Thursday, February 28, 2013

மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள்கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும்
வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள்
மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆவர்.

நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம்
போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு
முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள்.

சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை
சம்பிரதாயங்களை உருவாக்கி, "மருதாநல்லூர் பாணி" என்று புகழ்பாடும் அளவிற்கு
அதை மக்களிடையே பரப்பியவர்.

1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இளம்பிராயத்தில் "வெங்கட்ராமன்'
என்ற பெயர் பெற்ற சுவாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது
தந்தை காவியங்களில் பற்றுடையவர்.

பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத்
திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால், ராமஜபம் மட்டுமில்லாமல்,
உள்ளும் புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார்.

பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே
இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தை செய்த சிரார்த்தம்
முதலான வைதீக காரியங்களில் பிழைப்புக்காக ஈடுபட்டு வந்தார்.

ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிரார்த்தம் செய்ய சென்ற போது, ராமநாம ஜபம் செய்ய
ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது.
சிரார்த்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை
பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்த போது,  "நீங்கள் இன்று வெகுநன்றாக
சிரார்த்தம் செய்து வைத்தீர்கள்,'' என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை
நினைத்து திகைத்து நின்று விட்டார்.

இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு,
குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித்
தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது
புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது. இது இவரது ஜப வாழ்க்கைக்கு
இடையூறாக அமைந்தது.

எனவே, தம் சொத்துக்களை உறவினர்களிடம் கொடுத்து விட்டு ராமஜபம் செய்யும்
ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து
நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும்
பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமா ராமா என்று சொல்லி ஆடிப்பாடிக்
கொண்டிருப்பதை கண்டார்.

"தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படுகிறார்களே! ஆனால், இங்குள்ள
மக்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்களே,'' என எண்ணியவராய், வடக்கே இருந்த
சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒருநாம
சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார்.

அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, "" உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த
பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை
பரப்ப ஏற்பாடு செய்,'' என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி
விட்டார்.

ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர்
போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை
உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும்,
குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார்.
இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி
எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற
தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல்,உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார்.

10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து
கேட்க, ஓரிடத்தில் சிம்ம கர்ஜனையாக "ராம் ராம்' என்ற நாமம் காதில் கேட்டது.
அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள்

தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள்
சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில்
ஆஞ்சநேயர் தோன்றி, ""உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார்,'' என்று
சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து
ஆசிபெற்றார்.

மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர்
உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார்.
இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம்
மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி
நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, "அதடே பரபிரும்மம்' என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது.

1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி
சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

பகவந்நாமா:
வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண்ணியம் செய்யவேண்டும்.
“சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய் விடுகிறது. இதற்கு அவகாசம்
இல்லையே” என்பீர்கள்.
சம்பாதிப்பது க்ருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால்
யோசித்துப்பார்த்தால் அதற்கே முழு நேரமும் போய்விடவில்லை என்று தெரியும்.

வீண் பேச்சு, பரிஹாசம், வேடிக்கை பார்ப்பது, நியூஸ்பேப்பர் விமரிசனம் இவற்றில்
எவ்வளவு பொழுது வீணாகிறது!

அதையெல்லாம் பகவந்நாம ஸ்மரணயில் செலவிடலாமே. இதற்கென்று தனியே
பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை.

ஆபீஸ்க்கு பஸ்சிலோ, ரயிலிலோ போகும்போது பகவந்நாமாவை ஜபித்துக்கொண்டே போகலாமே!
ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன்வராதே.
மறுஉலகத்தில் செலவாணி பகவந்நாமா ஒன்றுதானே.
மனசு பகவானின் இடம்.

அதை குப்பைத்தொட்டியாக்கியிருக்கிறோம். அதை
சுத்தப்படுத்தி, மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்து
விட வேண்டும். தினமும் இப்படி ஐந்து நிமிஷமாவது தியானம் செய்ய வேண்டும்.

லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்கவேண்டிய காரியம் இது. ஏனெனில், லோகம்
முழுகும் போது நமக்கு கைகொடுப்பது இந்த பகவந்நாமாதான்.

Saturday, February 16, 2013

உணவு அட்டவணை
Food Habits : Diet Table - Food Habits and Nutrition Guide in Tamil
உணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி நோய் உண்டாக்கி விடுகின்றன.
நாமும் அவசரத்திற்கு தகுந்த காரணத்தை ஆராயாமலும், அதற்கு உண்டான நல்ல மருத்துவரை நாடாமால் நாமே மருந்துக்கடைக்குப் போய் நமது பிரச்சினைகளைக் கூறி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் நோய் சில சமயம் குணமாவதைப் போலத் தெரிந்தாலும் மீண்டும் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினால் நமது உடம்பை நோய் தாக்குகிறது. ஒவ்வொருவரும் நேரத்திற்கும் அதுவும் அவரவருக்கு ஏற்ற உணவு வகைகளை உண்டுவந்தால் நோய் எளிதில் நம்மைத் தாக்க முடியாது.
ஒரு வாரத்திற்கு உணவு முறைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளேன். நோய் வாய்ப்பட்டவர்களும், சாதாரணமானவர்களும் இந்த முறையைக் கடைப்பிடித்து சாப்பிட்டு வந்தால் இதன் உண்மையை உணரலாம்.
திங்கட்கிழமை
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு உடம்பு நன்றாக இருக்கும். இதனால் உடல் சூடு தணியும். மலம் இளக்கமாக போகும். தேகம் சம நிலை அடையும்.
பின்னர் ஏழு மணிக்கு அருகம்புல் சாறு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். மூன்று மணிக்கு சுக்கு, கொத்தமல்லி கலந்து காபி குடிக்கலாம். பதினோறு மணிக்கு பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் அல்லது பேரிச்சம்பழம் ஐம்பது கிராம் அல்லது திராட்சை நூறு கிராம் அல்லது வாழைப்பழம் இரண்டு சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், ஒரு கப் ஏதாவது கீரை, இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், இரண்டு டம்ளர் மோர், இரண்டு பேரிச்சம் பழம் மட்டும்.
மாலை நான்கு மணிக்கு கொண்டைக் கடலை அல்லது மொச்சை வேகவைத்தது ஒரு கப், அத்துடன் ஒரு டம்ளர் சுக்கு காபி. இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி. ஒன்று அல்லது இரண்டு வாழை அல்லது பேரிச்சம் பழம், சிறிதளவு தேங்காய்த் துண்டு.
செவ்வாய்க்கிழமை
வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எலுமிச்சம் பழம், இஞ்சி, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். ஒன்பது மணிக்கு கேழ்வரகுப் புட்டு, வாழைப் பழம் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், பதினோறு மணிக்கு கேரட்சாறு ஒரு டம்ளர் மட்டும். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், வாழைத் தண்டு, முருங்கைக் கீரை ஒரு கப், மிளகு ரசம் மற்றும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.
மாலை நான்கு மணிக்கு எள், ஏலக்காய், வெல்லம் கலந்த எள் உருண்டை இரண்டு மற்றும் ஒரு கப் காய்கறி சூப். இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப்சாதம், வெந்தயக் குழம்பு அல்லது சீரகக் குழம்பு, இரவு படுக்கப் போகும் முன்பு பப்பாளி அல்லது மாம்பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம்.
புதன் கிழமை
வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு ஒரு டம்ளர் வேப்பிலை சாறு, மிளகு, சீரகம் கலந்து சாறு குடிக்கலாம். ஒன்பது மணிக்கு பைன் ஆப்பிள் சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், மிளகு ரசம், அகத்திக் கீரை, சுண்டைக்காய் கூட்டு, மாலை நான்கு மணிக்கு ஒரு டம்ளர் பாகற்காய் சூப் குடிக்கலாம். இரவு ஏழு மணிக்கு எலுமிச்சம் சாதம் ஒன்று அல்லது இரண்டு கப், பீட்ரூட் பொறியல், பேரிச்சம் பழம் இரண்டு சாப்பிடலாம்.
வியாழக்கிழமை
வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு வெண் சணி சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு வெண் பொங்கல் ஒரு கப், மிளகு, கறி வேப்பிலை துவையல். பதினோறு மணிக்கு ஏதாவது ஒரு பழம். மதியம் ஒருமணிக்கு ஒரு கப் கோதுமை சாதம், காய்கறி சாம்பார். பேரிச்சம் பழம் இரண்டு அல்லது ஏதாவது ஒரு பழம். மாலை நாலரை மணிக்கு வேக வைத்த சுண்டல் ஒரு கப் மற்றும் சுக்கு காப்பி, இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், பப்பாளித்துண்டு ஒரு கப் மற்றும் ஒரு டம்ளர் பால் மட்டும்.
வெள்ளிக்கிழமை
வழக்கம்போல காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை ஏழு மணிக்கு துளசிடீ, ஒன்பது மணிக்கு வெந்தயம் கலந்த இட்லி- நான்கு. மல்லி சட்னி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறிகள் இரண்டு கப், ஒரு கப் அவல் (தேங்காயு டன்), மாலை நாலரை மணிக்கு சுண்டல் ஒரு கப் அல்லது முளைகட்டின தானியம் ஒரு கப், ஒரு டம்ளர் கோதுமைப்பால், இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தி, காய்கறி வேகவைத்தது ஒரு கப், ஏதாவது பழம்.
சனிக்கிழமை
தண்ணீர். காலை ஏழு மணிக்கு இஞ்சி, நல்ல வெல்லம், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய நீர் ஒரு டம்ளர். ஒன்பதுமணிக்கு பழத்துண்டுகள் கலந் தவை இரண்டு கப், மதியம் ஒரு மணிக்கு ஒரு கப் சாதம் அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மோருடன் வெங்கா யம் ஊறவைத்தது ஒரு டம்ளர், அவரைக்காய், வாழைப் பொறியல் அல்லது கூட்டு, மாலை நான்கு மணிக்கு சாத்துக்குடி தேன் கலந்த சாறு ஒரு டம்ளர். இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், துளசி குடிநீர் ஒரு டம்ளர் அல்லது பட்டினி இருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை
வழக்கம்போல தண்ணீர். காலை ஏழு மணி - அருகம்புல், வேப்பிலை, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு கேரட் சாறு ஒரு டம்ளர், காலை பதினோறு மணிக்கு கார அவல் ஒரு கப், இனிப்புப் பழங்கள் இரண்டு கப், காய்கறி சாலட் ஒரு கப், தேங்காய், பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடலாம். மாலை நான்கு மணிக்கு ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப், ஏதாவது ஒரு பழம். இவ்வாறு அறுசுவை உணவுகளை உண்டுவந்தால் வாதம், பித்தம், கபம் சமநிலையிருந்து நோய்வராமல் நோய் எதிர்ப்புச்சக்தி தானாகவே கிடைக்கும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மீன் வகைகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். கோழிக்கறி, இறால் மீன், கருவாடு வகைகள் உடம்பிற்கு சூட்டை ஏற்படுத்தி நோய் வர வழிவகுக்கும். அதை தவிர்ப் பது உடம்பிற்கு நல்லது.
 நன்றி
http://www.koodal.com/health/food_guide.asp?id=141

