Saturday, March 10, 2012

எது இறப்பு?


நம்மில் பிறப்பை பற்றி யோசித்ததை விட இறப்பை பற்றி யோசிக்காமல் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை.வாழ்க்கை ஒரு பயணமாகவே எடுத்துக்கொண்டால் உலகை சுற்றி பார்க்கும் பயணியாகவே தெரிகிறது இந்த வாழ்க்கை. இறப்பை பற்றி தெரிந்து இருந்தாலும் இறப்பிற்க்கு பிறகு என்னவென்றே தெரியவில்லை. பூமியின் வாழ்வு காலம் இன்னமும் எவ்வளவு என்று தெரிய வில்லை, இந்த ‘காலத்தின்’ வாழ்வு காலம் எவ்வளவு என்று தெரிய வில்லை. கால ஓட்டத்தில் மனிதனின் வாழ்வு விட்டில் பூச்சியின் வாழ்வு காலம், ஈசல்களின் வாழ்வு காலம்.
இறப்பு என்பதை யோசிக்க ஆரம்பித்தால், சாதாரணமான காரணங்கள் தான். ஆனால் எதை எடுத்து கொள்வது.
1. மூச்சு நிற்பது இறப்பா ? இல்லை
2. இதயம் துடிப்பது நிற்பது இறப்பா ? இல்லை
3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதா ? இல்லை
4. இரத்த ஓட்டம் நிற்கும் போதா? இல்லை
வேறு காரணங்கள் தான் இருக்கின்றனவா? நினைவுகள் இருக்கும் வரை தான் மற்றவைகள் இருப்பதா இல்லையா என்று தெரியும். நம்மில் ஒவ்வொருவரின் பிறப்பை பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை இறப்பை பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. இதற்கிடையில் இடைப்பட்ட காலத்தையும் அனுபவிக்க முடியவில்ல. இறப்பு தான் பிறப்பின் ஆரம்பம் என்றால் பிறப்பின் முடிவு இறப்பின் ஆரம்பம்.
இது தான் நமக்கு தேவை என்று முடிவு செய்து இருந்தால் நம்மில் பலர் மரணத்தை பற்றி யோசிக்கவே தேவை இல்லை. பிறப்பை தான்டி நிறைய விசயங்கள் உண்டு. ஆனால் இறப்பை தாண்டி எதுவும் இல்லை. எண்ணங்கள் , கனவுகள் , தன்னிச்சை மற்றும் வெளிபுற செயல்கள் அனைத்தும் இல்லாமல் போகுகிறது. தன்னில் ஒன்றும் இல்லை மரணத்திற்கு பிறகு. எல்லாம் மற்றவர்களின் மனங்களில் தான் நினைக்க செய்கிறார்கள். அவர்கள் தான் நினைவுகளோடு கற்பனைகளும் சேர்த்து தருகிறார்கள். நேற்று என்பது ஒன்று இல்லை நாளை என்று ஒன்று இல்லை, இன்று போல தான் எல்லாம் நாட்களும், அதில் எந்த மாற்றமும் இல்லை இது வரை. மரணமும் அது போல தான். மனிதன் தோன்றியதில் இருந்து இந்த பூமியில் இதே நிலைமை தான். இறப்பிலும் பிறப்பிலும் மாற்றம் இல்லை இந்த பூமி முழுவதுமாக இறக்கும் வரை. சூரியன் முழுவதுமாக எரியும் வரை இந்த பூமி சுற்றி கொண்டே தான் இருக்கும் , அது வரை இந்த மனிதர்கள் இருப்பார்கள், இறப்பார்கள்.
பிறக்கும் போது இந்த பிறப்பின் அருமை தெரிவதில்லை, வாழும் போது வாழ்வின் இரகசியம் தெரிவதில்லை, இறப்பின் காரண காரியங்களில் தெரிந்தாலும் இறப்பிற்க்கு பின் …?
மொழிகளை உருவாக்கிய மனிதர்கள் எல்லாவற்றிற்க்கும் எதாவது ஒரு வகையில் பதில்களையும் கொடுத்து சென்று இருக்கிறார்கள். இறப்புக்கும் , பிறப்புக்கும் அர்த்தம் கொடுத்தவர்கள் இறப்பிற்க்கு பின் மனிதன் என்ன ஆவான் என்று மொழிகளில் உருவாக்க படாமலே இறந்து விட்டார்களே!
மற்றவர்களின் மனதில் வாழ்வது தான் இறப்பிற்கான அடையாளங்கள் என்று எடுத்து கொண்டால் அவைகள் மட்டுமே இறந்த பின் நடப்பவைகளாகவே நினைக்க தோன்றுகிறது!

No comments:

Post a Comment