Monday, May 13, 2013

தினம் ஒரு திருமந்திரம் 13-05-2013

சித்தம் திரிந்து சிவமய மாகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

பொருள் : சித்தம் புறத்தே செல்லாமல் மாறுபட்டுச் சிவமாகி, வீடு பேற்றை ஆராய்ந்து அடைந்த பிரணவ உபாசகர் சிவத் தோடு கூடிய முத்தர்கள் ஆவார்கள். அவர் பஞ்சேந்திரியங்களின் தொடர்பில்லாதவர்கள். ஆகையால் அகத் தூய்மை பெறலாம். அவர்கள் அறிவு ஆகாயத்தில் தத்துவங்களை விட்டுச் சிவத்துடன் பொருந்திநிற்பர்.

சென்ற பிறவி ரகசியம்


நான் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது?

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது. இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக, யாரோ ஒருவருக்கு மனைவியாக, பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம். இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

கன்னி தீவு கதை மாதிரி கண்டுபிடிக்க முடியாத ரகசியம் ... முன் பிறவி ரகசியம் என்பதே. அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.

இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை. தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது.

இது உண்மையே.

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு பலர் செய்யும் தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன்.

துவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள். இதற்கு அடுத்த படியாக குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள். இதில் ராகு கேது தவிர்த்து, ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது.

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள். இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.

இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும், 5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து, பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள். இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.

அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை, மீறி அமையும் வாழ்க்கையில் குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.

அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும், புத்திர சோகத்தை தருகிறது. காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள், பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.

சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.

என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும், ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது. ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள்.

இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ, ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால், அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம்.

அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை வதைத்தவர்கள், சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.

மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.

உதாரணமாக பரணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம். அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும். சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது.

ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு திசையாக 5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம் என்று குறைந்த அளவே தசையாக வருகிறது.

காரணம் என்ன?

முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார். சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில், இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.

நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம். இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில் சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார். மற்ற கிரகங்கள் மாறாது.

ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை, இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.

ஒருவர் மீன ராசியில் பிறந்தால், அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது, அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார்.

சந்திரன் கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர். அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம். ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.

அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......

மேஷம், தனுசு - சத்திரிய குலம். அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.

ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம். அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் பிராமண குலம். அதாவது கோவில் பூஜை மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.

கன்னி துலாம் சூத்திர குலம்.

இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும். அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது.

மங்கையின் ஜாதக ரகசியங்கள்


ஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணாக அமையும்.மங்கையர்களின் ஜாதகங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த பின்னரேபலன்களை முடிவு செய்ய வேண்டும். ஆண்களின் ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும், ஆனால், பெண்களுக்கோ இதுமாங்கல்ய ஸ்தானமாக கருதபடுகிறது. பெண்களுக்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடம். இதை விட மிக மிக முக்கியமான இடம்இரண்டாம் இடம், காரணம் இந்த இடம் 7-க்கு எட்டாம் இடமாக வருவதால், கணவனின் ஆயுள் ஸ்தானமாக இந்த இரண்டாம் இடம்வருகிறது. இந்த இரண்டாம் இடம் வலு பெற்று இருந்தாலும், இந்த இரண்டாம் இடத்தை சுப கிரகங்களில் முதல் வரிசையில் உள்ள குருஅல்லது சுக்ரன் பார்த்தால், இந்த பெண் என்றும் சுமங்கலி யோகத்தை பெறுகிறாள்.

ஒரு பெண்ணின் நாலாம் பாவத்தை கொண்டு அவளது கற்பு நெறியை எடை போடலாம் என்றுசில ஜோதிட நூல்கள் கூறினாலும், அவளது கற்ப்பை பற்றி முழுவதும் நமக்கு உணர்த்துவது அவளது ஜென்ம சந்திரனே ஆகும்.சந்திரன் பெற்ற நட்சத்ர காலை பொருத்து பல உண்மைகளை அறிய முடியும்.

"வைத்தியன் கையை பார்ப்பான்; ஜோதிடன் காலை பார்ப்பான்"

இதனால் தான் இந்த ஜோதிட பழமொழி மக்கள் இடையில் புழுக்கத்தில் உள்ளது.





பெண்களின் கற்பு நெறியை அறிய இதை விட முக்கியம் நமது இந்திய நாட்டின் பண்பாடு, குறிப்பாகதமிழ் கலாச்சார நிலையை இங்கு உற்று நோக்குதல் மிக மிக அவசியமாகிறது.

