Sunday, July 10, 2011

சிரிப்பு வெடிகள்

ஏங்க.. இந்தப் படம் அரசியல்வாதி எடுத்ததா..? ஏன் கேக்கறீங்க..?

படம் பார்க்க லாரியில ஆளுக வந்து இறங்கறாங்களே..!
_________________
அறிவியல் அதிசயமாக 68 வயதுப் பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைக் காண உறவினர் கூட்டம் மொய்த்தது.ஒருநாள்..

பெரியம்மா.. கொழந்தையைப் பாக்கலாமா..?

கொஞ்ச நேரம் ஆகட்டும்..

சிறிது நேரம் கழித்து..

இப்போ பார்க்கலாமா..?

மொதல்ல எல்லாரும் காப்பி சாப்பிடுங்க..

பின்னர்...

இப்பவாவது புள்ளயைக் காட்டேன்..

இருங்கடி.. புள்ள அழட்டும்..

அழணுமா..? ஏன்..?

அப்பதானே குழந்தையை எங்கே வச்சுருக்கேன்னு ஞாபகம் வரும்..?!!!!

----------------------------------------------------------------------------------------

அமைச்சர் ; அய்யகோ மன்னா.. நம் குல எதிரி குடோன் பாண்டி உங்கள் பட்டத்து அரசியைக் கடத்திச் சென்றுவிட்டான்..

புலிகேசி ; அப்படியா..? அமைச்சரே.. இனி நமக்கு எதிரியே இல்லை.. ஒழிந்தான் கிராதகன்...!
_________________


ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"
_________________

No comments:

Post a Comment