Saturday, April 7, 2012

தோல் நோய்களுக்கு மண் குளியல்


இதனை காலை 10 மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் செய்வது நல்லது. வயிறு காலியாக இருப்பது முக்கியம். தண்ணீர் எவ்வளபு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பூமியிலிருந்து ஓர் அடிக்குக் கீழ் உள்ள மண்ணை யே பயன்படுத்த வேண்டும்.

* கிளிஞ்சள், கறி, சுண்ணாம்பு சத்து உள்ள மண் பயன்படுத்த வேண்டாம். 
* நிலத்தில் செயற்கை உரம் போடப்படுவதால் வயல்களிலுள்ள மண்ணையும் பயன்படுத்தாதீர். 
* புற்று மண்ணையும் பூமிக்கு கீழிருந்து எடுத்த மண்ணையும் கலந்து நீரில் குழப்பி தலை முதல் பாதம் வரை பூசிக்கொள்ள வேண்டும். 
* வெய்யிலில் மண் நன்றாக காய்ந்த பின் மண்ணை ஓரளவிற்கு துடைத்துக் கொண்டு நிழலுக்கு வந்து உடல் சாதாரண நிலைக்கு வந்த பின் குளித்து விட வேண்டும்.

இது தோல் நோய், அசுத்த இரத்தம், புலால் மற்றும் முதலியவற்றிற்கு நல்லது. இவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். மற்றவர்கள் மாதம் ஒரு முறை மண் குளியல் எடுப்பது நலம்..

No comments:

Post a Comment