Friday, November 30, 2012

மெளனத்தில் விளைந்த முத்துகள்ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம்,
ஆனால் அதற்குக ஒரே பதில்தான்
உனது விழிப்புணர்வு.
v வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல.
மனித மனங்களை தவிர.
v வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்.
வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.
v நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.
v வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக
வாழ்வது எப்படி என்று
உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு
இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.
v வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல,
அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒருவாய்ப்புதான்,
ஒரு வாசல்தான்.
v கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.
v அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு
அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
v இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும்
 ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.
v தேடுதல் அழிவற்றதை நோக்கியதாகஇருக்கவேண்டும்
மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை
அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.
v ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும்.
அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.
v எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை
ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும்,
ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை 
ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.
v உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக
பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.
v நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது
ஒரு விஷயமே அல்ல.நீ மலர்கிறாயா என்பதுதான்
பிரச்சனை.
v இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது,
இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.
v ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.
v உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதைகவனி.

ஜென் கதைகள்அதிசயம்!-
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர்
தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை 
செய்துகொண்டிருந்தார்.அப்போது அங்கே 
ஒரு பூசாரி வந்தார்உள்ளூர்க் கோவிலில் 
வழிபாடு நடத்துகிறவர் அவர்புத்தர்மீதோ 
ஜென்மீதோ அவருக்குநம்பிக்கை இல்லை.
ஆகவேஅவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார்
ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ 
என்றார்.பான்கெய் அவரைக் கண்டிக்கவோ 
மறுக்கவோ இல்லை. ‘ஐயாஉங்களுக்கு என்ன 
பிரச்னை?’ என்றார் அமைதியாக.
எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் 
செய்திருக்கிறதுதெரியுமா?’
தெரியவில்லைசொல்லுங்கள்!’
அவர் நீர்மேல் நடப்பார்தீயை அள்ளி விழுங்குவார்
அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும்,
 நடனம் ஆடினால் பூமியேநடுங்கும்!’ என்றார் பூசாரி
இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் 
புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் 
என்றுஎப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’
நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய்.
 ‘ஆனால்எங்களால் வேறொரு பெரியஅதிசயத்தைச் 
செய்யமுடியும்.’
அதென்ன?’அமைதியாகச் சொன்னார் பான்கெய
யாராவது தப்புச் செய்தால்எங்களுக்குத் துரோகம்
 இழைத்தால்அவமானப்படுத்தினால்அவர்கள்மீது
எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் 
முழுமையாக மன்னித்துவிடுவோம்!

இரண்டு கண்கள்
ஒரு ஜென் மாஸ்டர்அவரைச் சந்திக்க இளைஞன் 
ஒருவன் வந்தான்வணக்கம் சொன்னான். ‘ஐயாஎனக்கு ஒரு சந்தேகம்’ என்றான்.
என்ன சந்தேகம்?’
எனக்குப் பெரிய வாள் வீரனாகவேண்டும் என்று 
ஆசை’ என்றான் அந்த இளைஞன். ‘அரசரின் கையால் பரிசும் பாராட்டும்வாங்க
வேண்டும்அப்புறம் நான் அவருடைய  படையில்
சேரவேண்டும்பல போர்களில் ஜெயித்துச் 
சரித்திரத்தில் இடம்பிடிக்கவேண்டும்
என்றெல்லாம் கனவு காண்கிறேன்தப்பா?’
தப்பில்லை’ என்றார் ஜென் மாஸ்டர். ‘ஆனால்
உனக்கு வாள்வீச்சு எந்த அளவு தெரியும்?’
இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்!’
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய 
இலக்கைக் கற்பனை செய்து சந்தோஷப்படுவது 
இயல்புதான்’ என்றார் 
அந்த ஜென் குரு. ‘ஆனால் ஒரு விஷயம் 
புரிந்துகொள்உனக்கு உள்ளது இரண்டே கண்கள்
அதில் ஒன்றை இலக்கின் மீது வைத்துவிட்டால்
பாதையில்கவனம் பாதியாகிவிடும்
அதற்குப் பதில் இரண்டு கண்களையும் இங்கே 
திருப்பினால்நீ விரும்பும் இலக்கைச் சீக்கிரம் 
சென்றுஅடையலாம்புரிகிறதா?’

