பஞ்ச பூதங்கள் என்பது
முற்காலத்தில், மனிதன் நிலத்தை தெய்வம் போல் மதித்து வந்தான். காலை கண் வழித்தது முதல் இரவு படுக்கும் வரை அவன் நிலத்தை சார்ந்தே இருந்தான். நிலத்தை வைத்து தான் மற்ற வேலைகளை செய்தான். எனவே, நிலத்தை பெருமை படுத்த அவன் கையாண்ட சிறந்த வழிமுறை தான் "பொங்கல் பண்டிகை". அன்று, தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றும் நிலத்தை தொழுது தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றான்.
தை மாதம் என்பது "உத்திராயண காலத்தின் " ஆரம்பம். ( உத்திராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய 6 மாதங்கள் கொண்டது ). இந்த 6 மாதங்களும் சூரியன் வடகிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கியே நகரும். இந்த 6 மாதமானது, நிலத்தை மீண்டும் சீர் செய்து, தட்சிணாயண காலத்தில் வரும் மழைக்காகவும் பின் தொடர்ந்து வருகின்ற பனிக்காகவும் தயார் செய்தல் ஆகும். (தட்சிணாயணம் காலம் என்பது ஆடி முதல் மார்க்கழி முடிய 6 மாதங்கள் ஆகும்). இக்காலம், நிலம் தன்னை தானே சீர் செய்து கொள்வதற்கு உகந்த காலமாகும். பின்பனி, கோடை காலம், ஆரம்ப மழை காலம் என்று மூன்று பருவங்களை நிலம் சந்திக்கும். இக்காலத்தில் நிகழும் பருவ நிலை மாற்றங்களும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, சரியான உணவு முறைகளும் அக்காலத்தில் பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு பின்பற்றப்பட்டது
இன்றைய மக்கள் வாழ்கை முறை இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையாக இல்லை. முற்றிலும் இயற்கைக்கு விரோதமான வாழ்கை முறையாக உள்ளது. நெடிது உயர்ந்த வீடுகள், ஆழ் துளை நீரேற்றங்கள், காற்று மண்டலத்தை கெடுக்கும் புகை வண்டிகள், fast food எனும் வேகமாக தயாரிக்க பட்ட உணவு வகைகள் என்று இயற்கையையும், உடலையும் கெடுக்கும் வாழ்க்கையாகவே நாம் வாழ்ந்து வருகிறோம்.
இதில், நிலம் என்னும் பூதம் தான், முதலில் மனிதன் கெடுத்த பூதம் ஆகும்.
"மனிதன் நிலத்தை அழித்தால் நிலம் மனிதனை அழிக்கும் "
பிண்ட நிலம் (உடல்)
பூமி எனும் அண்ட முதல் தத்துவத்தை அழிப்பது என்பது, உடல் எனும் பிண்ட முதல் தத்துவத்தை அழிப்பதாகும்.
உடல் என்பது உறுப்புகள், இரத்தம், நரம்புகள், எலும்புகள், பிராணன் மற்றும் உஷ்ணம் போன்றவைகளால் செயல்படுத்தப்பட்டு, மனம் என்னும் சாரதியால் செலுத்த பட்டு, ஆன்மா எனும் சக்தியால் வழி நடத்தபடுகின்ற ஒரு தேர். இத்தேரானது சரியான திசையில், சரியான வேகத்தில் செல்ல இந்த உறுப்புகள், மனம் மற்றும் ஆன்மா போன்றவைகளின் உதவி மிகவும் அவசியம். இதில் ஏதேனும் ஒன்று பழுது பட்டால், உடல் என்னும் தேரை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியாமல் போய் விடும்.
இதில் மனம் மற்றும் ஆன்மா மற்ற பூதங்களாகும். உடல் உறுப்புகள் தான் நிலத்திற்கு தொடர்புடைய பூதமாகும்.
