Saturday, April 28, 2012

திருவிளையாடல்- கடல் சுவற வேல் விடுத்த படலம்!


உக்கிரபாண்டியன் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்தன. தந்தையைப்  போலவே, உக்கிரபாண்டியனும் நல்லாட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி காந்திமதியும் கணவனின் மனம்கோணாமல் நடந்து, புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தந்தாள். உக்கிரபாண்டியன் 96 யாகங்களைச் செய்து முடித்து, மதுரை நகர் செழிப்புடன் இருக்க வழிவகை செய்தான். இன்னும் நான்கு யாகங்களை பூர்த்தி செய்துவிட்டால், அஸ்வமேத யாகம் நடத்தி இந்திர லோகத்தையும் தன் வசம் ஈர்க்கலாம் என்பது அவனது திட்டம். அதாவது, நாடு பிடிப்பது என்பது அவனது ஆசையல்ல. இந்திரலோகம் தன் கைக்குள் வந்தால், பாண்டியநாட்டில் மாதம் மும்மாரி பொழிய வைத்து, மக்களை செழிப்புடன் வாழ வைக்கலாம் என்பது அவனது எண்ணம். மழைக்கடவுளான இந்திரனின் இடத்தைப் பிடித்தால் தான் இது சாத்தியம். இதை இந்திரன் தெரிந்து கொண்டான். உக்கிரபாண்டியனின் திறமையை அவன் அறிவான். மேலும், முருகப்பெருமானின் அவதாரமான அவனால் எதையும் சாதிகமுடியும் என்று தெரிந்து கொண்டு, தன் பதவியைக் காப்பதற்குரிய முயற்சியை எடுத்தான். வருணனை அழைத்து, வருணா! நீ மதுரைக்குச் செல். அங்கே சோமசுந்தரர் வரவழத்த எழுகடல்கள் உள்ளன. அவற்றைப் பொங்கச்செய்து மதுரையை அழித்து விடு. இல்லாவிட்டால், இந்திரலோகம் உக்கிரபாண்டியனின் வசமாகி விடும்.
நாம் அவனது அடிமைகளாகி விடுவோம். உன் பதவியைக் காப்பாற்றிக் கொள், என்று உத்தரவிட்டான். இந்திரனின் உத்தரவை தட்ட முடியாத வருணனும், வேறு வழியின்றி மதுரைக்குச் சென்றான். ஒருநாள் இரவு வேளையில் உக்கிரபாண்டியனும், காந்திமதியும் தங்கள் மஞ்சத்தில் சயனித்திருந்தனர். நள்ளிரவு வேளை, பேய்கள் கூட உறங்கிப் போனதோ என்று சொல்லுமளவுக்கு பெரும் நிசப்தம். அப்போது எழுகடலில் இருந்து பேரோசை எழும்பியது. மன்னனின் கனவில் தோன்றிய சோமசுந்தரர், மகனே! இந்திரன் எழுகடலை பொங்கச் செய்து மதுரையை அழிக்க திட்டமிட்டுள்ளான். நான் உன்னிடம் கொடுத்த வேலை கடல் மீது எறிந்து அதை வற்றச்செய், என ஆணையிட்டார். திடுக்கிட்டு எழுந்த உக்கிரபாண்டியன், உடனடியாக அமைச்சர் சுமதி மற்றும் பெரும்படையுடன் எழுகடல் பகுதிக்கு வேலுடன் சென்றான். எழுகடலும் மதுரையை நோக்கி உக்கிரத்துடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்துப் போனான். சோமசுந்தரரை மனதில் நினைத்து துதித்து, வேலை கடலை நோக்கி வேகமாக எய்தான். அந்த வேலின் நுனிபட்டதோ இல்லையோ, எழுகடல் தண்ணீரும் சொட்டு கூட இல்லாமல் அப்படியே வற்றிப்போனது. மன்னனும், மற்றவர்களும் ஆர்ப்பரித்தனர்.
சோமசுந்தரரையும், மீனாட்சியையும் போற்றிப் புகழ்ந்தனர். மறுநாள் காலையில் தான் மக்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. எழுகடலும் காணாமல் போய் பெரும் நிலப்பரப்பு தங்கள் முன் இருந்ததை அவர்கள் கண்டனர். கடல் பொங்கியதும், உக்கிரபாண்டியன் அதை அடக்கியதும் கேள்விப்பட்டு மன்னனை வாயார வாழ்த்தினர். ஊரெங்கும் விழா எடுத்தனர். எழுகடல் நிலத்தையும் மன்னன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் செய்து வைத்தான். வெற்றி வாகை சூடி, இனிய ஆட்சியை சிறிது காலம் தொடர்ந்த மன்னனின் வாழ்வில் விதி விளையாடியது. தெய்வங்களே மனிதராக பிறப்பெடுத்தாலும், அவர்கள் கிரகங்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப் பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது ஜோதிட நியதி. இந்த நியதிக்கு உக்கிரபாண்டியனும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. நவக்கிரகங் களின் சாரமும் உக்கிரபாண்டியனுக்கு சாதகமாக இல்லாததால், சோதனைகள் அவனை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தன. திருமால், ராமனாகப் பிறந்து, காட்டுக்கு போனது போல, ஆட்சியையே ஆட்டம் காண வைக்கும் சோதனை அது!