உடல்-II


ஆதாரம் - 6
மூலாதாரம்  - இரண்டு  இடுப்பு  எலும்புகளும் , முதுகு  எழும்பும்  ( முதுகுத்  தண்டுவடம் ) ஆசனப் பகுதியில் சேரும் இடத்தில் நடுவில் இருப்பதாக நம்பப் படுகிறது.
மூலாதாரத்தின் குணங்கள்: விவேகம், குழந்தை உள்ளம்.
சுவாதிஷ்டானம் - மூலாதாரத்திற்கு 2 அங்குலம் மேலே அமைந்திருக்கிறது.
இதன் குணம் : கற்பனை வளம், படைப் பாற்றல்.
மணி பூரகம்: சுவாதிஷ்டானத்திர்க்கு மேலே ஆறு அங்குல தூரத்தில் அமைந்திருப்பதாக நம்பப் படுகிறது.

இதன் குணம்: நிறைவு, திருப்தி, முன்னேற்றம்.
அனாகதம்: இதயம் உள்ள பகுதியில் இருப்பதாக நம்பப் படுகிறது.
இதன் குணம்: அன்பின் பிறப்பிடம், தன்னம்பிக்கை, பயமின்மை.
விசுக்தி: குரல்வளைப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் குணம்:நட்புணர்வு, கூட்டுணர்வு, பற்றற்ற நிலை.
ஆக்ஞா: புருவ நடுப் பகுதி.
இதன் குணம் : மன்னிப்பு.

இவற்றினின்று மேம்பட்ட நிலையே சஹஸ்ராரம் எனப்படும் தெய்வீக உணர்வில் திளைக்கும் யோகா நிலையாகும். ஆதார நிலைகளில் ஆறு நிலைகள் மனித நிலைக்கும் இந்த ஏழாம் நிலை அதனைக் கடந்த யோகி, மெய்ஞான நிலையாலர்களுக்கும் கொள்ளப்பட்டது.


நாடிகள் 10:
சூரிய  கலை  நாடி : சந்திர கலை நாடி; சுழுமுனை நாடி, சிங்குவை நாடி; புருடன் நாடி, காந்தாரி நாடி; அத்தி நாடி; அலம்புடை நாடி; சங்கினி நாடி; குருநாடி.

இந்த நாடிகள் உடலின் உறுப்புகளின் செயல்பாட்டினை தொய்வின்றி
 செயல்படத் தூண்டுகின்றன.

அவஸ்தை - 5
மனித உடலில் உண்டாகும் ஐந்து நிலைகளைக் குறிக்கின்றது.
நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் (துரியம்), உயிர்ப்படக்கம் (துரியாதீதம்)
ஐம்பொறி, ஐம்புலன் , நான்கு கரணங்கள் இனைந்து இன்ப துன்ப நிலைகளை அறிந்து செயல்படுவது நனவாகும். தன்னை மறந்த நிலையில், தன விருப்பத்திற்க்கேற்ப, இருக்கும் நிலை கனவாகும். மனம், அறிவு, நினைவு, முனைப்பு இவையெல்லாம் ஒருங்கிணைந்து தான் கண்டதையும், கேட்டதனையும் பிறருடன் வெளிப்படுத்த இயலாத நிலையே உறக்க நிலையாகும்.இதன் வீரிய நிலை பேருறக்க நிலை.. ஐம்பொறி, ஐம்புலன், நான்கு கரங்கள் ஒடுங்கி, தொடு உணர்வின்றி, செயல்பாடு இன்றி, எதனையும் உணரா நிலையே உயிர்ப்படக்கமாகும்.

