Thursday, December 15, 2011

மருத்துவ ஜோதிடம்


பல், இதயம், எலும்பு – சூரியன்

பல், இதயம், எலும்பு ஆகியவற்றுக்கு காரகர் சூரியன். இவர் நல்ல நிலையில் இருந்தால் பல்வரிசை ஒழுங்காக அமைந்து பற்கள் பளிச்சிடும். எலும்பு முறிவு, இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
பல்லுக்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை, மாலை இரு முறையும் பல் துலக்குபவர்களுக்கு இதயக் கோளாறுகள், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவாம். ஜோதிட ரீதியில் பார்த்தால், பொதுவாக சூரியனுக்கு இரவில் பலம் குறைவு. இரவில் பல் துலக்கி விட்டு படுப்பது இதயத்துக்கும் நன்மையாகவே அமையும். (பற்களைப் பராமரித்து சூரியனின் பலத்தைப் பெருக்கி, அவர் காரகம் வகிக்கும் பல், இதயம் இரண்டையும் காப்பதாகும்).
பல்வலி, சொத்தை ஏதாவது இருந்து பல்லைப் பிடுங்க்க வேண்டுமென்றால் தாராளமாக பிடுங்கிக் கொண்டு இதயம் ஒரு பங்கு பலமடைந்ததாக எண்ணிக் கொள்ளலாம். (நெஞ்சு வலிக்கு இது பெட்டர் இல்லையா?).
இன்னொரு மருத்துவ ஆய்வு சொல்வது : கால்சியம் சத்து அதிகரிக்க கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளால் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்குமாம். எலும்பை பாதுகாக்க நினைத்து செயற்கையாக மருந்து சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லதில்லை போல. கூடுமானவரை இயற்கையாக பால் பொருட்களையும் பிற கால்சியம் நிறைந்த பொருட்களையும் சாப்பிட்டு கால்சியம் சத்தை ஏற்றிக் கொண்டால் பிரச்சினையில்லை.

No comments:

Post a Comment