Thursday, July 21, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் 6


புண்ணியம் திரும்ப வரும்
**********************
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்கும்”
ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறுபயிர்களைப் பயிரிட முடியும்.
கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான்.
இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான கணக்குக்காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.
அவர் ஏற்கெனவே ஒரு பணக்காச செட்டியாரையும் ஆச்சாள்புரத்துக்கார்ர் ஒருவரையும் ஏமாற்றியவர்.
அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.
ஏமாற்றி என்ன பயன்?
அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.
அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.
உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப몮 பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.
முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
இறைவனில் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒருரூபாயைத்தவறிப் போட்டுஇட்டால், குளம் வற்றியுத்ம அது உன் கைக்கே கிடைக்கிறத - அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.
ஒரு நடைபாதையில் நீ கணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் எசஞ்சிலைத் துப்பி விட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.
ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்கார்ர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.
அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
‘உண்மையே தெய்வம்’ ‘ அனபே தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.
‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான்.
காலங்களை நிர்ணயிக்கின்வனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
மத்த்துறையை ‘ஆத்மார்த்தத்துறை என்பது அதனால்தான்.
ந்தியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!
அவற்றுக் உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவற், தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!
ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.
அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.
‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.
ஊன்றிய அம்பை எடுத்தார்.
அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.
பூமிக்குள்ளிருந்த தேர்க்குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.
தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
ராம்பினான் கபண்கள் கலங்கிவிட்டன்.
“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.
அதற்குத் தேரை சொன்னது;
“பெருமானே! யாராவது எனக்குத்துண்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”
ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”
தேரை சொன்னது:
“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”
தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்காதே.
சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான்.
திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று.
அந்தத்தவற்றைக்கடவுள் மனிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?
என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.
ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.
எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.
சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.
இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.
ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?
‘தர்ம்ம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.
ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைதுக்கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான த்த்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.
சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமத்த்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.

பகவத் கீதை 5


உயர்ந்த செயலின் ரகசியம்

கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உ
தேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.

“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்), பற்றின்றியும் யோகத்தில் உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும் செயல் புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.

தனஞ்செயா, செயல் பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது. ஆகையால் பற்றற்ற நிலையையே தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது

பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த ஆனந்த நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத் தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல் புரிய ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை என்பதும் ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் என்பது விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது. விளைவில்லாத செயல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே விளைவும் மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை. விதைத்தது அவரை என்றால் விளைவது துவரையாக முடியாது. எனவே அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற கவலையில் ஆழ்வது அர்த்தமற்றது.


ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மன ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல் திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனது ஆற்றலும், அறிவுக்கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த செயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற விடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக நிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல் செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது.

ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த செயலிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன் கலையில் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில் அவனுக்கு கிடைக்கக் கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள் இதை எப்படி விமரிசிப்பார்கள் என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது பாதிக்காமல் இருக்காது. அது ஒரு உன்னதப் படைப்பாக இருக்காது.


அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும், உபநிடதங்களும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை எல்லாம் படைத்தவர்கள் எந்த பாராட்டையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது போல தங்கள் பணிகளைச் செய்தது தான். இவை எவற்றிலும் அதைப் படைத்தவர்கள் பெயர் இல்லை. எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய முனிவர்களுக்கோ இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக வந்திருக்கின்றன என்கிற ஆத்ம திருப்தி மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய செயலுக்கும் பெரிய விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில் அவர்கள் சிரமங்கள் எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த படைப்புகள் முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு இருக்கும். எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே கும்மிருட்டு கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை எல்லாவற்றிலும் வியக்க வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள் ஒன்றிலும் கூட முன்பு குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை. (காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து மறைந்து கிடந்த அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன. பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு வந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி தள்ளியே நின்று தான் பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும் ஆசாமிகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக் குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது குறைந்து போனால் கூட அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள் செய்யப் போகிற அடுத்த செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ் கிடைப்பதற்கேற்ற படி உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே தான் பலன் மீது அதீத அக்கறை வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன் தானாக வரும் என்கிறது கீதை.


குரானில் ஒரு வாசகம் வருகிறது. “என்னுடைய ஊதியம் அல்லா ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன் தருபவன் இறைவன். இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து கணக்கை சரி செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும், விளைவையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய் கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ வெளிப்படையான அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு நிருப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச் சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக் கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து செல்லலாம் என்கிறது கீதை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும் விளக்கமாகப் பார்ப்போம்.)

தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன 18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?

