Wednesday, July 31, 2013

ஏமக்குறைவு நோய் (எய்ட்ஸ்) பற்றிச் சித்த மருத்துவம்


ஏமக்குறைவு நோய் (எய்ட்ஸ்) இன்று உலகத்தை அச்சுறுத்தி வரும் ஒரு நோயாகும். இந்நோயானது பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது. மிகவும் முதன்மையான காரணம், நோயுற்ற பெண்களுடன் உடலுறவு கொள்ளுதல் ஆகும். ஊசிகளைத் தூய்மைப்படுத்தாமல் பயன்படுத்துதல், இரத்தம் செலுத்துதல் முதலியனவும் இதற்குரிய காரணங்களாகும். இந்நோய்க்கான மருத்துவம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சித்த மருத்துவ நூல்களில் மேகநோயின் குறி குணங்களில் பல ஏமக் குறைவு நோயின் தன்மைகளை ஓத்துள்ளன. பரங்கியர்களான போர்ச்சுக்கீசியர்கள், 1460-இல் கடல் வழி கண்டனர். அவர்களால் இந்நோய் இந்திய நாட்டில் பரவியதாக வரலாறு கூறுகின்றது. எனவேதான் மேக நோய் - 'பிர மேகம்' என்றும், பரங்கிநோய், வெள்ளை நோய் என்றும் அழைக்கப்பட்டது. தொன்மையான தமிழ் மருத்துவ நூல்களில் மேகம் என்ற சொல்லாட்சியானது, சர்க்கரை நோயைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. சர்க்கரை நோயிலிருந்து வேறுபடுத்தி அறிய, பாலியல் நோய்களான வெள்ளை, வெட்டைக் கிராந்தி போன்றவைகளுக்கு "பிர மேகம்" எனப் பெயரிட்டழைத்தார்கள்.

மேக நோயைப்பற்றி விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் 'திரிபுவன சிங்கதேவன்' என்ற அரசு அலுவலன் இந்நோயால் வருந்தியதாகக் கடத்தூர், கோவை மாவட்டக் கல்வெட்டுக் கூறுகின்றது. சங்க காலம் முதல் மேலை நாட்டவர்களுடன் தமிழர்களுக்குத் தொடர்பு இருந்துள்ளது. மேக நோயைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் எங்கும் கூறுப்படவில்லை. எனவே சங்க காலத்தில் மேக நோய் இல்லை என அறியலாம்.

மேலை நாடுகளிலும் மேக நோய் வரலாறு சரிவர இல்லை. 'கொலம்பஸ்' மூலமாக இந்நோய் மேலை நாடுகளுக்குப் பரவியதாக வரலாறு கூறுகின்றது. மேக நோயைப் போன்றே ஏமக் குறைவு நோயின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவாக இல்லை. 1981-ஆம் ஆண்டு இந்நோய் மேலை நாடுகளில் கண்டறியப்பட்டது.1 பின்னர் 1985-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக ஏமக்குறைவு நோயாளி கண்டறியப்பட்டார்.2
இந்நோய் தோன்றுவதற்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் என்ற நுண் நச்சுயிரி காரணமாகும். இது இருவகையான இயல்பைப் பொறுத்து அமைகின்றது. இந்நோயினர் நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் போன்று இருப்பார்கள். எறத்தாழ 10 ஆண்டுகள் சென்ற பின்னர், இந்நோயின் குறி குணங்கள் தெரிய வரும். இதன் முக்கியமான அறிகுறிகளாவன.3

கழுத்தில் நெறி கட்டும். பின்னர்ச் žழ் வைத்துச் சிவந்து காணும்.
நாவில் வெண்மையான படை படருதல்.
உட்புற மேல்வாய், தொண்டையில் மாவு போல் படரும், இதனால் நோயாளி உணவை உண்ண இயலாது.
உடல் இளைத்து வருதல்.
வயதான சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் போன்று ஏமக்குறைவு நோயில் உடலில் வருவது.
அக்கி என்ற கட்டிகள் தோன்றுதல்.
மூளையானது சுருங்குதல்.
இவை தவிர வேறு சில கடுமையான தொற்று நோய்களான (நிமோனியா) நுரையீரல் சுரம், காசம், கடுமையான கழிச்சல் என்பன ஏற்படும்.4 நுரையீரல் அழற்சியும் மூளைக்கட்டிகளும் தோன்றும்.5

சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட பிரமேக நோயின் சில குறிகுணங்கள், ஏமக் குறைவு நோயுடன் ஒத்துள்ளன. 'அகத்தியரின் பாண்டு வைப்பு 600' என்ற நூலில் பிரமேக நோயின் தன்மைகள் கூறப்பட்டுள்ளன.

