Friday, April 13, 2012

தினம் ஒரு திருமந்திரம் (13-04)


சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடின்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்டுமின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்தம் ஆமே.

பொருள் : இரு மின்னற் கொடி பின்னி ஓடுவது போன்ற ஒளி தோன்றினால் குற்றமில்லாத  மேலான ஆனந்தம் என்றே எண்ணுங்கள். நேர்மை விளங்கும் கண்டத் தானத்தில் (கழுத்துப் பிரதேசத்தில்) நிலவொளி தோன்றிடின் பிரத்தியாகாரப் பயிற்சி செய்த சாதகனது உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும். (இரேகைச் சுடரொளி - கீற்றுப் போன்ற ஒளி என்பாரும் உளர்)

No comments:

Post a Comment