ஆன்மீக சிந்தனைகள்

ஹரிக்கு துளசி, ஹரனுக்க வில்வம் ஏன்?


நட்சத்திரங்களில் திருவோணம் விஷ்ணுவுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரியது வானில் ஆராய்ச்சியாளர்கள் திருவாதிரை எரி நட்சத்திரம் என்றும் திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரம் என்றும் நிரூபித்து இருக்கின்றனர். ஜோதிப் பிழம்பான சிவனுக்குக் குளிர்ச்சிப் பொருந்திய, வில்வமும், அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகா விஷ்ணுவுக்கு வெப்பத்தøத் தரும் துளசியும் பூஜைப் பொருட்களாக இருப்பது சாலப் பொருத்தமே


வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா?
முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.


10 அறிவுரை
1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5. சோம்பலை நுழைய விடாதே
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
8. எவரையும் ஏளனமாகப் பேசாதே
9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.9 கட்டுப்பாடுகள்
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடிMonday, April 23, 2012

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5


காஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடுமுழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது.  டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை 5 மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள்  வந்த நேரத்தில் பெரியவர்  வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறுமணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்கமுடியும் என்ற நிலையில், என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகிவிட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை.
இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில், ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால், திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட சுவாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் சுவாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். சுவாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திரவாழ்வு வாழவேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார்.இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில்,துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர்நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மகாபெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன்.இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்தபிறகு நான் ஒரு சிறைஅதிகாரி என்ற எண்ணமே மறந்துபோனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என்வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.

தினம் ஒரு திருமந்திரம் (23-04)


குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புற காட்சி அமரரும் ஆமே.

பொருள் : குறித்து நிறுத்தலாகிய பிரத்தியாகரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்து அறியப்படும். வெறுக்கத் தக்க அறியாமையாகிய இருளை நீங்கி வேறுபாட்டினைச் செய்யும் சிவனை நாடுங்கள். சிவத்தை விரும்புகின்ற சிறப்புற்ற சிந்தையில் உறுதியாக உணர்ந்தால் சிவஞானம் பொருந்திய தேவருமாவர்.


பிரத்தியாகாரம் Kw;wpw;W

Friday, April 20, 2012

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 4
உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர்
@ திருப்பதி

திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @
நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார்
@ கரூர்ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்

அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)
ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி
சந்நிதானம்)

சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.

பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.

பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீ
ஆனந்த நடராஜ சுவாமிகள்குட்லாம்பட்டி(மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த
நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி
@ திருப்பரங்குன்றம்.

ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,
திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர்
சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

தினம் ஒரு திருமந்திரம் (20-04)


புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.

Thursday, April 19, 2012

திருவிளையாடல்-- உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!


