Monday, October 21, 2013

தினம் ஒரு திருமந்திரம் 21-10-2013


மதிதனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொருள் : சந்திர நாடியாகிய இடைகலையில் பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் பிராணனில் பிங்கலை வழியாக வெளிப்படுதல் நாலங்குல அளவு போக எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியான அட்டமா சித்திகளை அடையலாம். (ஈராறு-இரண்டும் ஆறும்; எட்டு - உம்மைத் தொகை)

1 comment:

  1. Superb. I wanted to talk to you. Please share your contact number or mail id. Here is my mail id : Forsivakumar@gmail.com

    ReplyDelete