Saturday, March 31, 2012

கசப்பு அமுதம் பாகற்காய்

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். 
இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். 

பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும். 

பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது. 

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து. 

கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும். 

பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும். 

அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 2


காஞ்சிப்பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், கலைமேதைகளை வரவழைத்து பாராட்டுவிழா நடத்தினார். அங்கு வந்த அஷ்டாவதானிகள், சதாவதானிகள் ஆகிய பல்கலை நிபுணர்கள் சுவாமிகளிடம் ஆசி பெற எண்ணினர். சதாவதானி என்பவர் நூறு விஷயங்களுக்குரிய கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றுக்கு ஒன்றுவிடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுபவர். அஷ்டாவதானி என்பவர் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டு பதில் கூறுபவர். இவர்கள் பலமொழிகளிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர். சுவாமிகள் தலைமையில் இத்தகைய சிறப்புப்போட்டி ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அப்போட்டியில் கலந்து கொள்ள மூத்த சதாவதானி ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய செயல்திறமையினை சுவாமிகளிடம் எடுத்துச் சொன்னதோடு யாரும் தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று கர்வத்துடன் கூறிக்கொண்டார். போட்டி துவங்கும் முன், சுவாமிகள் ஒருவரை அழைத்து, சதாவதானியிடம் கேட்கும் போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வைக்கும்படி கூறினார். பதில்களை சதாவதானி கூறும்போதே சுவாமிகளின் பதில்களும் வாசிக்கப்பட்டு வந்தது. இருவர் சொன்ன விடைகளும் ஒன்றாக இருப்பதை கண்டு சதாவதானி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் பாதங்களில் விழுந்து,தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன்பின், சுவாமிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார்.
அக்காலத்தில் சர்க்கஸ் கம்பெனி நடத்திய பேராசியர் ராமமூர்த்தி யோகக்கலையில் நிபுணராக இருந்து வந்தார். இவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார். இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு வெளியே வந்த பேராசிரியரின் கண்களில் நீர் பெருகியது. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக சக்தியை சுவாமிகளிடத்தில் உணர்ந்ததாகவும்,  இதைவிட வேறு பாக்கியம் வாழ்வில் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணம் அரசுக்கல்லூரியில் பணியாற்றிய இயற்பியல் பேராசிரியர் ராஜகோபால் ஐயரும், இன்ஜினியர் பி.வி. மாணிக்கநாயக்கரும் சுவாமிகளிடம் பக்தி கொண்டவர்கள். இருவரும் சுவாமி களிடம் வானசாஸ்திரத்தைப் பற்றிப் பேசினர். அவர்களிடம், ஒரு டெலஸ்கோப் மூலமாக, இக்கலையில் நம் நாட்டு வழிமுறைக்கும், வெளிநாட்டவர் வழிமுறைக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி, சுவாமிகள் விளக்கம் அளித்தார். அவரது நுணுக்கமான வானவியல் அறிவு கண்டு இருநிபுணர் களும் பெருமிதமும் ஆச்சரியமும் கொண்டனர்.

சிரிப்பு வெடிகள்வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!


ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு

கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்அப்பா : என்னம்மா சமையல் இது. 
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா. 
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்.தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே.
எப்படி?
காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !!!

வயசுக்கு வ‌ந்த நடிகர் யாருன்னு தெரியுமா?
நீங்களே சொல்லுங்கப்பா
ஹி ஹி ஹி !!! மேஜர் சுந்தர்ராஜன்


போலீஸ் அடிச்ச அடியிலே 
அவருக்கு பேச்சே வரலை ஏன்?
அடிச்ச அடியில் அவருக்கு ஊமைக்காயம் ஏற்பட்டுச்சாம்


கத்தி எடுத்து குத்தினதும் ரத்தம் ஏன் வேகமா வெளியவருதுன்னு தெரியுமா?
யாரு குத்தியதுன்னு பார்க்க வேகமா வெளியேவருது