இந்த பிண்ட பூதம் (உடல்) எப்படி அழிக்கப்படுகின்றது என்றும், இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்றும், இந்த பிண்ட நில பூதத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்றும் இனி வரும் பதிவுகளில் காண்போம்
திரு. இயற்கை சிகிச்சையாளன் (Mr. Nature Cure )
1. நிலம்
2. நீர்
3. காற்று
4. நெருப்பு
5. ஆகாயம்
"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது" என்னும் சித்தர்களின் கோட்பாட்டின் படி வெளியில் உள்ள பஞ்ச பூதங்களும், நம் உடம்பின் உள்ளேயும் உள்ளது.
நிலமாக உடல் உறுப்புகளும்,
நீராக இரத்தமும்,
காற்றாக மூச்சும்,
நெருப்பாக பசி உடல் உஷ்ணமும்,
ஆகாயமாக மனமும் உள்ளது.
வெளியில் உள்ள பஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை "இயற்கை பேரிடர் " என்று சொல்கின்றோம். உடம்பின் உள்ளே உள்ள பஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை "நோய்" என்று சொல்கின்றோம்
இயற்கை பூதங்களில் ஒத்திசைவு (harmony) இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும். உடல் பூதங்களில் ஒத்திசைவு இருந்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும்.
இந்த ஒத்திசைவு என்றால் என்ன? என்றும் ,அதை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்றும் தெரிந்து விட்டால் உலகமும் அமைதியாக இருக்கும், உடலிலும் நோய் என்பது வராது.
இயற்கை பஞ்ச பூதங்களின் ஒத்திசைவு (Harmony of the Nature elements )
1. நிலம் என்னும் முதல் தத்துவம் (அண்டமும் பிண்டமும் )
அண்ட நிலம் (பூமி )
அண்ட நிலம் (பூமி )
நிலமே பஞ்ச பூதங்களின் ஆதாரம் . நிலம் இல்லையேல் மற்ற பூதங்கள் நிலையாது . நிலத்தின் மூலமாகத் தான் மனிதன் முதல் எல்லா உயிரினங்களுக்கும் தேவையான உணவு கிடைக்கின்றது. உணவு இல்லையேல் உயிர் இல்லை. எனவே நிலத்தை சார்ந்து தான் மக்களின் வாழ்வாதாரம் சுழன்று கொண்டு இருக்கின்றது.
முற்காலத்தில், மனிதன் நிலத்தை தெய்வம் போல் மதித்து வந்தான். காலை கண் வழித்தது முதல் இரவு படுக்கும் வரை அவன் நிலத்தை சார்ந்தே இருந்தான். நிலத்தை வைத்து தான் மற்ற வேலைகளை செய்தான். எனவே, நிலத்தை பெருமை படுத்த அவன் கையாண்ட சிறந்த வழிமுறை தான் "பொங்கல் பண்டிகை". அன்று, தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றும் நிலத்தை தொழுது தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றான்.
தை மாதம் என்பது "உத்திராயண காலத்தின் " ஆரம்பம். ( உத்திராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய 6 மாதங்கள் கொண்டது ). இந்த 6 மாதங்களும் சூரியன் வடகிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கியே நகரும். இந்த 6 மாதமானது, நிலத்தை மீண்டும் சீர் செய்து, தட்சிணாயண காலத்தில் வரும் மழைக்காகவும் பின் தொடர்ந்து வருகின்ற பனிக்காகவும் தயார் செய்தல் ஆகும். (தட்சிணாயணம் காலம் என்பது ஆடி முதல் மார்க்கழி முடிய 6 மாதங்கள் ஆகும்). இக்காலம், நிலம் தன்னை தானே சீர் செய்து கொள்வதற்கு உகந்த காலமாகும். பின்பனி, கோடை காலம், ஆரம்ப மழை காலம் என்று மூன்று பருவங்களை நிலம் சந்திக்கும். இக்காலத்தில் நிகழும் பருவ நிலை மாற்றங்களும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, சரியான உணவு முறைகளும் அக்காலத்தில் பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு பின்பற்றப்பட்டது
ஆனால் இன்று?