உக்ரவர்மனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி, பல தேசங்களுக்கும் பரவவே, ராஜாக்கள் தங்கள் பெண்களை அவனுக்கு மணம் முடித்து வைக்கக் கருதி, தங்கள் பெண்களின் ஓவியங்களையும், ஜாதகத்தையும் அனுப்பி வைத்தனர். மலைபோல் குவிந்து கிடந்த ஓவியங் களை அமைச்சர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க, சுந்தரேஸ்வரப் பெருமான், மணவூர் என்னும் பகுதியை ஆண்ட சோமசேகரனின் கனவில், பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சோமசேகரா! உன் மகள் காந்திமதியை மதுரை அரசாளும் சுந்தர பாண்டியனின் மகன் உக்ரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடு. அவள் நல்வாழ்வு வாழ்வாள், என அருளினார். ஏற்கனவே, தன் மகளின் மணவாழ்வு பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த மன்னனுக்கு, கனவில் இறைவனே கொடுத்த இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் இந்தத் தகவலை மதுரையின் அமைச்சர் சுமதிக்கு தெரிவித்தார். சுமதியும் அவளது ஜாதகத்தை பரிசீலிக்க அத்தனை பொருத்தமும் பொருந்தியிருந்தது. அவளது ஓவியமே, அவள் பேரழகு பெட்டகம் என்பதை அறிவித்து விட்டது. இந்தப் பெண் உக்ரவர்மனுக்கு மனைவியாகத் தகுதியானவள் என்ற தகவலை சுந்தரபாண்டியனுக்கு அறிவித்தார் சுமதி. பெண் பார்க்க புறப்படுங்கள். சகல பணிகளும் வேகமாக நடக்கட்டும், என சுந்தரபாண்டியன் உத்தரவிட்டார். மதுரை மன்னரின் அமைச்சரும் உறவினர்களும் பெண் பார்க்க வந்து கொண்டிருக்கும் தகவலை காந்திமதியிடம் தெரிவித்தான் சோமசேகரன்.
அவளது குழி விழுந்த கன்னங்கள் சிவந்தன. ஈசனின் அவதாரமான சுந்தரபாண்டியனின் மகன் தன் மணாளனாக அமைந்தார் என்றால், அதை விட வேறென்ன பாக்கியம் வேண்டுமென ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இதனிடையே சோமசேகரனின் அமைச்சர்கள் சிலர் அரசரிடம், அரசே! பெண் பார்க்கும் படலத்தை பெண் வீட்டில் வைத்துக் கொள்வது தான் மரபு. இருப்பினும், தங்கள் கனவில் பெருமானே ரிஷபாரூடராக வந்து, இந்த திருமணத்தை நடத்தி வைக்கும்படி சொல்லியுள்ளதால், நாமே பெண்ணுடன் மதுரை செல்வோம். அமைச்சர் சுமதி எதிரில் வருவார். அவரையும் அழைத்துக் கொண்டு மதுரை சென்று, உலகாளும் சோமசுந்தரரையும், தடாதகை பிராட்டியாரையும் சந்தித்து பேசி முடிப்போம். அதுதான் மரியாதையாக இருக்கும்,என்றனர். அரசனுக்கும் இந்த யோசனை நல்லதெனப்பட்டது. உடனடியாக பயண ஏற்பாடுகள் துவங்கின. காந்திமதியையும் அழைத்துக் கொண்டு சோமசேகரன் பரிவாரங்களுடன் மதுரை கிளம்பினான். தேர்கள் வேகமாகச் சென்றன. அவர்கள் மணவூர் எல்லையைத் தாண்டி மதுரை எல்லைக்குள் நுழையவும் சுமதியும் அங்கு வந்து சேர்ந்தார். நம் வேலையைக் குறைத்தது மட்டுமின்றி, மணமகளே நேரில் மதுரைக்கு வந்தால் சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியும் மகிழ்ச்சியடைவது மட்டுமின்றி, உக்கிரபாண்டியனும் பெண்ணை நேரில் பார்த்துவிடுவான். மாப்பிள்ளையும், பெண்ணும் நேரில் பார்த்துக் கொண்டால் நாளைக்கு நம்மைக் குறை சொல்ல முடியாது, என நினைத்து சிரித்தபடியே சோம சேகரனை அடையாளம் தெரிந்து கொண்டு எதிர்கொண்டழைத்து வரவேற்றார்.