ஹீரோயினுக்கு எதிர்ச்சொல் என்ன
ஹீரோ அவுட்


எஜூகேஷன் லோன் போட்டு படிக்கிற உங்க பையன் 
இப்ப எப்படி படிக்கிறான்
கடனேன்னு படிக்கிறான்

சூஃபியும் கொடிய அரக்கனும்


சூஃபி ஞானி ஒருவர்ஆளரவமற்ற மலைப்பாங்கான பகுதியில் தனியாகப்பயணம் போய்க் கொண்டிருந்தார்.
அவர் முன் திடீரென ஒரு அரக்கன் தோன்றி "உன்னைக் கபளீகரம் பண்ணப்போகிறேன்என்று அவரிடம் சொன்னான்.
"அப்படியா சரி. உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். ஆனால் நான் உன்னை எளிதாக வென்றுவிட முடியும். நீ நினைப்பது போலில்லாமல், நான் உன்னைவிட அதிக பலசாலி" என்று பதில் சொன்னார் அந்த சூஃபி.
"நீ சொல்வது முட்டாள்தனமான பேச்சு. நீ ஒரு சூஃபி. உனக்கு ஆன்மீக விஷயங்களில்தான் அக்கறை இருக்கும். நீ என்னை வெல்ல முடியாது. என்னிடம் அசுர மிருகபலம் இருக்கிறது. உன்னைவிட முப்பது மடங்கு பெரியவன்" என்று பதில் சொன்னான் அந்தப் பிணந்தின்னி அரக்கன்.
"உனக்கு பலப்பரீட்சை செய்து பார்க்கும் ஆசையிருந்தால் இந்தக் கல்லை எடுத்துச் சாறாகப் பிழி பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு பாறாங்கல்லை எடுத்து அந்த அரக்கனிடம் கொடுத்தார் சூஃபி.
எவ்வளவு முயன்றும்சூஃபி சொன்னபடிஅந்த அரக்கனால் செய்யமுடியவில்லை.
"அது சாத்தியமில்லை. இந்தக் கல்லில் எந்த நீரும் கிடையாது. இருந்தால் அதை எனக்கு நீ காட்டும்" என்று சொன்னான் அரக்கன். சூஃபி அந்த அரையிருட்டு நேரத்தில் அந்தக் கல்லைத் திரும்ப வாங்கினார். தன் பையிலிருந்து ஒரு முட்டையை எடுத்து, கல்லையும் முட்டையையும் சேர்த்துப் பிழிந்தார் சூஃபி.
நீர் வழிவதைக்கண்ட அரக்கன்ஆச்சரியப்பட்டுப் போனான்மக்கள்புரியாத விஷயத்தினைக் கண்டுஅசந்து போய் அதன்மேல்அளவுக்கதிகமாக மதிப்பு வைக்கத்தொடங்குவர்.
"நான் இதைப் பற்றி யோசிக்கவேண்டும். என்னுடைய விருந்தாளியாக இன்றிரவு என் குகையில் தங்குங்கள்" என்று சூஃபிக்கு உபச்சார வார்த்தைகள் சொன்னான் அரக்கன்.
சூஃபியும் அரக்கனுடன் போனார்அரக்கனின் குகை அவனால் கொல்லப்பட்டஆயிரக்கணக்கான வழிப் பயணிகளின் வைர வைடூரியங்களால்அலங்கரிக்கப்பட்டிருந்ததுமாயக் கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புதக்குகை போலவே அது இருந்தது.
"என்னுடைய பக்கத்தில் படுத்துத் தூங்கு. காலையில் மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்வோம்" என்று சூஃபியிடம் சொல்லி விட்டு படுத்தவுடன் தூங்கிவிட்டான் அரக்கன்.
தான் ஏமாற்றப் படுவோம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்த சூஃபிதந்திரமாகதான் படுக்கையில் இருப்பது போன்ற ஏற்பாடுகளைப் பண்ணி விட்டுத்தூரப்போய் ஒளிந்து கொண்டார்.
அவர் போனதுதான் தாமதம்அரக்கன் படுக்கையிலிருந்து எழுந்தான்பெரியமரக் கட்டையை எடுத்து சூஃபி படுத்திருந்த இடத்தைப் பார்த்து ஏழு விளாசுவிளாசினான்.
அதன் பின் படுத்து மறுபடியும் உறங்க ஆரம்பித்தான்சிறிது நேரம் கழித்து சூஃபிதனது படுக்கைக்குத் திரும்பினார்அரக்கனைக் கூப்பிட்டார்,
"ஓ அரக்கனே! உனது குகை சௌகரியமாயிருக்கிறது. ஆனால் ஒரு சிறு கொசு மட்டும் என்னை ஏழு தடவை கடித்தது. அதை மட்டும் போக்குவதற்கு நீ எதாவது செய்தாக வேண்டும்'' என்றார்.
பெரிய மரக்கட்டையால் அசுர பலத்தில் ஏழு தடவை அடி வாங்கிய பின்பும்..சூஃபி பேசியது அரக்கனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது .
காலை புலர்ந்தவுடன்அரக்கன் எருமைத் தோலாலான பையை எடுத்துசூஃபியை நோக்கி எறிந்து "கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாகாலைச் சமையல்செய்யலாம்என்றான்.
சூஃபி அந்தப் பையை எடுக்காமல் - உண்மையில் அந்தப் பையை அவரால் தூக்கிநடக்க முடியாது - பக்கத்திலிருந்த நீர்ச் சுனைக்குச் சென்றார்நீர்ச்சுனையிலிருந்து குகைக்கு ஒரு சிறிய கால்வாயைத் தோண்டினார்.
அரக்கன் தாகத்தால் துடித்தான்.
"ஏன் தண்ணீரை சுமந்து வரவில்லை?" என்று அரக்கன் கேட்டான்.
"பொறுமையோடிரு, நண்பனே! வசந்த கால நீருற்றின் தண்ணீர், உன் குகையின் முகத்துவாரத்துக்கே நிரந்தரமாக வர, கால்வாய் வெட்டியுள்ளேன். அதனால் உனக்கு தண்ணீரைச் சுமந்து வர வேண்டிய அவசியமிருக்காது" என்று பதில் சொன்னார் சூஃபி.
தாக விடாயினால் அரக்கனுக்குப் பொறுக்க முடியவில்லைஎருமைப் பையைஎடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போய் நீரைத் தானே நிரப்பிக் கொண்டான்அரக்கன்.
காலைத் தேனீர் தயாரிக்கப்பட்டவுடன்அதைப் பல பீப்பாய்கள் குடித்துமுடித்தான் அரக்கன்தேனீர் குடித்தவுடன் அரக்கனுக்கு புத்தி லேசானதெளிவுடன் வேலை செய்ய ஆரம்பித்தது.
"நீங்கள் பலவானாக இருந்தால் - ஏற்கனவே அதை எனக்கு நிரூபித்துவிட்டீர்கள் - இருந்தும் ஏன் அந்தக் கால்வாயை அங்குலம் அங்குலமாக வெட்டுவதற்கு பதில் வேகமாக வெட்டக்கூடாது?" என்று சூஃபியிடம் கேட்டது அரக்கன்.
"உண்மையில் செய்ய வேண்டிய அர்த்தமிக்க வேலைகளை அதற்குரிய உழைப்பைப் போடாமல் செய்து முடிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் அதனளவுக்கு ஏற்றவாறு முயற்சிகள் தேவை. நான் கால்வாயைத் தோண்ட எவ்வளவு அத்தியாவசியமான முயற்சி தேவைப்படுமோ அதை மட்டும் செலவிடுகிறேன். ஆனால், பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஜந்துவான நீ , அந்த எருமைத் தோல் பையைத்தான் எப்போதும் பயன்படுத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும்" என்றார் சூஃபி.

