேண்டாம்' என்று அடம்பிடிப்பது வாடிக்கை. ஆனால் அது மேலோட்டமான விஷயம் அல்ல. இதில் இரண்டு வகை உண்டு.
முதல் வகை: சிலர் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருப்பார்கள். ஏதாவது ஒரு வேலையில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். தூக்கத்தை இழந்திருப்பார்கதீள். இதுபோன்ற காரணங்களுக்காக சிலருக்கு அந்த சமயம் பசியே எடுக்காது. சாப்பிடத் தோன்றாது. இந்த பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது. உடலும் களைப்பு அடையாது.
இரண்டாவது வகை: சிலர் ஏதோ ஒருவகையில் அதீத பயத்துடனேயே இருப்பார்கள். அளவுக்கு அதிகமாக கவலைப் படுவார்கள். எப்போதும் மனவருத்தத்திலேயே இருப்பார்கள். இவர்களுக்குப் பசியே எடுக்காது. இன்னும் சிலருக்கு மஞ்சள் காமாலை, புற்றுநோய், காய்ச்சல் இருந்தால் பசி எடுக்காது. இந்த பசியின்மை தானாக சரியாகாது. உடலை வருத்தி, சோர்வடையச் செய்து விடும். உடல் மெலியத் தொடங்கிவிடும். இந்த வகை பசியின்மைதான் கவனிக்க வேண்டியதாகும்.
மேலும் சில காரணங்கள்:
1. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் பசிக்காது. செரிமானம் சரியாக நடக்காமல் இருந்தால் கூட பசிக்காது.
2. இளைஞர்களாக இருந்தால் மன அழுத்தம், மனத்தளர்ச்சி, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக பசி எடுக்காது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் பசியே இருக்காது.
3. மது அருந்துபவர்களுக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், அளவுக்கு அதிகமாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பசியின்மை கண்டிப்பாக வரும்.
பசியின்மையின் விளைவுகள்:
1. சாப்பிடக் கூப்பிட்டால் "பசிக்கல... பசிக்கல' என்று சாப்பிட மறுப்பார்கள். பசி இருந்தாலும் சாப்பிட மனம் தோணாது.
2. உணவு உண்ணும் பழக்கத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள். எப்போது எங்கே சாப்பிடுவார்கள் என்றே தெரியது. சாப்பாட்டில் விருப்பமே இருக்காது.
3. திடீர் திடீரென்று உடல் எடை குறைந்தால் பசியின்மையால் அவதிப்படுகிறார் என்று முடிவுக்க வரலாம்.
4. பசியின்மையால் உடல் மெலிந்தால் அதை மறைக்க, தொள தொள ஆடை அணிந்து மறைக்கப் பார்ப்பார்கள்.
5. அடிக்கடி தங்களின் உடல் எடையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள். உடல் மெலிந்தாலும் அதிகரித்தாலும் கவலைப்படுவார்கள்.
6. மாதவிலக்கு சுழற்சி தவறிப்போகும். பெண்கள் இதற்காகவாவது பசியின்மையை போக்க முயல வேண்டும்.
7. பசியின்மையால் அவதிப்படுபவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். "சாப்பிட அழைத்தால் எரிந்து எரிந்து விழுவார்கள்.'
8. சரியாக தூக்கமே வராது. எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
9. சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள். உடல் உழைப்புக்கும் பசியின்மைக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
சுற்றுச்சூழல் காரணம்!
பெரும்பாலும் குடும்பச் சூழலும் பணியிடச் சூழலும்தான் பசியின்மைக்கு அதிமுக்கியக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மன இறுக்கம், மன வருத்தம் இவைöய்லாம் குடும்பத்தில், பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சுற்றியே எழுகிறது. அதை சரிசெய்வது முதல் கடமையாகும்.
பசியின்மையைப் போக்கும் வழிகள் எளிது!
1. உடல் உழைப்பு அவசியம். உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு பசி தானாக எடுக்கும்.
2. குடும்பத்தில் சுமுகமான சூழலை உருவாக்க முயல வேண்டும்.
3. வேளாவேளைக்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். அதைவிட, சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும்.
5. சாப்பிடும்போது இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். விக்கல் எடுத்தால், அதிக காரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் வயிறுமுட்ட தண்ணீர் சாப்பிடக்கூடாது. அளவாக சாப்பிடுவது நல்லது.
6. சாப்பிடும் முன் காபி, டீ, பால், பழம், ரொட்டி, பிஸ்கட் என்று எதையும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், அரை மணி நேரம் கழித்தே உணவு உண்ண வேண்டும்.
7. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா மேற்கொள்பவர்களுக்கு பசி தானாக வரும். சிக்கல் இருக்காது.
நன்றி
No comments:
Post a Comment