சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாக வர்மக்கலை மருத்துவம் விளங்குகிறது.
வர்மக்கலையை முன்னர் தற்காப்புக்காகவும், போர் காலத்திலும் பயன்படுத்தியுள்ளனர். சித்தமருத்துவ பாடத்தில் இந்த கலை பற்றிய பாடம் இன்றும் உள்ளது.
இதில் ஆர்வத்துடன் மேலும் கற்றறிந்து பயன்படுத்தும் சித்தமருத்துவர்கள் உள்ளனர் என்றாலும் , இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான்.
சித்தமருத்துவத்துக்கும், வர்ம மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு...மனித உடலில் வர்ம ஆற்றல் பல்வேறு இடங்களில் ஒடி, பறந்து , நின்று, இயங்கி, சுழன்று உடலை வலுவாக்குகிறது. உடலின் எந்த பகுதியில் வர்ம ஆற்றல் குறைகிறதோ, அந்த பகுதியில் அதை வலியாக உணர்கின்றோம்!.
நமக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும் போது நம்மையும் அறியாமல் நமது விரல்களை நெற்றி பொட்டில் வைத்து அழுத்தம் கொடுத்துக்கள்வோம். அப்போது வலி குறைவதை நன்கு உணர்கிறோம்.இந்த நெற்றிப்பொட்டு என்பதும் ஒரு வர்ம இடமாகும் ! நமது தினசரி பழக்கங்களில் உடலை இயக்கும்போதும் வர்ம இடங்கள் மிதமாக தூண்டப்பட்டு உடலுக்கு வர்ம ஆற்றல் கிடைக்கிறது.
வேதாத்திரி மகரிஷியின் உடற்பயிற்சி மற்றும் தவமுறைகளிலும் ஒரு சில வர்ம இடங்கள் தூண்டப்படுகிறது. அதன் மூலம் உடலும், உள்ளமும் சீரடைகிறது...
நமது உடலில் 108 வர்ம புள்ளிகள் உள்ளன. இது இரண்டு வகை. படுவர்மம் ( MAJOR POINTS ) 12ம், தொடுவர்மம் ( MINOR POINTS ) 96. வர்ம இடங்கள் மற்றும் புள்ளிகளை அசைத்து அல்லது தூண்டிவிட்டு வர்ம ஆற்றல் குறைபாடுகளைப் போக்கி பல நோய்களையும் பாதிப்புகளையும் தீர்க்க முடியும்...
தலைவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள், சினைப்பை கட்டிகள், அதிக ரத்தப்போக்கு, வெள்ளை படுதல் போன்ற நோய்களை வர்ம மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும். வர்ம சிகிச்சையால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது....
நோய் தாக்கம் ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை எடுத்துக்கொண்டால் 3 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நாள்பட்ட நோயாக இருந்தால் கால அவகாசம் தேவை. ஆனால், அந்த வேளையில் படிப்படியாக நோய் குணமடைவதை அனுபவ ரீதியாக உணர முடியும்...
நோயாளி எந்த மருத்துவத்துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டாலும் அதை நிறுத்தாமல் வர்ம சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.
வர்ம சிகிச்சையின் போது நாள்பட்ட நோய்களான சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா, மூட்டுவலி போன்ற நோயுள்ளவர்கள் அவர்களது மருந்தின் அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி படிப்படியாக குறைத்துக்கொள்ளலாம்.
சில நோய்களுக்கு வர்ம இடங்களை இயக்குவதுடன், வர்ம கஞ்சிகள் மற்றும் குற்ப்பிட்ட சித்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எந்த மருந்தும் உட்கொள்ளாமலும் வெளியில் பூசாமலும் வர்ம இடங்களை இயக்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும். எல்லா வயதினருக்கும் வர்ம சிகிச்சை செய்யலாம்.
சிறு வயதில் அடிபட்டிருந்தால் அதனால் வர்ம இடங்கள் பாதிக்கப்பட்டு எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது இறுப்பதுண்டு.
அத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பிட்ட சில வர்ம இடங்களை இயக்குவதன் மூலம் பல ஆண்டுகளாக இருந்து வந்த நோய்களையும் விரைவாக குணப்படுத்த முடியும்...!
போதைப்பழக்கதுக்கு அடிமையானவர்கள் கூட இந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடையலாம்...
வர்ம மருத்துவத்தில் முறையாக பயிற்சி பெற்ற சித்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது....
பிடித்திருக்கிறது
ReplyDelete