திருவிளையாடல்


தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர  பாண்டியன். அந்த மன்னனின் மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான். ஆம்... அவளே தடாதகை பிராட்டி எனப்படும் மீனாட்சி. அவள் மலையத்துவஜனின் மகளாகப் பிறந்தது சுவை மிக்க வரலாறு. மலையத்துவஜனின் மனைவி காஞ்சனமாலை. இவள் இவ்வுலகில் தோன்றிய உயிர்களில் வித்தியாசமானவள். மனித நிலையில் இருக்கும் நம்மை, நாளையே கடவுள் அழைத்து, இன்று முதல் நீ தேவலோகத்தில் தேவனாக இருப்பாய், என்று சொன்னால், நாம் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. மனித நிலையில் தேவநிலைக்கு உயர்வதையே உயிர்கள் விரும்பும். ஆனால், காஞ்சனமாலை இதற்கு நேர் எதிரானவள். அவள் தனது முந்தையப் பிறவியில் மனித குலத்தை விட உயர்ந்த கந்தர்வ குலத்தில் பிறந்தாள். அந்தப் பிறவியில் இருந்து, தன்னை மனித குலத்திற்கு தாழ்த்திக் கொண்டாள். அப்போது அவளது பெயர் வித்யாவதி. இவளது தந்தை விசுவாவசு. இவளுக்கு அம்பிகையின் மீது பிரியம் அதிகம்.
தந்தையே! அம்பிகையை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற வேண்டும், தாங்கள் தான் அதற்கு உதவ வேண்டும், என்றாள். விசுவாவசு அவளுக்கு சக்தி மந்திரத்தை உபதேசித்து, அதையே தொடர்ந்து பக்தியுடன் சொல்லி அம்பாளைக் காணும் பாக்கியத்தை  பெறலாம் என்றார். அடுத்து அம்பாளைத் தரிசிக்க உகந்த இடம் எது எனக் கேட்டாள் வித்யாவதி. பூலோகத்தில் துவாதசாந்தம் என்று புகழ் பெற்றதும், கடம்பமரங்கள் நிறைந்த வனத்திலுள்ளதுமான மதுரை என்னும் புண்ணிய ÷க்ஷத்ரத்தில், யார் ஒருவர் அம்பாளைத் தரிசிக்கிறார்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்,என்றார் விசுவாவசு. தந்தையிடம் அனுமதி பெற்று கந்தர்வக்கன்னியான வித்யாவதி பூலோகம் வந்தாள். மதுரை ÷க்ஷத்ரத்தில் குழந்தை வடிவில் அருள்பாலித்த சக்திதேவியை வணங்கி வந்தாள். தந்தை உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது சொன்னாள். ஒரு ஆண்டு வரை கடுமையான விரதம் அனுஷ்டித்த அவளது பக்திக்கு அம்பாள் இரங்கினாள். வித்யாவதியின் முன்பு மூன்று வயது குழந்தையின் வடிவில் காட்சி தந்தாள். தாயே என அழைத்தாள். வித்யாவதி நெகிழ்ந்து போனாள்.
அம்மா மீனாட்சி! நான் உன்னை குழந்தையாகக் கருதி என் மனதால் பாராட்டினேன், சீராட்டினேன், நீராட்டினேன், அழுது அடம்பிடித்த உன்னை பொய்க்கோபம் கொண்டு கண்டித்தேன், பாலூட்டினேன், ஜடை முடிந்து பின்னலிட்டேன். இத்தனையும் கற்பனை தான் என்றாலும், இந்த எளிய பக்திக்கும் அகமகிழ்ந்து காட்சி தந்தாயே! பிறந்த பயனை அடைந்தேன், என்றாள் வித்யாவதி. குழந்தை மீனாட்சி சிரித்தாள். தாயே! பக்தர்கள் எனக்கு கொண்டு வரும் ஆடம்பர காணிக்கைகளால் நான் மகிழ்வதில்லை. கால் கடுக்க காத்திருப்பதால் மட்டும் என்னை அடைந்து விட முடியாது. இருந்த இடத்தில் இருந்தபடியே, உன்னைப் போல் மானசீகமான பக்தியை செலுத்துவதையே நான் விரும்புகிறேன். அவர் களுக்கு காட்சி கொடுப் பதையே பெருமையாகக் கருதுகிறேன். சரி...நீ ஏதாவது என்னிடம் கேள். வரம் தருகிறேன், என்றாள். தெரிந்தோ தெரியாமலோ உன்னை என் பிள்ளையாகக் கருதிவிட்டேன். அந்தப் பிணைப்பை என்னால் விட முடியாது. இந்த நிலை தொடர வேண்டும். இதைத் தவிர என்னிடம் எந்தப் பிரார்த்தனையும் இல்லை, என்றாள் வித்யா. இதுகேட்டு அகம் மகிழ்ந்த மீனாட்சி, அம்மா! அடுத்த முறை நீ மானிட ஜென்மம் எடுப்பாய். சோழராஜனின் மகளாகப் பிறக்கும் உன்னை, மலையத்துவஜ பாண்டியன் திருமணம் செய்வார்.
உங்கள் இல்லத்தில் நான், இதே மூன்று வயதுக் குழந்தையாய் அவதரிப்பேன், என்று சொல்லி வித்யாவதிக்கு நல்லாசி கூறி மறைந்தாள். வித்யாவதி நினைத்திருந்தால், கந்தர்வ நிலையில் இருந்து தேவநிலைக்கு உயர்ந்து சக்திலோகத்திலேயே இருந்திருக்கும்படியான வரம் கேட்டிருக்க முடியும். ஆனால், அவள் மானிடப்பிறவி பெற்றதன் மூலம், தெய்வத்திற்கே தாயான பெருமையைப் பெற்றாள். ஈசனுக்கு மாமியாராகும் தகுதியும் கிடைத்தது. மீனாட்சியின் அருள்வாக்கின் படி, அவள் சோழமன்னன் சூரசேனனின் மகளாகப் பிறந்தாள். மலையத்துவஜ பாண்டியனை மணம் செய்தாள். நீண்ட காலமாயிற்று. அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பிறகு நாடாள வாரிசு இல்லையே என்ற கவலை மன்னனை உருக்கியது. அவன் பல யாகங்கள் செய்தான். கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய் வித்தான். கடைசியாக, அஸ்வமேதயாகம் செய்வதென முடிவு செய்தான். இதன்மூலம் சகல லோகங்களும் தனக்கு அடிமை படுவதுடன், குழந்தை பாக்கியமும் சித்திக்கும் எனக் கருதினான். யாக ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது. வெற்றிகரமாக யாகம் நடந்து விடும் என்ற நிலை வந்ததும், தேவ லோகத்தில் இருந்த இந்திரனுக்கு பயம் வந்து விட்டது. யாகம் வெற்றி பெற்றால், மலையத்துவஜன் இந்திரலோகத்தையே கைப்பற்றி விடுவான். தன் பதவி போய்விடுமே என்று கவலையடைந்தான். ஒருநாள், மலையத்துவஜனின் முன்பு தோன்றினான்.
ஆச்சரியமடைந்த மலையத் துவஜன், ஐயனே! தாங்களே எங்கள் மதுரை நகருக்கு நேரில் வந்தீர்களா! நான் என்ன பாக்கியம் செய்தேன், என்று உபசார வார்த்தைகள் சொல்லி வரவேற்றான். இந்திரன் அவனிடம், மாமன்னனே! குழந்தை வேண்டும் என்பதே உனது கோரிக்கை. அதற்கு அஸ்வமேதயாகம் பலன் தராது. நீ பல யாகங்கள் செய்தாலும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தவறிவிட்டாய். அந்த யாகத்தை நடத்து. உனக்கு பராசக்தியே மகளாக அவதரிக்க காத்திருக்கிறாள். முற்பிறப்பில், உன் மனைவி செய்த புண்ணியத்தால் கிடைத்துள்ள பாக்கியம் இது, என்று சொல்லவும், அஸ்வமேத யாக திட்டத்தைக் கைவிட்டு, புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்கு ஒப்புக் கொண்டான் மன்னன். இந்திரனும் பயம் நீங்கி விடை பெற்றான். புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கியது. இந்த தகவல் பட்டமகிஷி காஞ்சனமாலைக்கும் தெரியவரவே, அவளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. கண்டோர் வியக்கும் வேள்விச்சாலை ஒன்றை அமைத்தான் மலையத்துவஜன். யாகம் கோலாகலமாகத் துவங்கியது. நாட்டுமக்கள் தங்கள் வாரிசை எதிர்பார்த்து ஆவலுடன் யாக பூஜையில் கலந்து கொண்டனர். மலையத்துவஜனும், காஞ்சனமாலையும் புனிதநீராடி, வேப்பிலை மாலை சூடி யாக குண்டத்தின் முன் அமர்ந்தனர். யாக குண்டத்தில் பல்வகை பொருட்கள் போடப் பட்டன. குடம் குடமாக நெய் ஊற்றப்பட்டது. வேள்விப்புகை மதுரை நகரெங்கும் பரவியது. இந்திரன் அந்த யாகத்தின் பலனைப் பெற்றுக் கொண்டு, அதற்கேற்ப பலனும் அளித்தான். அப்போது யாகசாலையில் பூமழை பொழிந்தது. மன்னனுக்கு வலது தோளும் வலது கண்ணும் துடித்தன.
ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால் சுபமான நிகழ்ச்சிகள் ஏற்படும். பெண்களுக்கு இடது கண் துடித்தால் அது சுபசகுனம். அதற்கேற்ப, காஞ்சனமாலைக்கு இடது கண் துடித்தது. அப்போது அந்த இடமே பிரகாசமானது. யாக குண்டத்தில் எரிந்த அக்னியின் மத்தியில், பளிச்சென வெளிச்சம் உண்டானது. அதன் மத்தியில் பச்சை நிறத்தில் மூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தை, நின்ற நிலையில் தோன்றியது. ஆம்... தெய்வத்தாயான மீனாட்சி பூமியில் அவதரித்து விட்டாள். காஞ்சனமாலை என்னும் பெண் தெய்வம் மதுரை மக்களுக்கு கொடுத்த மற்றொரு தெய்வம் அவள். மதுரைக்கு போகிறவர்கள் மீனாட்சியை மட்டும் வணங்கினால் போதாது. அவள் இந்த பூமியில் அவதரிக்க காரணமான காஞ்சனமாலையையும் வணங்கி வர வேண்டும். கோயில் கிழக்குவாசல் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் எழுகடல் தெருவில் இந்த அம்மைக்கு தனிக் கோயில் இருக்கிறது. அந்தக் குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தாள் காஞ்சனா. அவளது மார்பில் தன்னையறியாமல் பால் சுரந்தது. அனலில் உதித்த அந்தச் சிறுமியின் கண்கள் கயல் என்னும் மீனுக்கு சமமாக நீண்டு பெரிதாக மிக அழகாக இருந்தது. என் அம்மையே, அங்கயற்கண்ணியே என அவள் அழைத்தாள். அம்+கயல்+கண்ணி என்பதே அங்கயற் கண்ணி ஆனது. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன். கண்ணி என்றால் கண்களையுயைடவள். அங்கயற்கண்ணி என்றால் அழகிய கண்களை உடையவள் என்று பொருள். இன்னொரு பொருளும் இதற்கு உண்டு. மீனுக்கு தனது பார்வையாலேயே குஞ்சுகளுக்கு இரையூட்டும் சக்தியுண்டு. அது தனது கண்களை இமைப்பதே இல்லை. நாமே கூட பார்க்கலாம். மீனை தண்ணீரை விட்டு வெளியே தூக்கிப் போட்டு அது இறந்துவிட்டாலும் சரி தான். அதன் கண்கள் மட்டும் திறந்தே இருக்கும். ஆக, ஒரு கணம் கூட இமைக்காமல் மக்களை பாதுகாப்பவள் என்ற பொருளும் இதற்குண்டு. அதனால் தான் மீனின் ஆட்சி மதுரையில் நடக்கிறது. அன்னையையும் மீனாட்சி என்கிறோம்.
மலையத்துவஜன் மகளை வாரியணைத்தான். அதன் பட்டுக்கன்னங்களில் முத்தமழை பொழிந்தான். பட்டுத்துணி ஒன்றை குழந்தை மீது போர்த்தி மார்பில் சுரந்த பாலை தன் மழலைக்கு ஊட்டி பேரின்பம் கண்டாள் காஞ்சனமாலை. பாலூட்டி முடித்ததும், தன் குழந்தையின் முக அழகைப் பார்த்து பூரித்துப் போன காஞ்சனையின் கண்கள் சற்றே கீழிறங்க, அப்படியே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டாள். என்ன இது! உலகில் யாருக்குமே இல்லாத அதிசயம். ஐயோ! குழந்தைக்கு இரண்டு மார்புகள் தானே இருக்க வேண்டும், மூன்றாவதாக ஒரு தனம் இருக்கிறதே. இதென்ன கொடுமை. ஐயோ பராசக்தி! நீயே என் மகளாகப் பிறந்தாய். உன்னைப் பெற்றுமா நான் துன்பத்தில் ஆழ வேண்டும்! சற்றுமுன் வரை இருந்த இன்பம் ஒரே நொடியில் தூளாகி விட்டதே, காஞ்சனா புலம்ப, மலையத்துவஜன் பதட்டத்துடன் என்ன ஏதென்று விசாரித்தான். விஷயத்தை அறிந்ததும் அவனது முகமும் சோகத்தில் ஆழ்ந்தது. ஆனாலும், அவர்கள் இதை வெளிப்படுத்த வில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சன்னதியில் குழந்தையை கிடத்தி, ஐயனே, மழலைச்செல்வம் இல்லாத எங்களுக்கு குழந்தை தந்தாய். ஆனால், பிறந்த குழந்தை இப்படியிருக்கிறதே! இதனால், அவளது எதிர்காலமே பாதிக்குமே! என்ன செய்வேன்! என உருக்கமாக சுவாமியிடம் பேசினான் மலையத்துவஜன். அப்போது அசரீரி ஒன்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில் ஒலித்தது.
மலையத்துவஜா, காஞ்சனா! நீங்கள் இருவரும் இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். இவள் பருவம் எய்தி, திருமணம் நடக்க இருக்கும் வேளையில், இந்த தனம் மறைந்து விடும். எனவே இதுபற்றி நீ கவலை கொள்ள வேண்டாம். இவளுக்கு தடாதகை என்று பெயரிடுங்கள், என்றது. இறைவனே உத்தரவாதம் கொடுத்தபிறகு என்ன பயம். தம்பதியர் பயம் நீங்கி சுவாமிக்கு நன்றி தெரிவித்தனர். குழந்தை பிறந்த விழா பாண்டியநாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டது. மன்னன் தன் மக்களுக்கு தானதர்மம் செய்தான். காஞ்சனமாலை சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவைகளை தானமாக அளித்தாள். நீண்டதூரம் வரிசையில் நின்ற மக்கள் இந்த தானத்தைப் பெற்று மகிழ்ந்தனர். மன்னர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் மக்களுக்கு தாராளமாக சலுகைகள் கிடைக்கும். மலையத்துவஜனின் ஆட்சியில் வரிகள் குறைக்கப்பட்டன. கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். புலவர்கள் கவுரவிக்க பட்டனர். பல இடங்களில் மக்களின் தாகம் தீர்க்கவும், விவசாயத்தை அதிகரிக்கவும் குளங்கள் வெட்டப்பட்டன. மீனாட்சி பிறந்தவுடனேயே பாண்டியநாட்டு மக்கள் மிகுந்த மகிழ்வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். மன்னன் பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தான். இறைவனின் உத்தரவுப்படி தடாதகை பிராட்டியார் என்று பெயர் சூட்டினர். தடாதகை என்றால் என்ன? அவள் ஏன் மூன்று தனங்களுடன் இந்த பூமியில் பிறந்திருக்க வேண்டும்? தடாதகை என்றால் எல்லா வகையிலும் மாறுபட்டவள் என்று பொருள். அவள் முக்கண்ணனாகிய சிவனுக்கு வாழ்க்கைப்பட இருந்தாள்.
அவருக்கு தன்னை வித்தியாசமான முறையில் காட்டிக்கொள்ள அவரைப் போலவே மூன்று தனங்களுடன் பிறந்தாள். தமிழ் வளர்த்த மதுரையை ஆளப் போவதால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழைக் குறிக்கும் வகையில் மூன்று தனங்களுடன் பிறந்தாள் என்றும் சொல்வார்கள் அறிஞர்கள். அகரம், உகரம், மகரம் (அ,உ,ம) என்னும் எழுத்துக்களின் கோர்வையே ஓம் என்னும் பிரணவமாகும். அவளை பிரணவத்தின் வடிவம் என்றும் குறிப்பிடலாம். இப்படி, செல்வாக்கோடு பிறந்த மகள் செல்வாக்கோடு வளர்ந்தாள். அந்த மகள் பருவத்துக்கு வந்ததும் அவளை மதுரையின் மகாராணியாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான் மலையத்துவஜன். அவளது ஆட்சியில் காலாகாலத்தில் மழை பொழிந்தது. நீதி தவறாத ஆட்சி, தர்மத்தில் உயர்ந்த ஆட்சி என்று மக்கள் புகழ்பாடினர். மலையத்துவஜ மன்னன் தனது மகளிடம், நீ எட்டுத்திக்கும் சென்று எல்லா நாடுகளையும் உனதாட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும், தேவர் உலகமும் உனக்கு அடிமைப்பட வேண்டும். உன்னிலும் வீரமிக்கவர் உலகில் இல்லை என்ற நிலை வர வேண்டும், என்றான். தடாதகை பிராட்டியாரும் அவ்வாறே செய்தாள். இதனிடையே மலையத்துவஜமன்னன் நோய்வாய்ப்பட்டான். தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த அவன் மந்திரி சுமதியை அழைத்து,மந்திரியாரே! அரசியாரைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். இதை உம்மைத் தவிர யாருக்கும் தெரிய வேண்டாம், எனச் சொல்லி, மூன்று தன ரகசியத்தையும், கயிலாசநாதனாகிய சிவபெருமான் அவள் முன் தோன்றியதும், ஒரு தனம் மறையுமென்பதையும், அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்ற விபரங் களையும் சொன்னான். பின்னர் அவனது உயிர் பிரிந்தது.

