Monday, May 27, 2013

சப்தகன்னியர்- கவுமாரி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் கல்யாண சுந்தரி, பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

மயிலாடுதுறையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கவுமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!

கவுமாரி பாடல்:

ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்
சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி
ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி
ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

கவுமாரி ஸ்கந்தரி - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:

காயத்ரி:

ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

No comments:

Post a Comment