தினம் ஒரு திருமந்திரம் - 31/03/2012


              மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
              பாலாம் இரேசகத் தால்உட் பதிவித்து
              மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே
             ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

பொருள் : முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறு பகுதியான இரசேகத்தால் (விடுதலால்) அவயவங்களை ஒன்றோடு ஒன்று பதியும்படி செய்து, விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.

Friday, March 30, 2012

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி-1


காஞ்சிப் பெரியவர் 1894, மே20ல் விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் லட்சுமி அம்மையார். இவர்களுக்கு சுவாமிகளைத் தவிர நான்கு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இதில் சுவாமிகள் அவர்களின் இரண்டாவதாகப் பிறந்தவர். சுவாமிநாதன் என்ற பெயரே சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டியதாகும். இவர்களது குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதன். அவரது பெயரே  சுவாமிகளின் பெயராக அமைந்தது.  சுவாமிநாதன் எட்டுவயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும் ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில்  எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல்பரிசும் பெற்றார்.இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும்  ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.  ஒருசமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார்.
சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான்மன்னர் என்ற  நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார் தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன்பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடகஉடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார்.  இன்று ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல்பரிசை வழங்கினார்.  அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார். 

தினம் ஒரு திருமந்திரம்- 30/03/2012


                        எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
                        அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
                        அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
                        சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

பொருள் : நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை . அங்கே கும்பகம் செய்து அப்பிராணன், சொல்லும் அளவு மேற் சொல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.

Thursday, March 29, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 29/03/2012


                   வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
                   பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்
                  தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
                  வளியினும் வேட்டு அளியனும் ஆமே.

பொருள் : சாதகர் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்கு போன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்றுவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை யுடையதாகி, எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.

சூரிய நமஸ்காரம்


            ஞாயிறைப் போற்றுவோம் நலம் காண்போம் 

நம் முன்னோர்களாகிய சித்தர்கள் , ரிஷிகள் , முனிவர்கள், 
மகான்கள், அருளாளர்கள் ,  நமக்கு அருளிச் சென்ற 
ஆன்மீகச்  செல்வத்தைப் போற்றி பாதுகாத்து முறையாகப் 
பயின்று நலம் காண்பது நமது கடமையாகிறது .
அந்த வகையிலே  யோகம் என்ற அருட்ச் செல்வத்தை 
நமக்களித்த யோகத்தின் தலைமகன்  அருட் தந்தை 
யோக அவதாரம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி  அவர்களின் 
திருவடி பற்றி அவர் இட்ட ஆணைப்படி அவர் அருளால் 
யோகம் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். 
இன்னும் அவர் அருளால் வெளிவரும்.

ஆசனங்களை முறையாகப் பயின்று நலம் பெற 

உடலாண்மையினை அறிந்து கொள்ள வேண்டும் 

இப்பரந்த பூமிக்கும், இதர பல கோள்களுக்கும் சூரியனே 
தலைக் கோளாக விளங்குகிறது. சூரியன் உலகிற்கு ஓளி 
தருவது மட்டுமில்லாமல் உணவிற்கு அடிப்படை சக்தி 
அளிப்பதாயினும் சூரியனே  உலகிற்கு தந்தையாகவும்  , 
நவக்கிரஹங்களின் தலைவனாகவும் , பஞ்ச பூத 
( பஞ்ச பொருட்களின்  ) இதர நான்கு பொருட்களின் 
சூட்சம படைப்பாளியும் ஆவான்.

சூரியன், அருண் , பாஸ்கரன், மித்திரன், ரவி, ஆதித்யன்,

அர்கன்  என பலப்பல பெயர்களைக் கொண்ட சிறப்புகளை 
பெற்றவனும் ,சிவகருவின் தணலாக  நிற்பதும் சூரியனே .

மனிதனை ஏமாற்றும் புலன்களின் அறிவினை மிஞ்சிய 

ஞான அறிவினை உணர்த்தும் ஓளி வணக்கமே உயர்ந்தது 
என மந்திரங்களின் தாயான காயத்ரி மந்திரத்தின் உட்
பொருளான  ஒளிக்கடவுளாக விளங்குபவனும் சூரியனே. 

சொல்லி மாளாத புகழுக்குரிய சூரியனை வணங்கும் 

ஆசனமான சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தையே 
ஸ்வார்த்தம் சத் சங்கம்  மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக 
கேந்திரத்தின் உடலாசனப் பயிற்சிகளில் 
முதலாசனமாக இருக்கின்றது என்று அறிவிக்கிறது.

