Monday, October 21, 2013

வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்!!!


நோயிலிருந்து காக்கும் ஆண்ட்டி-பயாட்டிக் மருந்துகளே வயிற்று உபாதைகளுக்கு காரணமாக அமையும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மட்டுமல்லாது சாதாரண ஆண்ட்டி-பயாடிக்குகளும் கூட வயிற்றில் உள்ள உணவுச் செரிமான அடிக்குழாயில் உள்ள நுண்ணுயிரிகளின் சமச்சீர் நிலையைக் குலைத்து விடுகின்றன என்றும் அதுவே எதிர்பாராத ஆரோக்கிய கேடுகளுக்கும் இட்டுச் செல்கிறது என்றும் அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இது குறித்து ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

மூக்கு முதல் பாதம் வரை அனைத்து பாக்டீரியாக்களுக்கும் உகந்த அரிய மருந்து என்று கருதப்படும் 'சிப்ரோஃப்ளாக்சசின்' மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஒரு 3 பெண்களுக்கு பய‌ன்தரக்கூடிய பாக்டீரியாக்கள் முழுதுமே காலியாகியுள்ளது என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

3 நபர்களுக்கு சிப்ரோஃபிளாக்சசின் மாத்திரைகளை நாளொன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் கடந்த 10 மாத ஆய்வுகாலத்தில் கொடுத்து சோதனை செய்தனர் இந்த ஆய்வாளர்கள். அதன் பிறகு இவர்களின் மலத்தை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உடல் செரிமான அடிக்குழாயில் மீதமிருக்கும் நுண்ணுயிரிகளின் அளவு என்ன என்று தெரியவந்துள்ளது.

மனித ஜீரண அமைப்பிலேயே நுண்ணுயிரிகள் அருமையாக வேலை செய்கிறது. இதுவே கெட்ட கிருமிகளை அழிக்கிறது. உடல்பருமனாகும் கூறுகள் முதல் ஒவ்வாமை கூறுகள் வரையிலும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் உடன்பாடாக வேலை செய்கின்றன.

தாய்ப்பாலில் காணப்படும் லேக்டோபேசிலஸ், சில வைரஸ் தாக்குதலைத் தடுக்கிறது.

இவ்வாறு மனித உடலும், விலங்கு உடலும் நுண்ணுயிரிகளுடன் ஒரு ஒத்திசைவான உறவுகளை வைத்துள்ளது. ஆண்ட்டி-பயாடிக்குகள் இந்த சமச்சீர் நிலையை மாற்றி அமைக்கின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுவதோடு, ஆண்ட்டி-பயாட்டிக்குகளுக்கே பெப்பே காட்டும் நோய்க்கிருமிகளையும் உருவாக்கி விடுகிறது என்கிறது இந்த ஆய்வு.

பயன் தரும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு கெட்ட பாக்டீரியாக்களின் ஆதிக்கம் உடலில் ஏற்படுவதற்கு ஒரு காரணம் ஆண்ட்டி-பயாடிக்குகள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment