Friday, November 11, 2011

அர்த்தமுள்ள இந்துமதம்


4. பாவமாம், புண்ணியமாம்!
***********************
இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை.
இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன்.
பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.
சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர்.
சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.
மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்ஐ கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.
அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.
குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.
அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.
அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருகு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.
கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருகும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று அழுவார்.
அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.
கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிஇல் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.
நள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.
வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது.
அதைக் காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.
கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?
அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்
உள்ளே இர்ணுட சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.
அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?
“நலவனாக வாழ்ந்தோம்ந தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தனே எண்ணியிருக்கும்!
அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.
ஒவ்வொருநாளும், “முருகா! முருகா! ” என்று உருகுகிறார்.
“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.
அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.
நீயும் நல்லவனாக இரு.
தெய்வத்தை நம்பு.
உனக்கு வருகிற துன்பமெல்லாம்,பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மத்த்தையே நம்ப வேண்டாம்.
“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”
“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”
“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே?”
இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.
பாவம்- புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு , அவை கேலியாகத் தெரிகின்றன.
‘நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை. என்று அவன் நினைக்கிறான்.
நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்கு காத்திருக்குமென்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாயென்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்களென்றும் சொல்லப்படும் கைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.
ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.
அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக கதைகளைச் சொல்லி வைத்தார்கள். இந்தக கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன. என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட , எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.
பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்க உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.
ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.
அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.
ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.
“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.”செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” எறு முதன்முதலில்போதித்தது இந்து மதம்தான்.
“பாவம் என்பது நீ செய்யும்தீமை.”
“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை”.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்”.
“விநாச காலே விபரீத புத்தி.”
-இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.
ஊரைக்கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?
பிறர் சொத்தைக் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா?
அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால் நியமிகப்படும் ‘ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.
கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் எவனாவது உண்டா?
எனக்குத் தெரிந்தவரை இல்லை.
ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச்சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில் திரும்பரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில் அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!
சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!
முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டுநிறைவேற்றப்பட்டு விடுகிறது.
எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. 1953 - ஆம் ஆண்டு தால்மியாபுரம் போராட்டத்தில், பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதக்கப்பட்டு, நானுத்,நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய ணசிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.
அர்களைத்தனித்தனியாகச்சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.
அவர்களில, ‘மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.
செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத்தூக்குத்தண்டனை விதித்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் தரு.சோமசுந்தரம்.
பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டையாக மாற்றுவது வழக்கம்.
காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்ப몮போகும் குற்றவாளி நல்லவனாகத்திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!
அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.
செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத்தண்டனை யொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஜர்ஜிதம் செய்த்தாக அர்த்தம.
மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
அவரத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்ததது.
ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
காரணம் நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.
மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார் விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.
சுமார் அறுபதனாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.
சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாக்க் கொண்டு வாழ்ந்திருந்தார்.
அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.
ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத்தின்றி இறந்துபோனார்.
இறந்து பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.
ஆம். மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலைகார்ர்கள் ஓடிவிட்டார்கள்.
பிடிபட்டவர்கள் ஏழு பேர்.
சிறைச்சாலையில் அந்த ஏழுபேரில் ஆறுபேர் “நாளை தூக்குக்குப் போகப்போகிறோமே!” என்று துடித்துக்கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜபித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒருவன் மட்டும் சலனமில்லாமல் அமைதியா இருந்தான்.
சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.
நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.
சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.
உடம்பிலே உணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.
நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:
“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாத்துமாதிர ‘அலிபி’ தயார் செய்துவிட்டு, அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தன் என்னை இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்டியங்களோடு என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். காரணம் கொலை சொய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்க் கார்ர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”
அவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்ய என்று பழமொழியே என்நினைவுக்கு வந்தது.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.
தர்மு தன்னையும் மறந்து சொன்னார்:
“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”
ஆமாம்,பாம் கொடுத்த, ‘போனஸ்யதான் செய்யாத கொலைக்குத் தண்டனை.
அன்று இரவு நான் தூங்கவே இல்லை.
காலை ஐந்து மணிக்கு “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.
அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.
“என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்”.
நன்றி :- கவிஞார் கண்ணதாசன்
"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

1 comment:

  1. பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
    அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

    கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

    அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
    அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்


    - கவிஞர் கோ கண்ணதாச



    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409



    http://sagakalvi.blogspot.com/


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

    ReplyDelete