Thursday, December 15, 2011

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!



மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால்,  மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால்,  மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.
தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை,
சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

No comments:

Post a Comment