கந்தபுராணம் பகுதி 9.2



அனைத்தும் அறிந்த முருகன், அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல, பெண்களே ! நீங்கள் யார் ? எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் ? என்றார். ஐயனே ! இந்த அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தாலும், தங்களைப் போல் கருணையுள்ளவரும், அழகானவருமாக யாருமில்லை. கருணைக்கடலே ! நாங்கள் கேட்கும் வரத்தை எங்களுக்கு மறுக்காமல் தர வேண்டும், என்றனர். அதற்கென்ன தருகிறேனே. என்ற முருகனிடம், அவர்கள் ஏதும் கேட்கத் தோன்றாமல் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றனர். பெண்ணே மாப்பிள்ளையிடம் தன் காதலைத் தெரிவிப்பது என்பது இந்தக்காலத்தில் ஏற்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். முருகப்பெருமானே காதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான் ! அப்பெண்களின் விருப்பத்தை அறிந்த முருகன், அவர்களை அணைத்துக் கொண்டார். கன்னியரே ! என் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை நானறிவேன். ஆனால், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என் பிறப்பின் நோக்கம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்ல ! சூரபத்மனை அழிப்பதற்காக என் தந்தை என்னைப் படைத்தார். மேலும், காதலுக்கு பெற்றவர்கள் அங்கீகாரம் தர வேண்டும். முதலில், பெற்றவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். பெற்றவரைப் பகைத்து ஏற்படும் காதல் நிலைப்பதில்லை. எனவே, நம் காதல் கனிந்து திருமணம் ஆகும் வரை. நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், என்றார். அந்தக் கன்னியர் அவரது திருவடிகளில் விழுந்து, அவரது கட்டளைக்கு அடிபணிவதாகவும், அவரது பணி முடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முருகன் அமிர்தவல்லியிடம், அமிர்தா ! நீ தேவலோகம் செல். தேவலோகத் தலைவன் இந்திரனின் மகளாக வளர்ந்து வா.
உன் சகோதரி சவுந்தர்யா, பூலோகம் சென்று, அங்கே ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சிவமுனிவரின் மகளாக வளர்ந்து வரட்டும். சூரபத்மவதம் முடிந்த பிறகு, உங்களை நான் மணந்து கொள்கிறேன், என்றதும். அப்பெண்கள் மகிழ்வுடன் தலையசைத்தனர். பின்னர் முருகன் தன்வடிவத்தை மாற்றிக் கொண்டு, பாலமுருகனாகி கைலாயம் சென்றார். அவரை அள்ளியெடுத்த பார்வதி, பரமேஸ்வரர் அவரைத் தங்கள் நடுவில் இருத்திக் கொண்டனர். இக்காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் ஓடோடி வந்தனர். காணக்கிடைக்காத சோமாஸ்கந்த வடிவத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தனர். (இப்போது கூட சில கோயில்களில், முருகன் சன்னதி நடுவில் இருக்க, சிவ, பார்வதி சன்னதி இருபுறங்களிலும் இருப்பதைக் காணலாம். தமிழகத்தில் மிகப்பெரிய சோமாஸ்கந்த சன்னதி. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ளது) இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், சிவபெருமானிடம், ஐயனே ! முருகப்பெருமான் தங்களுக்கு பாலனாகவும், வெளியே வந்தால் சுப்பிரமணியராய் விஸ்வரூபம் எடுக்கும் அபார சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார். அவரைக் கொண்டு சூராதிசூரர்களை வேரறுக்க வேண்டும். தேவருலகம் பாதுகாக்கப்பட வேண்டும், என்றனர். ஒருவன் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், அவனிடம் ஏதாவது கேட்டால், உடனே கொடுத்து விடுவான். கணவனின் மகிழ்ச்சியான சூழலைப் பயன்படுத்தி மனைவியும், மனைவியின் மகிழ்ச்சியைப் பயன்படுத்தி கணவனும் காரியம் சாதித்துக் கொள்வார்கள் இல்லையா ? அதுபோல், தேவர்களும் சமயம் பார்த்து கேட்ட கோரிக்கை உடனே ஏற்கப்பட்டது. சிவபெருமான் தன் மைந்தனிடம், முருகா ! உன் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோரை அழிப்பது மட்டுமல்ல. அவனது வம்சத்தில் ஒருவர் கூட இந்த பூமியில் வாழக்கூடாது.
பலலட்சம் அசுரர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிழைத்திருந்தால் கூட உலகிற்கு ஆபத்து. அவர்களை வேரறுத்து விட வேண்டும், என்றதுடன், அவரது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார்.பார்வதிதேவி தன் மகனைத் தழுவி, பாலகனே ! நீ பகைவர்களை அழித்து, வெற்றி வேலனாக திரும்பி வா, என ஆசியளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு, சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். காற்றினும் கடுகிச் செல் என்று சொல்வதை இசைத்தான். காற்றை விட வேகமான ஊடகம் உலகில் வேறு ஏதுமில்லை. எனவே முருகனுக்கு வாயுவே சாரதியாக அமர்த்தப்பட்டான். பிரம்மரிஷி வசிஷ்டரும், தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா, முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள், யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின. சூரர்கள் ஆட்சி செய்யும் மாயாபுரி பட்டணத்தை அடையும் முன்பாக ஒரு பெரிய மலையை படைகள் அடைந்தன. அப்போது, நாரதர் முருகனிடம் சுப்பிரமணியா ! இதை மலையெனக் கருதாதே. அகத்தியரிடம் ஒரு காலத்தில் ஒரு அசுரன் சேஷ்டை செய்தான்.