சிறந்த உணவு பழக்கம்


நமது உணவுப்பழக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அரைவயிறு அன்னம் (திடப்பொருள்), கால்வயிறு நீர் (திரவப்பொருள்), கால்வயிறு காற்று (காலியிடம்) என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு சாப்பாடு: அவரவர் வயிறு அவரவர்க்கு தெரியும், அந்த அளவே சாப்பிட வேண்டும். கூடுவதும் குறைவதும் நல்லதல்ல.
இரவு நேரங்களில் குறைவாக சாப்பிடலாம்.
சிறுவயது என்றால் கொஞ்சம் அதிகமானாலும் பிரச்சனையி்ல்லை, ஆனால் வயதானவர்களுக்கு எல்லா உணவையும் செரிக்கும் அளவுக்கு உடல் ஒத்துக்காது.
சாப்பிடுவதில் அவசரம் வேண்டாம். அதிகம் சாப்பிடுவதை குறைக்கவும் அவசரமாக உள்ளே தள்ளி புரையேறுவதை தடுக்க இன்றைய மனோநல மருத்துவர்கள் கூறுவது சாப்பாடு வைத்ததும் அதை கொஞ்ச நேரம் உற்று பார்ப்பது.
இதை நாம் வேறு விதமாக செய்து கொண்டிருந்தோம். அதாவது சாப்பிடும் முன் இறைவனை நினைத்து கொஞ்சம் சாப்பாடு எடுத்து ஓரத்தில் வைத்துவிட்டு சாப்பிடுவதும், பிரார்த்தனை/அர்ப்பணம் செய்துவிட்டு சாப்பிடுவதும் ஆகும். இவ்வாறு செய்யாவிட்டாலும் பரவாயில்லை சாப்பிடுவதில் அவசரம் வேண்டாம்.
அதிகம் சாப்பிடுவர்களுக்கும் சாப்பாடே இல்லாதவர்களுக்கும் யோகம் இல்லை என்கிறது கீதை. அதிகமாக சாப்பிடுவதை விட அதிக சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது
உணவுக்கு இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறுகிறது இன்றைய மருத்துவம். ஆனால் உணவுக்கு முன் தான் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம், இடையிடையே தண்ணீர் குடிப்பது கூடாது என்றால் கஞ்சி உணவையே உண்ணக்கூடாது என்பது போலாகிவிடும்.
தேவை என்னவென்றால் வயிற்றில் உணவை செரிக்க வைக்கும் அமிலம் உணவுடன் கலக்க வேண்டும், அவ்வளவும்தான். உணவை நன்றாக சவைத்து சாப்பிடும் போது உமிழ்நீர் அதிகமாக உணவில் கலந்து சீரணிப்பதை எளிதாக்கும். தண்ணீர் அதிகமாக குடித்தால் சீரணி்ப்பதை கடினப்படுத்தும் என நினைக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் தண்ணீர் மிக மிக விரைவாக செரித்து விடும்.
கடின உணவு செரிக்க நேரம் ஆகும். இடையிடையே அல்லது முதலில் தண்ணீர் குடிப்பது சாப்பாட்டின் அளவை குறைக்கும். எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது சாப்பிடும் சாப்பாட்டை பொறுத்தது.
பொதுவாக சாப்பி்ட்டு கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிட்டால் உடம்பு அதிகமாகும், ஏனென்றால் நொறுக்குத்தீனி அதிகமாக பொரித்தது, இனிப்பு என்பதாக இருக்கும்.
உடம்பு வைத்துவிடும் என பயந்து சாப்பிட மறுப்பது தேவையில்லாத விசயம். அதற்குப்பதிலாக யோகா செய்தால் போதுமானது.
