Monday, July 18, 2011

ஜென் கதைகள்

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை  என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.

பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

                                                      ************************
புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம்  ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,'குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று  கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?'குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.''ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.

No comments:

Post a Comment