கந்தபுராணம் பகுதி 9.1



அன்பு மகனே ! நீ கூறுவது வாஸ்தவம் தான். தனக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால், அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மந்திரங்களை பிறரறிய வெளிப்படுத்துபவன், நரகத்தையே அடைவான். ஓம் என்பது சாதாரணமான மந்திரமல்ல. உலகம் உருவாவதற்குரிய ரகசியங்களை உள்ளடக்கிய மந்திரம். சரி... மகனே! அதன் பொருள் எனக்கும் கூட தெரியாது. அதற்காக பிரம்மனைச் சிறையில் அடைத்தது போல் என்னையும் அடைத்து விட மாட்டாயே ! என்று சொல்லிச் சிரித்தார் சிவன். சிவனால் உருவாக்கப்பட்டதும் அவருக்கே மட்டுமே பொருள் தெரிந்த ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தனக்குத் தெரியாதென்று அவர் ஏன் மறைத்தார் தெரியுமா ? அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பாபா பிளாக்ஷீப் ஹேவ் யூ எனி உல் என்ற ஆங்கிலப்பாட்டு மிக நன்றாகவே தெரியும். ஆனால், தெரியாதவர்கள் போல் நடித்து, எல்.கே.ஜி., படிக்கும் தங்கள் குழந்தையைச் சொல்ல வைத்து கேட்பார்கள். காரணம், தங்கள் குழந்தையின் மழலை மழையில் நனைய வேண்டுமே என்பதற்காக, இப்படித்தான் சிவனுக்கும் ஆசை. தனக்கு அதன் பொருள் தெரிந்தாலும், தன் மகனின் வாயால் கேட்டால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் தான். அது மட்டுமல்ல, தன்னை விட தன் மகன் உயர்ந்தவன் என்பதை பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட, வயதில் பெரியவராயினும், தன்னிலும் சிறியவர்களுக்கு சில விஷயங்கள் தெரியுமானால், அதைக் கேட்டறிவதில் தவறு இல்லை என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காக ! இதற்காக கைகட்டி, வாய் பொத்தி, முட்டுக்காலிட்டு, முருகன் ஆசனத்தில் இருக்க, மிகவும் பணிவாக அவரருகில் கீழே அமர்ந்து காதைக் கொடுத்தார். தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தனர், எங்கும் நிசப்தம். இளைஞனாயிருந்த முருகன் பால முருகனாக மீண்டும் மாறினான். தந்தையின் காதில் மந்திரத்தின் பொருளைச் சொன்னான்.
ஆன்மிக உலகம் ஓம் என்ற பதத்திற்கு பல விளக்கங்களைச் சொல்கிறது. இதற்குரிய பொருளாக கணிக்கப்படுவது என்னவென்றால், இந்த உலகமே நான் தான் என்பதாகும். ஆம்...சிவன் தன் ஆத்மாவின் வடிவமாக முருகனைப் பிறப்பித்தார். அவரது ஒட்டுமொத்த சக்தியும் அவருக்குள் அடக்கம் என்று பொருள் சொல்வதுண்டு. பின்னர் கயிலை திரும்பிய சிவன், மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் மனம் மகிழ்ந்தாள். முருகப்பெருமானின் புகழ் வைகுண்டத்திலும் பரவியது. அவனது ஆணையால் தான், திருமால் உலகத்திலுள்ள அரக்கர்களை அழித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் முருகனுக்கு மேலும் பெருமை தந்தது. இதற்காக அவர் தசாவதாரம் எடுத்து வருவதாக சிவனே பார்வதியிடம் சொன்னார். சூரபத்மனை அழிக்க வந்த தன் மருமகனுக்கு தன் சக்தியை வழங்கவேண்டும் என்று விரும்பினார் உபேந்திரன் என அழைக்கப்படும் திருமால் பாற்கடலில் பையத்துயின்ற அந்த பரந்தாமன், ஒருமுறை விழித்துப் பார்த்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கொடிகளை ஒத்த இடையை உடைய அழகிய பெண்கள் வெளிப்பட்டனர். தந்தையே வணக்கம் ! என்ற அப்பெண்களில் முதலாவதாக வந்தவள் அமுதவல்லி, அடுத்து வந்தவள் சவுந்தர்யவல்லி. இருவரையும் உச்சிமோந்த திருமால், என் அன்பு புத்திரிகளே ! நீங்கள் இருவரும், என் மருமகன் முருகனுக்காக பிறந்தவர்கள். அவனின் புகழ் எல்லையற்றது, என்று கூறி முருகனின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட அந்த பெண்களின் உள்ளத்தில், முருகனைப் பார்க்காமலேயே காதல் பிறந்து விட்டது.
தங்கள் அன்புக்காதலனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது. ஒருநாள் அமுதவல்லி, தன் தங்கையிடம் சவுந்தர்யா ! நாம் முருகப்பெருமானுக்காகவே பிறந்திருக்கிறோம். உலகில் வல்லவன் யாரோ, அவனை அடைவதில் பெண்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வீரம்மிக்க ஆண்கள் உலகில் ஆங்காங்கே தான் இருப்பார்கள். தன் பக்கத்தில் இருப்பவனுக்கும், நண்பனுக்கும், சக மனிதனுக்கும் துன்பமிழைப்பவன் வீரன் அல்ல. பிறரது நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிபவன் எவனோ, அவனே சுத்த வீரன். முருகப்பெருமான் தனக்காக அல்லாமல், உலக நன்மை கருதி, சூரபத்மனை அழிக்கப் பிறந்திருக்கிறார். அவர் நம் கணவரானால், நம்மைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யாருமிருக்க முடியாது. அமிர்த சவுந்தர்ய முருகன் என்று அவர் பெயர் பெறுவார். அமுதமாகிய நான் அவருடன் இணைந்தால், அழிவில்லாத புகழ் பெறுவேன். சவுந்தர்யமாகிய நீ அவருடன் இணைந்தால், அவர் இளமைப் பொலிவுடன் திகழ்வார், என்றான். இருவரும் என்றேனும் ஒருநாள், முருகன் தங்களைத் தேடி வருவான் என எதிர்பார்த்தனர். காலம் சென்றதே தவிர முருகன் வரவில்லை. எனவே, இருவரும் தங்கள் அலங்காரங்களைக் களைந்து விட்டு, வெள்ளை பட்டு உடுத்தி, நாணல் காட்டுக்குச் சென்றனர். இடுப்பில் ஒட்டியாணத்துக்கு பதிலாக, நாணல்புல்லை கயிறாகத் திரித்து கட்டிக் கொண்டனர். முருகனின் புகழ்பாடி தவத்தில் ஆழ்ந்தனர். நீண்ட நாட்களாக தவம் தொடர்ந்து. அந்த கன்னியரின் தவத்தை மெச்சிய முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றினார். அப்பெண்கள் பேருவகை அடைந்தனர். என்ன செய்ய வேண்டுமென்பது புரியவில்லை. கைகூப்பி வணங்கினர். ஓடிவந்து, ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்.

Wednesday, July 20, 2011

வேதங்களின் மூலக்கூறுகளாக சித்தர்களின் மகத்துவத்தை உணர்வது

உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள்

Picture
                          உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள்(Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை. நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் கிடைத்துள்ளன. வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிஷத்துக்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவச்செறிவுகள் உபநிஷத்துக்களில்தான் இருப்பதாக மெய்யியலார்கள் எண்ணுகிறார்கள். உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை, சில கிறிஸ்தவ மதத்தின் பைபிள் அளவுக்குப்பெரியவை. சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும் சலிக்காமல் பட்சபாதமில்லாமல் அலசிப் பார்க்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள். மேலும் எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், கேள்விகளிலுள்ள விந்தை பொதியும் மாற்றுத் தத்துவங்களை வெளிக் கொணறுவதும், பிரச்சினையைப் பற்றிப் பல ஆன்மிகவாதிப் பெரியார்கள் சொந்த அனுபவத்தைக்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பதும், உபநிஷத்துகளின் முத்திரை நடை. இதனால் உலகின் எண்ணச்செறிவுகளிலேயே உபநிஷத்துக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கப்படவேண்டியவை என்பது கற்றோர் யாவரின் முடிவு. 