சூரிய நமஸ்காரம் 12 படிகளைக் கொண்டது. எனினும் 

அவைகள்  எழுவகை (7 ) ஆசனங்களால் அமைக்கப் 
பட்டதாகும்.
  1. நமஸ்கார விருக்ஷாசனம் ( 1 - 12  நிலைகள் )
  2. அர்த்த பிறையாசனம் ( 2 - 11 நிலைகள் )
  3. உத்ராசனம் (அல்லது ) பாத ஹச்தாசனம்  (3 -10  நிலைகள் )
  4. யோக தண்டாசனம் ( 4 -9 நிலைகள் )
  5. அதோ முக சவாசனம் ( 5 -8 )
  6. ஹ்ருதயாசனம் ( சாஷ்டாங்க நமஸ்காரம் ) ( 6 நிலை )
  7. புஜங்காசனம் ( 7 ம் நிலை )


சூரிய நமஸ்காரம்  செய்வதற்கு ஏற்ற காலம் 

சூரியன் அடிவானத்தில் முழுவது வந்தவுடனே 

துவங்குதலே சிறந்தது. உத்தராயண காலத்தில் பாதி 
உதித்தவுடன் துவங்குதலும், தட்சிணாயன  காலத்தில் 
முழுதும் உதித்த பின்னும் சூரிய நமஸ்காரம் செய்வது 
சிறந்த்தது என பெரியவர்கள் கூறுவார்கள். 

மூடுபனி காலம், மேக மூட்ட காலம் , போன்ற காலங்களில் 

சூரிய உதயம் மறைக்கப் பட்டிருப்பினும் சூரிய உதய 
நேரத்தைக் கணக்கிட்டு செய்ய  வேண்டும். இந்த 
காலங்களில் செய்யும் சூரிய நமஸ்காரம் மெத்தப் 
பயனளிக்க கூடியது. சூரிய நமஸ்காரத்தின் போது 
கழுத்தில் எந்த வித உலோக ஆபரணங்களோ கைவிரல், 
மோதிரம், போன்றவைகளோ அணிதல் கூடாது. இறுக்கமான 
உடையினை தவிர்ப்பதோடு  மானம் காக்கும் சிறு உடை 
தவிர இதர பெரிய உடைகளை அணிவதும் கூடாது . 
மொத்தத்தில் உடல் முழுக்க சூரிய ஓளி எந்த அளவிற்கு 
அதிகமாக படர்கிறதோ அந்த அளவு பலன்  அதிகமாகும். 


யாரெல்லாம் சூரிய நமஸ்காரத்தை தவிர்க்க வேண்டும் ?

கண் நோய் அதிகமான அல்லது ஆழமான தலைப்புண், 

முதுகுத் தண்டுவட பாதிப்பு, இடுப்பெலும்பு பாதிப்பு, 
கைகால்கள் மூட்டு அழற்சி , குறைந்த மற்றும் அதிக 
இரத்தக் கோளாறு, இதய நோய் பாதிப்பு, வலிப்பு நோய் 
போன்றவைகள் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரத்தை 
நிச்சயம் தவிர்ப்பதே நல்லது. ஆனால் நுரையீரல் 
சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, C O P D ,  உள்ளவர்களும் , 
முறைச்சுரம், மஞ்சள் காமாலை, முதலியவற்றினால் 
பாதிக்கப் பட்டு குணமானவர்களும் 
மற்றும் அறுவை சிகிச்சை  நிகழ்ந்து சில காலம் 
ஆனவர்களும் ஆசிரியரின் நேர்முக அறிவுரையின்படி 
சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.

