நாசிக்கு அதோமுகம் பன்னிரண்டு அங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.
பொருள் : நாசிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ள இதயத்து நீ
மனத்தை இழுத்து வைத்துச் செஞ்சுடரை நினைப்பாய் ஆயின் அட்டமா சித்திகளும்
ராஜயோகமும் வந்து கூடும். இத்தியானம் தேகத்துக்கு எப்பொழுதும் தீமை
செய்யாததாகும். இதை அநாகதம் என்பர். (அகவழிபாடு - மானத பூசை.)
No comments:
Post a Comment