Monday, March 10, 2014

தினம் ஒரு திருமந்திரம் 10-03-2014

காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

பொருள்

ஆதிமந்திரம் அஞ்செழுத்து என்னும் உண்மையால் அக்காரண மந்திரத்தை இடையறாது ஓதும் மெய்யடியார்களது நெஞ்சத் தாமரையின்கண் உட்கொளல், நிறுத்தல், விடுதல் என்னும் உயிர்ப்புப் பயிற்சிக்குத் துணையாக திருவருள் அம்மை எழுந்தருள்வள். அங்ஙனம் எழுந்தருளும்போது நாரணி என்னும் பெயர் பெறுவள் சிவபெருமான் அருளிச் செய்த மறைநூலின் முதலும் முடிவுமாய் விளங்குவதும் திருவருள்அம்மையேயாம். (பூரகம் - மூச்சை உட்கொளல்; கும்பதும் - நிறுத்தல்; இரேசகம் - வெளிவிடுதல் நந்தி - சிவபெருமான்)

No comments:

Post a Comment