Wednesday, July 20, 2011

வேதங்களின் மூலக்கூறுகளாக சித்தர்களின் மகத்துவத்தை உணர்வது


Picture
                              உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது."புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் 'பிரஸ்தான த்ரயம்'என்று வழங்கப் படுகின்றன.அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை. 
உபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக் உபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,பிருகதரான்யா, சுவேதஸ்வதார ,வேதம் யஜுர் மைத்ராயணி, மகாநாராயண. 
உபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம் சாம 
உபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம் அதர்வணயஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.இறப்புக்கு பின் என்ன நடக்கும்.....ஒரு
 ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்....இருந்தால் என்ன? இருக்கிறதே? அதுதான் கட உபநிஷதம்.வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம்.

                                  
வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:ரிக் வேதம் 
யசுர் வேதம் 
சாம வேதம் 
அதர்வண வேதம்
என்பனவாகும்.இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருதமொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
 வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை: 

1. மந்திரங்கள்  (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்) 
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள் 
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள் 
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) 


               கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது. வேதங்கள்என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறைஎன்றும் கூறப்படும். அவையாவன: ரிக் வேதம்யசுர் வேதம்சாம வேதம்அதர்வண வேதம் என்பனவாகும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள்வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.ஒவ்வொரு வேதமும் உபவேதங்களைக் குறிப்பிடுகின்றன. அவை நான்கு. ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், சில்ப வேதம் என்பனவாகும். 
அ) ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது. 
ஆ) தனுர் வேதம்:- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது. 
இ) காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது. 
ஈ) சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

                  பஞ்சபூதங்களில் ஒன்றானதும் வேதங்களால் வணங்கப்பட்டதுமான அக்னி இறையாற்றலின் தனித்துவமான வடிவம். நவநாகரீக கலாச்சாரத்தால் அக்னியின் மகத்துவத்தை உணராமல் ஒரு ஜடமான நிலையில் நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே என்றும் பல்வேறு வடிவில் இருப்பவனும், பல்வேறு பெயரில் அழைக்கப்படுபவனும் இறைவன் தான் என கூறுவது போல தீ,வெம்மை, வெப்பம், நெருப்பு, கனல் மற்றும் அக்னி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு நிலையில் இருப்பது இறைவனின் ஆற்றலான அக்னியே என்பதை உணரவேண்டும். சிந்தித்து பார்த்தோமானால் தினமும் நம் வாழ்க்கையில் அக்னியின் செயல் மிகவும் இன்றியமயாதது. காலையில் நீங்கள் எழும் நேரம் கிழக்கில் சூரியன் என்னும் அக்னி ரூபம் செயல்பட வேண்டும். உங்கள் உடலை சுத்தமாக்கும் நீர் மழை வடிவிலும் நதி வடிவிலும் கிடைப்பதற்கு அந்த சூரியனே அக்னியாக இருந்து செயல்படுகிறார். தாவரங்களின் செயலுக்கும் நம் உணவின் உற்பத்திற்கும் அக்னியின் பயன் மிகவும் அவசியமாகிறது. நம் உடலின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் வெப்பமே உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதற்கு ஜட அக்னி என்று பெயர். ஒரு மனித உடலின் வெப்ப நிலை இழந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பெயர் பிணம் என்கிறார்கள். ஆக ஒரு மனிதன் உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே அக்னியின் செயலாகிறது. எந்த ஒரு பொருளும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அக்னியே காரணம் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புரியும். பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் பஞ்சபூதத்தால் ஆனது. அவற்றில் அக்னியின் அளவு கூடுதலாக இருப்பது இயங்கும் உயிராகவும், அக்னி குறைவாக இருப்பது இயக்கமற்ற பொருளாகவும் மாறுகிறது.பூமியின் மையத்தில் அக்னி குழம்பு இருக்கிறது அவை நில அடுக்குகளில் புகுந்து வெளிவரும் பொழுது எரிமலை அக்னி குழம்பை கக்குகிறது. நாம் வசிக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அக்னி ரூபமாக இருக்கிறது சூரியன். சூரிய மண்டலத்தில் மட்டுமல்ல அனைத்திலும் விதையாகவும், கருவாகவும் இருப்பது அக்னியே ஆகும். தீ நெருப்பு என குறிப்பிடாமல் அக்னி என குறிப்பிட காரணம் என்ன? அக்னி என்பது நெருப்பின் ஆழ்ந்த சொரூபம். ஜிவாலையாக எரியும் பொழுது நெருப்பு என்றும் கட்டுப்பாட்டுடன் திகழும் பொழுது அக்னி என்றும் கூறலாம். அக்னி என்பது வடமொழிச்சொல் என்றாலும் அக்னி என பல்வேறு சங்ககால தமிழ் படலிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. யஜூர் வேதத்தின் அக்னி என்பது முழுமுதற்கடவுளாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் உபநிஷத்தில் அக்னி ஜாதவேதன் என கூறிப்பிடுகிறார்கள். ஜாதவேதன் என்றால் அனைத்திலும் இருப்பவன் - அனைத்தையும் உணர்ந்தவன் என கூறலாம். எனக்கு பிடித்த பெயர்களின் ஒன்று ஜாதவேத் எனும் பெயர்.

                                  வேதாந்தம் வேதம் + அந்தம் என்ற சமஸ்கிருத சொற் பிணைப்பினால் வருவது. வேதம் அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வம் எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை மந்திரங்கள், பிராமணங்கள், அரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே.