"தாபம் மிஞ்சி, அஸ்திக்குள் இரத்தம் வற்றி தசைவற்றி, சுக்கிலமும் தண்­ராகி மோகமிஞ்சி சஞ்சரித்தால் கடுப்பு எரிவு தோன்றும்"6

மேக நோயால், உடலில் சூடு ஏற்பட்டு, எலும்பில் உள்ள இரத்தம் குறையும்; தசையானது சுருங்கும்; உடலில் வலி, எரிச்சல் உண்டாகும்; விந்து தண்­ர் போல் நீர்த்து விடும்; தசையானது சுருங்கும்; சாதாரணமாக உடல் எடையில் 10% அதிகமாக ஏமக் குறைவு நோயாளிகளிடம் ஏற்படும். கட்டிகள் ஏற்படும் என்பதையும் கூறுகின்றார்.

"காயாகிக் கட்டியாய் முளை யுண்டாகி
கனமாக இரணமாகிக் காயமெல்லாம்
பேசுமென்ற சரீரத்தில் தினவுண்டாகிப்
புழுக்கள் தான் ஊர்தல் போலப் புகைமாகும்".

காலிபிளவர் போலப் பலவித அடுக்குகளைக் கொண்டு இருக்கும் கட்டிகள், முளைகள் தோன்றும். உடலில் புண்கள் ஏற்படும்.

அகத்தியர் குணவாகடம் என்ற நூலில் பிரமேகம் பற்றிய பகுதி உள்ளது. இதில் 1079 முதல் 1112 வரையில் உள்ள பாடல்களில் குறி குணங்கள் கூறுப்படுகின்றன.

"விரணமுடன் žயுடனே இரத்தம் காணும்
கரடு தட்டி நோவுடனே கடுப்புக் கண்டு
கனமான சரீரந்தான் வெதும்பலாமே" (பாடல் 1112)

இரணத்தில் žழ், இரத்தம் என்பன இருக்கும். தோலில் காப்புக் காய்த்துக் காணப்படும். இதில் வலி, எரிச்சல் இருக்கும். உடலில் சூடு தோன்றும்.

"தன்வந்திரி வைத்திய காவியம் 1000"7 என்ற சித்த மருத்துவ நூலில் பிரமிய நோயை மிக விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

"சரீரந்தான் மிக வற்றி இயக்க முண்டால்
சந்தோடு கை கால் நோவுண்டாகும்
சரீரந்தான் கறுத்துமே எரிவுண்டாகும்"

உடல் மெலிந்து, கைகால்களை அசைத்தால், மூட்டுகளில் வலி, உடலில் எரிச்சல் என்பன ஏற்படும்.

"பேசு மென்ற சரீரத்தில் தினவுண்டாகி
புழுக்கள் ஊர்தல் போல் புகைமாகும்
மாசுடனே நீர் இறங்கி ரோகந்தானும்
மானிடரைக் கொல்லுமென வகுக்லாகும்".

தோல் நோய்கள் ஏற்படும். புழுக்கள் ஊர்வது போல அரிப்பு எடுக்கும்.

"தானாகச் சட மெங்கும் கட்டியாகித்
தரிக்காமல் வலியுண்டாய் தளர்ச்சிக் கேடாய்".

உடலில் கட்டிகள் ஏற்பட்டு, வலிதோன்றும்; உடல் வன்மை இழந்து; தளர்ச்சி தோன்றும்.

"வன்மையுடன் உடம்பெல்லாம் வலியுண்டாகும்
வாயது வாந்தியொடு மயக்கமாதல்".
"ஆண்மையாம் அடி வயிறு புண்போல் நொந்து
அடித்தண்டு விருதுத்து உச்சம் காணும்".

