Wednesday, May 29, 2013

இந்துத்துவம்

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.
வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி.
இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து.
அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.
பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.
இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.
அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.
விளைவு...!
கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற் றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங் கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந் தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.
நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம்.
உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.
‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.
“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.
முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.
பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...
இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.
இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.
ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.
ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.
ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.
பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....
அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.
இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.
ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன. வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.
வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.
ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம்


ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந் தஸ்தோடு கிடக்கிறது.
புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந் தாள்.
‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.
இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு?
வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது.
அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழு தியது.
“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை...” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர் களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
‘அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து... “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன் னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ் வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்
பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.
இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட் டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே... பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்... என மந்த்ரங்களால் மிரட் டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.
“கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்...”
என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

தொடரும்

சப்தகன்னியர்- நாராயணி என்ற வைஷ்ணவி


பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.

மயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.

வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.

விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!

நாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்து
விரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்
புரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்து
கரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.

நாராயணி (வைஷ்ணவி) - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:

காயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :

தினம் ஒரு திருமந்திரம் 29-05-2013

நாபிக்கும் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்தரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந் தானே

பொருள் : உந்திக்குக் கீயே பன்னிரண்டு அங்குலத்தில் மூலதாரத்தில் உள்ள குண்டலியை மேல்எழுப்பும் மந்திரமாகிய பிராசாத மந்திரத்தை ஒருவரும் அறியவில்லை. அவ்வாறு எழுப்பும் மந்திரத்தை அறிந்த பின்னர் சிவன் நாத மயமாகச் சிரசின் மேல் விளங்கி நிற்பான். இது ஓம் என்ற மந்திரத்தைக் குறிக்கிறது.

Monday, May 27, 2013

சப்தகன்னியர்- கவுமாரி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் கல்யாண சுந்தரி, பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

மயிலாடுதுறையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கவுமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!

கவுமாரி பாடல்:

ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்
சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி
ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி
ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

கவுமாரி ஸ்கந்தரி - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:

காயத்ரி:

ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

கடவுளையும் கட்டலாம்!


எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா? என்று யாராவது உங்களிடம் கேட்டால், முடியும் என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன். ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டு விட வேண்டும் என நினைத்து காட்டில் தவமிருந்தார். ஒருநாள் ஒரு வேடன் வந்தான். அவன் பத்மபாதரிடம், சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு தூங்குதே! உனக்கு வீடு வாசல் இல்லையா? என்றான். போடா அபிஷ்டு! நான் தியானத்தில் இருக்கிறேன்,. அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக கண்ணை மூடி இருந்தே! சொல்லு! என்றான். நான் நரசிம்மத்தை எண்ணி தவமிருக்கிறேன்,. நரசிம்மமா? அப்படின்னா என்ன! சிங்க முகம், மனித உடல் கொண்டது அது.

அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி... நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்! இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன், என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். சரியான ஞானசூன்யம் என்று எண்ணிக்கொண்டார். வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. மாலையாகி விட்டது.ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! முருகா! அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா! என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு கண்டு அந்த நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் வந்தார்.ஆகா! மாட்டிகிட்டியா! என்ற வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான். வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த நாயகன் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றான்.நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.சாமி! பாருமையா! இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்.பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் தான் தெரிந்தது. அடேய்! அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான், என்றபடி ஏளனமாய் சிரித்தார்.அப்போது அவர் காதில் குரல் கேட்டது.பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்! என்றவர் மறைந்து விட்டார். ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி அவர் வெட்கப்பட்டார். பின், ஆதிசங்கரரை சந்தித்து அவரது சீடரான பிறகே ஞானம் அடைந்தார்.

தினம் ஒரு திருமந்திரம் 27-05-2013


பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையிலும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்தவாறே.

பொருள் : மனம் ஒருமைப்பட்டு எட்டுத் திக்குகளிலும் மேலான பொருளாகிய பரமனை, அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து துணிந்து, அவ்எட் டுத்திசைகளிலும் எம்பெருமானை வணங்கி, எண்திசையினும் அட்டமாசித்திகள் தாமே அடையுமாறு பெற்று எங்கும் அட்டமாசித்திகள் நிலை பெறுவித்தவாறாகும்.

Saturday, May 25, 2013

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...
தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:

வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.

அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.

பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.

உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.

மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.

முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.

கணுக்கால் வலி வருமுன் காக்க:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.

கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.

மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.

வசம்பு - 5 கிராம்
மஞ்சள் - 5 கிராம்
சுக்கு - 5 கிராம்
சித்தரத்தை - 5 கிராம்

எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

எருக்கின் பழுத்த இலை - 5
வசம்பு - 5 கிராம்

இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீ­ரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.