தசம வாயுக்கள் : உடலின் இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் பத்து வாயுக்கள் துணை புரிகின்றன. இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வரை இந்த உடலில் மனித வாழ்க்கைக்கு துணை புரிந்து கொண்டிருக்கும்.
1 . பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்று :
மனித உடலில் ஒரு நாளைக்கு இருபத்தோராயிரம் சுவாசம் நடை பெறுகின்றது.
பதினான்காயிரம் சுவாசம்( oxygen ) உள்ளிழுக்கப்பட்டு, உடலைப் பேணி பாதுக்கிறது. ஏழாயிரம் சுவாசம் ( carbon  di oxide ) கழிவுகளை வெளியேற்றுகிறது.


2 . அபானன் எனப்படும் மலக்காற்று:
மல ஜலக் கழிவுகளை கீழ் நோக்கித் தள்ளுவது , ஆசனவாயினை சுருக்கி விரியச் செய்கின்றது. Food Extracts ஐ எங்கெங்கு சேர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கும் செயலை மேற்கொள்கின்றன.

3 . வியானன் எனப்படும் தொழிற்காற்று:
உடலில் எழுபத்திரண்டாயிரம் (72 ,000௦௦௦) நரம்புகள் உடலில் உள்ள உறுப்புக்களை நீட்டவும் மடக்கவும் அவற்றிற்கு தேவைப்படும் சத்துக்களை கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்கின்றன.

4 . உதானன் எனப்படும் ஒலிக்காற்று :
இரைப்பையில் இருந்து, உணவின் சாரத்தை வெளிப்படுத்தும் பணியினை மேற்கொள்கின்றது.
5 . சமானன் எனப்படும் நிரவுக்காற்று:
உடலில் உள்ள அனைத்து வாயுக்களையும் சமப் படுத்தி, (மிகாமல் கட்டுப்படுத்தவும் ), சத்துக்களை உடல் முழுதும் சேரும் பணியினை மேற்கொள்கின்றது.
6 . நாகன் எனப்படும் தும்மல் காற்று:
அனைத்துக் கலைகளையும் கற்கும் அறிவினைத் தருவதும், நல்ல பண்புகளை கற்றுக் கொள்ளும் திறனை அளிப்பதும், கண்களை மூடித் திறக்கவும், உடலில் உள்ள மயிர்க்கால்களை உணர்வு கொண்ட தன்மை ( மயிர்க்கூச்செரிதல் ) இவ்வாயுவின் பணியாகும்.

7 . கூர்மன் எனப்படும் விழிக் காற்று:
கண் இமைத்தல், கொட்டாவி விடுதல், வாயை திறத்தல், மூடுதல், கண்ணீரை வரவழைத்தல் போன்றவை இதன் பணிகள்.

8 . கிருகரன் எனப்படும் கொட்டாவிக்காற்று :
நாவில் சுரப்பையும், மூக்கில் கசிவையும், நல்ல பசியைத் தூண்டுவதும், தும்மல், இருமல் இவை உண்டாக்குவதும் இதன் வேலைகள்.
9 . தேவதத்தன் எனப்படும் இமைக் காற்று:
சோம்பல், அசதி, வீண் சண்டை, கண்களை அலைபாய விடுவது, கோபப்பட வைப்பது, போன்ற உடல் ரீதியான மன ரீதியான வேலைகளை செய்கின்றது.
10 . தனஞ்செயன் எனப்படும் வீங்கக் காற்று:
உடல் முழுவதும் வீங்கச் செய்வது, காதில் கடல் அலை போன்ற இரைச்சல் உண்டாக்குவது இதன் பணிகள்.


       மனிதன் இறந்த பிறகு உடலில் இந்த பத்தாம் வாயுவான தனஞ்செய வாயுவைத் தவிர மற்றவை உடலை விட்டு வெளியேறி விடும். இறந்த மூன்றாம் நாள், தலையின் உச்சிக் குழி வெடித்து தனஞ்செய வாயு வெளியேறிவிடும். 
     மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது, மண்டையின் உஷ்ணம் அதிகரித்து உச்சிக் குழி வெடித்து வெளியேறும்.