உண்ட உணவு செரிக்காமை, வாந்தியாதல், மயக்கம் ஏற்படும். அடி வயிற்றில் புண்கள் ஏற்படு, வயிற்றில் வலி தோன்றும்.
"தரித்திரம் போல் அன்னத்தைப் புசிக்க விடாது
சஞ்சலமாய் மனமது தான் தரிக்கூடாது"

குடலிலும், வாயிலும் புண்கள் ஏற்படுவதால், ஏமக் குறைவு நோயாளிகள் உணவு உட்கொள்ள முடியாத நிலையைப் போன்றே மேக நோயிலும் ஏற்படும் என்பதை முன்னுள்ள அடிகள் சுட்டும். சில ஏமக் குறைவு நோயாளிகளிடத்தில் மன நோயும் ஏற்படுதல் உண்டு.8 இதில் மனச்சிதைவு, உணர்ச்சிப் பிறர்வு போன்ற தீவிரமான குறிகுணங்களும் முதல் சாதாரணமான மன நோய் வரை பலவிதமான மன நோய்கள் வரலாம்.

"உடம்பெங்குந்தான் நாவிலே
உணர்ச்சி யில்லா உரிசை போகும்"

இதில் உணர்ச்சிகள் இல்லாத ஒரு நிலை ஏற்படும். நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் இது ஏற்படும். பெரிப்ரல் நீரோபதி என்று இது அழைக்கப்படும். மூளைக்கு மற்றப் பகுதிகளிலிருந்து உணர்வுகளைக் கொண்டு செல்லும் நரம்புகளைத் தாக்குவதால் இது ஏற்படும். நரம்பு மண்டலத்தின் செயல்களைக் கூறும் அடிகள் :

"விருதான விறுவிறுப்பாம் வலியுண்டாகும்
விசையான நரம் பெல்லாம் சுருக்கமாகும்."

"கூறான நரம்புக்குத்தங்கு பாய்ந்தான்
குத்தியே அடிக்கடி வலியுண்டாகும்."

நரம்புகளில் சுருங்குதல், நரம்புகளில் அடிக்கடி வலி என்பன ஏற்படும்.

"வாலிலிட்டால் கைப் புளிப்பு

தேறாது தேகமடா என்னக் கொண்டும்

தீயிலிட்ட மட்டையைப் போல் கரிந்த வாடும்."

இதில் இந்நோய் கண்டவருக்கு உணவு உண்ணக் கசக்கும்; புளிக்கும்; உடலானது தீயிலிட்ட மட்டையைப் போல் தேறாது.

"நன்றாச்சு அரோசியங்கள் வேர்வை தாகம்

சிரசு முதல் அபானன் வரை வெந்து"

பாடல் 330-இல் கூறப்படுகின்றது. இரவு நேரங்களில் ஏமக் குறைவு நோயினருக்கு வியர்வை சுரக்கும். அதிகக் களைப்பு, நீண்ட நாள் நிணக்கணு வீக்கம் என்பனவும் இருக்கும். பித்த மேகத்தில் வியர்வை தாகம் என்பன தோன்றும் என்று அகத்தியர் பாண்டு வைப்பு 600 கூறுகின்றது. மேக நோயின் துணை நோய்களையும் எடுத்துரைக்கின்றது. (பாடல் 332)

"அளிக்குமப்பா என்புருக்கி வெட்டை சாய்க்கும்
ஆகாகா தரை உருக்கி, இரத்தம் சாய்க்கும்
களிக்குமப்பா உள்ளிருற்று வெந்து வெந்து
கடை கெட்ட நோய்களெல்லாம் வருகும்
பலிக்குமைய்யா காசம் செள்ளைத் தடிப்பு வட்டம்
பாழான புண்களும்பன் கைகள் கால்கள்
கெளிக்குமப்பா சரீரமெல்லாம் குறுகிப் போகும்
நேரான சுக்கிலமும் தீப் போலமே."9

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏமக்குறைவு நோயில் காச நோய் தொடர்பு நோயாக வரும்.10 மேக நோயிலும் இத்தகைய குறி குணங்களைக் காணலாம். என்புருக்கி என்ற சொல்லாட்சி காசநோயைக் குறிக்கும். மேக நோயாளியின் எடை குறையும். இரத்த சோகை நோய் ஏற்படும்.