Friday, May 24, 2013

நமது மூளை பாதிப்படைந்தால் . . . .

மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகு ம். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையு ம்.

1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண் ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக் கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத் துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.

2. மிக அதிகமாகச்சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாள ங்கள் இறுகக்காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரண மாகும்.

3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:இது புரோட்டின் நமது உடலில் சேர்வ தைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்ட காலம் தேவையான அளவு தூங்கா மலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற் படுத்தும்.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக் குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்பெறுவதில் இருந்து தடை செய் கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படை யும்.

6. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் கார ணமாகிறது.

7.மூளைக்கு வேலைகொடுக்கும் சிந்த னைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உரு வாகின்றன. அதனால் மூளை வலிமை யான உறுப்பாகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இதுநீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜ னை குறைக்கிறது. குறை வான ஆக்ஸிஜன் மூளை யைப் பாதிக்கி றது.

9.நோயுற்றகாலத்தில் மூளைக்கு வேலைகொடுப்பது:உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிர மாகப் படிப்பதும் மூளையை ப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொ டுப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது

தினம் ஒரு திருமந்திரம் 23-05-2013

மதிதனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொருள் : சந்திர நாடியாகிய இடைகலையில் பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் பிராணனில் பிங்கலை வழியாக வெளிப்படுதல் நாலங்குல அளவு போக எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியான அட்டமா சித்திகளை அடையலாம். (ஈராறு-இரண்டும் ஆறும்; எட்டு - உம்மைத் தொகை)

Monday, May 13, 2013

தினம் ஒரு திருமந்திரம் 13-05-2013

சித்தம் திரிந்து சிவமய மாகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

பொருள் : சித்தம் புறத்தே செல்லாமல் மாறுபட்டுச் சிவமாகி, வீடு பேற்றை ஆராய்ந்து அடைந்த பிரணவ உபாசகர் சிவத் தோடு கூடிய முத்தர்கள் ஆவார்கள். அவர் பஞ்சேந்திரியங்களின் தொடர்பில்லாதவர்கள். ஆகையால் அகத் தூய்மை பெறலாம். அவர்கள் அறிவு ஆகாயத்தில் தத்துவங்களை விட்டுச் சிவத்துடன் பொருந்திநிற்பர்.

சென்ற பிறவி ரகசியம்


நான் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது?

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது. இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக, யாரோ ஒருவருக்கு மனைவியாக, பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம். இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

கன்னி தீவு கதை மாதிரி கண்டுபிடிக்க முடியாத ரகசியம் ... முன் பிறவி ரகசியம் என்பதே. அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.

இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை. தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது.

இது உண்மையே.

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு பலர் செய்யும் தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன்.

துவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள். இதற்கு அடுத்த படியாக குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள். இதில் ராகு கேது தவிர்த்து, ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது.

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள். இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.

இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும், 5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து, பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள். இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.

அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை, மீறி அமையும் வாழ்க்கையில் குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.

அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும், புத்திர சோகத்தை தருகிறது. காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள், பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.

சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.

என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும், ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது. ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள்.

இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ, ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால், அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம்.

அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை வதைத்தவர்கள், சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.

மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.

உதாரணமாக பரணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம். அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும். சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது.

ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு திசையாக 5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம் என்று குறைந்த அளவே தசையாக வருகிறது.

காரணம் என்ன?

முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார். சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில், இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.

நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம். இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில் சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார். மற்ற கிரகங்கள் மாறாது.

ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை, இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.

ஒருவர் மீன ராசியில் பிறந்தால், அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது, அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார்.

சந்திரன் கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர். அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம். ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.

அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......

மேஷம், தனுசு - சத்திரிய குலம். அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.

ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம். அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் பிராமண குலம். அதாவது கோவில் பூஜை மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.

கன்னி துலாம் சூத்திர குலம்.

இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும். அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது.

மங்கையின் ஜாதக ரகசியங்கள்


ஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணாக அமையும்.மங்கையர்களின் ஜாதகங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த பின்னரேபலன்களை முடிவு செய்ய வேண்டும். ஆண்களின் ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும், ஆனால், பெண்களுக்கோ இதுமாங்கல்ய ஸ்தானமாக கருதபடுகிறது. பெண்களுக்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடம். இதை விட மிக மிக முக்கியமான இடம்இரண்டாம் இடம், காரணம் இந்த இடம் 7-க்கு எட்டாம் இடமாக வருவதால், கணவனின் ஆயுள் ஸ்தானமாக இந்த இரண்டாம் இடம்வருகிறது. இந்த இரண்டாம் இடம் வலு பெற்று இருந்தாலும், இந்த இரண்டாம் இடத்தை சுப கிரகங்களில் முதல் வரிசையில் உள்ள குருஅல்லது சுக்ரன் பார்த்தால், இந்த பெண் என்றும் சுமங்கலி யோகத்தை பெறுகிறாள்.