தோஷங்கள் : 3 
    உடலை ஆரோக்யமாகவும், நோய் கொண்ட உடலாக ஆக்குவதும் இவைகளே.
1 . வாத தோஷம்: பிராண வாயுவுடன், நெருப்பு , நீர் தன்மை சேர்வதால் வாத தன்மையும்,
2 . பித்த தோஷம்: பிராண வாயுவுடன், நெருப்பின் தன்மை மட்டும் சேர்வதால் உண்டாகுவது பித்த தோஷமும்,
3. கப தோஷம் : காற்று , நீர், நெருப்பு இவற்றின் முறையற்ற சேர்க்கைத் தன்மைகள் உடலில் கலப்பதால், கப தோஷமும் ஏற்படுகின்றன.
     ஆரோக்கியமான உடல், உணவு முறை, முறையற்ற பழக்க வழக்கங்களின் காரணமாக தோஷத் தன்மை அதிகரித்து உடலானது
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து, நோயின் தன்மை அதிகரிக்கின்றது.

இவற்றிற்கு,
 ௧ அட்ரினல் சுரப்பி ( மூலாதாரமும் ) 
௨. சினைப்பை, கருப்பை, விதைப்பை, மற்றும் நாளமில்லா சுரப்பிகள் ( சுவாதிஷ்டானம்),
 ௩ . கணையச் சுரப்பியும் ( மணிப் பூரகமும்),
௪ . தைமசு சுரப்பி ( அனாகதம் ), 
௫. தைராய்டு ( விசுக்தி ) சுரப்பியும்,
௬. பிட்யுட்டரி ( ஆக்ஞா) சுரப்பியும் காரணிகளாக அமைகின்றன. 

இவற்றின் கூடுதல், குறைதலுக்கேற்ப என்னென்ன நோய்கள் உடலினை அணுகும் என்பதனையும், இந்த ஆறு ஆதாரங்களை யோகப் பிரச்சியினை பகுத்து அறிந்து செய்வதன் மூலமும், பிராணாயாமப் பயிற்ச்சியும், விரதங்களும் , அருசுவைகளை 
சரியான விகிதத்தில் கலந்து இருக்க வேண்டும். 
எந்த ஒரு சுவை கூடினாலும் குறைந்தாலும் நோயினை உருவாக்கும் காரணி என்பதனை உணர வேண்டும். 

சித்தர்கள் உணர்த்திய 96 தத்துவங்களும் மனிதன் நன்றாக ஆரோக்யமாய் வாழ எளிமைப் படுத்தி, மனமும், உடலும் இனைந்து வாழும் கலையினை உணர்த்தி உள்ளனர்.

திரு வள்ளுவரும், நோயின் தன்மையினை உணர்ந்து வைத்தியம் காரணமறிந்து செய்யப்பட வேண்டும் எனவும், நோய் வராமல் தவிர்க்க நேரமறிந்து உணவு உண்ணுதலையும் தனது குறட்பாக்களில் 
பத்துக் குறட்பாக்களில் பாடி இருக்கின்றார். 

நன்றி
www.atchaya.netஉடல்- I


இந்த பரந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஒரு இருப்பிடம்
 தான் நமது இந்த உடல்.
ஒருவரின் இலட்சியங்கள், செயல்கள் உயர்ந்ததாக இருந்தாலும்,
உடலை நல்ல முறையில் ஒத்துழைக்க வில்லை எனில், 
அவரது வாழ்க்கை பாதி கிணறு தாண்டிய கதை தான்.
உடலை பாதுகாத்து நோயில்லா வாழ்க்கை வாழ்வது 
அவரவர் கையிலே தான் உள்ளது. 
மனித உடலின் அமைப்பை சித்தர் பாடல் ஒன்று 
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


" கூறுவேன் தேகமது என்னவென்றால் 
குருபரனே எலும்புதனைக் காலை நாட்டி 
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு 
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி 
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி 
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி 
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி 
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே"

உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி 
வைத்து, அவற்றின் "இருப்பிடம்" மாறிவிடாமல் 
இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து ,
நரம்புகளால் இழுத்துக் கட்டி, 
தோலால் மூடி, அவற்றிற்கு இடையே தசைகளைச் 
சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே 
வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி 
உடல் என்ற ஒரு உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக 
சித்தர் பாடல் கூறுகின்றது.


" உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே "

உடலுக்கு உயிரும் உயிருக்கு உடலும் தான் ஆதாரம் 
என்பதனை "திரு மூலர்" பாடல் உணர்த்துகின்றது.

ஒவ்வொரு மனிதனின் உடல் அவரவரின் கைகளினால்
எட்டு ஜான் உயரமும், நான்கு ஜான் அகலமும் 
கொண்டதாக இருக்கும். 
மனிதர்களின் தேகமானது 96 தத்துவங்களை 
உள்ளடக்கியதே.

பூதம் 5 + பொறி 5 = 10
புலன் 5 + ஞானேந்திரியம் 5 = 10
கன்மேந்திரியம் 5 + கரணம் 4 + அறிவு 1 = 10
ஆசயம் 5 + கோசம் 5 =10
வினை 2 + குணம்  3  + ஈடனை 3 = 8
மலம் 3 + மண்டலம் 3 + ராகம் 8 = 14
ஆதாரம் 6 + நாடிகள் 10 = 16
அவஸ்தை 5 + வாயு 10 + தோஷம் 3 = 18

ஆக மொத்தம் 96.

தத்துவங்கள் 96 என்ன  என்று சிறிது தெரிந்து கொள்வோமே.....  

பூதம் - 5
நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம்

பொறி - 5 (செவி, மெய்( சருமம்) , கண், நாக்கு, மூக்கு }

புலன் - 5
வாய் , கை , கால், மலவாய், கருவாய்.

ஞானேந்திரியம்: 5
ஆகாயம் (செவி) - ஆசை, பகை, மோகம், வஞ்சனை போன்றவை ஆகாயத்தின் இயல்பு.

ஆகாயத்தின் பொறி காது. கேட்டல், மற்றும் ஓசை ஆகியவற்றை அறிவதற்கு.
காற்று:( சருமம்) - ஓடுவது, உட்காருவது, நடப்பது, படுப்பது, நிற்ப்பது போன்றவை காற்றின் இயல்பு.
மெய் ( சருமம் ௦ - தொடு உணர்வை அறிவதற்கு )
நெருப்பு ( கண்) - சோம்பல், உடல் உறவு, பயம், துக்கம், ஆணவம் போன்றவை நெருப்பின் இயல்பு. நெருப்பின் பொறி - கண்ணாகும். - பார்த்தல்,
நீர் ( நாக்கு ) - ரத்தம், கொழுப்பு, வியர்வை, சிறு நீர் , மூளை போன்ற உடற்கூறுகளுக்கு நீரின் பொறுப்பாகும். நீரின் பொறி - நாக்கு. - சுவை அறிவதற்கு.
மண் ( மூக்கு ) - நிலத்திற்கான பொறி - மூக்கு.
எலும்பு, தோல், தசை, மயிர், நரம்பு இவை நிலத்தின் கூறுகளாகும்.
மூக்கு - வாசனை, மற்றும் நாற்றம் இவற்றினை அறிவதற்கு.

கன்மேந்திரியம் - 5
வாய் - பேசுதல்
கால் - நடத்தல்
கை - கொடுத்தல், வாங்குதல், பிடித்தல், விடுதல்
மல வாய் ( எரு வாய்) - மலம் கழித்தல்
கரு வாய் ( இனப் பெருக்க உறுப்புகள்)


கரணம் - 4
மனம் - விஷயங்களை அலைந்து  சேகரிக்கும்
புத்தி   -மன ஓட்டத்தின்படி  நன்மை, தீமை ஆராய்ந்து அறிவது.
நினைவு - எண்ணங்களை நினைப்பது
அகங்காரம் ( தன முனைப்பு ) - நான், எனது, என சுய முனைப்புடன் விஷயங்களை அலசுவது.

அறிவு - 1 
பகுத்து அறியும் உணர்வு.