ஓம் கணாபத்யாய வித்மஹே

குண்டலினியாய  தீமஹி

தந்நோ  அவ்வை  ப்ரசோதயாத்

நன்றி

http://www.maharishipathanjali.com/                            

Wednesday, March 28, 2012

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடுதேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது 
அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. 
அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி.
கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, 
சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி 
நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். 
மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே 
தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்
நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். 
இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே 
காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் 
நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் 
ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது

மகான்கள் - ஒரு பார்வை 4 ரமணர்


குருவருளும் திருவருளும் நிறைந்த சிவத்தலம் திருச்சுழி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ளது. எழில்சூழ்ந்த இந்த கிராமத்தில், அண்ணாமலையாரின் அருந்தவப்புதல்வரான ரமண மகரிஷி 1879 டிசம்பர் 30ல் அவதரித்தார். இவ்வூரில் பூமிநாதசுவாமி கோயில் உள்ளது. கோயில் அருகில் உள்ள கார்த்திகேயன் வீதியில் ஸ்ரீசுந்தர மந்திரம் என்று அழைக்கப்படும் ரமணரின் வீடு உள்ளது. சுந்தரமய்யர், அழகம்மாள் தம்பதியரின் இரண்டாவது பிள்ளையாக ரமணர் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் வேங்கடராமன். நாகசாமி, நாகசுந்தரம்,அலமேலு உடன்பிறந்தவர்கள். இவரது பரம்பரையில், யாராவது ஒருவர் தொடர்ந்து துறவியாவது வழக்கமாக இருந்து வந்தது. சுந்தரமய்யர் பிள்ளையை நன்கு படிக்கவைக்க எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், அவர் ரமணர் சிறுபிள்ளையாக இருந்தபோதே காலமாகி விட்டார். வேங்கடராமன் ஆரம்பக்கல்வியை திருச்சுழி சேதுபதி ஆரம்பப்பள்ளியில் தொடங்கினார். பின்பு, மதுரையில் சொக்கநாதர் கோயில் தெருவில் வசித்த சித்தப்பா சுப்பையர் வீட்டிற்கு வந்தார். (அந்த வீடு இப்போது ரமணாஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது) அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் ஒருமுறை, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு வேங்கடராமன் பதில் சொல்லவில்லை. அதனால், ஆசிரியர் அப்பாடத்தை மூன்றுமுறை எழுதிவரும்படி அறிவுறுத்தினார். இதன் பிறகு, பள்ளிக்கல்வியைக் கற்பதில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மிக்கல்வி பயில ஆர்வம் கொண்டார். தன் அண்ணன் நாகசாமியிடம் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.
அண்ணனும் தம்பி பள்ளிக்குச் செல்வதாக எண்ணி, சித்தியிடம் 5 ரூபாய் வாங்கி பீஸ் கட்டும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், வேங்கடராமன் கோயில் நகரான திருவண்ணாமலை செல்ல முடிவெடுத்து, ரயில்டிக்கெட்டுக்கான 3ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை வீட்டிலேயே வைத்து விட்டார். திண்டிவனம் சென்று ரயில் மாற வேண்டும் என்று எண்ணி 2 ரூபாய் 78 காசுக்கு டிக்கெட் எடுத்தார். ஆனால், ஒருபெரியவர் திருவண்ணாமலை செல்ல விழுப்புரம் செல்ல வேண்டும் என்று சொல்ல விழுப்புரத்தில் இறங்கினார். கையில் இருந்த காசைக் கொண்டு மாம்பழப்பட்டு வரை சென்றார். அதன் பின் திருவண்ணாமலைக்கு நடக்க ஆரம்பித்தார். இரவான போது அரகண்டநல்லூரை அடைந்திருந்தார். அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கினார். சிறுவனின் வாடிய முகத்தைக் கண்ட நாதஸ்வர வித்வான் ஒருவர் பிரசாதத்தைக் கொடுத்தார். காதில் இருந்த தங்க கடுக்கனை அவ்வூரில் அடகுவைத்து 4 ரூபாய் பெற்றார். திருவண்ணாமலையை வந்தடைந்தார். உடைகள் தேவையில்லை என்று கோவணத்தைக் கட்டிக் கொண்டார். அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் இங்குமங்கும் அலைந்தார். கையில் இருந்த மீதி சில்லறையை வேண்டாம் என்று குளத்தில் எறிந்தார். அண்ணாமலையாரை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். விழித்தபோது, உடலில் காயங்கள் இருந்தன. அவரைச் சிலர் பைத்தியம் என்று கல்லால் தாக்கியிருப்பதை உணர்ந்தார். கோயிலில் இருக்கும் பாதாள லிங்க அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார். முகத்தில் அருள்நிறைந்த வேங்கடராமனை ஊர் அன்பர்கள் ரமணா அழைத்தனர். ரமணருக்கு சேவை செய்ய பழனிச்சுவாமி, எச்சம்மாள், கீரைப்பாட்டி என்று பலர் வந்தனர். இதற்கிடையில், தனது மகன் திருவண்ணாமலையில் இருப்பதைக் கேள்விப்பட்ட ரமணரின் தாய் அழகம்மா பிள்ளையைக் காண வந்தார். அங்கேயே தங்கி மகனுக்கு சேவை செய்து முக்தி பெற்றார். தம்பிக்கு சேவைசெய்ய நாகசாமியும் வந்தார். பற்றற்ற ஞானியாக வாழ்ந்த ரமணர் 1950 ஏப்ரல் 14ல் இறைவனோடு கலந்தார். திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி, கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.

