Saturday, March 31, 2012

சிரிப்பு வெடிகள்



வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!


ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு

கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்



அப்பா : என்னம்மா சமையல் இது. 
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா. 
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்.



தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே.
எப்படி?
காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !!!

வயசுக்கு வ‌ந்த நடிகர் யாருன்னு தெரியுமா?
நீங்களே சொல்லுங்கப்பா
ஹி ஹி ஹி !!! மேஜர் சுந்தர்ராஜன்


போலீஸ் அடிச்ச அடியிலே 
அவருக்கு பேச்சே வரலை ஏன்?
அடிச்ச அடியில் அவருக்கு ஊமைக்காயம் ஏற்பட்டுச்சாம்


கத்தி எடுத்து குத்தினதும் ரத்தம் ஏன் வேகமா வெளியவருதுன்னு தெரியுமா?
யாரு குத்தியதுன்னு பார்க்க வேகமா வெளியேவருது


ஹீரோயினுக்கு எதிர்ச்சொல் என்ன
ஹீரோ அவுட்


எஜூகேஷன் லோன் போட்டு படிக்கிற உங்க பையன் 
இப்ப எப்படி படிக்கிறான்
கடனேன்னு படிக்கிறான்

No comments:

Post a Comment