                                உபநிஷத் என்ற வடமொழிச்சொல்லின் பொருள் இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3'. சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது. 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது. 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞாபகமும் ஏற்படுவதைக் குறிக்கிறது.வேதப்பொருள் மூன்று வகைப்படும் அவை கர்ம காண்டம்,உபாசன காண்டம்,மற்றும் ஞான காண்டம். இவற்றுள் ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. ஆன்மாவைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக் கொள்ளலாம். இவ்விதம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகோபநிஷத்தில்ராமபிரான்ஆஞ்சனேயருக்குச் சொல்கிறார்.அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர்.உபநிஷத்பிரம்மேந்திரர் (18வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார். பாரதத்தில் தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருவரும் உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப்பற்றி விரிவாக்கம் தரவோ, ஒரு சில உபநிஷத்துக்களுக்காவது உரையோ விளக்கமோ எழுதவோ தவறியதில்லை.108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:

முக்கிய உபநிஷத்துக்கள். அவையாவன:ஈசம் (சுக்ல யஜுர்வேதம் - வாஜஸனேய சாகை) 
கேனம் (சாம வேதம் - தலவகார சாகை) 
கடம் (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை) 
ப்ரச்னம் (அதர்வணவேதம்) 
முண்டகம் (அதர்வணவேதம்) 
மாண்டூக்யம் (அதர்வணவேதம்) 
ஜதரேயம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை) 
தைத்திரீயம் (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை) 
பிரகதாரண்யம் (சுக்லயஜுர்வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை) 
சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)

24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற 24 உபநிடதங்கள் உள்ளன.  ரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:ஆத்மபோதம்கௌஷீதகீமுத்கலம்கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:அக்ஷிஏகாக்ஷரம்கர்ப்பம்பிராணாக்னிஹோத்ரம்சுவேதாசுவதரம்சாரீரகம்சுகரகசியம்ஸ்கந்தம்ஸர்வஸாரம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:அத்யாத்மம்நிராலம்பம்பைங்களம்மந்த்ரிகாமுக்திகம்ஸுபாலம்
சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:மஹத்மைத்ராயணீவஜ்ரஸூசிசாவித்ரீ
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:ஆத்மாசூர்யம் 

20 யோக உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களைராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. யோக உபநிடதங்கள் என்ற  20 உபநிடதங்கள் உள்ளன. ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று: நாதபிந்து 
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை பத்து: அமிருதநாதம் அமிருத பிந்து க்ஷுரிகம் தேஜோபிந்து தியான பிந்து பிரம்ம வித்யாயோக குண்டலினீ யோகதத்வம் யோகசிகா வராஹம் 
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை நான்கு: அத்வயதாரகம் த்ரிசிகிப்பிராம்மணம் மண்டலப்பிராம்மணம் ஹம்ஸம் 
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு: ஜாபலதர்சனம் யோகசூடாமணி 
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று: பசுபதப்பிரம்மம் மஹாவாக்யம் சாண்டில்யம்

17 சன்னியாச உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களைராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சன்னியாச உபநிடதங்கள்என்ற 17 உபநிடதங்கள் உள்ளன.  ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:நிர்வாணம்
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை மூன்று:அவதூதம்கடருத்ரம்பிரம்மம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:ஜாபாலம்துரீயாதீதம்பரமஹம்ஸம்பிக்ஷுகம்யாஞ்ஞவல்க்யம்சாட்யாயணி
சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:ஆருணேயம்குண்டிகம்மைத்ரேயீஸன்னியாஸம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:நாரத பரிவ்ராஜகம்பரப்பிரம்மம்பரமஹம்ஸ பரிவ்ராஜகம்

14 வைணவ உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களைராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. வைணவ உபநிடதங்கள் என்ற 14 உபநிடதங்கள் உள்ளன.  கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:கலிஸந்தரணம்நாராயணம்சுக்ல 
யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
தாரஸாரம்
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:அவியக்தம்வாஸுதேவம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:கிருஷ்ணம்,கருடம்,கோபாலதாபனீத்ரிபாத்விபூதி மஹாநாராயணம்தத்தாத்ரேயம்நரசிம்மதாபனீராமதாபனீராமரஹஸ்யம்ஹயக்ரீவம்

14 சைவ உபநிடதங்கள் உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களைராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சைவ உபநிடதங்கள் என்ற 14 உபநிடதங்கள் உள்ளன.  ரிக்வேதத்தைச் சார்ந்தவை ஒன்றுஅட்சமாலாகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:காலாக்னிருத்ரம்கைவல்யம்தட்சிணாமூர்த்திபஞ்சப்பிரம்மம்ருத்ரஹ்ருதயம்சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:ஜாபாலிருத்ராட்ச ஜாபாலம்அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஆறு:அதர்வசிகாஅதர்வசிரம்கணபதிபிருஹஜ்ஜாபாலம்பஸ்மஜாபாலம்சரபம்

9 சாக்த உபநிடதங்கள்உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களைராமபிரான்ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. சாக்த உபநிடதங்கள் என்ற 9 உபநிடதங்கள் உள்ளன.  ரிக்வேதத்தைச் சார்ந்தவை மூன்றுத்ரிபுராபஹ்வ்ருசாஸௌபாக்யலக்ஷ்மிகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:ஸரஸ்வதிரஹஸ்யம்அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:அன்னபூர்ணாத்ரிபுராதாபனீதேவீபாவனாஸீதா
இவைகளில், 
10 ரிக்வேதத்தைச் சார்ந்தவை 
32 கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை 
19 சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை 
16 சாம வேதத்தைச் சார்ந்தவை 
31 அதர்வணவேதத்தைச்சார்ந்தவை. முக்கிய பத்து உபநிஷத்துக்களைத்தவிர, இதர 98 இல் சுவேதாச்வதரம் கௌஷீதகீயம்நரசிம்மபூர்வதாபனீயம் மகோபநிஷத் கலிஸந்தரணம் கைவல்யம் மைத்ராயணீயம் ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டுப் பேசப்படுகின்றன.

உபநிடதங்களின் வகைகள்

Picture

                        இந்த உபநிடதங்கள் 112 வரையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இவைகளில் அதிகமானவை பிற்காலங்களில் உபநிடதங்களாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் கீழ்காணும் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம். அவற்றின் காலங்களைக் கொண்டு அவைகளை வகைப்படுத்தலாம்.
 

பழங்கால உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை 1. ஈசா 2. சாந்தோக்யம் 3. பிரகதாரண்யகம் 

இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்
 கி.மு. 600 -500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. ஐதரேயம் 2. தைத்திரீயம் 

மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்
 கி.மு. 500 -400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. பிரச்னம் 2. கேனம் 3. கடம் 4. முண்டகம் 5. மாண்டூக்யம் 

நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
 கி.மு. 200 -100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை 1. கவுஷீதகி 2. மைத்ரீ 3. சுவேதாசுவதரம்.

                        கைவல்ய உபநிடதம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில்ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 12வது உபநிஷத்து. இரண்டே அத்தியாயங்களில் மொத்தம் 27 சுலோகங்களைக் கொண்டது. சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. ஆச்வலாயனருக்கு நான்முக பிரம்மாவால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. ஆதி சங்கரர் தன்னுடைய பாஷ்யங்களில் இதனிலிருந்து மேற்கோள்களை அடிக்கடி கையாள்கிறார். பரம்பொருளை முக்கண்ணனாக தியானிக்கவேண்டும். அப்பரம்பொருள் அழுக்கற்றது, இருதயத்தாமரையில் இருப்பது. துன்பமற்றது. சிந்தனைக்கெட்டாதது. வெளிப்படையாய்த் தோன்றாதது. ஆதியும் நடுவும் முடிவுமில்லாதது. ஒன்றேயானது. அறிவும் ஆனந்தமுமே வடிவாகியது. எல்லா உலகின் உற்பத்தி ஸ்தானம். உண்டானதும், உண்டாகப்போவதும் என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே. மாயையால் மதியிழந்தவன், பெண், உணவு, பானம் முதலியவற்றில் இன்பம் தேடித்தேடி, அதைப்பற்றியே கனவு கண்டுகொண்டு காலம் கழிக்கிறான். மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத்திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் (தூலம், நுட்பம், காரணம் என்ற) மூன்று வித உடல்களால் விளையாடுகிறான். அவனிடமிருந்தே விந்தையான இவ்வனைத்தும் தோன்றியுள்ளன. எவனிடத்தில் முப்புரமும் ஒடுங்குகின்றனவோ அவன்தான் ஆதாரமாகவும் ஆனந்தக் கடலாகாவும் பிளவுபடாத அறிவின் விழிப்பாகவும் உள்ள ஆன்மா. எது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆன்மாவோ, உலகிற்குப் பெரிய இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்றுமுளதோ அந்தப்பிரம்மம் நானே என்று அறிந்து ஒருவன் எல்லாத்தளைகளினின்றும் விடுபடுகின்றான். தான் தானாய் நிற்கும் இன்பம் தான் கைவல்ய முக்தி.தன்னைக் கீழ் அரணிக் கட்டையாகவும் ஓங்காரத்தை மேல் அரணிக் கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி பாவத்தைச் சுட்டெரிக்கிறான். (1.11)மூன்று நிலைகளிலும்எது அனுபவிக்கப்படுவதாகவும், எது அனுபவிப்பவனாகவும் அனுபவமாகவும் ஆகின்றதோ அவற்றினின்று வேறாகவும் சாட்சியாகவும் கேவல அறிவு வடிவினனாகவும் என்றும் மங்கள வடிவினன் (சதாசிவன் ) ஆகவும் உள்ளவன் நான்.(1.18) "எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன் தீயினால், காற்றால், ஆன்மாவால் தூயப்படுத்தப்பட்டவன் போல் ஆகின்றான்... அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகின்றான். துறவி அதை ஒவ்வொரு நாளும் ஒருதடவையாவது ஜபிக்கவேண்டும்."(2.6) இது கைவல்ய உபநிஷத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.'சதருத்ரீயம்' என்பது கிருஷ்ண யஜுர்வேதத்தில் நான்காவது காண்டத்தில் உள்ள ஒரு அத்தியாயம். 'ருத்ரம்' என்ற பெயரால் பிரசித்தி பெற்றது. 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. நாராயண தீர்த்தர் என்பவர் இவ்வுபநிஷத்துக்கு உரை எழுதும்போது, இந்த ருத்ரத்தை ‘சகுணப்பிரம்ம உபாசனை’ என்றும், இவ்வுபநிஷத்தை ‘நிர்க்குணப்பிரம்ம உபாசனை’ என்றும் கூறுகிறார். 'அவிமுக்தம்' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'விடப்படாதது' என்று பொருள்.பிரளயத்திலும் உமையோடுகூடிய மகேசன் காசியை விட்டு நீங்காததால் காசி க்ஷேத்திரத்திற்கு 'அவிமுக்த க்ஷேத்திரம்' என்றொரு பெயர் உண்டு. நம் உடலில் புருவமத்திக்கும் அவிமுக்தம் என்று பெயர். ஆறு ஆதார சக்ரங்களில் புருவமத்தியில் உள்ளதுஆஞ்ஞாசக்ரம். இங்கு மனது நிலைக்கும்போது ஞானம் பளிச்சிடுகிறது என்பது யோகநூல்களின் சித்தாந்தம்.
                                சுவேதாசுவதர உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில்ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 14வது உபநிஷத்து. தைத்திரீய சாகையின் 33 உபநிஷத்துக்களில் இது ஒன்று என்று தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. வித்யாரண்யர் தன்னுடைய "சர்வோபநிஷத் அர்த்தானுபூதிப் பிரகாசகத்தில்" இதை 12 வது உபநிஷத்தாக சேர்த்திருக்கிறார். பத்து முக்கிய உபநிஷத்துக்களைத் தாண்டி ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியிருக்கும் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த பாஷ்யத்தை ஆதி சங்கரர் செய்ததல்ல என்ற கருத்தும் உள்ளது. (Narayana Sastry: p.81). சுவேதாசுவதரர் என்ற மஹரிஷி இதை உபதேசித்ததாய் இவ்வுபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ள்து. சுவேத என்றால் வெள்ளை; அசுவதர என்றால் புலன்களாகிய குதிரைக்கூட்டம். மஹரிஷியின் பெயர் தூய புலன்களைக்கொண்டவர் என்று பொருள்படும். ஆறு அத்தியாயங்களைக்கொண்ட இவ்வுபநிஷத்து ஸாங்க்யம், யோகம், மாயை முதலிய பொருள்களைப் பற்றிப் பேசுகிறது. பிரம்மத்தின் நிர்குணத் தன்மையையே அதிகமாகப்பேசிய பத்து முக்கிய உபநிஷத்துகளுக்குப்பிறகு இவ்வுபநிஷத்து தான் ஸகுணப் பிரம்மமெனப்படும் ஈசுவரன் என்ற கடவுள் தத்துவத்தை முன் நிறுத்திப் பேசுகிறது. வேறுவேறான பல தத்துவக் கோணங்களை ஒன்றுபடுத்த முயலுகிறது.(Radhakrishnan, p.707) அனைத்துலகமும் பிரம்மத்தை முழுமுதற்காரணமாகக் கொண்டது. 