எதிரே நிற்பவர் அமைச்சராயினும், அவர் மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் மன்னன் சோமசேகரன் தேரில் இருந்து இறங்கி பணிவுடன் வணக்கம் தெரிவித்தான். அமைச்சர் சுமதி மன்னன் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தார். அவர் மட்டுமென்ன! வந்தவர்கள் எல்லாருமே ராஜகுமாரியாயினும் அடக்கத்தின் வடிவாய் நின்ற காந்திமதியைப் பார்த்து மகிழ்ந்தார்கள். உலகத்துக்கே ராஜாவான சோமசுந்தர பாண்டியனின் வீட்டுக்கு மருமகளாக இருந்தாலும், அவள் அமைச்சர் சுமதியை வணங்கினாள். பின்னர் அனைவருமாக மதுரை புறப்பட்டனர். இந்தத் தகவலை அமைச்சர் சுமதி முன்கூட்டியே மன்னருக்கு அறிவிக்க ஆட்களை அனுப்பி விட்டார். அவர்கள் அங்கு சென்று தகவல் சொல்லவே, தங்கள் வீட்டுக்கு குத்து விளக்கேற்ற வரும் குலக்கொடியை வரவேற்க சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியாரும் தயாரானார்கள். மாளிகையில் பாவை விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒளி வெள்ளத்தில் மிதந்தது அரண்மனை. மதுரை மக்களுக்கு தகவல் தெரிவிக்க முரசறையப்பட்டதால், அவர்கள் உடனடியாக நகரெங்கும் வரவேற்பு வளைவுகளை வைக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லாம் தயாராகி விட்டது. மணவூர் அரசன் தன் மகளுடன் மதுரை வந்து அரண்மனைக்குச் சென்றான். அவர்களை சோமசுந்தர பாண்டியன் அன்புடன் வரவேற்றார். தடாதகை பிராட்டியார் தன் மகளின் அழகு தன்னழைகையும் விஞ்சியது என்பதைப் புரிந்துகொண்டு பெருமைப்பட்டாள். உக்கிரபாண்டியன் தன் வருங்கால மனைவியைப் பார்க்கும் சையை அடக்கிக் கொண்டு தன் அறையில் இருந்தான். மாப்பிள்ளையின் அவசரத்தை அவனைச் சுற்றியிருப்பவர்கள் புரிந்து கொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர். காந்திமதியின் நிலையும் இதுதான்.
மாமா, அத்தையைப் பார்த்தாயிற்று....அவர் எங்கிருக்கிறாரோ? அந்தக் கட்டழகன் எப்போது வருவார்? என்று ஆவலுடன் யாருமறியாமல் கண்களைச் சுழல விட்டுக்கொண்டிருந்தாள். தடாதகைபிராட்டியாரும், சோமசுந்தரப்பாண்டியனும் இதை கவனிக்காமல் இல்லை. நிச்சயதார்த்தத்தை உடனடியாக முடித்துக் கொள்ள முடிவாயிற்று. காந்திமதியின் அவசரத்தைப் புரிந்து கொண்ட தடாதகை, உக்கிரவர்மனை வரச்சொல்லுங்கள், என்றாள். காந்திமதி நாணித் தலை குனிவது போல் பாசாங்கு காட்டினாலும், கண்கள் மட்டும் உயர்ந்து அவன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் இருந்தன. ஆஜானுபாகுவான  தோற்றத்துடன் உக்கிரவர்மன் புன்னகை ததும்ப, கைகள் கூப்பி வந்து கொண்டிருந்தான். பெற்றோரைப் பணிந்த பின், மாமனாருக்கும் அவருடன் வந்திருந்த முக்கியஸ்தர்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்தான். மதுரை மன்னரும், மணவூர் மன்னரும், உக்கிரவர்மனும் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்க, தடாதகைபிராட்டியார், காந்திமதி ஆகியோர் தரையில் விரித்திருந்த ரத்தின கம்பளங்களில் அமர்ந்தனர். ஆண்களுக்கு அக்காலப் பெண்கள் தக்க மரியாதை அளித்ததை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. நிச்சயதார்த்தம் முடிந்து மணநாள் குறித்த பிறகு, பெண் வீட்டார் விடை பெற்றனர். உக்கிரவர்மனின் கண்களும், காந்திமதியின் கண்களும், ராமனும், சீதையும் திருமணத்துக்கு முன்னதாக நோக்கிக் கொண்டது போல நோக்கிக் கொண்டன. இந்த நிகழ்ச்சியின் போது மதுரை வந்திருந்த தேவகுருவாகிய பிரகஸ்பதி காந்திமதியை மிகவும் புகழ்ந்தார். அவள் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் என்றும், அவளுக்கு வாய்க்கும் கணவன் நீண்டகாலம் புகழுடன் வாழ்வான் என்றும் சொன்னார்.