தினம் ஒரு திருமந்திரம்- 28/03/2012


                      ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
                     ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
                     ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
                     மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

பொருள் : பதினாறு மாத்திரை காலஅளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம். அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம் முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்லன விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.

Tuesday, March 27, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 27/03/2012


                   பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
                   பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை
                   பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
                   பிராணன் நடைபேறு பெற்றுண்டீர் நீரே

பொருள் : நாமரூப பேதமான பிரபஞ்சத்தை எண்ணாதவற்கு மனமும் பிராணனும் அடங்கி, பிராணன் ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை. சிவன் தனி வியக்தியில் வைகி வாக்கு உதித்துப் பிராணனும் நிலை மாறி, பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் படுவீர்.

Saturday, March 17, 2012

மந்திர தியானம்


மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். ஆனால் இது சர்வ மதத்தினரும், மதங்களைச் சாராதவர்களும், நாத்திகர்களும் கூட பின்பற்றக் கூடிய வகையில் அமைந்த தியானம் என்பதே உண்மை.

மந்திரம் என்பது சக்தி வாய்ந்த சொல் அல்லது சொற்றொடர். இந்த மந்திரங்களின் சக்தியை இந்தியர்களும் திபெத்தியர்களும் பண்டைய காலத்திலேயே நன்றாக அறிந்திருந்தார்கள். ஓம் என்கிற ஓங்காரத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின என்கின்றது இந்து மதம். ஓம் மந்திரமும் காயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள். 

“ஆதியில் வசனம் இருந்தது. அந்த வசனமே தெய்வத்துடையதாக இருந்தது. அந்த வசனமே தெய்வமாக இருந்தது” என்று பைபிள் கூறுகிறது. (In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. New Testament, John1:1-2)
அரபுக்கதைகளிலும் சில மந்திரச் சொற்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறுவதை நாம் படித்திருக்கிறோம். ஆக உலகமெங்கும் மந்திரங்களை சக்தி வாய்ந்தவை என பலரும் பல காலமாக அங்கீகரித்திருப்பதை நாம் உணரலாம்.

இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது. 

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்திலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு மந்திரம் தியானத்திற்காகத் தரப்படுகிறது. தியானத்தின் போது அந்த மந்திரச்சொல்லில் முழுக்கவனத்தையும் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. 

மந்திர தியானம் மதங்களைக் கடந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு சுவையான உதாரணத்தைச் சொல்லலாம். ஜான் மெய்ன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஐரிஷ் பாதிரியார் இரண்டாம் உலகப் போரின் போது அரசுப்பணியில் மலாயாவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது கோலாலம்பூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்த ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியை சந்தித்த போது ஆன்மிக விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி தியானங்கள் பற்றி விவரித்தது ஜான் மெய்னை மிகவும் கவரவே தங்கள் மதத்திற்கேற்ப தியானம் செய்ய முடியுமா என்று அவர் ஸ்வாமியைக் கேட்டார். 