                              உலகம் ஒர் பிரம்ம சக்கரம். ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களைக் குறிக்கும் மூன்று பட்டைகளாலானது. சக்கரத்தை சுழற்றுவதும் பிரம்மத்தின் சக்தியாகிய பிரகிருதி தான். (1.4)
 அறிபவனும் அறியப்படுவதும், ஆள்பவனும் ஆளப்படுவதும் ஆகிய இரண்டும் பிறப்பற்றவை. அனுபவிப்பவனுக்கும் அனுபவிக்கப்படுவதற்கும் உறவைக் கற்பிக்கும் ஒருத்தியாகிய (மாயைஎனும்) அவளும் பிறப்பற்றவளே. எப்பொழுது இம்மூன்றும் பிரம்மம் என்று ஒருவன் அறிகிறானோ அப்பொழுது அவன் அளவு கடந்து எங்கும் வியாபித்த ஆத்மாவாகவும் எல்லா வடிவங்களிலும் விளங்குபவனாகவும் செயலேது மற்றவனாகவும் ஆகிறான். (1.9) இது நிலையாகத் தன்னிடமே உளதென அறியப்படவேண்டும். அதற்கப்பால் அறியவேண்டியது சிறிதுமில்லை. ஆராய்ந்துணர்ந்து அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவது, அனுபவிக்க ஏவுவது எல்லாம் இந்த பிரம்மத்தின் மூன்று வகைகளே.(1.12) எள்ளினுள் எண்ணெய் போலும், தயிரினுள் நெய் போலும், ஊற்றுக்களில் நீர் போலும், அரணிக் கட்டைகளில் தீ போலும் இப்பரமாத்மா ஜீவத்மாவிடம் காணப்படுகிறது. வாய்மையாலும் தவத்தாலும் எவன் இதைக் காண முயலுகின்றானோ அவனால் இதைக் காணமுடிகிறது.(1.15) இத்தேவனே எல்லாத் திசைகளையும் வியாபிக்கிறான். இவனே ஆதியில் தோன்றிய ஹிரண்யகர்ப்பன். இவனே கருவினுள்ளிருப்பவன். பிறந்தவைகளாகவும் இனி பிறக்கப் போகும் உயிர்களாகவும் எல்லாப் பிறவிகளுள்ளும் எங்கும் முகமுடையவனாகவும் நிற்பவன். (2.16)எவன் இவ்வுலகங்களைத் தனது ஆளும் சக்திகளால் ஆள்பவனோ அந்த உருத்ரன் (பிரம்மம்) ஒருவனே. இரண்டாவதாக நிற்க வேறொருவன் இல்லை. அவன் எல்லா மக்களுள் உள்ளுறைபவன். உலகங்களைப் படைத்து காப்பவனாயிருந்து முடிவு காலத்தில் அவைகளைத் தனக்குள் ஒடுக்கிக் கொள்கிறான்.(3.2) சம அந்தஸ்துள்ள இணைபிரியாப் பறவைகள் இரண்டு ஒரே மரத்தில் வசித்தாலும் ஒன்று (ஜீவாத்மா) பழத்தை ருசியுடன் உண்கிறது; மற்றொன்று (பரமாத்மா) உண்ணாமல் பார்த்துக்கொண்டு மாத்திரம் இருக்கிறது. (4.6) பிரகிருதியை மாயையாகவும் எல்லாம் வல்ல ஈசனை மாயையை ஆட்டி வைப்பவனாகவும் அறியவேண்டும்.(4.10) எதனால் இந்தப் பெரிய சக்கரம் சுழற்றப்படுகிறதோ அது இயற்கை என்று சில அறிஞர்களும், அவ்வாறே காலம் என்று பிறரும் மதிமயங்கியவர்களாய்க் கூறுகின்றனர். 

                                     உலகில் இதுவெல்லாம் தெய்வத்தின் மகிமையேயாம்.(6.1)
 நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாயும் அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய விருப்பங்களையும் அளிப்பவனாயும், அனைத்திற்குக் காரணமாயும், ஞானயோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுகிறான். (6.13) அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை.இந்தத்தீ எவ்விதம் பிரகாசிக்கும். விளங்கிடும அவனைச்சார்ந்தே அனைத்தும் விளங்குகிறது. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றன.(6.14) ஆண்டவனுக்கு அர்ப்பணமாக எல்லாக் கருமங்களையும் செய்து அதனாலேயே கருமத்தினின்று ஒழிவடைந்து தத்துவத்தின் தத்துவத்தால் யோகத்தைக் கைக்கொண்டு ஒன்றாலோ, இரண்டாலோ, மூன்றாலோ, எட்டாலோ, நுட்பமான ஆத்மகுணங்களால் நாளடைவில் ஒருவன் வீடு பெறுகிறான்.(6.3) 
அத்வைத வேதாந்த தத்துவப்படி இதன் விளக்கம்:ஆண்டவனுக்கு அர்ப்பணமாகச்செய்யப்படும் எந்த வினையும் செய்பவரை பந்தப்படுத்தமாட்டா.இவ்விதம் பந்தப்படாமல் செய்யப்படும் கருமம் செய்பவரின் வாசனை மூட்டையோ கரும மூட்டையோ அதிகப்படுத்தப்படாது. இவ்விதம் கருமம் செய்வதால்தான் வினைகளைக்குறைத்து கருமத்திலிருந்து ஒழிவுபெறமுடியும். 'தத்துவத்தின் தத்துவத்தால்' என்ற சொற்பிரயோகத்தில் தத்துவம் இருமுறை வருகிறது. முதல் தத்துவம் 24 தத்துவங்கள் கொண்ட படைப்பனைத்தையும் குறிக்கும். அதாவது, பஞ்ச பூதங்கள், மனது, புத்தி, அகங்காரம், அவியக்தம் முதலிய நான்கு, கருமப்புலன்கள் ஐந்து, ஞானப்புலன்கள் ஐந்து, புலன்களை இழுக்கும் ஓசை முதலிய ஐந்து ஆக 24. இரண்டாவது தத்துவம் ‘தத்வமஸி’ (அதுவே நீ) என்ற வேதாந்தக் கூற்றைக் குறிக்கிறது. 