மாதத்திற்கு ஒரு நாளாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள். விரதம் தான் இருக்க வேண்டும் என்றில்லை இருந்தால் சந்தோஷம், ஆனால் மாதத்தில் ஒரு நாளாவது சாப்பாடு இல்லாமல் இருப்பது உடலுக்கு மிகமிக நல்லது.
இது முடியாவிட்டால் குறைந்த பட்சம் நீர் ஆகாரம் மட்டும் குறைந்த அளவு எடுத்து ஒரு நாள் இருந்து பழகுங்கள்.
சைவமா அசைவமா என்பது பெரிய பட்டிமன்ற தலைப்பு.
எந்த உணவானாலும் அதில் நிறைகுறைகள், தேவை தேவையில்லாதது சத்து அதிகமானது குறைந்தது என பலவகைகள் உள்ளது,
இருந்த போதும் நோய்நொடிகள் குறைவாக வருவது சைவ உணவில்தான். சைவ உணவிலும் மிக சத்தான உணவுகள் உள்ளது. ஆனால் சைவ உணவு அதிகமாக அது வேறு பிரச்சனைகளை கொடுக்காததாக இருக்கும்.
சில அறிவுரைகள்:
இரவில் தூங்கப்போகும் முன் பால் அல்லது வெந்நீர் குடியுங்கள்.
காலை எழுந்ததும் குறைந்தது 2 கப் தண்ணீர் குடியுங்கள்.
சாப்பி்ட்டு முடிந்ததும் 2 கப் தண்ணீர் குடியுங்கள்.
பசிக்காமல் சாப்பிட வேண்டாம். ஆனால் மதியம் கண்டிப்பாக நேரத்துக்கு சாப்பிட்டு விடுங்கள். சாப்பிட நேரமாகும் என்றால் தண்ணீராவது குடியுங்கள்.
காபி டீயை குறைத்துக்கொள்ளுங்கள்.
பெரியவர்கள் நொறுக்குத்தீனியை குறையுங்கள்.
இரவில் குறைவாக அல்லது லகுவான சாப்பாட்டை சாப்பிடுங்கள்.
அதிக குளிரானதையும் அதிக சூடானதையும் சாப்பிட வேண்டாம்.
அதிக காரம், அதிக இனிப்பு, அதிக புளிப்பு, அதிக உவர்ப்பு என்று எதி்லும் அதிகமாக இருப்பதை குறையுங்கள். அதற்காக இவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடாதீர்கள்.
பிள்ளைகள் சாப்பிடவில்லை என வருந்தாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என பாருங்கள், உடலுக்கு பாதகம் இல்லை என்றால் அவ்வகையானதை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். சாப்பாடாகத்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை.
மதியம் சாப்பிட்டதும் இரசம் சேர்த்தால் எளிதாக சீரணம் ஆகும்.
இறச்சி என்றால் உள்ளி(வெங்காயம்) தயிர், உருளைகிழங்கு என்றால் பூடு (வெள்ளைஉள்ளி), மற்றும் அவ்வப்போது நல்லமிளகு, கடுகு, மல்லி, மஞ்சள், பப்பாளி, பாவற்காய், வாழைப்பூ, கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி என்பது சரிவிகித உணவு. இதை கண்டிப்பாக அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
இரவில் தினம் வாழைப்பழம் சாப்பிடலாம். (இழுப்பு, மூச்சுமுட்டல் உள்ளவர்கள் பாழையம்தோடன் என்றவகை பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்)
அளவாக சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.

