Saturday, September 28, 2019

வாசி யோகம்

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள் அதிகம்பேர் சமூகத்தில் உள்ளனர்.அதைப்பார்த்து நம்பிக்கை கொண்ட இளையதலைமுறையினர்களும் அவ்வழியிலேயே செல்ல முற்படுகின்றனர்.

ஆன்மீக வழியில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அனைத்தையும் துறந்து மிகவும் கஷ்டப்பட்டு,  பிச்சையெடுத்து வாழ்ந்து முடிவில் நோயால் மரணமடைவதையே காண்கிறோம்.இதை பேரின்ப வாழ்வு என அவர்கள் கூறினாலும் பெரும்பாலானவர்களால் நம்பமுடியவில்லை.

அவர்களை ஞானி என வணங்கமுடிகிறதேயொழிய அவர்களைப்பின்பற்ற  தைரியம் வருவதில்லை.ஏனென்றால் மனைவி, குடும்பம், குழந்தைகளை, வசதிகளை விட்டுவிட்டு கடவுளைக்காண்பதற்க்காக பிச்சையெடுத்து வாழ யாரும் முன்வருவதில்லை.பயம்தான் மிஞ்சுகிறது.

இந்த பயத்தை உடைத்து குடும்பத்திலிருந்துகொண்டே ஆன்மீகத்தில் முன்னேறி ஸித்திகளையும், ஜீவசமாதியையும் அடைய ஒரேவழி கிரியா யோகம் அல்லது வாசியோகம் என்ற விஞ்ஞானப்பூர்வமான பயிற்ச்சியை கற்றுக்கொண்டு எதையும் துறந்து ஓடாமல் அவரவர் வீட்டிலிருந்தபடியே பயிற்ச்சி செய்ய வேண்டும்.

இப்பயிற்ச்சியில் புறச்சடங்குகளில்லை, சாதி, மதம் இல்லை. வெறும்  மனித உடலையும் இயற்க்கையாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி காலையும், மாலையும் அரைமணிநேரம் உங்கள் நலனுக்காக பயிற்சி செய்தாலே போதும்.

இந்த அரைமணிநேர வாசிப்பயிற்ச்சி ஏராளமான நன்மைகளை வழங்கும்.இவ்வாறு பொறுமையுடன், ஞானமடைந்த குருவின் வழிகாட்டுதலுடன் இப்பயிற்ச்சியை செய்தாலேயே போதும்..

இதை அனுபவப்பூர்வமாக அடைந்து நல்வாழ்வு வாழ்பவர்கள் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமானால் ஆன்மீகம் ஒன்றே சமூகத்தில் நிலைபெற்று இருக்கும்.

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்ந்து நோய்க்கு விருந்தாகி இறப்போரைவிட, பணமும் சம்பாதித்து, நோய்நொடியின்றி வசதியாகவும் வாழ்ந்து வாசிப்பயிற்ச்சியால் ஜீவசமாதி அல்லது ஒளிஐக்கியமும் அடைபவர்கள்தானே உண்மையிலேயே ஞானிகள்?

. ஆன்மீகம் செழிக்க இறைவன் நமக்கு கொடுத்த நம் உடலெனும் கருவியை செம்மையாக பயன்டுத்தினாலே போதும்.

உடலையும், விலையில்லாமல் இலவசமாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி நோயில்லா,  மரணமிலா,துறவில்லா பெருவாழ்வை அடைய வாசியோகமே வழி

பூப்பறிக்க கோடரி எதற்க்கு?
வாழ்வை வெல்ல வாசி இருக்கு!!!


வாழை இலை குளியல்


#வாழை_இலைக்குளியல்_செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் நம் முன்னோர்கள் ...!

இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.🌷🧩🌷

வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல் செய்முறை 🌱 🌱

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!🌷🧩🌷

வாழைகுளியல் பலன்கள் 🌱🍃 🌱

1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!

வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!

அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம். 🌷🧩🌷

மகிழ்வித்து மகிழுங்கள் ..... 🌷🧩🌷