இந்த பஞ்ச பூத சிகிச்சையில், முதல் பூதமான நிலம் அல்லது உடல் என்னும் பூதத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்றும், அதன் மூலம் மற்ற நான்கு பூதங்களை பாதுகாப்பது எப்படி என்றும் இந்த பதிவில் காண்போம்
உடல் என்னும் அற்புத தொழிற்சாலை (The amazing Industry- Body)
இந்த பூத (அ) பரு உடலை நாம் நிலம் என்னும் பூதத்தின் கீழ் கொண்டாலும், இதில் மற்ற 4 பூதங்களும் அடங்கி இருப்பதை மறுக்க முடியாது.
நிலம் - உடல் உறுப்புகள்
நீர் - இரத்தம், உமிழ் நீர், விந்து, நாதம்
நெருப்பு - பசி, உஷ்ணம்
காற்று - மூச்சு விடுதல்
ஆகாயம் - தூக்கம், மனம்
எனவே, பஞ்ச பூதங்களும் நிலம்(உடல்) என்னும் பூதத்திலேயே அடங்கி விடுகிறது.
இனி , உடல் உறுப்புகள், அதன் செயல்பாடுகள், அதில் நோய் ஏற்படும் முறைகள், அதை சரி செய்யும் வழிமுறைகள் மற்றும் நில பூதத்தை நம் வசமாக்கும் வழிகளை காண்போம்.
உடல் உறுப்புகள் :
உடல் என்னும் அற்புத தொழிற்சாலை (The amazing Industry- Body)
இந்த பூத (அ) பரு உடலை நாம் நிலம் என்னும் பூதத்தின் கீழ் கொண்டாலும், இதில் மற்ற 4 பூதங்களும் அடங்கி இருப்பதை மறுக்க முடியாது.
நிலம் - உடல் உறுப்புகள்
நீர் - இரத்தம், உமிழ் நீர், விந்து, நாதம்
நெருப்பு - பசி, உஷ்ணம்
காற்று - மூச்சு விடுதல்
ஆகாயம் - தூக்கம், மனம்
எனவே, பஞ்ச பூதங்களும் நிலம்(உடல்) என்னும் பூதத்திலேயே அடங்கி விடுகிறது.
இனி , உடல் உறுப்புகள், அதன் செயல்பாடுகள், அதில் நோய் ஏற்படும் முறைகள், அதை சரி செய்யும் வழிமுறைகள் மற்றும் நில பூதத்தை நம் வசமாக்கும் வழிகளை காண்போம்.
உடல் உறுப்புகள் :
மேலே படத்தில் உள்ளது தான் ஒரு மனித செல் (Human cell). இதை "அணு" என்று சொல்லலாம். இந்த செல் தான் நம் உடலில் மிக முக்கியம். ஏனென்றால், பல செல்களின் கூட்டமைப்பு தான் "திசுக்கள்" (Tissue) என்று கூறுகிறோம். பல லட்சம் திசுக்களின் கூட்டமைப்பு "உறுப்புகள்" (organs) என்று கூறுகிறோம்.
இந்த உறுப்புகளை, அதன் இடங்களின் அமைப்பை பொருத்தும், அதன் செயல்பாடுகள் பொருத்தும் பெயரிட்டுள்ளனர்.
உதாரணம்:
வயிறு : உணவை கூழாக்கும் உறுப்பு
குடல் : ஜீரண உறுப்பு
நுரையீரல் : காற்றை கடத்தும் உறுப்பு
சிறுநீரகம் : திரவ கழிவு வடிகட்டி
கல்லீரல் : உடல் உஷ்ணமானி
எலும்புகள் : உடலுக்கு கட்டமைப்பை தருவது
நரம்புகள் : உணர்ச்சிகளை கடத்தும்
இரத்த குழாய்கள் : இரத்தத்தை கடத்தும்
இருதயம் : இரத்தத்தை பம்ப் செய்யும்
இப்படி எண்ணற்ற உறுப்புகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சரிவர செய்து கொண்டு இருக்கும். இதை போன்ற ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை நாம் உலகத்தில் வேறு எங்கேயும் காண முடியாது.