இதனால் அனைவரது மகிழ்ச்சியும் இரட்டிப்பாயிற்று. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, திருமணநாள் வரையுள்ள நாட்கள் இருக்கிறதே... அது கழிவதற்கு மிகுந்த சிரமமாயிருப்பது போன்ற தோற்றம் எல்லா மணமக்களுக்குமே இருக்கும். உக்கிரவர்மன், காந்திமதியும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் கழிய, மணநாளுக்காக அவர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்தத் திருநாளும் வந்தது. பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். மணமக்கள் சர்வ அலங்காரத்துடனும் மணப்பந்தலுக்கு வந்தனர். உக்கிரவர்மன் தன் மனையாட்டிக்கு மங்கலநாண் பூட்ட, தடாதகை பிராட்டிக்கு கண்கள் பனித்தது. பெண்ணைப் பெற்ற சோமசேகரனுக்கும் இதே நிலை. தாலிகட்டும் வேளையில் பெற்றவர்களின் உணர்ச்சிவெள்ளம் அவர்களைப் பெற்ற நாளை விட பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகமென்ன! உக்கிரவர்மன்- காந்திமதி திருமணம் இனிதாக நிறைவேறி, வந்தவர்கள் அவரவர் இருப்பிடம் திரும்பினர். சிவபெருமானாகிய சோமசுந்தர பாண்டியனும், பராசக்தியாகிய தடாதகை பிராட்டியும் தாங்கள் பூமிக்கு வந்த பணி முடிந்ததால் தங்கள் உலகம் திரும்ப முடிவெடுத்தனர். இதை தங்கள் புத்திரனிடம் தெரிவித்து, உக்கிரவர்மா! இனி நீயே மதுரையின் அரசன். உனக்கு பட்டம் சூட்டிவிட்டு நாங்கள் சிவலோகம் திரும்பப் போகிறோம், என்றனர். பெற்றவர்களைப் பிரிவது எவ்வளவு கடினமான விஷயம்! காந்திமதியும் வுருத்தப்பட்டாள். அமைச்சர் சுமதி உள்ளிட்டவர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியறிந்து வேதனைப்பட்டனர். அவர்களைத் தேற்றிய தடாதகைபிராட்டியார், என் அன்பு மக்களே! மீன்கள் தங்கள் கண்களை இமைக்காமல் தங்கள் குஞ்சுகளை எப்படி பாதுகாக்கின்றதோ, அதுபோல் நான் என்றும் உங்களைக் காப்பேன்.
சோமசுந்தரரும் சொக்கநாதராக இங்கே எழுந்தருளி உங்களுக்குத் தெரியாமலே ஆட்சி நடத்துவார். நாங்கள் இங்குள்ள கோயிலிலேயே ஐக்கியமாவோம், என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். மக்களும் மற்றவர்களும்ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டனர். ஒரு இனியநாளில், உக்கிரவர்மனுக்கு பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது. அப்போது, சோமசுந்தரர், தன் மகனிடம், உக்கிரவர்மா! இதோ நான் தரும் வேல், வளை, செண்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள். மதுரை நகரை கடல் ஆட்கொள்ளும் சமயம் வரும். அப்போது, மக்களைக் காப்பாற்ற இந்த வேலை கடல் மீது எறிந்தால் அது உள்வாங்கி விடும். இந்திரன் உன் மீது கொண்ட பொறாமையால் உனக்கு இடைஞ்சல் செய்வான். அப்போது, இந்த வளையை அவனது மகுடத்தின் மீது வீசி அவனை அடக்கு. இதோ! இந்த செண்டால் (மலர்க்கொத்து) மேருமலையை அடித்து நொறுக்கு. ஒரு சமயத்தில் அது அகங்காரம் கொண்டு மக்களுக்கு இடைஞ்சல் செய்யும். அப்போது, இது பயன்படும், என்று சொன்னார். அவற்றை பயபக்தியுடன் உக்கிரவர்மன் பெற்றுக் கொண்டான். பட்டாபிஷேகம் முடிந்ததும் உக்கிரவர்மனை உக்கிரபாண்டியன் என்று மக்கள் அழைக்கலாயினர். பின்னர், சோமசுந்தரபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் கோயிலுக்குள் சென்று மறைந்தனர். அவர்கள் சொக்கநாதர் என்றும், மீனாட்சியம்மன் என்றும் போற்றப்பட்டனர். சொக்கநாதர் லிங்கவடிவில் எழுந்தருளினார்.