ஒரு பெண்ணின் நாலாம் பாவத்தை கொண்டு அவளது கற்பு நெறியை எடை போடலாம் என்றுசில ஜோதிட நூல்கள் கூறினாலும், அவளது கற்ப்பை பற்றி முழுவதும் நமக்கு உணர்த்துவது அவளது ஜென்ம சந்திரனே ஆகும்.சந்திரன் பெற்ற நட்சத்ர காலை பொருத்து பல உண்மைகளை அறிய முடியும்.

"வைத்தியன் கையை பார்ப்பான்; ஜோதிடன் காலை பார்ப்பான்"

இதனால் தான் இந்த ஜோதிட பழமொழி மக்கள் இடையில் புழுக்கத்தில் உள்ளது.

பெண்களின் கற்பு நெறியை அறிய இதை விட முக்கியம் நமது இந்திய நாட்டின் பண்பாடு, குறிப்பாகதமிழ் கலாச்சார நிலையை இங்கு உற்று நோக்குதல் மிக மிக அவசியமாகிறது.

பெண்களின் ஏழாம் பாவம் மூலம் நாம் அறிவது, அவளது திருமண வாழ்வு இனிக்கும, கசக்குமா?என்றும், அவளது கணவனின் குணங்கள், அவனது, ஆறிவு, ஆற்றல், மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஆண்களின்ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்கள் இருந்தால் அவருக்கு ஒன்றுக்கு மேல்பட்ட மனைவிகள் வாய்க்க இடம் உள்ளது என சிலஜோதிடர்கள் பளிச் என்று கூறி விடுகிறார்கள். மக்கள் இதற்கு அதிக முக்கியதுவம் தாராமல் மற்ற ஜோதிட விஷயங்களைவிசாரிக்கிறார்கள். ஆனால், இதுவே பெண்களின் ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்களான, செவ்வாய், சூரியன், ராகு, கேது, சனிஇவர்கள் இருந்தால் இருதார யோகம் என்று கூறினால் அந்த பலன்கள் மிக தவறாக முடிகிறது. காரணம், தமிழ் நாட்டின் பண்பாடும்கலாச்சார பெருமையுமே காரணம். நம் நாட்டில் பெண்களுக்கு தனி மரியாதையும் மதிப்பும் கொடுக்கிறார்கள்.

ஆண்களின் ஜாதகத்தில் வரப்போகிற மனைவி எப்படி இருப்பாள் என்பதை அவரது ஜாதகத்தில்சுக்ரனின் நிலைபாட்டை வைத்து கூறி விட முடியும். ஆனால், பெண்களின் ஜாதகத்தில், சுக்ரனின் நிலையை வைத்து, அவளதுசௌகரியங்களை எடை போட முடியுமே தவிர, அவளது கணவனின் பராக்கிரமத்தை அறிய அந்த பெண்ணின் ஜாதகத்தில்செவ்வாயின் நிலை பாட்டையும், செவ்வாய் பெற்ற நட்சத்ர காலையும், செவ்வாயை பார்த்தவர்களை வைத்தும் தான் சொல்லமுடியும்.

எனவே, நமது இந்திய ஜோதிட முறையில், பெண்களை பற்றி அறிய மிக நுணுக்கமாக ஆராய வேண்டும்என்றும் , ஆண்களுக்கு சொல்வது போல் சொன்னால் பிழைகள் வரும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

Saturday, May 11, 2013

சப்தகன்னியர்- மாகேஸ்வரி


பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் மாகேஸ்வரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், கருங்குயில்நாதன் பேட்டை அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சக்திபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். தக்க யாகத்தில் இந்திரன் குயில் உருவங்கொண்டு வந்து வழிபட்ட தலம். சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் நோய் நீக்கும் சிறப்புடையது. தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. காவிரி வடகரையில் பூம்புகார்ப் பேருந்து சாலையில் உள்ளது கருணாபுரம் கருணாபேட்டை.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

போன் : 94435 23080.

மாகேஸ்வரி வழிபட்ட மற்றொரு தலம் தஞ்சாவூர் மாவட்டம், கோயிலடி அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. தலவிருட்சம் நெல்லிமரம். தீர்த்தம் சத்திய கங்கை.