"அக்குலமே அன்னத்தால் சமைந்த தேகம்
அது வெறுத்தால் சுயமெட்டும் வரும்பார்." (பாடல் 333)

இதுவும் காசநோய் வருவதைக் குறிக்கும். உணவு உட்கொள்ள இயலாத நிலை ஏற்படும். "அன்னமும்தான் வெறுத்து வரும் ஆசை போகும்" "அன்னத்தால்-சமைந்ததேகம் அசனத்தை வெறுக்கும் பார்" என்ற அடிகள் உணவு உட்கொள்ளாத நிலையைக் குறிக்கும். "உணவு செரிமானத் தடம் பாதிக்கப்படும். இதனால் செரிமானக் கோளாறுகள், குடல் மற்றும் இரைப்பை இயக்கங்களில் தவறுகள், உணவு உட்கிரகிப்பில் குறைபாடுகள், வாந்தி, பேதி, வயிற்று வலி போன்றவை ஏற்பட ஏதுவாகிறது."11

"கருதிவரும் கரப்பனு-சிரங்குவகை கேளு
கபாலத்தில் வரு மேகக் கரப்பான் இரண்டு
வருதி வாய் கரப்பான் என்ற சொறி சிரங்குண்டு
வளர்பித்த விடநீரால் எடுத்த சொரி மூன்று

பருதி என்ற குறைகுட்டம் கிரந்திப் புண்கள்
பார் கிருமி சூலை பீசத்தின் மூன்றே."12

"பீச முதல் பாத வரை சிசு மட்டும்
பிரிவிரியாய் நாமத்தை குடலெம்பு கூடும்.

விட நீரால் தொடர்கிராணி
வகை வகையாய் துளைத்து மீளும்."13

இதில் தொடர்ந்து பேதி காணும். இவ்வகையான பேதியானது எவ்வகையான மருந்துகளுக்கும் கட்டுப்படாத நிலையில் இருக்கும். இதையே தொடர் கிராணி என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. உடலுறவு மூலம் பரவுவதால் மேக நோயை விடநீர் என வகைப்படுத்துகின்றார். உடலின் தலை முதல் கால்கள் வரை இது பாதிக்கும். மேக நோயின் துணை நோயாகத் தலையில் கட்டிகள் தோன்றும். சுரம், தலைவலி, கழுத்து வன்மை, அக்கி என்பனவும் காச நோய் நுண்மி"14 என்பன ஏம நோயின் துணை நோய்காளகும்.

ஏமக் குறைப்பு நோயின் குறி குணங்கள் யாவும் சித்த மருத்துவ நூல்களில் காணப்படும் பிரமேக நோய்குக்கு இணையாக உள்ளன என்பதை அறியலாம்.

துணை நூல்கள் :

ஏமக்குறைவு நோய் - எய்ட்ஸ் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் - 1993.
ஏமக் குறைவு நோய் - எய்ட்ஸ்.பக்கம் 22, 1993.
எய்ட்ஸ் எரிமலை - மரு. ஜெயா. ஸ்ரீதர். பக்கம் : 147,
விகடன் வெளியீடு, 1994.
எய்ட்ஸ் - மரு.எம்.கே. முருகானந்தன், பக்கம் 22, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், ஜனசக்தி அச்சகம் - 1991.
ஏமக் குறைவு நோய் - பக்கம் 46, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 1993.
அகத்தியர் வைத்திய காண்டம் - பாண்டு வைப்பு 600 -
பக்கம் 67, சென்னை வித்யா ரத்னாகர அச்சுக் கூடம் - 1935.
தன்வந்திரி வைத்திய காவியம் 1000 - சாரதி புத்தக சாலை, 1934.
ஏமக் குறைவு நோய் - பக்கம் 102, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்.
ஏமக் குறைவு நோய் - பக்கம் 44, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்.
ஏமக்குறைவு நோய் - பக்கம் 47, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.
ஏமக்குறைவு நோய் - பக்கம் 48, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.
அகத்தியர் வைத்திய காண்டம் 600 - பாடல் 588.
அகத்தியர் பாண்டு வைப்பு - பாட்டு 589, வித்தியாரத்னாகர அச்சுக்கூடம், 1935.
ஏமக்குறைவு நோய் - பக்கம் 44, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்.

No comments:

Post a Comment