Saturday, December 10, 2011

சிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம்


இந்த பஞ்சாட்சர கோத்திரத்தை விடியற்காலையில் 
படித்தால் தெய்வ சக்தி கிட்டும். இந்த மந்திரத்தை லிங்கம் 
வைத்து பாராயணம் செய்தால் கல்வி, ஞானம் மேன்மை
கூடும். ஐதீகம் சிவனே கண்முன் தோன்றுவார் என்பது. 
மந்திரத்திலேயே சக்தி வாய்ந்த மந்திரம்.

அராவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் 
மகேசுவரதன் தான் விபூதியை தரித்த மேனி 
விளங்குவோன் நித்தன் சுத்தம்
அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த
நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேன்

கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்
நந்தியுள்ள  ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்
மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான
மகாரமாய் உருக் கொள் வோனை மனங்கொளத்துதிக் 
கின்றேனே 

க்கனின் யாகம் தன்னைத் தகர்த்து  சாட்சாயனியின்
மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்
தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்
சிகாரமாய் உருக் கொள் வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே

வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் த
வத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்
சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை
வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே.

 யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட
கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை
தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய
யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே. 

No comments:

Post a Comment