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 3


தொடர்ச்சி....
சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர்
@ மாயூரம்

சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர்
@ மாயூரம்

விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர்
@ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை

விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர்
@ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,
ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்
கோவில்,நாகப்பட்டிணம்

அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி,
தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.
திருச்சி மாவட்டம்.

கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி,
ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,
நாகப்பட்டிணம் அருகில்.

மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,
சேதுக்கரை,திருப்பட்டூர்

பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி  @ ராமேஸ்வரம்,
ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்
(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,
ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்
(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுன
குருசாமிகள் @ தங்கால் பொன்னை
(வேலூர் மாவட்டம்)

தொடரும்......

தினம் ஒரு திருமந்திரம் (19-04)


ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துஉணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துஉணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொருள் : சுழுமுனையில் மலத்தின் காரியமாகிய இருளால் உண்டாகும் அவத்தையை (நிலை வேறுபாட்டை)யும் புருவ நடுவில் விளங்கும் சோதியினின்றும் பிரித்துள்ள நிலை வேறுபாட்டினையும ஒழித்து உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி மனத்தை  ஒருமைப் படுத்தல் பிரத்தியாகாரப் பெருமையாம். (ஒருக்கால் - சுழுமுனை)

Tuesday, April 17, 2012

தினம் ஒரு திருமந்திரம் (17-04)


 எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியைஉள்கவல் லார்க்குக்
கருவிடும் சோதி கலந்துநின் றானே.

பொருள் : மலங்கழிக்கும் வாயிலாகிய குதத்துக்கு மேலே இருவிரலும், கருவுண்டாகும் வாயிலாகிய கோசத்துக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலினியை நினைக்க வல்லார்க்கு கருவிடும் மகேசுரன் சோதிவடிவில் கலந்துள்ளான்.

Saturday, April 14, 2012

திருமணத்தில் *பட்டுப்புடவை தேவையா?*


திருமணத்தில் பட்டுப்புடவைதான் உடுத்த
வேண்டுமா?*
நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில்
திருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு
மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை
அளிக்கின்றனர்.அதை மணமகள் உடுத்திக்
கொள்ள உதவும் உரிமை மணமகனின்
சகோதரிக்கு தரப்படுகிறது.ஏனெனில் தன்
சகோதரன்(மணமகன்)இல்லற சுகங்களைத்
துய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான்
என்பதை அவ்வேளையில் உறுதி
செய்துகொள்ளவேண்டிய பொறுப்பை அவளுக்கு
சாஸ்திரம் வழங்குகிறது.
இந்த முஹூர்த்தப்புடவை கூறைப்புடவை
என்றும் அழைக்கப்படும்.அப்படிப்பட்ட
இந்த முகூர்த்தப்புடவையை திருமணம்
முடிந்த பின்,விவாஹ மந்திரத்தின்
பொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு
தானமாக அளித்துவிட வேண்டும் என்று
*ஆபஸ்தம்ப முனிவர் சொல்லியுள்ளார்*
ஆனால் இது தமிழகத்தில்
கடைபிடிக்கப்படுவதில்லை.