தியானம் மதங்களைக் கடந்தது என்று சொன்ன ஸ்வாமி ஜான் மெய்னுக்கு ஒரு கிறிஸ்துவ புனித வார்த்தையை உபதேசம் செய்து அந்த மந்திரத்தின் மீது தினமும் இருமுறை தியானம் செய்யச் சொன்னார். அந்த மந்திர தியான முறையையும் ஸ்வாமி அவருக்குச் சொல்லித்தந்தார். அவர் சொல்லித் தந்தபடியே தியானத்தை செய்த ஜான் மெயின் வாரா வாரம் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியின் ஆசிரமத்திகே வந்து அந்தத் தியானத்தை ஸ்வாமியுடன் சேர்ந்து செய்தார். அதனால் சிறப்பான ஆன்மிக அனுபவத்தைப் பெற்றதால் ஜான் மெயினின் ஆன்மிக வாழ்க்கையின் அங்கமாக அந்த தியானம் மாறியது. 
இங்கிலாந்து திரும்பிய பின்னர் அந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் அவரது தலைமை பாதிரியாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். இந்த தியான முறை கிறிஸ்துவ சம்பிரதாயத்திற்கு எதிர்மாறானது என்று தலைமை பாதிரியார் தடுத்தார். சிறிது காலம் அந்த தியான முறையை நிறுத்திக் கொண்ட ஜான் மெய்ன் ஏதோ இழந்தது போல் உணர்ந்தார். பின் கிறிஸ்துவ நூல்களை ஆழமாகப் படித்த போது மிகப் பழைய காலத்தில் இது போன்ற தியான முறை கிறிஸ்துவர்களிடமும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார். பலரிடமிருந்து வந்த கடும் விமரிசனங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தான் கடைப்பிடித்து வந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் தனது தியானத்திற்கு ’கிறிஸ்துவ தியானம்’ என்று பெயரிட்டு பரப்பினார். 1982ல் அவர் மறைந்தாலும் கிறிஸ்துவ தியானம் பல நாடுகளில் பிரபலமாகி பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி மந்திர தியானம் உலகில் பல வடிவங்களில், பல மதத்தினரால், பல பெயர்களில் இக்காலத்தில் பின்பற்றப்படுகிறது. 

மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மந்திர தியானத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மந்திரம் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக அந்த மந்திரம் சுருக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக அது ஓரிரு வார்த்தைகளாக மட்டும் இருப்பது நல்லது. (காயத்ரி மந்திரம் மிக உயர்ந்த மந்திரமானாலும் அது ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நீண்டு இருப்பதால் இது போன்ற மந்திர தியானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).

நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மந்திரம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மிக உயர்ந்ததாகவோ, சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் மந்திர தியானத்தில் நீங்கள் பெறும் பலன் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (அந்த மந்திரத்தின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் பங்கு பெறும் அமெரிக்க, ஐரோப்பிய நபர்களுக்கு மந்திரமாக தரப்படுபவை பெரும்பாலும் வேதங்களில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்கள் தான். அது புனித சொல், சக்தி வாய்ந்த மந்திரம் என்பது மட்டும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது 

தினம் ஒரு திருமந்திரம்- 17/03/2012


          புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
          கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
          துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
          உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

பொருள் : பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனமுடையோர்க்கு இவ்வுண்மையைச் சொன்னோம். (புரவி - பிராணவாயு.)

Friday, March 16, 2012

வெற்றிக்கு உதவும் ஆழ்மனம்ஆழ்மனதைப் பற்றி சிறிது தெரிந்துகொள்வோமே!

நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்

2. ஆழ்மனம் ( Sub Conscious Mind) 

மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும்பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.


மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும்.

மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் - எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் - எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

1. நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது..

1. நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

2. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.

3. நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் 'கனவு காணுங்கள்' என்று சொன்னார். 

4. உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்... அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.

5. உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

6. குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

7. உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்...

8. உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!