Saturday, July 9, 2011

அருள்குரு ஸ்ரீ கோரக்கர்








கோரக்கர் - அறிமுகம்
அண்டசராசரங்களும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு காகபுஜண்டரின் எண்ணற்ற சீடர்களுள் ஒருவர் கோரக்கர். இந்த சித்தர் கொல்லிமலையின் அதிபதியாவார் (கொல்லிமலையானது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது). பதினெண்சித்தர்களில் மிகப்பெருமை பெற்றவர் இவர். பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட மிக உயர்ந்த உயிர்மருந்துகளைத் தயாரித்த சித்தர் இவர் மட்டுமே. அட்டமாசித்திகளையும் பூரணமாகப் பெற்றவர் இவர். "கஞ்சா" என்னும் மூலிகையை அடிப்படை குருமூலிகையாகக் கொண்டு மிக உயர்ந்த மருந்துகளைத் தயாரித்து வைத்தியம், வாதம், யோகம், மற்றும் ஞானம் போன்றவழிகளை உலகிற்குப் பூரணமாக உணர்த்தியவர் கோரக்கரே! எனவே தான் கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்கிற தனிப்பெயரொன்றுண்டு.
பல சித்தர்கள் தேவரகசியங்களை வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்ததை அறிந்த பதினெண்சித்தர்களின் தலைவராக விளங்கக்கூடிய அகத்தியர், அனைத்து சித்தர்களையும் ஒன்றுகூடி அவர்கள் எழுதிய அனைத்து ஓலைச்சுவடிகளையும் கைப்பற்றி ஒரு பேழைக்குள் வைத்துப்பூட்டி ஒரு பெரும் பாறையில் வைத்து மூடிவிடும்படி கோரக்கருக்கு கட்டளையிட்டார். அவ்வாறே, அகத்தியரின் வார்த்தையை மதித்த கோரக்கர் பெரும்பாறையொன்றினுள் அனைத்து ஓலைச்சுவடிகளையும் அடைத்து மறைத்து வைத்துவிட்டு அதன் சாவியை மட்டும் (திறவு கோல்) தானே வைத்துக் கொண்டார். எனவே தான் தற்காலத்தில் சொற்ப அளவில் சித்தர் நூல்கள் உலாவிக் கொண்டு வருகின்றன. பிரம்ம சுவடிகளைக் காண விரும்பும் சித்தர்களுக்கு வசதியாக அவர்களுக்கு மட்டும் "சூட்சுமத்திறவுகோல்" மந்திரத்தை கோரக்கர் உபதேசித்தார். எனவே, இன்றளவும் குருமுகாந்திரமாக தீட்சை பெற்று சித்தரானவர்கள் கோரக்கரை வழிபட்டால்தான் சுருதியின் உண்மை நிலையை உணரமுடியும் என்கிற நிலை சித்தர்களின் சாபத்தால் விளங்கிவருகின்றது.


கோரக்கர் குண்டம்:

கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான் ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் "கோரக்கர் குண்டம்" என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார்.


கோரக்கரின் நூல்கள்:

கோரக்கர் பலநூல்களை எழுதியுள்ளார், அவரது நூல்கள் பல வைத்தியம், வாதம், யோகம் மற்றும் ஞானம் என்னும் நான்கு பாடப்பிரிவுகளை அடிப்படியாகக் கொண்டதாகும். மானிடரால் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேரிய அவரது நூல்கள் பின்வரும் நான்கு நூல்கள் மட்டுமே.
1. கோரக்கர் சந்திரரேகை.
2. கோரக்கர் ரவிமேகலை.
3. கோரக்கர் முத்தாரம்.
4. கோரக்கர் மலைவாகடம்.


கோரக்கரின் கர்மசித்தி மூலமந்திரம்


" ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீகோரக்க தேவாய சர்வசித்தர் அனுகிரகாய தேவாய நமஹ "


கோரக்கரின் ஞானசித்தி மூலமந்திரம்


" ஞானபிரம்ம ரூபமயம்
ஆனந்தசித்தி கர்மமயம்
அமிர்தசஞ்சீவி ஔடதமயம்
கோரக்கம் உபாஸ்மகே!"


(..... from our friendly site.......)

No comments:

Post a Comment