Thursday, December 22, 2011

பக்திக் கதைகள்..

கடவுள் கோபித்துக் கொள்வாரா?
துறவி ஒருவரிடம் சிஷ்யன் கேட்டான். ''குருவே! கடவுளை 
வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா? அதற்கு 
துறவி, ''சிஷ்யா! ரயிலில் தொலைதூரப் பயணம் மேற்
கொண்டிருக்கிறாய். உனக்கு எதிரில் அமர்ந்து ஒருவர் 
பயணம் செய்கிறார். அவருடன் நீ பேசாவிட்டால், அவருக்கு 
ஒன்றும் ஆகிவிடாது. அனுபவம்மிக்க அவரிடம் பேசினால், 
'ரயில் எங்கே நிற்கும், அங்கே உணவு கிடைக்குமா? நீ போக 
வேண்டிய ஊருக்கு எப்போது போய்ச் சேரலாம்?' இப்படிச் 
சில செய்திகளை நீ தெரிந்து கொள்வதால், உனக்குத்தானே பயன்!

கடவுள் என்பவர் உன் வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன் 

பயணம் செய்யும் ஓர் அனுபவ சாலி. அவரிடம் நீ பல 
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே? அவரை வணங்குவதால் 
அமைதி, நிம்மதி, இன்பம் ஆகியவை கிடைக்கின்றன. கடவுளை 
வழிபடுவது உன் நன்மைக்கு தானே தவிர, நீ வணங்குவதாலோ 
அவருக்கு எந்தப் பலனும் இல்லை... அதனால் தன்னை 
வணங்காதவர்களை கடவுள் ஒருபோதும் கோபித்துக்
கொள்வதில்லை!


-------------------------------------------------------------------------------------------
கோயில் ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார், 
ஒரு பெரியவர். அவ்வூரைச் சேர்ந்த நாத்திகவாதியான தாசில்தார் ஒருவர், 
அந்தப் பெரியவரிடம் செ ன்று, ��ஐயா! கல்லை கடவுள் என்கிறோம். 
எங்கோ கிடந்த ஒரு கல்லைக் கொண்டு வந்து, அதற்கு ஒரு உருவம் 
கொடுத்து, நாம் வைத்த கல்லை நாமே வணங்கி, �என் னைக் காப்பாற்று!�
 என்று வேண்டுகிறோம். இது எவ்வளவு முட்டாள்தனமான காரியம். 
அந்தக் கல்லுக்கு எங்கிருந்து சக்தி வரும்? அது எப்படி மற்றவர்களைக் 
காப்பாற்றும்?�� என்றார்.

அதைக் கேட்ட பெரியவர் அமைதியாக, ��தங்களுக்கு இந்த தாசில்தார் 

பணி கிடைப்பதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?�� என்று 
கேட்டார்.

��சும்மாதான் இருந்தேன்.��

��நீங்கள் சும்மாயிருந்தபோது உங்களை யாராவது மதித்தார்களா? 

தாங்கள் போடும் கையொப்பத்திற்கு ஏதாவது மதிப்பிருந்ததா? இல்லை 
அல்லவா! அதே நேரத்தில் தாசில் தார் என்ற ஒரு பதவி தங்களுக்குக் 
கிடைத்த பிறகு தாங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்துக்கும் 
எவ்வளவு மதிப்பு, மரியாதை! இந்த மதிப்பும், மரியாதையும் 
அதிகாரமும் எங்கிருந்து வந்தது?

அதேபோலத்தான் எங்கோ கிடந்த கல், தெய்வ உருவத்தில் 

வடிவமைக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு 
தினமும் மந்திரங்களை உச்சரிக்கும்போதும், மக்கள் வழிபடும்போதும் 
அதற்கு கடவுள் என்ற சக்தி வந்துவிடுகிறது. அந்த சக்தி மற்றவர்களைக் 
காப்பாற்றுகிறது�� என்றார்.


--------------------------------------------------------------------------------------------------
எது விதி?குருவிடம் சென்ற சீடன் ஒருவன், ''விதி என்றால் என்ன? பகுத்தறிவு என்றால் 
என்ன?'' என்று வினவினான்.

குரு சீடனைப் பார்த்து, ''உன் வலது காலைத் தூக்கு!'' என்றார்.
சீடன் வலது காலைத் தூக்கியபடி நின்றான்.
''சரி. இப்போது நீ தூக்கிய வலது காலை கீழே இறக்காமல் இடது காலையும் 

தூக்கு!'' என்றார் குரு.

''அது எப்படி முடியும்?'' என்று கேட்டான் சீடன்.
அதற்கு குரு, ''உன்னால் ஒரு காலை மட்டும் தூக்க முடிந்ததே... இதுதான் 

பகுத்தறிவு. இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க முடியாத நிலை 
இருக்கிறதே... இது தான் விதி!'' என்று விளக்கம் சொன்னார்.
----------------------------------------------------------------------------------------------------


முக்கியமான பாடம்
சீடனாகச் சேரும் விருப்பத்தோடு ஞானி ஒருவரைக் காணச் சென்ற ஒருவன்,
அவரது வீட்டுக்கு வெளியில் தன் காலணியையும், குடையையும் விட்டு 
விட்டு உள்ளே சென்றான். விருப்பத்தை ஞானியிடம் சொன்னான். ஞானி 
கேட்டார்: ��நீ குடையைக் காலணியின் இடப்பக்கம் வைத்தாயா? 
வலப்பக்கம் வைத்தாயா?�� என்று கேட்டார். ��ஐயா! ஏதோ ஒரு 
பக்கம் வைத்தேன். இப்போது எதற்காக அதைப்பற்றிக் கவலை?" 
என்றான் வந்தவன். ��சிறிய நிகழ்வுகளில்கூட கவனம் தராவிட்டால்,
 நீ எதைத்தான் கற்பாய்? வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் 
தேவையான கவனத்தைச் செலுத்து! இதுவே முக்கியமான பாடம்" 
என்றார் ஞானி.


-----------------------------------------------------------------------------------------------------
மதிப்பு!
ஞானி ஒருவரைச் சந்தித்த மன்னன் தன் நாட்டையும் செல்வத்தையும் குறித்து 
மிகவும் கர்வமாகப் பேசினான்.

ஞானி, ''நீங்கள் ஒரு பாலைவனத்தில் கடுமையான தாகத்தோடு போகும்போது, 
ஒருவன் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக் 
கேட்டால் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்டார். அரசன், ''சந்தேகம் என்ன? 
தண்ணீரை வாங்கிக் கொண்டு பாதி நாட்டைக் கொடுப்பேன்!''

ஞானி, ''சரி, அந்த அழுக்குத் தண்ணீரைக் குடித்ததால் யாராலும் குணப்படுத்த 
முடியாத நோய் உமக்கு வந்து விடுகிறது. ஒருவர் அதைக் குணப்படுத்தும் 
மூலிகைக்கு ஈடாக மீதி நாட்டைக் கேட்டால் கொடுப்பீர்களா?

அரசன், ''நிச்சயம் வாங்குவேன்!'' ''ஒரு பாத்திர அழுக்கு நீரும், ஒரு மூலிகைச் 
செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து உங்களுக்கு ஏன் கர்வம்?'' 
ஞானி கேட்க, அரசன் தலை குனிந்தான்.

No comments:

Post a Comment