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் கோயிலடி பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே ஒரு கி.மீ

மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு): மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி சிவபிரானைப் போன்றேமுக்கண் ஐந்துதிருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள். பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், பாம்பணி பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவள். வெள்ளை நிறமுடையவள்.

தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!

மாகேஸ்வரி பாடல்: சிரத்துமாமதி சூடிய தேவனைக் கருணா
புரத்து நாதனைப் புண்ணியமூர்த்தியைப் புகழ்சால்
உரத்து மேம்படும் மயேச்சரி பூசனை உஞற்றி
வரத்து மேதகு சிறப்பெலாம் பெற்றனள் வாழ்ந்தாள்.

மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:

காயத்ரி: ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

தினம் ஒரு திருமந்திரம் 11-05-2013


கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.

பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.

Wednesday, May 8, 2013

பிராணாயாமம்


1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்துசெய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம்கழித்து சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது.

தகுதியான ஆசனம் :
பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்.
மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது.
பூரகம் :
மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல்.
ரச்சகம் :
மூச்சை வெளியே விடுதல்.
உள்கும்பகம் :
மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல்.
வெளிகும்பகம் :
மூச்சு காற்று உள்ளே இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல்.
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய வேண்டும்.
பந்தம் :
மூலபந்தம் :
மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும், பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது. சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை குதிகாலால் அழுத்திக் கொள்ளவும். மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும் உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும்.
மூலபந்தத்தின் பயன்கள் :
1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத பசி குறையும்.
2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும் சீராக வேலை செய்யும்.
3. இளமைக் குறையாது.
இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய வேண்டும்.
ஜலந்தர்பந்தம் :
தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம் ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.
ஒட்டியானபந்தம் :
வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும் போது செய்து பூரகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.

பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள்

1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும்.

நாடிசுத்தி

புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றிமாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை.தவறான மந்திரம்  • ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும். 
  • தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும். 
  • தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும். 
  • ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளைநாசம் செய்யும். 
  • முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.

Tuesday, May 7, 2013

சப்தகன்னியர்- பிராம்மி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.

பிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.

பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள் கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

பிராம்மி பாடல்:

பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.

பிராம்மி என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:

ஆசன மூர்த்தி மூலம்

ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:
ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:

பிராம்மி காயத்ரி:

ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே

மூலமந்திரம்:

ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:

தினம் ஒரு திருமந்திரம் 07-05-2013

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டின்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

பொருள் : உடலில் உயிர் கலந்துள்ள கால எல்லையை அறியின் அக்கால எல்லை பிராணன் இயக்கத்தால் அமைந்துள்ளது. அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால் உயிருடன் பொருந்திய காலமும் அழிவின்றுட நிற்கும். ஆயுள் நிலைத்து நிற்கும் என்றபடி.

Monday, May 6, 2013


சந்திராஷ்டம் என்றால் என்ன?
நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன்,இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது.ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம ராசியாகும்.

திருஷ்டி என்பது என்ன?
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.

குலதெய்வம் வழிபாடு.
நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.இவர்களுக்கு காவல் தெய்வம்,குல தெய்வம் வழிபாடு இருக்கும்.பிறக்கும் குழந்தைகளுக்கு,முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள். சில்ர் காது குத்துவார்கள்.

குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடையஇந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.அப்படியானால் குலதெய்வமும்,இறைநிலையும் வேறுவேறா?அப்படி கிடையாது,அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

உலகத்தில் இன்பத்தையும்,பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் முடியாது,லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்கும் தான்இறைதூதர்களையும்,தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார்.அவர்களேகுலதெய்வங்கள் ஆவார்கள்.

குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள்,முழுவதும் பங்காளி ஆவார்கள்.இவர்கள் அண்ணன்,தம்பி உறவு முறையாககருதுபவர்கள்.இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ,எடுக்கவோ மாட்டார்கள்.

மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும்,முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.

அட்சய திருதியை

அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது.

இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ-புண்ணிய கணக்கில் பாவங்கள் ஒரளவு குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும். நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

“அட்சய” என்ற சொல்லின் மகிமையை உணர்த்திய மகாபாரதம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் உரிமைகளையும் செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்தபோது உணவுக்கு என்ன செய்வது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. அத்துடன் தங்களின் பசியை போல காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் தங்களை தேடி உணவு கேட்டு வரும்போது அவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லக்கூடாதே என்று சிந்தித்த துரோபதை, சூரிய பகவானை நினைத்து வணங்கி அட்சய பாத்திரத்தை பெற்றாள்.

