Thursday, December 22, 2011

குருவின் அவசியம்



குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து 
ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை 
உணர்வு அற்றதோர் கோவே. (10)

ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். 
மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் 
தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி 
மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் 
பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார்.

குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் 
பாடலைச் சிந்திப்போம்.

கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் 
பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே 
நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுளின் 
பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் 
ஆணையை ஏற்று யிவ்வுலகிற்கு நலம் செய்வதற்காகவே 
பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய 
யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, 
நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை 
உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment