ஆதனம்
(ஆதனம் - இருக்கை யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறையைப் பற்றியும் அவற்றால் உண்டாகும் பயனைப் பற்றியும் இங்குக் கூறப்பெறும்)
பங்கயம் ஆதி பரந்தபல ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.
பொருள் : பத்மாசனம் முதலாகப் பரந்துபட்ட ஆசனங்கள் பல அங்கு உள்ளன. அவ்ஆசன வகைகளுள் எட்டு முக்கியமாகும். சோர்வு இல்லாமல் சுவத்திகம் என்ற சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தலைவனாவான். சாதாரணமாக உட்காருவதுதான் சுகாசனமாகும்
No comments:
Post a Comment