இன்றைய மக்கள் வாழ்கை முறை இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையாக இல்லை. முற்றிலும் இயற்கைக்கு விரோதமான வாழ்கை முறையாக உள்ளது. நெடிது உயர்ந்த வீடுகள், ஆழ் துளை நீரேற்றங்கள், காற்று மண்டலத்தை கெடுக்கும் புகை வண்டிகள், fast food எனும் வேகமாக தயாரிக்க பட்ட உணவு வகைகள் என்று இயற்கையையும், உடலையும் கெடுக்கும் வாழ்க்கையாகவே நாம் வாழ்ந்து வருகிறோம்.
இதில், நிலம் என்னும் பூதம் தான், முதலில் மனிதன் கெடுத்த பூதம் ஆகும்.
- நிலத்தை உழுவதற்கு பதிலாக பிளாட் (plot) போட்டு விற்க ஆரம்பித்தான்.
- ஒரே இடத்தில மேலே மேலே வீடுகள் கட்டி நீரை ஏற்ற ஆழ் துளை கிணறு தோண்டி போர் (bore) மூலாக நீரை மேலே ஏற்றினான். எனவே நிலத்தடி நீர் குறைந்தது.
- ஏரிகளையும் , ஆறுகளையும் ஆக்கிரமித்து வீடுகளாக மாற்றினான். நீர் இருப்பு குறைந்தது.
- சாதாரண சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றி, மழை நீர் பூமியில் இறங்குவதற்கு கூட வழி இல்லாத நிலை ஆகினான்.
- செயற்கை உரங்களை கண்டுபிடித்து மண்ணையும் அதன் தன்மைகளையும் அழிக்கின்றான்.
- பூச்சி கொல்லி மருந்துகள் மூலமாக பூச்சிகளை அழிக்கின்றானோ இல்லையோ, மண் வளத்தை அழிக்கின்றான்
- பிளாஸ்டிக் உபயோகத்தின் மூலமாக மண்ணின் இயற்கை தன்மையை அழிக்கின்றான்
"மனிதன் நிலத்தை அழித்தால் நிலம் மனிதனை அழிக்கும் "
பிண்ட நிலம் (உடல்)
பூமி எனும் அண்ட முதல் தத்துவத்தை அழிப்பது என்பது, உடல் எனும் பிண்ட முதல் தத்துவத்தை அழிப்பதாகும்.
உடல் என்பது உறுப்புகள், இரத்தம், நரம்புகள், எலும்புகள், பிராணன் மற்றும் உஷ்ணம் போன்றவைகளால் செயல்படுத்தப்பட்டு, மனம் என்னும் சாரதியால் செலுத்த பட்டு, ஆன்மா எனும் சக்தியால் வழி நடத்தபடுகின்ற ஒரு தேர். இத்தேரானது சரியான திசையில், சரியான வேகத்தில் செல்ல இந்த உறுப்புகள், மனம் மற்றும் ஆன்மா போன்றவைகளின் உதவி மிகவும் அவசியம். இதில் ஏதேனும் ஒன்று பழுது பட்டால், உடல் என்னும் தேரை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியாமல் போய் விடும்.
இதில் மனம் மற்றும் ஆன்மா மற்ற பூதங்களாகும். உடல் உறுப்புகள் தான் நிலத்திற்கு தொடர்புடைய பூதமாகும்.
இந்த பிண்ட பூதம் (உடல்) எப்படி அழிக்கப்படுகின்றது என்றும், இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்றும், இந்த பிண்ட நில பூதத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்றும் இனி வரும் பதிவுகளில் காண்போம்
- தொடரும் ...........
திரு. இயற்கை சிகிச்சையாளன் (Mr. Nature Cure )
Sir,
ReplyDeleteKindly follow to publish the article ..... i am interested in reading and try to implement for human goodness.
Saravanan (saravanan.mc@gmail.com)
9884822085