Saturday, February 2, 2013

சனிப்பெயர்ச்சி நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் ...

சனிப்பெயர்ச்சி நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும்
பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.


ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த
துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும்,
ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி
னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது
நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம்
கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர்
மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன்
நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட
பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை
திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக்
கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.


இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில்
அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும்
வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு
இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள்,
சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும்
செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ
நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை
பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத
மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.


இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை
விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு
அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும்
பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக்
காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை
அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து
வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.


தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான்.
அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன்
ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை
வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே,
நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது.
தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை
அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது,
ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக
வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என்
மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை
துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். Œனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை
படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு
நல்வாழ்வு பெறுவீர்கள்.

தை அமாவாசை


தை அமாவாசை தினத்தை நன்கு 
பயன்படுத்துவோம்

பல லட்சக்கணக்கான வருடங்களாக இந்துக்களால் விஞ்ஞான பூர்வமாக ஆராயப்பட்டுமுடிவில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏற்ற நாட்களாக மூன்று நாட்கள் ஒரு வருடத்தில் தேர்வு செய்யப்பட் டுள்ளன.
அவை ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை!!!
 
ஆடி அமாவாசையன்று சூரியன் முழு பலத்துடன் இருப்பார்.ஏனெனில்,அடுத்த மாதமான ஆவணி மாதமே சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெறும் மாதம்.புரட்டாசிஅமாவாசையானது மிக மிக புனிதமான நாளாகும்.நாம் வாழும்பூமி,சூரியக்குடும்பம்,மில்கிவே இவை அனைத்தும் நமது முன்னோர்கள் வாழ்ந்துவரும் கன்னி ராசி மண்டலத்தைச் சுற்றி வருகிறது.எனவேபுரட்டாசி அமாவாசைமிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
 
சூரியன் பலமிழந்து மீண்டும் பலம் பெறும் முதல் மாதமே தை மாதம்.அந்த தை மாதத்தில் வரும் அமாவாசையானது,ஆடி அமாவாசைக்குச் சமானமான புண்ணிய மாதம் ஆகும். இந்த நாளில் புனித நதிகள் அல்லது ராமேஸ்வரம் அல்லது காசி அல்லது ஹரித்வார் முதலான இடங்களில் நீராடி அன்னதானம் செய்தால் அதை விட பெரும் புண்ணியம் வேறு கிடையாது.அண்ணாமலையிலும் அன்னதானம் செய்யலாம்.

ஏதாவது ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாம் நமது ஊரில் இருக்கும் பழமையானசிவாலயங்களுக்குச் சென்று ,ஒரு தனிமையான இடத்தில் மஞ்சள் விரிப்பில்அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,நெற்றியில் விபூதிபூசி,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஒரு ஜபம் ஆயிரம் கோடி மடங்கு பலனாக நமக்குக் கிடைக்கும்.இவ்வாறு கோயில்களுக்குச் செல்லமுடியாதவர்கள்,தமது வீட்டிலேயே ஜபிக்கலாம்.
 
இந்த நாளில் அண்ணாமலை அல்லது சதுரகிரிக்குச் சென்று,அங்கும் ஓம்சிவசிவஓம்ஜபித்தால்,ஒரு தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கு,ஒரு லட்சம் கோடி(கூகுள்=1க்குப்பின்னால் 100 சைபர்கள்) தடவை ஜபித்தமைக்கான பலன்கள் நம்மை வந்துசேரும் என்பது உறுதி.
 
சரி,எதற்காக தை அமாவாசையன்று இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?
 
நாம் படும் கஷ்டங்கள் சீக்கிரம் தீராதா என்ற ஏக்கம் பல நாளாக,நாளாக எரிச்சலாக மாறி நம்மையே நாம் திட்டிக்கொண்டே இருக்கிறோமாஅப்படிப்பட்டவர்களுக்காகவேஇந்த மாதிரியான நேரத்தைக் கணித்து,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வலியுறுத்துகிறோம்.
 
வசதியும் ,நேரமும் உள்ளவர்கள் தை அமாவாசை  
md;W அன்னதானம் செய்வது நன்று.காலையில் அன்னதானம் முடித்த கையோடு கிரிவலம் செல்லலாம்;
 
அல்லது
 
இரவு அன்னதானத்தை நிறைவு செய்த கையோடு தை அமாவாசை கிரிவலம் செல்வது இன்னும் சிறப்பான பலன்களைத் தரும்.ஏனெனில்,அன்னதானத்தை அண்ணாமலையில் அதுவும் தைஅமாவாசையன்று செய்தவன்,தனது முந்தைய30 தலைமுறையினரின் கர்மவினைகளைத்தீர்க்கிறான்.
ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அன்னதானம் செய்வோம்;இந்த பிறவியிலேயே சகல விதமான கஷ்டங்களும் நீங்கி செல்வச்செழிப்போடும்நிறைவான வாழ்க்கை வாழ்வோம்.