                                ஒன்றாலோ: மனத்தாலோ. இரண்டாலோ: மனது, புத்தி இவையாலோ, அ-து, புத்தியால் மனதையடக்கி.மூன்றாலோ: மனது, புத்தி, அகங்காரம் இவற்றாலோ. அ-து, புத்தியால் மனதை அடக்கி, அகங்காரத்தை வென்று. 
எட்டாலோ: எட்டு பாகமாகச்சொல்லப்பட்ட ‘அபரா பிரகிருதி’யின் உதவி கொண்டு. பஞ்ச பூதங்களும், மனது, புத்தி, அகங்காரம் இவைகொண்டது அபரா பிரகிருதி. (பகவத் கீதை: 7வது அத்தியாயம்).
 சிலந்திப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி தனது நூல்களால் தன்னை மறைத்துக்கொள்வதுபோல் இயற்கையாகவே பிரகிருதியில் தோன்றும் பொருள்களால் எந்த தேவன் தானொருவனாகவே தன்னை மறைத்துக் கொள்கிறானோ அவன் நமக்கு பிரம்ம சாயுஜ்யத்தை அளிக்கட்டும்.(6.10) ஆதியில் பிரம்மாவைப்படைத்து அவனுக்கு வேதங்களைக்கொடுத்தருளியவன் எவனோ நமக்குள்ளிருந்து நமது புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன் எவனோ அந்த தேவனை மோட்சத்தில் விருப்பமுடைய நான் சரணமடைகின்றேன்.(6.18) எவனுக்கு தெய்வத்தினிடம் சிறந்த பக்தியும் தெய்வத்தினிடம் போலவே குருவினிடமும் பக்தியும் உண்டோ அந்த மகாத்மாவிற்கு உபதேசிக்கப்பட்டால்தான் இப்பொருள்கள் விளங்கும். அவருக்கு, வாய்விட்டுச் சொல்லாமலிருக்கும் ரகசியப் பொருள்களும் தாமாகவே விளங்கிடும். (6.23)
                       ஜாபால உபநிடதம்என்பது சுக்லயசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். அதர்வண வேதத்தைச்சேர்ந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 13வது உபநிஷத்து. இதை தொகுத்துக் கூறியவர் ஜாபால மகரிஷியாதலால் இது ஜாபால உபநிடதம் எனப் பெயர் பெற்றது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. இவ்வத்தியாயங்களுக்கு கண்டங்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனில் 'அவிமுக்தம்' என்று கூறப்படும் பரம்பொருளின் இடம் உடலிலுள்ள புருவமத்தி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை அறிந்தவனுக்கு ஸ்ரீருத்ரர் தாரகமந்திரத்தை உபதேசித்து பிறவிப் பெருங்கடலைத் தாண்டச் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.'அவிமுக்தம்' நிலையாக உள்ள இடம் உடலிலேயே சேவிக்கத்தக்க புண்ணியமான இடமான புருவமத்தி. வரணா என்ற புருவங்களுக்கும் நாசி என்ற மூக்குக்கும் மத்தியில் உடலிலுள்ள இடமே வாராணசி. இந்திரியங்கள் செய்யும் பாவங்களை 'வாரயதி' தடுக்கிறது என்றதால் அது வரணா. பாவங்களைச் செய்தபின் அவற்றை நாசம் செய்கிறது என்பதால் நாசி. அது இம்மானுட உலகிற்கும் மேலுள்ள தெய்வ உலகத்திற்கும் உள்ள சந்தி (= பாலம், அல்லது கூடுமிடம்). இந்த சந்தியையே ஞானிகள் சந்தியாவந்தனம் என்ற அன்றாட பூசையில் உபாசிக்கின்றனர். ஒரு சீவனின் உயிர் உடலை விட்டுக் கிளம்புகையில் நெற்றிக் கண்ணனாகிய ருத்ரர் அங்கு தோன்றி அந்த சீவனுக்கு தாரகபிரம்மத்தை உபதேசித்து உய்விக்கிறார் என்ற புராணக் கூற்று வாராணசியைப் பற்றியது. இதன் உட்கருத்து அவிமுக்தம் என்னும் புருவமத்தியில் பரம்பொருளை தியானித்தால் பரமசிவனுடைய அருள் சித்திக்கும் என்பதும் அதனால் முக்தி கிடைக்கும் என்பதுமாகும். மூன்றாவது கண்டத்தில் ருத்ரஜபத்தின் பெருமை விவரிக்கப்படுகிறது. 

                         ஸ்ரீருத்ரம் ருத்ரோபநிடதம் என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. ஐந்தெழுத்து மந்திரமான சிவ பஞ்சாக்ஷரீ மந்திரம் இதனில் உள்ளது. 101 யஜுர்வேத சாகைகளிலும் இன்னும் பல வேத சாகைகளிலும் இது காணப்படுவதாலும், நூற்றுக் கணக்கான வடிவங்களில் ருத்ரன் இங்கு போற்றப்படுவதாலும் ஸ்ரீருத்ரத்திற்கு சதருத்ரீயம் என்னும் பெயரும் உண்டு. ('சத' என்னும் வடமொழிச் சொல்லுக்கு நூறு என்று பொருள்). சதருத்ரீயத்தை ஜபித்தால் ஒருவன் சாகாநிலை என்னும் வீடு பெறுவான் என்பதை இக்கண்டத்தில்யாக்ஞவல்கிய முனி அவருடைய சீடர்களுக்கு உபதேசிக்கிறார்.
 
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது கண்டத்தில், சன்னியாசம் என்ற துறவைப்பற்றிய நுணுக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. இத்துறவில் மேன்மையானவர்களில் சிலர்: ஆருணிசுவேதகேது, துர்வாசர்,ரிபுநிதாகர்ஜடபரதர்தத்தாத்திரேயர்ரைவதர், ஆகியோர். இவர்கள் பித்தர்களல்ல ராயினும் பித்தர்களைப் போன்ற நடத்தை உடையவர்கள். பிறந்தமேனியாக முடிச்சேதுமில்லாமல், தங்களுக்கென்று தங்குமிடமே இல்லாமல், இவர்கள் பரமஹம்ஸர்கள்எனப்படுவர். உலகச் செயல்களை வேருடன் களைந்தவர்களாய் இருந்தவர்கள். அவர்களே வாழ்வாங்கு வாழ்ந்த மேன்மக்கள் என்று இவ்வுபநிடதம் கூறுகின்றது.
                         பைங்கள உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான்ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 60வது உபநிஷத்து. நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. பன்னிரண்டாண்டுகள் பணிவிடை செய்த பைங்களருக்குயாஜ்ஞவல்கியரால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. பற்பல வேதாந்தக் கருத்துக்களை ஆணித்தரமாகவும் சுருக்கமாகவும் எளியநடையிலும் போதிக்கும் உபநிடதம் என்று சொல்லலாம். முன்னைப் பரம்பொருளாக, காரியமற்றதாக, இரண்டற்றதாக ஒன்றுதான் இருந்தது. அதுதான் பிரம்மம். அதன் உருவம் உண்மை, அறிவு, ஆனந்தம். அதில் இப்படி, அப்படி என்று எப்படியும் சொல்லமுடியாதபடி முக்குணமும் சமானமான மூலப்பிரகிருதி தோன்றிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம்தான் சாட்சி சைதன்யம்.அம்மூலப்பிரகிருதி சத்வகுணம் மேலிட்டதாக மாறி அவியக்தம் அல்லது மாயை என்ற 'ஆவரண சக்தி' ஆயிற்று. 'ஆவரணம்' - எல்லாவற்றையும் மறைக்கக்கூடியது. அதில் பிரதிபலித்த பிம்பம்தான் கடவுட்சைதன்யம். அக்கடவுள் மாயையை தன்வசப்படுத்திக் கொண்டு அனைத்தையும் அறிபவராக பேருலகத்தையும் சுருட்டிய பாயைப்பிரித்துவிடுவது போல் தோற்றுவிக்கிறார். காத்தல், அழித்தல் தொழில்களும் அவருடையதே. பிராணிகளின் கருமங்களை அனுசரித்தே அவை தோன்றுவதும் அழிவதும் உண்டாகின்றதுஅம்மாயையிலிருந்து ரஜஸ் மேலிட்டதான மஹத் என்ற 'விட்சேப சக்தி' உண்டாயிற்று. 'விட்சேபம்' - ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது. 

                                அதில் பிரதிபலித்த பிம்பம்தான் ஹிரண்யகர்ப்ப சைதன்யம்.
 இதிலிருந்து தமஸ் மேலிட்டதான பேரகந்தை உண்டாயிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம் விராட்புருஷன்.அவனிடமிருந்து, வெளி, காற்று, தீ, நீர், நிலம் இவைகளுடைய மூலப்பொருட்கள் ('தன்மாத்திரைகள்') உண்டாயின. இந்த சூட்சுமப்பொருட்களைத் தூலப்பொருட்களாக மாற்றவேண்டி, அக்கடவுள் ஒவ்வொன்றையும் இரண்டு பாகமாக்கி, அவைகள் ஒவ்வொன்றையும் நான்காக்கி, ஐந்து அரைபாகங்களையும் மற்றநான்கின் அரைக்கால் பாகங்களுடன் சேர்த்து, இவ்விதம் 'பஞ்சீகரணம்' செய்து உண்டாக்கப்பட்ட தூலப்பொருட்களால் உலகிலுள்ள கோடிக்கணக்கான பொருட்களையும் பதினான்கு உலகங்களையும் படைத்தார். இவ்விதம் தொடங்கி, இவ்வுபநிடதம், ஜீவர்கள் படைக்கப்பட்டதையும், தூல சூட்சும உடல்களைப்பற்றியும், பந்தம், மோட்சம் இவைகளைப்பற்றியும் பேசுகிறது. 'அது நீ'; 'நான் பிரம்மம்' முதலிய மகாவாக்கியத்தின் தத்துவத்தை அறியும் நோக்கத்துடன் குருவிடம் கேட்டறிதல் 'சிரவணம்' எனப்படும்.(3 -2)கேட்டறிந்த பொருளைத் தனிமையில் ஆழ்ந்து சிந்தித்தல் மனனம் (3-2) சிரவணத்தாலும் மனனத்தாலும் தீர்மானமாகிய பொருளில் ஒன்றி மனதை நிறுத்துதல் 'நிதித்தியாசனம்' எனப்படும்.((3-2) அறிவையும் அறிபவனையும் கடந்து அறியப்படும் பொருளுடன் ஒன்றுபட்டுக் காற்றில்லாத இடத்தில் விளக்கைப்போல் சித்தம் அசையாதிருக்கும் நிலை சமாதி எனப்படும்.(3 -2) நீர் நீரிலும், பால் பாலிலும், நெய் நெய்யிலும் வேறுபாடில்லாமல் ஒன்றாவதுபோல் ஜீவனும் பரமாத்மனும் ஒன்றாகின்றனர். (4-10) ருத்ரஹ்ருதய உபநிடதம் என்பது கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.
  