*பட்டுப்புடவை தேவையா?*
இன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார்
தங்கள் டாம்பீகத்தை வெளிப்படுத்த
முகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த
பட்டுப் புடவையை வாங்குவதால் அதை
பின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல்
போகிறது.சரி இந்த பட்டுப் புடவை
தேவையா?என்று நோக்கும்போது பட்டுத்
துணிகள் உயிர்வதையால் உண்டாகிறது.
மேலும் ரசாயன நூல்களாலான துணிகள்
இயற்கைக்கு ஏற்றதல்ல.மேலும்
புதிதாய இல்லறத்தில் இணையும்
தம்பதியின் முதல் நாளே இப்படிப்பட்ட பல
ஜீவன்களை இம்சித்த பட்டுப் புடவை தேவையில்லையே.இயற்கையான பருத்தி
நூலினாலான புடவையே சாஸ்திர சம்மதம்.
இப்படி சுத்தமான பருத்தி நூல் புடவையை
மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி மங்கலமாக்கி,
அதை முகூர்த்தப் புடவையாக
பயன்படுத்தும் மரபு இன்றும் பல கிராமங்களில்
காணப்படுகிறது.
*புடவையை ஏன் தானம் செய்யவேண்டும்?*
திருமண நிகழ்ச்சியின் போது பலரும் மணமகளை,
அவளது சிறப்பை கண்ணுற்றவாறு
அமர்ந்திருப்பர்.அதனால் அவள் மீது
கண்ணேறு(திருஷ்டி)படிந்திருக்கும்.பின்னர்
கணவன்,தன் மனைவி அந்த
முகூர்த்தப்புடவையை மீண்டும் உடுத்தி
இருக்கும்போது பார்த்தால்,அது
அவனுக்கு குரூரமாக(கண்களுக்கு எரிச்சல்
ஊட்டுவதாக)தெரிய வாய்ப்புண்டு.அந்த குரூர
புடவையை,திருமண நாளுக்குப் பிறகு,
கட்டப்படாமல்இருப்பதே நல்லது.ஏனெனில்
அப்புடவையில் படிந்துள்ள பிறரின் தீய எண்ண
அலையின் காரணமாக கணவன்,
மனைவிக்குள் சண்டை,சச்சரவுகள் 
வராமல் தடுக்க
அப்புடவையை கட்டாமல் இருப்பதே நல்லது.
எனவே தான் அது தானமாக
வழங்கப்படுகிறது.மேலும் குரூர புடவை
என்பதே திரிந்து கூறைப்புடவை
ஆகியிருக்கலாம் என்பது எங்கள் கருத்து.
எனவே அனைவரும் திருமணத்தில்
முகூர்த்தப் புடவையாக பருத்தி புடவையையே
பயன்படுத்தி,அதை
திருமணத்திற்குப்பின் தானமும் செய்து,
தம்பதிகளின் வாழ்வில் மேன்மையை
அடையச்செய்வோம்.

விடிய விடிய .....


விடிய விடிய ராமாயணம் கேட்ட ஒருவனிடம்,
""சீதைக்கு ராமன் யார்?'' என்று கேள்வி கேட்டார்
உபன்யாசகர். "சித்தப்பா' என்றாராம் அந்த நபர்.
வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார்
உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம்
சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும்,
மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா!
நிலைமையை இப்படி சமாளித்தார்.
""இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா!
"சித்தம்+அப்பா' என்று அவர் சொல்கிறார்.
"சித்தம்' என்றால் "மனம். "அப்பா' என்றால்
"தலைவன்'. '"சீதையின் மனதிற்கு ராமன்
தானே தலைவன்' என்று பேசி கைத்தட்டல்
வாங்கி விட்டார்.
எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக்
கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது.
அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.

அர்ஜுனனுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன்.
கீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து
கொண்டான். இந்த நேரத்தில், அர்ஜுனனின் மகன்
அபிமன்யு கொல்லப்பட்டான். அர்ஜுனனுக்கு
சோகம் தாங்கவில்லை. கண்ணீர் வழிந்தது. சிறிது
நேரத்தில், அவன் மீது, மேலிருந்து சில சொட்டு
தண்ணீர் சூடாக விழுந்தது. அர்ஜுனன் ஏறிட்டுப்
பார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் இருந்து
விழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து,
""கிருஷ்ணா! என் மகன் இறப்புக்காக நான்
அழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்?'' என்று
கேட்டான்.
""இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை
பற்றி உனக்கு கீதை சொன்னேனே! அதை
நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்,'' என்றானாம்
கிருஷ்ணன்.

ed;wp jpdkyu; Md;kPf kyu;

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்

மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள்
இழந்த உண்மையான நாகரீகம்.

