Wednesday, November 16, 2011

நோய் நாடி



இயற்கை மருத்துவ தத்துவம், ‘நோய் ஒன்றே, பல அல்ல’ எனக் கூறி வருகின்றது. ஆனால் பிற மருத்துவங்கள் அனைத்தும் உடலின் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை, குறிப்பிட்ட உறுப்பின் பெயரால் அழைத்து பல்வேறு நோய்களாகப் பிரிக்கின்றன.
எடுத்துக் காட்டாக கண்ணில் நோய் வந்தால் கண் நோய், பல்லில் ஏற்பட்டால் பல் நோய், செவியில் தோன்றினால் செவி நோய், இது போன்று தலை நோய், முக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், முல நோய் மற்றும் பல்வேறு பெயர்களில் நோய்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
அவ்வாறு பல்வேறு நோய்களுக்கேற்ப பல்வேறு வில்லைகள், ஊசிகள், மருந்துகள், முலிகைகள் என பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கேற்ப நடைமுறையில் உள்ளன.
ஆனால் உண்மை என்னவெனில், தவறான உணவுகள் உண்பதால் உடலில் அழுக்குகள் நிறைய சேர்ந்து எந்த உறுப்பு பலவீனமாக உள்ளதோ அவ்வுறுப்பில் படிந்து, அவ்வுறுப்பைத் தாக்கி, நோய் எனும் பெயரில் அவ்வுறுப்பில் பழுது ஏற்படச் செய்து தவறாக உடல் இயங்குகிறது. சரியான உணவுகள் உண்பதால் உடல் உறுப்புகள் சரியாகச் செயல்பட்டு, உடல் சரியாக இயங்குகிறது.
எடுத்துக் காட்டாக, இயற்கைக்கு மாறாக நெருப்பில் சமைத்த உணவுகள் அனைத்தும் தவறான உணவுகள், அழுக்குள்ள உணவுகள். எனவே சமைத்துண்ணும் பழக்கமுடைய மனிதனின் சிறுநீர், மலம், வேர்வை, உடல் அனைத்தும் அழுக்குள்ள உணவுகளை உண்பதால், துர் நாற்றம் வீசக் கூடிய இயல்புடையதாகி விட்டன. இயற்கைக்கு மாறுபாடில்லாத சமைக்காத பச்சையான இயற்கையுணவுகள் சரியான உணவுகள், தூய்மையுள்ள உணவுகள்.
எனவே பச்சையாகத் தின்னும் பறவைகள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் சிறுநீர், மலம் துர்நாற்றமில்லை.
பசுமாட்டின் சாணம் கொண்டு பிள்ளையார் பிடிப்பதும், பசுமாட்டின் சிறுநீர் மதச் சடங்குகளின்போது புனிதம் கருதி வீடுகளில் தெளிக்கப்படுவதும் நம் நாட்டில் பழக்கமாக உள்ளது.
பறவைகள், விலங்குகள் எவ்வளவு தூரம் பறந்து அலைந்தாலும், நடந்து ஓடினாலும் அவைகளின் உடலில் வேர்வையே ஏற்படுவதில்லை. மனிதனின் உடலில் மட்டும் சொல்லவொண்ணாத வேர்வை கொட்டி ஊற்றுப் பெருக்கெடுத்து துர்மணம் வீசுகிறது. எனவே இத்தகைய இயற்கை அடிப்படைகளே சமைத்த உணவுகள் அனைத்தும் சரியில்லாத தவறான அழுக்கு உணவுகள் என்றும், சமைக்காத பச்சையான இயற்கையுணவுகள் அனைத்தும் சரியான தூய்மையான உணவுகள் என்றும் நி ருபிக்கின்றன.
தவறான அழுக்குள்ள சமைத்த உணவுகளால்தான் மனிதனுக்கு அனைத்து உடல், உள நோய்களும் ஏற்படுகின்றன. அழுக்கு உணவுகளை உண்பதால்தான் மனிதனின் முளையிலும் அழுக்குகள் நிறையப் படிந்து மனிதனை கற்பழிப்பு, கொலை, கொள்ளை, பகை, லோபம், வெறி முதலிய தீய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.
உதாரணமாக பரம்பரையாக சைவ உணவு உண்பவர்களை விட, அசைவ உணவு உண்பவர்களே குற்றவியல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது புள்ளியில் துறை கூறுவதோடு மட்டுமல்லாமல் நாம் சிந்தித்துப் பார்த்தாலும் புலப்படும். எனவே இவ்வுலகில் மதம், இனம், மொழி, நாடு, வெறி சச்சரவுகள், மற்றும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை முதலிய தீய நிகழ்ச்சிகள் நிகழா வண்ணம் செய்யவும், அமைதி ஏற்படுத்தவும் மனிதனை அசைவ உணவை விடுத்து குறைந்த பட்சம் சைவ உணவிற்காவது மாற்ற முயலுதல் வேண்டும். சமைத்த சைவ உணவிலிருந்து சமைக்காத கனிகள், காய்கள் முதலிய இயற்கையுணவிற்கு மாற்ற முயலுதலே அறிஞர்கள், ஆட்சியாளர்கள், வல்லுனர்கள் ஆகியோரின் தலையாய இன்றியமையாத உயரிய பணியாகும்.
சரியான சமைக்காத பச்சையான தூய இயற்கையுணவுகள் உண்ணும் பறவைகள், விலங்குகளுக்குக் கண் நோய், பல் நோய், செவி நோய், தலை நோய், முக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், முல நோய், மற்றும் மனிதனுக்கு ஏற்படக் கூடிய இதர தொழு நோய், புற்று நோய், வாதம், எய்ட்ஸ் முதலிய எத்தகைறய நோயுமில்லை.
தவறான சமைத்த அழுக்கு உணவுகளை உண்ணும் மனிதனுக்கு மட்டும்தான் அத்தனை நோய்களும். இயற்கை உணவு உண்டு வந்தால் மனிதனுக்கு ஏற்படுகின்ற நோயை, எந்நோய் என எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் இதர மருத்துவப் பரிசோதனைகள் செய்து நோய் நாட வேண்டிய அவசியமில்லை என இயற்கை விதி நமக்கு நன்கு போதிக்கின்றது. எந்நோய் என நோய் நாடுவது பொருளாதார விரயம், கால விரயம், சக்தி விரயம் மற்றும் பல விரயங்களை ஏற்படுத்துகின்றது என்பதும் தெள்ளத் தெளிவாகின்றது.
மேலும் நோய் நாட ஆய்வு செய்யும் கருவிகள் முலம் நமது உடலினுள் செலுத்தப்படும் செயற்கைக் கதிர்கள், நமது உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகளைத் தாக்கி பாதிக்கச் செய்கிறது. எனவே நோய் நாடுவதை இத்துடன் நிறுத்தி, இனி நோய் முதல் நாடுவோம்

No comments:

Post a Comment