Friday, March 9, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 09/03/2012



       தன்னை அறியத் தனக்கொரு கேடு இல்லை
        தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
       தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
       தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே
’நான் யார்’ என்கிற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால், நமக்கு எந்தத் துன்பமும் வராது. அது தெரியாதவரை பிரச்னைதான்.
’தன்னை அறி’யும் அறிவுமட்டும் வாய்த்துவிட்டால், அதன்பிறகு அந்த ஆன்மாவே நமக்குத் தலைவனாக, வழிகாட்டியாக, கடவுளாகத் தோன்றும், மற்றவர்களை வணங்கி வழி தேடாமல், நம்மை நாமே வணங்கத் தொடங்கிவிடுவோம்

No comments:

Post a Comment