1. மண்பானை சமையல்.
மண்பானை சமையல் ஆரோக்கியமானது.
நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில்
சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது
சாதாரண விஷயம். ஆனால் இன்று
60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.

 2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது
ஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல்
துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

3. இயற்க்கை மருத்துவ முறை
ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல
நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள்
அழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு
வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க
விளைவுகள் கொண்டது.

4. இயற்கை வாசனை திரவியங்கள்
இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து
உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம்
செய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

5.கட்டிட கலை
கட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை
தேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
ஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான்
உண்மை.

6. பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய்,
மஞ்சள்
பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து
குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டும் அல்ல
எந்த பக்க விளைவுகளும் இல்லாதது. மேலும் இவை 
நீரில் கலக்கும் போது எந்த தீங்கும் இல்லாதது.
மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99% தோல்
சம்பந்தமான வியாதிகள் வராது.
ஆனால் இன்று சோப்பு, ஷாம்பு மற்றும் பல ரசாயனம்
கலந்த பொருட்கள் தான் அதிகம் வாங்கப்படுகிறது.
மேலும் இவற்றை உபயோகித்து குளித்தபின் இவை
நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன. சற்றே
யோசித்து பாருங்கள், ஒரு நாளைக்கு, உலகம் முழுவதும்
எத்தனை பேர் சோப்பு, ஷாம்பூ உபயோகிக்கிறார்கள் என்று.
அவர்கள் தினமும் குளிக்கும் போது எத்தனை
கோடி லிட்டர் தண்ணீரில் இந்த சோப்பும், ஷாம்பூவும்
குளித்தபின் கலக்கும் என்று.

7. செருப்பு.
ரப்பர் செருப்பும், தோல் செருப்புமே ஆரோக்கியமானவை
இந்த ஷூ அணிவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
காலை முதல் இரவு வரை ஷூ அணிந்துவிட்டு இரவில்
அதை கழற்றும்போது உங்கள் பாதத்தை புறங்கையால்
தொட்டு பார்த்தீர்களானால் மிகவும் வெப்பமாக இருக்கும்.
இந்த வெப்பம் உடலுக்கு தீங்கானது. ரப்பர் செருப்பும்,
தோல் செருப்பும் அணியும் போது இந்த வெப்பம் இருக்காது.

8. கோவணம்
இந்த தலைப்பை பார்த்தல் பல தமிழர்களுக்கு
மிகவும் கேவலமான ஒரு விஷயம் என்று தோன்றும்.
கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின்
விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும்.
ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின்
விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும்
காலை முதல் இரவு வரை ஜட்டி அணிந்திருக்கும்
ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன்
இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால்
தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.
இந்த வெப்பம் அவனது விந்தணுக்களின் வீரியத்தை
குறைக்கும். ஆனால் கோவணத்தை 24 மணி நேரமும் அணிந்திருந்தாலும் இது போன்ற வெப்பம் இருக்காது.
கோவணம் அணிந்த ஒரு கிராமத்து கிழவரின்
விந்தணுக்களின் வீரியத்தை விட ஜட்டி அணிந்த
ஒரு நகரத்து இளைஞனின் விந்தணுக்களின் வீரியம்
குறைவாக இருக்கும்

9.கடுக்கண்
இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால்,
கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு
செயல்பட வைக்கும்

10. வீரம்
வீரத்தின் விளைநிலமாக இருந்தது தமிழர்கள் தான்.
ஆனால் இன்று வீரம் என்பது, குடி தண்ணீர் குழாயில்
சண்டை போடுவது, தண்ணீர் கேட்டு பக்கத்து
மாநிலத்திடம் சண்டை போடுவது, என்று பலர்
நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும்
கேவலமான விஷயம். சில நூறு ஆண்டுகளுக்கு
முன்பு வரை இருந்த அந்த வீரம் மீண்டும் தமிழர்களுக்கு
வருமா என்பது ???????????