Wednesday, July 31, 2013

உணவும்-உடலும்

உணவு, நீர், காற்று, பூமியிலிருந்து கதிர்யக்கம், கோள்களலிருந்து வான்காந்தம்.
இந்த நான்கி உணவின் மூலம் அதிக அளவில் உயிர்த்துகள்களையும் இறைத்துகள் எனும் சீலகாந்தத்தையும் பெறுகிறோம். எனவே உயிர் வாழ்க்கைக்கு உணவும் நீரும் மிக அவசியமாகின்றன.
இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் அடர்த்தி நிலை வேறுபடும்.


அறிவுக்கும், உடலுக்கும் உகந்த விகிதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும். உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்து விட்டால், மற்ற மூன்று வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். அப்படித் தடுத்து விடுவதால் சில குறைபாடுகள் உண்டாகின்றன.

பசித்துப் புசி:

அடுத்த முறை உணவு உண்ணுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் உணவில் அளவுமுறை. அவ்வாறு பசி இருந்தால் அந்த நேரத்தில் வயிற்ல் உணவு இல்லாததால், உணவிலிருந்து சீவகாந்த ஆற்றலைப் பெற முடியவில்லை. அதனால் உடல் தானாகவே காற்றிலிருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து, பூமியின் கதிரியக்கத்திலிருந்து சீலகாந்த ஆற்றலை எடுத்துக் கொள்ள முடிகிறது.

அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. இந்த வான்காந்த அலைகள் உணவிலிருந்து வரக்கூடிய ஆற்றலை விட தூய்மையானதாக இருக்கும் என்று ஞானியர்கள் உணர்ந்து விளக்கியுள்ளார்கள்.

இதையே தான் "பசித்துப் புசி" என்று முன்னோர்கள் சொன்னார்கள். அரை வயிறு உணவு, கால் வயிற நீர்ப் பொருள், கால் வயிறு வெறும் வயிறு என்றும் சொல்லியுள்ளார்கள்.

உணவு உண்ணும்போது அரைவயிறு உணவும், கால் வயிறு நீர்ப்பொருளும் கொள்ளுதலே நல்லது. மீதமுள்ள கால்வயிறு அளவு வெற்றிடமாக இருப்பதே சிறந்ததாகம். இதனால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உயிருக்கேற்ற ஆற்றலாக மாற வாய்ப்பு அதிகரிக்கும். வயிறு கொள்ளும் அறவு முழுமையாக உணவை நிரப்பி விட்டால் உணவு முழுமையாகச் சீரணிக்க முடியாது. சத்துப்பொருட்களும் முழுமையாகப் பிரிக்கப்பட்டு உடலாற்றலாக மாற்றுவதும் பாதிக்கப்படுகிறது.

வயிறு எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். இப்பழக்கத்தினால் உணவு கொஞ்சம் குறைந்து விட்டாலும், ஏதோ இழந்து விட்ட மாதிரி இருக்கும். உணவைப் போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கின்ற வரைக்கும் மனம் நிறைவு அடையாது. இப்பழக்கத்தை மாற்ற வேண்டும்.

புலால் உணவு

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிக்கு சிறுவயது முதலே மாமிச உணவு உட்கொள்ளும் பழக்கம் பிடிக்காமல் இருந்தது. ஆயினும், குடும்பத்தில் அப்பழக்கம் இருந்ததால் அதை அடியோடு விட முடியவில்லை. ஒருமுறை மகாபலிபுரத்திற்குத் திருவிழாவிற்காகத் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். திருவிழாவில் ஒரு புத்தகக் கடை இருந்தது. அதில் இருந்த "புலால் உணவின் கேடுகள்" என்ற சித்தர் புத்தகம் அவரது கண்ணில் பட்டது. அதை ஒன்றே காலனா (8 புதிய பைசா) கொடுத்து வாங்கினார். உடனே அதைப் படிக்கத் தொடங்கினார். அதில் அவரது உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு கவி.

"அம்மா வெனவலற ஆருயிரைக் கொன்றருந்தி
இம்மானிட ரெல்லாம் இன்புற் றிருக்கின்றார்
அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும்
பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவதே!.

மாபெரும் தவசியாயினும், ஓர் ஆடு அல்லது மாடு தன்னைப் பிறர் கொல்லும்போது வெளியிடும் "அம்மா" எனும் ஓசையைக் கேட்டு விட்டால், அதை அக்கொடுந்துன்பத்திலிருந்து விடுவிக்காமல், அவ்விடத்தை விட்டு அகன்று போனால் அவருக்கு பயங்கரமான நரகம் கிட்டும். அப்படியென்றால் அக்கொலைச் செயல் மூலம் கிடைத்த புலாலை உண்டவர்கள் எத்தகைய பாவத்துக்கு உள்ளாவர்கள்? என்பதே இந்தக் கவியின் கருத்து.

அதுவரையில் தெரியாமல் மாமிச உணவு உண்டு ஏற்றுக் கொண்ட பாவங்களை மன்னிக்கும்படி வேண்டினார். கண்ணீர் விட்டு அழுதார். அன்று புலால் உண்ணா நோன்பை ஏற்றார். இதைப் படித்தவுடன் நீங்களும் மாற வேண்டும் என்றில்லை. ஆனால், இதைப்பற்றி முழுமையாக தெரிந்து மாறவில்லையென்றால் அது துன்ப வாழ்வையே தரும்.

வறுமை

அருட்தந்தை வேதாத்திரி சிறுவயது முதலே வறுமையில் வாடி வளர்ந்தவர். வறுமையால் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லில் அடங்காது. பிற்காலத்தில் நன்கு முன்னேறிய நிலையில் அலுவலகத்திற்கு செல்ல பேருந்திற்காக மந்தைவெளி தபால் ஆபிசிற்கு எதிரில் நின்றிருந்தார். அப்போது செருப்பு அறுந்துவிட்டது. எப்போதாகிலும் அவரது செருப்பு அறுந்துவிட்டால் அங்கு ஒரு சக்கிலி இருப்பார் அவர்தான் தைத்து தருவார். அன்றும் அதே மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தார். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது.

'ஏனப்பா' காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா? எனக் கேட்டார். இல்லை என்று சொன்ன அவன் "நேற்றிரவு கூட சாப்பாடு கிடையாது சாமி" என்றான். பின் அவனுக்கு அறையனாவுக்கு பதில் ஒர் அணாவை அவனுக்கு கொடுத்து விட்டு சென்றார். "நேற்றிரவு கூட சாப்பாடு கிடையாது சாமி" என்னும் சொல் மகரிஷியின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. பட்டினியின் கொடுமையை பற்றி சிந்தித்தார். உலக மக்களில் இதுபோல் எத்தனை பேர் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாற்ற முடியும்? வறுமை ஒழிய என்ன செய்ய வேண்டும் என சிந்தித்தார்? இதனால் 23 வயதிலிருந்து இரவு உணவைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்.

சான்றோர்களே!
,
அது மகானுக்கு சாத்தியம். நமக்கு.

No comments:

Post a Comment