சூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் போன்றவற்றை அமைப்பதற்கு நம் முன்னோர்கள் சாஸ்திரங்களை உருவாக்கினர். இந்த சாஸ்திரங்களை வீட்டின் சொந்தக்காரரின் ஜென்ம லக்னம் மற்றும் ராசியுடன் இணைத்து வகுத்தனர். இவையே மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. வாயு சாஸ்திரம்தான் வாஸ்து சாஸ்திரம் என்று மாறியதாகவும் கூற்று உள்ளது.
ஒவ்வொரு மனையிலும் வாஸ்து புருஷன் என்னும் ஆற்றல் தெய்வம் ஒடுங்கியிருப்பதாகவும், அந்த வாஸ்து தெய்வத்தின் தலைப்பகுதி மனையின் வடகிழக்கு மூலையிலும், உடலானது மனையின் நடுப்பகுதியிலும், தென்மேற்கு மூலையில் கால் பகுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வாஸ்து தெய்வத்தின் தலை, உடல், கால் போன்றவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மனையில் அமையும் வீடு மற்றும் அதன் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 திசைகள் தவிர, வடக்கும்– கிழக்கும் இணையும் வடகிழக்கு (ஈசான்யம்), கிழக்கும்– தெற்கும் இணையும் தென்
கிழக்கு (அக்னி), தெற்கும்– மேற்கும் இணையும் தென் மேற்கு (நிருதி), மேற்கும்– வடக்கும் இணையும் வடமேற்கு (வாயு) ஆகிய திசைகளும் உள்ளன. கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமன், மேற்கில் வருணன் ஆகியோரின் பார்வை இருப்பதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு ஈஸ்வரன் வாசம் செய்யும் மூலை என்பதால், அந்த பகுதி சுத்தமாக, சற்று பள்ளமாக, பளு இல்லாமல், நீர் நிலைகள் அமையும் விதமாக இருக்க வேண்டும். சாக்கடை, கழிவறை, செப்டிக் டேங்க் போன்றவற்றை இந்த மூலையில் அமைக்கக் கூடாது.
தென்மேற்கு மூலை உயரமாகவும், கனமான அமைப்புடனும் இருக்க வேண்டும். இந்த மூலை உயர்வாக இருந்தால் பொருளாதார உயர்வு உண்டாகும் என்கிறது வாஸ்து. மனையில் உயர்ந்த மரம், மாடி அறை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவற்றை அமைக்கலாம். போர்வெல், சம்ப், கழிவறை அமைக்கக் கூடாது.
தென்கிழக்கு மூலையில் சமையல் அறை
அமைவதே சிறப்பானதாகும். இந்த மூலை வெளிச்சமாகவும், சூடாகவும் இருந்தால் வீட்டில் அமைதி நிலவும். வடமேற்கு திசை காற்றோட்டமாக இருக்க வேண்டிய பகுதி. வாயு பகவான் வாசம் செய்யும் இந்த பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் சரியாக அமைந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
திசைகளில் மேற்கும், தெற்கும் உயரமான திசைகள். கிழக்கும், வடக்கும் பள்ளமான திசைகள். எனவே மாடிப்படி கிழக்கில் ஆரம்பித்து மேற்கு நோக்கியோ, அல்லது வடக்கில் ஆரம்பித்து தெற்கு நோக்கியோ ஏறும்படி அமைய வேண்டும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது
நகர அமைப்பு,
கட்டிடக்கலைஎன்பன சம்பந்தப்பட்ட,
இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்[“வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள
நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு
வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
வாஸ்து பூமிபூஜை
வேதத்தில் வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.
இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான
அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.
வாஸ்து பூமிபூஜை
வாஸ்து பூமிபூஜையின் அடிப்படை தத்துவம் ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு
மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே.[
பண்டைய வாஸ்து சாஸ்திர நூல்கள்
அதர்வ வேதம் தவிர
வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட
பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத
சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன.
மயனால் எழுதப்பட்ட
மயமதம்,
மானசாரரால் ஆக்கப்பட்ட
மானசாரம்,
விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான்,
பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்
படிமம்-1 வாஸ்து புருஷ மண்டலம்
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது
வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.
படிமம்-2 திக்குகளின் அதிபதிகள்
முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.
படிமம்-3 வாஸ்து புருஷ மண்டலமும் வாஸ்து புருஷனும்
இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே
வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான் (படிமம் 3).
posted under
வாஸ்து |
No Comments »வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம்.
• வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
• பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
• ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
• திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
• தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
• காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
வாஸ்து தோஷம்உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது. உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை நிலையில் மாட்டுங்கள் அதே போல மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருக்க, நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.
நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையும், மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் விட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.
வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். பிறகு, அறுகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளைத்துணியில் முடித்து ஆற்றில் போட்டு விடுங்கள். வாஸ்து தோஷம் விலகிவிடும். வாஸ்து தோஷத்துக்கு செவலூர் ஆலயத்தில் ஒரே ஒரு கல் வாங்கி மனை போட்டால் போதும் என்கிறார்கள்.
வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும். ஜாதகத்தில் குரு 3,6,8,12-ல் மறைந்திருந்தால் வளர்பிறை அல்லது தேய்பிறை பஞ்சமி திதியில் நவகிரகக் குருவுக்கு பால், பன்னீர், அபிஷேகம் செய்து, கஸ்தூரி பொட்டிட்டு மஞ்சள் பட்டுத்துணி சாற்றி, தாமரை பூ மாலை போட்டு, நெய், தீபம் அர்ச்சனை செய்ய வாஸ்து தோஷத்தால் தடைபட்ட தொழில், திருமணம் நடக்கும்.