அந்த நாள்தான் அட்சய தினம். அட்சய பாத்திரம் கிடைத்த பிறகு, உணவு கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தாராளமாக உணவு படைத்தாள். இதன் புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும் – கௌரவர்களுக்கும் நடந்த பாரத யுத்தத்தில் துரோபதி செய்த தர்மம், பாண்டவர்களின் தலையை காத்தது. இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள்.

தர்மம் செய்தாலே மோசமான கர்மவினைகள் விலகும், புண்ணியங்கள்சேரும் என்பதற்கு மகாபாரதம் ஒரு சாட்சி. தோஷங்கள் நீங்குவதற்கு அட்சயம் ஒரு அட்சாரம்.

கர்ணன் பல தானங்கள் செய்தாலும் அன்னதானம் செய்யாததால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே அன்னதானம் செய்தாலே சொர்க்கத்தில் மட்டுமல்ல, இந்த பூலோக வாழ்க்கையும் சொர்கலோக வாழ்க்கையாக அமையும்.

ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

குபேரர் லட்சுமிதேவியை பூஜிக்கும் நாள் அட்சய திருதியை

செல்வத்திற்கு அதிபதி குபேரர். தன் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீலஷ்மி தேவி, குபேரரை என்றும் செல்வந்தனாக இருக்கும் படி ஆசி வழங்குவார். நாமும் இந்த அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும்.

இறைவனுக்கு பொன் – பொருள் தந்துதான் வணங்க வேண்டும் என்றில்லை. நம் தகுதிக்கு ஏற்ப சமர்பித்து வணங்கலாம். குசேலர் ஸ்ரீகிருஷ்ணருக்கு தன் சக்திக்கேற்ப அவல் மட்டும் தந்துதான் செல்வந்தர் ஆனார்.

அதேபோல வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டு வாசலில்“பவதி பிக்ஷாந்தேகி” வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, உணவு ஏதும் தர வழியில்லாமல் கலங்கிய அந்த குடும்பத்தின் இல்லதரசி, அப்போது தன் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லி கனியை தந்த பலனால், வறுமையிலும் உயர்ந்த பண்பாட்டில் நிற்கும் அந்த தாயின் நிலையை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாட, அதனால் ஸ்ரீமகாலஷ்மியின் மகிழ்ந்து அந்த குடும்பத்தின் தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். இந்த சம்பவம் நிகழ்ந்த நன்னாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்.

ஆகவே அட்சய திருதியை அன்று அன்னதானம், நீர்மோர் தானம், நன்றாக படிக்கும் ஏழை மாணவ-மாணவிக்கு நம் சக்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை செய்தாலே சொர்கலோக வாழ்க்கை அமையும். அத்துடன் ஸ்ரீ மகாலஷ்மியை அன்று மனமுருகி பிராத்தனை செய்தால் குபேரர் போல் ஆண்டு முழுவதும் சுபிக்ஷத்தோடு செல்வ வசதியோடு வாழ்க்கை அமையும். இதைதான் எல்லா புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கிறது.

அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம இல்லை. இருந்தாலும் அவரவர் விருப்பங்களுக்கு சாஸ்திரம் தடையாக இருக்காது. அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.

சர்க்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.

ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும்.

அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.

மனசாட்சியே தெய்வம்


* மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன், நன்மையும் ஏற்படும்.

* மனதில் இறைவனை நினைத்து அறிவு விளக்கேற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான எண்ணங்கள் புகுவதில்லை.
* குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.
* நல்ல மனதுக்கு நல்லதாகவும், கெட்ட மனதுக்கு கெட்டதாகவும், தெய்வீக மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.
* மனித உள்ளத்தில் தெய்வம் மனசாட்சியாய் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவோ, உதாசீனப்படுத்தவோ நம்மால் முடியாது.
* வாழ்வில் கடந்த பகுதி கனவாகப் போய் விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவாகவே போய் விடும். இந்த உண்மையை உணர்ந்து, இறைவனிடம் உலக வாழ்வு நிலையானது என்று நினைக்கும் அறியாமையை அகற்ற பிரார்த்திப்போம்.
                                           
                                                                                                                         - தாயுமானவர்

தினம் ஒரு திருமந்திரம் 06-05-2013

பூரண சத்தி எழுமூன்று அறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றுஅஞ்சு ஆயினர்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

பொருள் : பராசத்தியே ஏழ கன்னிகளாக இச்சை ஞானம் கிரியையாகிய பேதத்தால் இருபத்தொன்றாக அழகு மிக்க அக்கன்னியர் ஐம் பெருந் தொழிலுக்கும் நூற்றைந்து கன்னியராயினர். நாராயணன், பிரமன், உரத்திரன் , மகேஸ்வரன், சதாசிவனாகிய ஐவருக்கும் காரணமாகிய அவர்களோடு கலந்து விரிந்து நின்றனன்.