பெண்களின் ஏழாம் பாவம் மூலம் நாம் அறிவது, அவளது திருமண வாழ்வு இனிக்கும, கசக்குமா?என்றும், அவளது கணவனின் குணங்கள், அவனது, ஆறிவு, ஆற்றல், மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஆண்களின்ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்கள் இருந்தால் அவருக்கு ஒன்றுக்கு மேல்பட்ட மனைவிகள் வாய்க்க இடம் உள்ளது என சிலஜோதிடர்கள் பளிச் என்று கூறி விடுகிறார்கள். மக்கள் இதற்கு அதிக முக்கியதுவம் தாராமல் மற்ற ஜோதிட விஷயங்களைவிசாரிக்கிறார்கள். ஆனால், இதுவே பெண்களின் ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்களான, செவ்வாய், சூரியன், ராகு, கேது, சனிஇவர்கள் இருந்தால் இருதார யோகம் என்று கூறினால் அந்த பலன்கள் மிக தவறாக முடிகிறது. காரணம், தமிழ் நாட்டின் பண்பாடும்கலாச்சார பெருமையுமே காரணம். நம் நாட்டில் பெண்களுக்கு தனி மரியாதையும் மதிப்பும் கொடுக்கிறார்கள்.

ஆண்களின் ஜாதகத்தில் வரப்போகிற மனைவி எப்படி இருப்பாள் என்பதை அவரது ஜாதகத்தில்சுக்ரனின் நிலைபாட்டை வைத்து கூறி விட முடியும். ஆனால், பெண்களின் ஜாதகத்தில், சுக்ரனின் நிலையை வைத்து, அவளதுசௌகரியங்களை எடை போட முடியுமே தவிர, அவளது கணவனின் பராக்கிரமத்தை அறிய அந்த பெண்ணின் ஜாதகத்தில்செவ்வாயின் நிலை பாட்டையும், செவ்வாய் பெற்ற நட்சத்ர காலையும், செவ்வாயை பார்த்தவர்களை வைத்தும் தான் சொல்லமுடியும்.

எனவே, நமது இந்திய ஜோதிட முறையில், பெண்களை பற்றி அறிய மிக நுணுக்கமாக ஆராய வேண்டும்என்றும் , ஆண்களுக்கு சொல்வது போல் சொன்னால் பிழைகள் வரும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

Friday, May 10, 2013

சப்தகன்னியர்- மாகேஸ்வரி


பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் மாகேஸ்வரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், கருங்குயில்நாதன் பேட்டை அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சக்திபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். தக்க யாகத்தில் இந்திரன் குயில் உருவங்கொண்டு வந்து வழிபட்ட தலம். சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் நோய் நீக்கும் சிறப்புடையது. தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. காவிரி வடகரையில் பூம்புகார்ப் பேருந்து சாலையில் உள்ளது கருணாபுரம் கருணாபேட்டை.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

போன் : 94435 23080.

மாகேஸ்வரி வழிபட்ட மற்றொரு தலம் தஞ்சாவூர் மாவட்டம், கோயிலடி அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. தலவிருட்சம் நெல்லிமரம். தீர்த்தம் சத்திய கங்கை.

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் கோயிலடி பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே ஒரு கி.மீ

மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு): மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி சிவபிரானைப் போன்றேமுக்கண் ஐந்துதிருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள். பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், பாம்பணி பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவள். வெள்ளை நிறமுடையவள்.

தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!

மாகேஸ்வரி பாடல்: சிரத்துமாமதி சூடிய தேவனைக் கருணா
புரத்து நாதனைப் புண்ணியமூர்த்தியைப் புகழ்சால்
உரத்து மேம்படும் மயேச்சரி பூசனை உஞற்றி
வரத்து மேதகு சிறப்பெலாம் பெற்றனள் வாழ்ந்தாள்.

மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:

காயத்ரி: ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

தினம் ஒரு திருமந்திரம் 11-05-2013


கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.

பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.

Tuesday, May 7, 2013

பிராணாயாமம்


1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்துசெய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம்கழித்து சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது.

தகுதியான ஆசனம் :
பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்.
மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது.
பூரகம் :
மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல்.
ரச்சகம் :
மூச்சை வெளியே விடுதல்.
உள்கும்பகம் :
மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல்.
வெளிகும்பகம் :
மூச்சு காற்று உள்ளே இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல்.
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய வேண்டும்.
பந்தம் :
மூலபந்தம் :
மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும், பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது. சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை குதிகாலால் அழுத்திக் கொள்ளவும். மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும் உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும்.
மூலபந்தத்தின் பயன்கள் :
1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத பசி குறையும்.
2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும் சீராக வேலை செய்யும்.
3. இளமைக் குறையாது.
இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய வேண்டும்.
ஜலந்தர்பந்தம் :
தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம் ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.
ஒட்டியானபந்தம் :
வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும் போது செய்து பூரகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.

பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள்

1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும்.

நாடிசுத்தி

புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றிமாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை.



தவறான மந்திரம்



  • ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும். 
  • தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும். 
  • தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும். 
  • ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளைநாசம் செய்யும். 
  • முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.