கால் சட்டையும் மேல் அங்கியும் நவநாகரீக தோற்றத்துட ன் ஒருவன் ‘ஞானி நான்’ என்றான்

“என்ன ‘ஞானியா’? உன்னிடம் தாடி இல்லையே? அழுக்கு வேட்டி கிழிந்த சட்டை இப்படி எதுவுமே இல்லையே? நீ ஞானி இல்லை” - என்றேன் நான்.

“மாயை” - என்றான்.

“என்ன?”.

“மாயை”.

“உன் பெயர் என்ன?”

“பெயரா?”;. மெல்ல சிரித்தான் . “முகவரிக்க ு முன்னே எழுத கேட்கிறாயா ? ‘எனக்கு முகவரியே இல்லை. அறிமுகம் தேவையா? அறிமுகம் இல்லாத பலரில் நானும் ஒருவன். ஏன் கேட்கிறாய் பெயரை?” - என்றான்

“கூப்பிடத் தான்”.

“யாரை?”

“உன்னைத்தா ன்”.

மீண்டும் சிரித்தான் .

“ஏன் சிரிக்கிறா ய்?”.

“பெயரைக் கேட்டாய். கூப்பிட என்று. இன்னும் சில நொடிகளில் உன்னை நான் பார்க்க மாட்டேன். பிறகு ஏன்?” - என்றான்.

“ஏன்?” - என்று வினவினேன்.

“நடிக்கிறா ய் நீ “ - என்றான்.

“நீ பேசுவதே புரியவில்ல ை” - என்றேன்.

“நான் ஞானி”.

“அதற்கும் பேசுவதற்கு ம் என்ன சம்பந்தம்?�� �

“நீ முட்டாள். உடையிலும் தாடியிலும் ஞானியை பார்த்தாய் . அதில் ஞானி உனக்கு தெரிய மாட்டான். இப்படித்தா ன் இல்லாத ஒன்றை தேடி அலைகிறீர்க ள்”; - என்றான்.

“பிறகு உன்னை ஞானி என்று எப்படி சொல்வது?”.

“நீ பைத்தியம். நான் பேசவதே உனக்கு புரியவில்ல ை. நான் ஞானிதானே” - என்றான.

“புரியவில் லை”.

“உலகின் நடப்புகளைப ்பற்றி கவலையில்லை . ஆகாயத்தை வெறித்து பார்ப்பான் . உடையில் கவனம் கொள்ள மாட்டான். குளிக்க மாட்டான். இதுதான் நீங்கள் ஞானியைப் பற்றி நினைத்திரு ப்பது. சரியா?”

“ஆம்”.

“நான் உடை உடுத்துவேன ். குளிப்பேன் . ஆகாயம் பார்க்க மாட்டேன. ஆனால் நான் ஞானி?”.

“எனக்கு கொஞ்சமும் புரியவில்ல ை. எப்படி?” - என்றேன்.

“எப்படி ஏன் என்று கேட்கிறாயே நீ மனிதன். நான் ஏற்கனவே இதையெல்லாம ் கேட்டு விட்டேன். நீ பிறரிடமிரு ந்து விடை அறிய ஆசைப்படுகி றாய். காரணம் நீ மனிதன். எனக்கு விடை கிடைத்துவி ட்டது. இல்லை. கிடைக்கவில ்லை. ஆகையால் நான் ஞானி” - என்றான்.

“எனக்கு தெளிவாகச் சொல். ஒரு எழவும் புரியவில்ல ை” - என்றேன்.

“நீ மனிதன். நான் ஞானி”.

அவன் சென்று விட்டான்.