ஆசயம் என்பது விஷயம் அல்லது குறிப்பிட்ட உறுப்புகளின் செயல்களைக் குறிப்பது.
ஆசயம் - 5
இரைக் குடல் -  சாப்பிட்ட உணவு சேரும் இடம்
செரி குடல் - சத்துக்கள் பிரிக்கும் இடம்
நீர்க்குடல் - கழிவு நீர்கள் சேகரமாகும் பை.
மலக் குடல் - திடக் கழிவுகள் சேகரமாகும் இடம்.

வினை - 2
நல்வினை, தீவினை ( ஆரோக்கியம், நோய் வாய்ப்படுதல்)

குணம் - 3
சாத்வீகம் - ( அகிம்சை - ஐம் பொறிகள் அடங்குதல், ஞானம், தவம், உண்மை உணர்தல், உண்மை பேசுதல், அன்பில் (தெய்வீக ) திளைத்தல்
ராஜசம் ( அகம்பாவம் ) - தன் மீதான அதிகப்படியான உணர்வு - வீரம், வள்ளல் தன்மை, அதிக ஈடுபாடு, கஞ்சத்தனம்,
தாமசம் ( சோம்பல் ) - ஒழுக்கம் இன்மை, எதிர்மறையான செயல்கள்,
பிறர் வெறுக்கும் செயல்களை செய்தல், இத்தகைய செயல்களில் ஈடுபாடு.

ஈடனை - 3
பற்றால் உண்டாகும் வேதனையே ஈடனை எனப்படும்.
அர்த்த வேதனை - உயிர் அற்ற பொருட்களின் மீதான பற்று அதனால் உண்டாகும் வேதனை.
புத்திர வேதனை - பெற்றெடுத்த மற்றும் வளர்த்த - பிள்ளைகள், பெண்கள், சுற்றத்தினர் - இவர்களின் மீதான பற்றும் அதனால் உண்டாகும் வேதனை.
உலக வேதனை - உலக விஷயங்களில் உண்டான ஈடுபாட்டால் உண்டாகும் வேதனைகள்.

மலம் - 3
ஆணவம்- நான் , எனது என்ற நிலையில் தருமத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவது.  எல்லாம் தன்னால் தான் ஆனது என்று தன்னை முன்னிலைப் படுத்தி   செய்யும் செயல் நிலை.
மாயை - மனதினில் ஒரு குழப்பம் இருக்கும் நிலை (சந்தேக உணர்வு)
இதனால் நன்மையையும் தீமையாகவும், தீமையும் நன்மையாகத் தெரியும் உணர்வு நிலையாகும்.
காமியம் - அனைவருக்கும் இடையூறாக இருப்பது. பாவத்தினை செய்வதினை ஒரு போதும் தவறு என நினையாத நிலையில் இருப்பது. சங்கடங்களை உருவாக்குவது .

மண்டலம் -  3
அக்னி மண்டலம் , சூரிய மண்டலம், சந்திர மண்டலம் 

ராகங்கள் - 8  
மனதினால் உண்டாகும் விபரீத எண்ணங்களைக் குறிப்பது தான் ராகங்கள்.
இவற்றினால் , உடலுக்கு கேடு உண்டாகும். 
காமம் -  வக்கிர புத்தியின் காரணமாக சிற்றின்ப ஆசை ( பெண், பொன், பொருள், மண் - அடைந்தே தீர வேண்டுமென்ற தீரா ஆசை.
குரோதம் - அனைவர் மீதும் கோபம் கொண்டு பகைத்துக் கொள்வது.   (எதிரியாக உருவாக்கிக் கொள்வது.)
உலோபம் - கஞ்சத் தனமாக இருப்பது.
மோகம் -( பிற )   பெண்கள் மீதான ஆசை.
மதம் - பிறரிடம் கர்வத்துடன் இருப்பது. 
மாச்சரியம் - அனைவரிடமும் பகை கொள்வது. ( எதிரியாய் நினைப்பது)
இடும்பை - தனக்குத் தான் எல்லாம் தெரியும் என சொல்லி பிறரை பழித்தல்.
அகங்காரம் - தன் குற்றம் உணராமல், பிறரை பழித்தல்.