இதில் ஏதேனும் ஒரு சிறு தடங்கல் வந்தாலும், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒன்று கூடி, தன்னை தானே சரி செய்து கொள்ள முயற்சி செய்யும். ஆனால், அது பெரிய உபாதைகளாக மாறும் பட்சத்தில், உடலானது நோய்க்கான அறிகுறிகளை நமக்கு உணர்த்தி, அந்த உபாதைகளை நீக்க சமிஞை கொடுக்கும். இதை தான் நாம் "நோயின் அறிகுறிகள்" என்று கூறுகின்றோம்.
உதாரணமாக சளி, இருமல், ஜலதோஷம், வாந்தி, பேதி, தலைவலி, இரத்த அழுத்த மாறுதல், உடல் சர்க்கரை நிலை மாறுதல் போன்றவையெல்லாம் உடலில் ஏற்படுகின்ற அல்லது ஏற்பட போகின்ற நோய்களின் அறிகுறிகளேயல்லாமல், "நோய்கள் " அல்ல. இதை நாம் முதலில் தெளிந்தால் தான், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து புரிந்து கொள்ள முடியும்.
பிராண சக்தியும் உடலும்:
"இந்த பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து கிடைக்கின்ற பிராண சக்தி தான் நம்மை வாழ வைக்கின்றது " என்னும் இயற்கை மருத்துவ கோட்பாட்டின்படி, உடலின் உள்ளே நுழைகின்ற பிராண சக்தியால் தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டு .இருக்கின்றோம் என்பது தான் ஒரு மனிதன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த பிராண சக்தி (cosmic energy)யானது தனக்குளே எல்லா விதமான தாது உப்புகளையும் எல்லாவிதமான வாயுக்களையும் கொண்டுள்ளது.
"பிராண சகத்தின் மூலமாக மட்டுமே நாம் நம் உடலுக்கு தேவையான சக்திகளை எல்லாம் பெற்று விடலாம்" என்பது தான் யோகிகளின் தத்துவம்.
நம் உடம்பிற்குள்ளேயும் இந்த பிராண சக்தி நுழைந்து, நம்முடைய செல்களை ஆட்சி செய்கின்றது.
உடம்பின் உள்ளே நுழைகின்ற பிராண சக்தியை மேலே சொன்ன செல்கள் கிரகித்து கொள்கின்றன.(உலக மருத்துவ கொள்கைப்படி oxygen என்னும் பிராண வாயு உள்ளே நுழைகிறது). செல்களின் உள்ளே சென்ற பிராண சக்தியானது பின் எல்லா நாடிகளின் வழியே நுழைந்து உடல் உறுப்புகளை இயக்குகிறது.
பிராண சக்தியினை செல்கள் கிரகித்து கொள்ளும் செயலின் பெயர் "உட்கொள்ளுதல்"(Assimilation) என்பதாகும். கிரகித்த சக்திகளின் மூலம் ஏற்பட்ட கழிவுகளை வெளியேற்றுகின்ற செயலுக்கு "வெளித்தள்ளுதல்"(Dissimilation) என்று பெயர். இந்த இரண்டு செயல்களும் தடை இன்றி நடக்கும் வரை நம் செல்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்போம். இந்த இரண்டில் ஒன்று தடைபட்டாலும் மற்றொன்று நடக்காது. அதன் காரணமாக உடல் உறுப்புகள் அனைத்தும் அந்த தடைபட்ட இயக்கத்தை சரி செய்ய போராடும் (இதை தான், நாம் உறுப்புகள் எவ்வாறு நோயுறுகின்றன என்று பார்த்தோம்).
இந்த பிராண சக்தி எப்படி இயங்குகிறது, எப்படி தடைபடுகிறது, எப்படி அதை நாம் சேமிப்பது, அதன் மூலம் எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்பதை வரும் பதிவுகளில் காண்போம் ...............
-திரு. இயற்கை சிகிச்சையாளன் (Dr. Nature Cure)
i like
ReplyDeleteதொடருங்கள்
ReplyDeleteஅருமை
ReplyDelete