வேதங்கள் 4  வகைகள்

Picture
                       இருக்கு வேதம் (சமசுகிருதம்:  - ரிக்வேதஇந்து சமயத்தின்அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில்அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக்கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளானதாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன்,சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன்வருணன்உஷாக்கள்,அஸ்வின்கள் என்போரும், சவிதர்விஷ்ணுஉருத்திரன்பூஷண்,பிருஹஸ்பதிபிரமனஸ்பதிதியாயுஸ் பிதாபிரிதிவிசூரியன்வாயு,பர்ஜான்யன்வசுக்கள்மாருத்கள்ஆதித்தர்கள்விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந் நூலில் போற்றப்படுகிறார்கள்.இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ளஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

              யசுர் வேதம்(Sanskritयजुर्वेदःyajurvedayajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம்கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.கிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்தசிரௌதசூத்திரங்கள்கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன. சுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம்பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.பிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

                           சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmavedasāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

                           அதர்வண வேதம் இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

ஆகமங்கள்

Picture
                      ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என்னும் பொருளைத் தருவது. இதற்குத் "தொன்று தொட்டு வரும் அறிவு" என்றும் "இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்" என்றும் அறிஞர் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது. ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை, 

1. சைவ ஆகமங்கள் 
2. வைஷ்ணவ ஆகமங்கள் 
3. சாக்த ஆகமங்கள் என்பனவாகும். 

சைவ ஆகமங்கள் சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன, 

1. காமிகம் - திருவடிகள்
 
2. யோகஜம் - கணைக்கால்கள் 
3. சிந்தியம் - கால்விரல்கள் 
4. காரணம் - கெண்டைக்கால்கள் 
5. அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள் 
6. தீப்தம் - தொடைகள் 
7. சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்) 
8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு 
9. அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு 
10. சுப்ரபேதம் - தொப்புள் 
11. விஜயம் - வயிறு 
12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி 
13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு 
14. அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள் 
15. வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து 
16. ரௌரவம் - செவிகள் 
17. மகுடம் - திருமுடி 
18. விமலம் - கைகள் 
19. சந்திரஞானம் - மார்பு 
20. பிம்பம் - முகம் 
21. புரோத்கீதம் - நாக்கு 
22. லளிதம் - கன்னங்கள் 
23. சித்தம் - நெற்றி 
24. சந்தானம் - குண்டலம் 
25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம் 
26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை 
27. கிரணம் - இரத்தினா பரணம் 
28. வாதுளம் - ஆடை 
வைஷ்ணவ ஆகமங்கள் 
1. பாஞ்சராத்திரம் 
2. வைகானசம் என்பனவாகும்.

                காமிகாகமம் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம், சைவ சித்தாந்தம் ஆகும். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். எல்லா ஆகமங்களும் நான்கு பகுதிகளாகப் (பாதங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன. இவை: 

1. வித்யா பாதம் அல்லது ஞான பாதம் 
2. கிரியா பாதம் 
3. யோக பாதம் 
4. சரியா பாதம் 
எனப்படுகின்றன. இவற்றுள், ஞான பாதம் ஆகமங்களின் தத்துவப் பகுதியாகும். கிரியா பாதம், சமயக் கிரியைகள் பற்றிய பகுதி. ஆகமங்களின் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இவ்விரண்டு பாதங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. ஏனைய இரண்டு பகுதிகளும் நீளம் குறைந்த பகுதிகளாகும். காமிகாகமத்தின் கிரியா பாதம், பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளன. கிரியா பாதம் 12,000 செய்யுள்களைக் கொண்டது. இதில் 5166 செய்யுள்கள் பூர்வ பாகத்திலும், 6477 செய்யுள்கள், உத்தர பாகத்திலும் உள்ளன. 357 செய்யுள்கள் கிடக்கவில்லை.பூர்வபாகத்தில், ஆகமங்களின் தோற்றம், அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள், கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள், விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் கோயிற் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும் எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்ஹிதைகள் :அறிவுக் கருவூலமாகத் திகழ்வன. இவற்றின் துணையால் அக்கால மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கை முறைகளை அறிய முடிகிறது. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியே சம்ஹிதைகள் உள்ளன. இவற்றுள் ரிக் வேத சம்ஹிதைகள் மிகப் பழமையானவை. ரிக் வேத சம்ஹிதையைக் கொண்டு முற்கால வேத கால பண்பாட்டை விரிவாக அறியலாம். பிற வேதங்களின் சம்ஹிதைகள் வாயிலாக பிற்கால வேதகால மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் பண்பாட்டுச் சிறப்பினை அறியலாம்.சம்ஹிதைகள் என்பன துதிப்பாடல்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன. அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு என்பனவற்றைக் கூறுகிறது. 
ஆரண்யகம் :அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள் ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவானவை. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது. அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துகள் அடங்கிய கருத்துப் பெட்டகம் எனலாம். ஆரியர்கள் ஆன்மிகத் துறையில் அடைந்த பண்பாட்டின் உன்னத நிலையை எடுத்துக்காட்டுவனவாகும். 
சாயனர் : (सायण; இறப்பு: 1387) என்பவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசன் முதலாவது புக்கா ராயன், மற்றும் அவனது வழித்தோன்றாலான இரண்டாம் ஹரிஹர ராயன் ஆகியோர் சாயனரின் வழிகாட்டலில் ஆட்சி புரிந்தனர்.சாயனர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதினார். இவற்றில் முக்கியமானவை இவர் வேதங்களுக்கு எழுதிய உரைகளாகும். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. இருக்கு வேதம் பற்றிய இவரது உரை மாக்ஸ் முல்லர் என்பவரால் 1849-1875 இல் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment