Wednesday, December 27, 2023

மருத்துவ ஜோதிட விதிகளின் படி, நட்சத்திரங்களுக்கு உரிய மருத்துவ முறைகள்!

 


எல்லா மருத்துவ முறைகளும் அனைத்து நட்சத்திர ஜாதகர்களுக்கும் சிறப்பான பலன்களை தருவது இல்லை.


ஜென்ம நட்சத்திரம் என அழைக்கபடும் சந்திரன் நின்ற நட்சத்திரம் அல்லது தசா நாதன் நின்ற நட்சத்திரம் எதுவாக இருக்கின்றது அல்லது இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மருத்துவமுறைகளை பின்பற்ற மிக அற்புதமான பலன்களை பெற்று நோயில் இருந்து விரைவில் குணம் பெறலாம்.


1.ஆங்கில மருத்துவம்


பரணி

கிருத்திகை

திருவாதிரை

புனர்பூசம்

மகம்

பூரம்

உத்திரம்

கேட்டை

மூலம்

பூராடம்

திருவோணம்

சதயம்

ரேவதி


2. சித்த மருத்துவம்


அஸ்வினி

கிருத்திகை

புனர்பூசம்

பூரம்

சித்திரை

சுவாதி

சதயம்


3. ஹோமியோ மருத்துவம்


அஸ்வினி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

பூசம்

சித்திரை

விசாகம்

உத்திராடம்

அவிட்டம்

சதயம்

பூரட்டாதி

உத்திரட்டாதி


4. ஆயுர்வேத மருத்துவம்


ரோஹிணி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

பூரம்

சித்திரை

அனுஷம்

சதயம்

பூரட்டாதி

ரேவதி


5. யுனானி மருத்துவம்


ரோஹிணி

மிருக சீரிஷம்

புனர்பூசம்

பூரம்

சித்திரை

அனுஷம்

சதயம்

பூரட்டாதி

ரேவதி


6. வர்ம மருத்துவம்


அஸ்வினி

திருவாதிரை

மகம்

சுவாதி

மூலம்

உத்திராடம்

சதயம்

உத்திரட்டாதி


7. மலர் மருத்துவம்


ரோஹிணி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

பூசம்

ஆயில்யம்

மகம்

ஹஸ்தம்

சித்திரை

சுவாதி

விசாகம்

அனுஷம்

கேட்டை

திருவோணம்

அவிட்டம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி


8. பயோ சால்ட்


ரோஹிணி

புனர்பூசம்

பூசம்

ஆயில்யம்

மகம்

ஹஸ்தம்

சுவாதி

விசாகம்

அனுஷம்

கேட்டை

திருவோணம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி


நன்றி


Gandhi Kumar,

ஆருத்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்.


சோதனை செய்து பார்த்துவிட்டு தங்களின் பதிலை கமெண்டில் பதிவிடவும்.

Tuesday, June 27, 2023

GERD_என்றால்_என்ன



GERD_பற்றி_தெரிந்து 

கொள்வோம்


👉(Gastro esophageal reflux disease)👈


 *GERD என்றால் என்ன* ❓


👉உணவு உண்டபின் வயிற்றிலிருக்கும் உணவு மேல் நோக்கி, தொண்டை மற்றும் வாய்க்கு வருவதே GERD  எனப்படும்.


 *இதன் அறிகுறிகள்*  *என்ன* ❓


👉உணவு செரியாமை, நெஞ்சு மற்றும் தொண்டை வரை எரிச்சல், வாய்துர்நாற்றம், வாந்தி  அல்லது குமட்டல் வயிற்றில் வலி.


 *இது எவ்வாறு* *உருவாகும்* ❓


👉தவறான வாழ்க்கை முறை, சேராத, செரியாத உணவு உண்ணுதல், அதி காரம்  மற்றும் புளிப்பு உணவில்  சேர்த்தல், நேரம் தப்பி உணவு  உண்ணுதல்,  வயிற்றில் ஏற்படும்  ஹெலிகோ பாக்டர் எனும் கிருமி தொற்று ஆகியவை காரணமாகும்.


 *GERD வந்தபின்* *எவ்வாறு அதனை* *கட்டுப்படுத்தலாம்* ❓


👉 GERD யை தூண்டும் விதமான உணவுகளை தவிர்க்கவும். அதாவது எண்ணெய் பலகாரங்கள், காரம், புளிப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, காபி, சாக்லேட், பதப்படுத்தப்பட்ட பொருட்கள்.


👉அரை வயிறு நிறைய ஒரே நாளைக்கு 5-6 முறை உணவினை எடுத்துக்கொள்ளவும்.


👉உணவு உண்டபின் *மூன்று மணி நேரம்* கழித்து உறங்கச்செல்லவும். உறங்கும் போது தலைபகுதியை  6-8 இன்ச் வரை  உயர்த்தி *இடது பக்கம்* திரும்பி உறங்கவும்.


👉உடல் பருமன் GERD உண்டாவதற்கான முக்கிய காரணம். வயிற்றில்  சேரும் கொழுப்பு வயிற்றின் பகுதியை  மேல் நோக்கி தள்ளுவதால் GERD உண்டாகும். அதனால் எடையை குறைக்கவும்.


👉புகைபிடித்தல் மற்றும்  மது அருந்துதல்  தவிர்க்கவும். இவை இரண்டும்  வயிற்றில் மேல்  பகுதியில் உள்ள வால்வை  மேலும்  தளர்வடையச்செய்யும்.


👉ஒவ்வொரு முறை உணவு உண்டபின் 100 அடி  நடக்கவும்.


👉உணவு உண்டவுடன் தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவும்.


👉முதலில், உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவுக் கூழ் போல் ஆகும் வரை வாயில் வைத்து நன்றாக மென்று, பின்னார் விழுங்க வேண்டும். சுவைத்து, சுவைத்து சாப்பிடுவது உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. 


👉மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுக்ளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும். 


👉சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


👉 அதுபோல் சாப்பிட்டு முடித்து ஒருமணி நேரத்திற்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பத்தால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றிலிருந்து குடலுக்கு தள்ளப்பட்டுவிடும். சாப்பிடும்போது காரமாக இருந்து, கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். 


👉சுடுநீர் என்றால் மிக மிக நல்லது


👉சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. இரவு எழரை மணி முதல் எட்டு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 


👉சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி 

செய்யக்கூடாது. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது தான் நல்லது.


 *நீண்ட நாள் GERD* *தொந்தரவு கேன்சரை* *உண்டாக்குமா❓* 


👉ஆம் வெகு நாட்கள் சரியாக கவனிக்கப்படாத வயிற்று தொந்தரவு கேன்சராக மாறும் வாய்ப்புள்ளது.


👉 GERD பிரச்னையை முற்றிலும் இயற்கை முறையில் குணமடைய செய்யலாம்.