                                  
முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 86வது உபநிஷத்து. 52 சுலோகங்கள் கொண்ட ஒரு சிறிய உபநிஷத்து. சுகருக்கு வியாசர் அருளிச்செய்தது.
 எல்லா தேவர்களிடமும் எந்த தேவர் இருக்கிறார்? எவரிடம் எல்லா தேவர்களும் இருக்கிறார்கள்? மகன் சுகரின் இக்கேள்விகளுக்கு விடையாக தந்தை வியாசர் பகர்ந்தது தான் இவ்வுபநிஷத்து. எல்லா தேவர்களும் சிவ உருவத்தில் அடக்கம். உமாவும்ருத்ரரும் இணைந்த வடிவம் தான் எல்லா உலக மக்களும், அசைவனவும் அசையாததுமாகிய இவ்வுலகமும். அந்த சிவ உருவமே இரண்டற்ற பரப்பிரம்மம். அனைத்துலகிற்கும் ஆதாரம். அது அறியப்பட்டால் எல்லாம் அறியப்பட்டதாகும். எவன் அங்ஙனம் பரப்பிரம்மத்தை அறிந்தவனோ அவன் தன்னிடம் விளங்கும் சச்சிதானந்த வடிவான பிரம்மமாகவே விளங்குவான். எவர்கள் கோவிந்தரை வணங்குகிறார்களோ அவர்கள் சங்கரரைவணங்குபவராவர். எவர்கள் பக்தியுடன் ஹரியைப் பூஜிக்கிறார்களோ அவர்கள் காளைக்கொடியுடையனான ருத்ரரைப் பூஜிக்கிறார்கள். (6) ஆண் வடிவமெல்லாம் சிவன். பெண் வடிவலெல்லாம் பகவதி உமாதேவி. (9) வெளிப்படையான எல்லாம் உமாரூபம். வெளிப்படையாக இல்லாதது மகேசுவரர். உமாவும் சங்கரரும் இணைந்த வடிவம் மகாவிஷ்ணு.(10) ஓம்காரம் வில், ஆன்மா அம்பு, மற்றும் பிரம்மம் குறிக்கோள் எனப்படுகின்றன. (38). குடத்தின் வெளிக்கும் வெளியிலிருக்கும் வெளிக்கும் வேறுபாடு எங்ஙனம் கற்பனையோ அவ்விதமே ஈசனுக்கும் ஜீவனுக்கும் வேறுபாடு கற்பனையே.(43).

மகாவாக்கியங்கள்

Picture
                              மகாவாக்கியங்கள்என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு: 
1. பிரக்ஞானம் பிரம்ம - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்]) 
2. அயம் ஆத்மா பிரம்ம - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின்மாண்டூக்ய உபநிடதம்) 
3. தத் த்வம் அஸி - "அது(பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்) 
4. அஹம் பிரம்மாஸ்மி - "நான் பிரம்மன்" (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்) மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மனை' குறிக்கிறது இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும். காஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:சன்யாசத்துக்குள் ஒருவர் நுழையும் போது அவருக்கு இந்த நான்கு மகாவாக்கியங்களும் கற்றுத்தரப்படுகின்றன. 
பிற வாக்கியங்கள் உபநிடதங்களில் குறிப்பிடப்படும் வேறு சில முக்கியமான வாக்கியங்கள்: 
சர்வம் கல்விதம் பிரம்ம - அனைத்து அறிவும் பிரம்மன் (சந்தோக்ய உபநிடதம்) 
நேஹ நானாஸ்தி கிஞ்சின - வேறெங்கும் எதுவும் இல்லை(சந்தோக்ய உபநிடதம்)

            தத்துவமசி என்ற மகாவாக்கியம்.இந்து சமய வேத நூல்களில் வேதாந்தப்பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற்கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்திய மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது 'நீ அதுவாக உளாய்' என்றும் சொல்லலாம். இம்மகாவாக்கியத்திலுள்ள சொற்களின் பொருள் இவ்வளவு எளிதாக இருப்பினும், வாக்கியத்தின் உட்கருத்தைப்பற்றி வெவ்வேறு வேதாந்தப்பிரிவினரின் கொள்கைகள் கணிசமாக மாறுபடுகின்றன. சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் சுவேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேதசாத்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வாலிபனிடம் "எதனால் கேள்விக் கெட்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ்வுபதேசத்தை குருவிடம் தெரிந்துகொண்டாயா?"என்று கேட்கிறார். இதைத்தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்தமுடிவாக இதே மகாவாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார். 
"எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகிவிடுகின்றனவோ, மற்றும் அவை அந்நிலையில் 'நான் இது'என்று எங்ஙனம் அறியமாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம்பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா.அதுவே நீயாக உளாய்" 
"ஆலம்பழம் ஒன்றைப்பிளந்தால் அணுவடிவான விதைகள் காணப்படுகின்றன. அவ்விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த சூட்சுமப் பொருளிலிருந்தே பெரிய ஆலமரம் உண்டாகி நிற்கிறது. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"
 "உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக்கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல்பாகத்தையோ நடுப்பாகத்தையோ அடிப்பாகத்தையோ உண்டுபார்த்தால் அது உப்பாகவேயிருப்பது தெரியும். அதேபோல் முக்காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்""ஒருவனை கண்ணைக்கட்டி காந்தாரதேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய்விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஞானோதயம் பெற்று அப்பரம்பொருளுடன் ஒன்று படலாம். அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"

                            ஆதி சங்கரரால் விரிவாக விளக்கப்பட்டு பற்பல நூற்றாண்டுகளாக பல்வேறு அறிவாளிகளால் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அத்வைத வேதாந்தம் 'அதுவே நீயாக உளாய்' என்பதை 'அது'வும் 'நீ'யும் ஒன்றே என்று பொருள் கொள்கிறது. இங்கு 'அது' என்பது பரம்பொருள். 'நீ' என்பது ஒவ்வொரு பிராணிகளிலுமுள்ள ஆன்மா. நாம் ஓரிடத்தில் ஒருகாலத்தில் பார்த்த ஒரு நபரை, மற்றோரிடத்தில், மற்றொருகாலத்தில் வேறு பெயரிலும், வேறு வேடத்திலும் சந்தித்தாலும், 'அவர் தான் இவர்' என்று சொல்லும்போது எப்படி 'அவர்', 'இவர்' இருவருடைய நடை, உடை, பாவனைகளில் 'அன்று', 'இன்று' என்ற இருகாலகட்டங்களில் உள்ள வேற்றுமைகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, இருவருக்குள்ளும் உள்ள ஏதோ ஓர் ஒற்றுமையை 'இது தான் நிரந்தரம்; மற்றவையெல்லாம் கால தேசங்களால் ஏற்பட்ட வெளி வேற்றுமைகள்' என்று தீர்மானித்து, இருவரும் ஒருவரே என்று தீர்மானிக்கிறோமோ, அதே முறையில் 'அதுவே நீயாக உளாய்' என்ற வாக்கியத்தில், 'அது' என்ற பரம்பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே 'நீ' என்ற பிராணியினிடத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளிவிட்டால், 'அது'வும், 'நீ'யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம். 

                         ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிட்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள 'நீ' என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம்பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம்பொருளின் ஒர் அம்சமே. 'இது' வும் 'அது' வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிட்டா என்னும் முன்னொட்டு உள்ளது. 
மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைத வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. 'தத்துவமஸி' என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் 'ஸ ஆத்மா' என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, 'ஸ ஆத்மாதத்துவமஸி' என்பதை 'ஸ ஆத்மா + அதத்துவமஸி' என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் 'நீ 'அதத்', அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்' என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் 'அதத்துவமஸி' என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும். (அத்வைதப்பிரிவினர் இவ்வாதத்தை மறுக்கின்றனர்.) 

 சுத்தாத்வைதம் 
இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்தாம்சம் கிடையாது. அதனால் 'தத்துவமஸி' என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, 'தத்' என்பது பரம்பொருள். 'துவம்' என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்.

துவைதாத்வைதம் இது நிம்பர்ககாச்சாரியாரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள 'பேதத்தில் அபேதம்', ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத்துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.

அசிந்த்ய-பேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதாபேதம் நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் 'அது'வும் 'நீ'யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, ம்ற்றொன்று முடிவில்லாதது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.